அணு ஆயுதங்களால் மாறும் போரியல் சமன்பாடுகளும் - இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரியல் சமன்பாடும்

முன்னைய பதிவில் இரு நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும்போது போரியல் சமன்பாடு மாறுவதாக கூறியிருந்தேன்.


இது எவ்வாறு மாறுகிறது என்பதை சுருக்கமாக,எளிமையாக விளக்குவதே இந்த பதிவு.


இரண்டு நாடுகளுக்கிடையில் நடக்கும் போர் மரபு போராக ( conventional war) இருந்தால் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை


1. படைகளின் எண்ணிக்கை ( number of troops)


2. ஆயுதங்களின் நவீனதன்மை அதன் எண்ணிக்கை ( weapons technology and quantities)


3. நாட்டின் பொருளாதார வலிமை


ஆனால் மரபு போரில் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை அணுஆயுத போரில் வலுவிழந்து விடுகின்றன. 


இரு நாடுகள் அணு ஆயுதங்களை வைத்தி்ருக்கும்போது முற்றிலும் புதிதான போரியல் சமன்பாடு வருகிறது.


இந்த அணு ஆயுத போரியல் சமன்பாடுகளில் உள்ள முக்கியமான விடயங்களை வரிசையாக தருகிறேன்.


FIRST STRIKE


A எனும் நாடும் B எனும் நாடும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன என வைத்துகொள்வோம்.  


இப்போது A தனது intelligence மூலமாக B இன் சகல அணுஆயுதங்களின் இருப்பிடங்களையும் தெரிந்துகொண்டு ஒரே தடவையில் B நாட்டின் சகல அணுஆயுதங்களையும் முற்றாக அழிக்கிறது என வைத்துக்கொள்வோம் . இது FIRST STRIKE என்று அழைக்கப்படும்.


First strike is to attack the opponent's strategic nuclear weapon facilities (missile silos, submarine bases, bomber airfields), command and control sites, and storage depots first. The strategy is called counterforce.


இங்கு A நடத்தும் First strike என்பது preemptive surprise attack. அதாவது B நாடு போர் என்பதை எதிர்ப்பார்க்காத சூழலில் A நாடு முந்திக்கொண்டு அணுஆயுத தாக்குதலை நடத்துவது.


ஆக B நாடு போரை எதிர்பார்க்காத சமயத்தில்,

 A நாடு முந்திக்கொண்டு First Strike முலமாக B இன் ஒட்டுமொத்த அணுஆயுதங்களை முற்றாக அழித்தால் இதனை எப்படி எதிர்கொள்வது? 


B இன் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களும் அழிந்த பின்னர் A இற்கு B அடிபணிந்தே ஆகவேண்டும். இதற்கு தீர்வு என்ன?


இதற்கான தீர்வாக உருவாகியதுதான் Second Strike Capability.


SECOND STRIKE CAPABILITY 


தன்னுடைய எதிரி நாடான A நாடு First Strike மூலம் தன்னுடைய முழு அணுஆயுதங்களை அழித்தாலும், அந்த அழிவிலிருந்து ‘சில அணு ஆயுதங்களையாவது பாதுகாத்து’ அதன் மூலம்  A நாட்டின் மீது B அணு ஆயுத எதிர் தாக்குதலை நடத்தினால் அதற்கு பெயர் Second Strike Capability.


ஒரு நாடு எதிரி நாட்டின் First Strike இலிருந்து ‘சில அணு ஆயுதங்களையாவது பாதுகாத்து’ Second Strike செய்யும் ஆற்றலை பெற்றுகொள்வது மிக முக்கியம்.


இல்லாவிடில் எதிரி நாடு எந்த கணத்திலும் First Strike மூலமாக உங்களது முழு அணுஆயுதங்களையும் ஒரே தடவையில் அழித்துவிடும் வாய்ப்பை கொண்டிருக்கிறது என்று பொருள்.


இந்த Second Strike ஆற்றலை எப்படி உறுதிபடுத்துவது?


பொதுவாக அணு ஆயுதங்களை ஏவுவதற்கான வழிகளாக இருப்பவை பின்வருபவையே.


• நீண்டதூர ஏவுகணைகள் ( intercontinental ballistic missile (ICBM)


• நீர்மூழ்கி கப்பல் மூலமாக ஏவுதல்( submarine-launched ballistic missile (SLBM)


• போர் விமானங்கள் ( Strategic  Bombers) 


இவைகளில் ஏதாவது ஒரு வழியையோ அல்லது மூன்றையுமே கொண்டிருப்பதன் ஊடாக தனது 

Second Strike ஆற்றலை உறுதிபடுத்திக்கொள்ள முயல்கின்றன.


உதாரணத்திற்கு பிரிட்டன் தனது Second Strike ஆற்றலை தனது SLBM மூலமாகவே உறுதிபடுத்துகிறது. 


பிரிட்டன் இதற்கென நான்கு நீர்மூழ்கி கப்பல்களை (SLBM ) வைத்திருக்கிறது. 


ஒவ்வொரு SLBM இலும் 8 ஏவுகணைகள் (ballistic missile) உள்ளன. ஒரு ஏவுகணையில் 5 அணுகுண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த 5 அணுகுண்டுகளுமே வேறு வேறு இலக்கை தாக்கக்கூடியவை. 


கோட்பாட்டளவில் 40 அணுகுண்டுகளும் 40 இலக்கை தாக்கக்கூடியவை. இது ஒரு நாட்டை அடியோடு நிர்மூலமாக்க போதுமானது.


இந்த நான்கு நீர்மூழ்கி கப்பல்களில் ஒன்று உலகில் ஏதாவது ஒரு மூலையில் இரகசியமாக வலம் வந்துகொண்டிருக்கும். 24/7/365 நாட்களும் இந்த SLBM வலம் வந்துகொண்டிருக்கும்.


Trident is Britain’s nuclear weapons system. It is made up of four nuclear submarines. 


Each sub carries up to eight missiles on board, and each missile carries up to five nuclear bombs – or warheads – on top. 


One Trident submarine patrols the seas at all times.


இந்த நீர்மூழ்கி கப்பல் (SLBM ) எங்கிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.


அந்த SLBM ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனது கட்டளை தலைமையுடன் (C2- Command and Control) தகவலை பறிமாறிக்கொண்டே இருக்கும்.


ஏதாவது ஒரு புள்ளியில் பிரிட்டனில் இருக்கும் Command and Control உலகை வலம் வந்து கொண்டிருக்கும் அதனது SLBM உடன் தகவலை பறிமாறிக்கொள்ளவில்லை எனில், எதிரி நாடு பிரிட்டனை அணுஆயுதங்கள் மூலமாக அழித்து விட்டது என பொருள். 


உடனே SLBM அதனது அனைத்து அணு ஆயுதங்களையும் தீர்மானிக்கப்பட்ட எதிரி நாட்டின் மீது ஏவி அந்த நாட்டை நிர்மூலமாக்கும். இந்த மேற்கூறிய அணு ஆயுத அணுகுமுறைக்கு Fail-deadly என அழைக்கப்படுகிறது.


இந்த Fail-deadly அணுகுமுறை Second Strike எதிர்தாக்குதலில் ஒரு வகை.


இந்த Second Strike capability இனால் ஒரு முக்கியமான கோட்பாடு உருவானது. இந்த கோட்பாடு சோவியத்-அமெரிக்காவிற்கு இடையிலான Cold War இன்போது உருவாக்கப்பட்டது.


அந்த கோட்பாட்டின் பெயர் MAD.


Mutual assured destruction (MAD)


அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இரு நாடுகளில், எந்த நாடு அணு ஆயுத போரை தொடங்கினாலும் இரு நாடுகளும் முற்று முழுதாக நிர்மூலமாகும் (complete annihilation) என்பதை உறுதிபடுத்தும் கோட்பாடு இது.


Mutual assured destruction (MAD) is a doctrine of military strategy and national security policy in which a full-scale use of nuclear weapons by two or more opposing sides would cause the complete annihilation of both the attacker and the defender.


இந்த MAD கோட்பாடு முழுமையாக இயங்குவதற்கு இரு நாடுகளுக்குமே Second Strike capability அவசியம்.


அப்படி இருந்ததால்தான் cold war காலத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத்திற்கும் அணுஆயுத போரோ, conventional war  கடைசி வரை வரவில்லை. 


மற்றைய நாடுகளில் proxy war களையே நடத்தினார்கள். 


இந்த அணு ஆயுத போரில் மேலும் சில விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை பற்றி விளக்கி உங்களின் புரிதலை கடினமாக்க விரும்பவில்லை.


இன்றைய உலக ஒழுங்கில் நடக்கும் போரியல் நகர்வுகளை புரிந்து கொள்ள மேலே குறிப்பிட்டவைகளை நீங்கள் உள்வாங்கினாலே போதுமானது.


உங்களின் புரிதலை ஆழமாக்க மேலே விவரித்தவைகளை நடப்பு உலக விவகாரங்களோடு இணைத்து இனி விளக்குகிறேன்.



இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரியல் சமன்பாடு


இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர்  conventional war ஆக இருக்கும்பட்சத்தில் இந்தியா பாகிஸ்தானை போரியல்ரீதியாக வெற்றிகொள்ளமுடியும் (enemy is left unable to continue war). 


காரணம் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மரபு போரிற்கான காரணிகள் இந்தியாவிற்கே சாதகமாக உள்ளது.


அப்படி நடந்வைதான் 1947, 1965, 1971 நடந்த போர்கள். 


1971 இல் இந்தியா ஒருபடி மேலே போய் பாகிஸ்தானை இரண்டாக உடைத்து இந்தியாவின் கிழக்குப்புறம் தனக்கு இருந்த அச்சுறுத்தலை இல்லாமல் ஆக்கியது. இந்த upperhand என்பது மரபுபோரில் இந்தியாவிற்கு உள்ளது.


ஆனால் இந்த நிலைமை 1980 களின் பின்னர் மாறிவிட்டது. எப்படி? 


பாகிஸ்தான் தனது அணுஆயுதக்கொள்கையை பின்வருமாறு வைத்திருக்கிறது. சுருக்கமாகவும் எளிமைபடுத்தியும் தருகிறேன்.


பாகிஸ்தானின் Nuclear Doctrine 


மரபு போரில் இந்தியா தனது numerical superiority இன் மூலம் பாகிஸ்தான் இராணுவத்தின் போரிடும் திறனை முற்றாக அழிக்கும் நிலை ஏற்படும்போதோ, பொருளாதார முற்றுகைக்கு உள்ளாக்கும்போதோ, தனது நாட்டின் ஒரு பகுதியினை இழக்கும் நிலை ஏற்படும்போதோ பாகிஸ்தான் எதிரி நாட்டின் மீது அணுஆயுதத்தை பிரயோகிக்கும்.


இதன் அர்த்தம் இந்தியா மரபு போரில் வெற்றியடையும் நிலைக்கு வரும்போது அதன் போக்கை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அணுஆயுதத்தை பிரயோகிக்கும். 

இதுதான் அதனது Nuclear Doctrine.


இதன் பொருள் என்ன?


இந்தியா ஏதோ ஒரு காரணத்திற்காக மரபு போரை தொடங்கினாலும் அந்த மரபு போர் இந்தியாவிற்கு சாதகமாகவே முடியும்.


அப்படி இந்தியாவிற்கு  சாதகமாக போவதாக இருந்தால் பாகிஸ்தான் தனது அணுஆயுத தாக்குதலை நடத்த தீர்மானிக்கும். 


இந்த நிலையை தடுக்க இந்தியா முந்திக்கொண்டு FIRST STRIKE ஐ மேற்கொள்ளலாம் என்பதால், இந்தியாவின் அந்த நினைப்பை தடுக்க பாகிஸ்தான்  Second Strike capability ஐ தங்களுக்கென உருவாக்கிவிட்டார்கள். இனி MAD கோட்பாடு வேலை செய்யும்.


பாகிஸ்தானின் அணு ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எதிர் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் ‘நாமிருவருமே முற்றாக அழிந்து போவாம்’ என்பதை MAD உறுதிபடுத்துகிறது.


ஆக எப்படி போனாலும் இந்தியாவால் பாகிஸ்தானை போரியல்ரீதியாக வெற்றி கொள்ளமுடியாத வகையில் பாகிஸ்தான் தனது காய்களை நகர்த்தி வைத்திருக்கிறது. 


இது ஒரு Stalemate நிலை. இதுதான் போரியல் யதார்த்தம். 


இதுதான் அணு ஆயுத போரில் உருவாகும் போரியல் சமன்பாடு.


பின் 1999 இல் கார்கிலில் போர் நடந்ததே என கேட்கலாம். அது limited conventional war. 


அந்த போர் இந்தியாவின் மண்ணுக்குள்ளே நடந்தது . இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் உள்ள குன்றுகளை அவர்கள் கைப்பற்றியிருந்தார்கள். அதை மீள கைப்பற்ற இந்தியா நடத்திய போர்தான் அது. நான் மேலே சொன்ன பாகிஸ்தானின் Nuclear Doctrine னோடு அது முரண்படவில்லை.


இந்த அணு ஆயுத போரியல் சமன்பாடு 


இந்த அணு ஆயுத போரியல் சமன்பாடு அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் சகல நாடுகளுக்கும் பொருந்தும்.


ஒரு நாடு மரபு போரில் பலவீனமாக இருந்தாலும், போதுமான அளவு அணு ஆயுதங்களை கொண்டிருந்து அத்துடன் second strike capability ஐயும் கொண்டிருந்தால் எதிரி நாடு எத்தகைய பலமான அணு ஆயுத நாடாக இருந்தாலும் அதனுடன் Stalemate நிலையை உருவாக்கி கொள்ளமுடியும்.


இதுவரை மேலே நான் விவரித்தவைகளை எல்லாம் உள்வாங்கி கொண்டு உலக ஒழுங்கில் நடக்கும் நகர்வுகளை decode செய்து பாருங்கள்.


ஏன் ஈரான் அணு ஆயுத ஆற்றலை அடைந்து விடக்கூடாது என இஸ்ரேல் தவியாய் தவிக்கிறது?


வடகொரியா ஏன் அமெரிக்காவுடன் ‘வாடா வாடா’ என வடிவேலுவை அழைப்பது போல அழைத்து கொண்டிருக்கிறது?


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]