தமிழ் இனத்தின் மரபு தொடர்ச்சி விடுதலை புலிகள்

தமிழ் இனத்தின் வரலாற்றில் கடல் கடந்தும் பேரரசை நிறுவியது சோழ பேரரசு காலகட்டத்தில்தான்.


அதேபோல 21ம் நூற்றாண்டில் ஒரு non-state military power ஆகஅதி உச்ச போரியல் சாதனைகளை செய்தது விடுதலை புலிகள் இயக்கம் மட்டுமே


தமிழ் இனத்திற்கென ஒரு இறையாண்மை அரசை உருவாக்க முயன்றதும் இந்த ஆயிரம் வருட வரலாற்றில் விடுதலை புலிகள் மட்டுமே.


இன்னும் சுருக்கமாக சொன்னால் ‘உலக ஒழுங்கிற்கு’ தமிழர் என்ற இனம் இருப்பதாக தெரிந்ததே விடுதலைபுலிகளின் போரியல் சாதனைகளால்தான்அதற்கு முன்பு தமிழர் என்ற இனம் ‘இந்தியர்கள்’, ‘இலங்கையர்கள்’ என அழைக்கப்பட்டு வந்தது


ஆக தமிழர் இன வரலாற்றில் இரு பெரும் முக்கியமான வரலாற்று புள்ளிகள் சோழ பேரரசுவிடுதலைபுலிகள்.


ஆனால் தெரிந்தோதெரியாமலோ சோழ பேரரசையும் , விடுதலை புலிகளையும் தொடர்புபடுத்தக்கூடிய சில வரலாற்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.


அந்த சில வரலாற்று நிகழ்வுகள்


  • தலைவர் பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையில்அவர் கொடுத்த முதலாவது நேர்காணல் இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பிற்குஇது நடந்த ஆண்டு 1984 மார்ச் மாதம்.


அதில் அனிதா பிரதாப் பின்வரும் கேள்வியை கேட்கிறார்.


அனிதா பிரதாப்உங்களை ‘புலிகள்’ என்று ஏன் அழைத்துக்கொள்கிறீர்கள்?


பிரபாகரன்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலி சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன்புலிச் சின்னமானது தமிழ்தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறதுஅத்துடன் கெரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.


மேலே தலைவர் பிரபாகரன் ‘தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலி சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான்’  என்று குறிப்பிடுவது  சோழ பேரரசின் அதி உன்னதமான காலகட்டத்தை பற்றியேஅந்த காலகட்டம்தான் தமிழர் இன வரலாற்றில் அதி உச்சங்களை தொட்ட காலம்.








  • இரண்டாவது நிகழ்வு - தலைவர் பிரபாகரன் தமது கடற்புலி படைகளுக்கு ஆரம்பத்தில் வைத்திருந்தபெயர் ‘கடல் புறா’.


அது என்ன ‘கடல் புறா’?


தமிழின் வரலாற்று புனைவு எழுத்தாளர்களில் பெரும் புகழ்பெற்றவர் எழுத்தாளர் சாண்டில்யன்அவரின் மிகப்புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றுதான் ‘கடல் புறா’.


இந்த கடல் புறா வரலாற்று நாவல் சோழ சாம்ராஜ்யத்தின் பெரும் தளபதி கருணாகர பல்லவனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல்.


போரியல் ஆய்வாளர்கள் சோழ கடற்படை அன்றைய உலகின் மிக பலமான கடற்படை என்பதை உறுதி செய்கிறார்கள்


அதனை உள்வாங்கிய தலைவர் பிரபாகரன் தமது கடற்புலி படைகளுக்கு ‘கடல் புறா’ என 80 களில் பெயர்வைத்தார்.


சோழர்களின் கடற்படையை போலவேகடற்புலிகளும் சந்தேகத்திற்கு இடமின்றி அதி் உச்சத்தை தொட்டார்கள்


உலகில் இருந்த non-state ஆயுத இயக்கங்களிலேயே ஒரு நாட்டின் conventional navy இற்கு சம தரப்பாக இருந்து ஒரு பெரும் கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது விடுதலை புலிகள் மட்டுமே.


இதை இலங்கையின் கடற்படையே ஒத்துக்கொண்ட விடயம்.


“The Sea Tigers or the maritime arm of the LTTE had a well-structured command organization and its own attack,logistics and suicide craft squadrons, which were capable of operations even in high seas.”


“ In many ways, the LTTE was considered as the leader, or a trend setter in maritime terrorism”


“The LTTE had a de-facto navy with a international shipping network, which operated through various front offices across the world. 


They succeeded in acquiring large quantities of weapons,ammunition,explosives & transported these through international ports and sea lanes to coastal locations within their control”


(இலங்கை கடற்படையின் தளபதியும்பின்னர் இலங்கை வெளியுறவு செயலாளராகவும் இருந்த ஜெயனத் கொலம்பகே (Jayanath Colombage) எழுதிய Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka எனும் ஆய்வு புத்தகத்தில் இருந்து சில வரிகள்புத்தகம் நெடுக கடற்புலிகள் எவ்வளவு பலமாக இருந்தார்கள் எனவிவரிக்கிறார் என்பது மேலதிக தகவல்)


  • சோழர்களின் பக்கவாட்டில் பாயும் புலிக்கு பதிலாக முகத்தை மட்டும் காட்டி பாயும் புலியை தமது இயக்கத்தின் இலச்சினையாக வைத்துக்கொண்டதற்கு தலைவர் பிரபாகரன்  சொன்ன காரணம் ஆழமானது. 


தனது உடலின் பக்கத்தை காட்டிக்கொண்டு பக்கவாட்டில் பாயும் புலிஎதிரிகள் தாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்கிறதுஅத்தகைய சந்தர்ப்பத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது என்பதால் முகத்தை மட்டுமே காட்டிக்கொண்டு பாயும் புலியை இலச்சினையாக தேர்ந்தெடுத்தேன் என தலைவர் பிரபாகரன் கூறுகிறார்.


.ஜெயகாந்த்


(ஜூன் 2022 இல் முகநூலில் எழுதிய பதிவு)


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]