இந்தியாவால் சீனா அடைந்த உயரத்தை தொடமுடியுமா? - 21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும் அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION) குறுந்தொடர் (பகுதி-8)



அமெரிக்க- சீன போட்டியில் (US-CHINA GREAT POWER COMPETITION), சீனாவை முடக்குவதற்கான நகர்வுகளில் அமெரிக்காவின் முக்கிய துருப்பு சீட்டு இந்தியாதான் என பல தடவை குறிப்பிட்டிருக்கிறேன்.

பிலிப்பைன்ஸ், வியட்நாம், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை சீனாவிற்கு எதிரான வியூகத்தில் அமெரிக்கா சேர்த்து வைத்திருந்தாலும், அவைகளின் பொருளாதார பலம், மனித வளம், இராணுவ பலம் என்பவை சிறிய அளவிலானது.

ஜப்பானும், இந்தியாவும் பொருளாதார பலத்தில் கூடியவை.

ஆனால் ஜப்பானின் மனித வளம் என்பது குறைந்தது.

ஆக இறுதியில் மனித வளம், பொருளாதார பலம், இராணுவ பலம், புவியியல் அமைவிடம் எல்லாவற்றையும் தொகுத்து நோக்குகையில் அமெரிக்காவின் முக்கியமான துருப்பு சீட்டாக இந்தியா வருகிறது.

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல், இந்திய கடற்படைக்கு அதனது புவியியல் அமைவிடம் காரணமாக கிடைக்கும் tactical advantage இனை பற்றிய நீண்ட போரியல் ஆய்வு கட்டுரையை பகுதி-7 இல் விளக்கியிருந்தேன்.

ஆக சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் containment strategy இல், இந்தியா மிக முக்கியமான துருப்பு சீட்டு.

அதனால் அமெரிக்க-இந்திய உறவு வலுவடைந்து செல்வது இயல்பானது.

இதில் ஒரு கேள்வி எழுகிறது.

சோவியத் யூனியனிற்கு எதிரான அமெரிக்காவின் containment strategy இன் ஒரு பகுதியாகத்தான், அமெரிக்க-சீன உறவு 1970 களில் உருவானது.

பொருளாதார சீர்த்திருத்தங்களின் ஊடாக வளர்ச்சியடைவதற்கு சீனாவிற்கு அமெரிக்கா தேவையாக இருந்தது. சோவியத் யூனியனிற்கு எதிரான நகர்வுகளிற்கு அமெரிக்காவிற்கு சீனா தேவையாக இருந்தது.

40 வருடங்கள் கழித்து பார்க்கையில், சீனா பொருளாதார பலத்தில் அமெரிக்காவை தாண்டிவிட்டது.

Purchasing Power Parity (PPP) அளவுகோலின்படி, சீனாவின் GDP அமெரிக்காவின் GDP ஐ விட பெரிதாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

பொருளாதார பலமும் இராணுவ பலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

பொருளாதார பலம் இருந்தால்தான் இராணுவத்தின் ஆற்றலை அதிகரிக்கமுடியும். Research and Development (R&D) இற்கு அதிக நிதியை ஒதுக்கமுடியும். 

பொருளாதார பலம்தான் அத்திவாரம். அதற்கு மேல்தான் இராணுவ பலத்தை கட்டமைக்கமுடியும்.

சரி. இன்று சீனாவை முடக்க அமெரிக்கா இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்துகிறது.

இன்னும் 40 வருடங்களில் இந்தியா அடுத்த சீனாவாக உருவாக முடியுமா?

சீனா அடைந்த அதே உயரங்களை இந்தியா அடையுமா?

அமெரிக்காவிற்கு சவால் விடும் நிலையில் உள்ள சீனாவை போல, இந்தியாவால் அடுத்த 40 வருடங்களில் உருவாக முடியுமா?

முடியாது என்பதை வளர்ச்சி குறியீடுகள் காட்டுகின்றன.

வளர்ச்சி குறியீடுகளை மட்டும் இந்த கட்டுரையில் தருகிறேன். இதனை பெரிதாக விளக்க வேண்டியதில்லை. நீங்கள் பார்த்தாலே உங்களுக்கு விளங்கிவிடும்.

முதலாவது Manufacturing output இனை எடுத்துக்கொள்கிறேன்.

2022 இல் சீனாவின் Manufacturing output இன் அளவு 5 டிரில்லியன் டாலர்.

இந்தியாவின் Manufacturing output இன் அளவு 450 பில்லியன் டாலர்.

1 டிரில்லியன் = 1000 பில்லியன்










சீனாவினது Manufacturing output இனது அளவு இந்தியாவை விட பத்து மடங்கு பெரியது.

மறுவலத்தில் சீனாவின் Manufacturing output அளவில் 10% என்பது 500 பில்லியன். இதுதான் இந்தியாவின் அளவு.






சீனாவின் 10% இனை இந்தியா தொட வேண்டுமெனில், இந்தியாவிற்கு எத்தனை வருடம் ஆகும்? அதாவது தற்போதைய நிலையில் இருந்து இரு மடங்காக மாறவேண்டும்.

இதனை கணிக்க, இந்தியாவினது கடந்த கால Manufacturing output இனது புள்ளிவிபரத்தை எடுத்து கொள்கிறேன்.

இந்தியா 230 பில்லியனிலிருந்து 450 பில்லியனாக அதாவது இரு மடங்காக மாற எத்தனை வருடங்கள் எடுத்தது?

2009 இல் இந்தியாவின் Manufacturing output 230 பில்லியன் டாலர்.

2022 இல் 450 பில்லியன் டாலர்.

இரு மடங்காக மாறுவதற்கு இந்தியாவிற்கு தேவைப்பட்ட காலம் 13 ஆண்டுகள்.




அதற்கு முன்பு அதனது Manufacturing output இனை இரு மடங்காக மாற்றுவதற்கு எடுத்த காலகட்டத்தை பார்த்தால், 2004 இல் 112 பில்லியன் டாலராக இருந்திருக்கிறது. 2009 இல் 230 பில்லியன் டாலராக மாறியிருக்கிறது. இருமடங்காக மாற்ற 5 வருடங்களை எடுத்திருக்கிறது.




அதனால் இருமடங்காக மாற்றுவதற்கான காலகட்டத்தை துல்லியமாக கணிப்பிட முடியவில்லை. 

ஆனால் Manufacturing output இல், சீனாவினது உயரத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பெரும் இடைவெளியை உங்களால் காணகூடியதாக இருக்கும். 

அடுத்தது உலகின் மொத்த Manufacturing output இல் சீனாவினது பங்களிப்பு என்பது 2022 ஆண்டில் 30.6%. 2004 இல் 8.7% ஆக இருந்திருக்கிறது. 18 வருடங்களில் இந்த உயரத்தை அடைந்திருக்கிறது. 

இந்தியாவினது பங்களிப்பு என்பது 2004 இல் 1.5% ஆக இருந்திருக்கிறது. 2022 இல் 2.8% ஆக இருக்கிறது.

2022 கணக்கின்படி, சீனாவினது பங்களிப்பு இந்தியாவை விட 11 மடங்கு அதிகம்.

இதே காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனது பங்களிப்பு என்பது சுமார் 28% இலிருந்து 16% ஆக குறைந்துவிட்டது. (படம் கீழே)






அடுத்தது இந்தியா அதனது பெரும்பாலான உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு (raw material) சீனாவை பெரிதும் தங்கியிருக்கிறது.

இது தொடர்பாக The Wire இல் வெளியாகிய கட்டுரையை தருகிறேன்.

“Many goods that are manufactured domestically in India depend on Chinese imports for raw material and components.

For the pharmaceutical industry, India is heavily dependent on bulk drugs and intermediate/producer goods from China. These are essential raw materials used by the Indian pharma industry to manufacture finished products for domestic consumption and international trade.”

(The Wire இல் வெளியான ‘Tech, Infra, Scale: The Challenges Hindering India’s Transition From the ‘Made in China’ Tag’ எனும் கட்டுரையிலிருந்து - 29 ஜூன், 2023)

புவிசார் நலன் பார்வையில், raw material இற்கு சீனாவினை சார்ந்திராமல் இருப்பதற்கு கூட இந்தியாவினால் முடியாமல் இருக்கிறது.

காரணம் வேறு நாடுகளினுடாக இதே raw material களை இந்தியா பெற முனைந்தால், அதற்கு அதிக விலையை செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

ஏனெனில் சீனா அதனது உற்பத்தி துறையில் அதிக வலுவுடனும் தொழில்நுட்ப தேர்ச்சியுடனும் பெருமளவிலான பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்யக்கூடிய வல்லமையை உருவாக்கி வைத்திருக்கிறது. 

“China has become the manufacturing hub of the world because it is able to produce things at scale. And having produced things at scale it is able to sell them for cheap. By selling them for cheap, it is able to dominate,” said Arun Kumar, retired professor of economics at the Jawaharlal Nehru University.

According to Arun Kumar, India cannot completely put a stop to its strategic reliance on the import of certain crucial products.

“Slowing down trade with China will require us to go to alternate sources and they are more expensive than China. Thus, it will increase our production cost. Diversifying our import sources will be inflationary. So, unless we do something about our technology, infrastructure, and production of goods at scale, we will not be able to compete with China,” he said.

(அதே கட்டுரையிலிருந்து. Ibid)

நான் மேலே கூறிய பெரிய GDP எப்படி R&D இல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த கட்டுரையும் பின்வருமாறு விவரிக்கிறது.

Professor Arun Kumar believes India needs to focus on improving its technology.

“We need to have a technology policy. Unless we become more dynamic in terms of our technology development, in terms of our capital mobilisation, we will be dependent on some source or the other. To make our technology more dynamic, we need to do R&D [research and development),” he said.

“India is weak in that [R&D investment]. We are only spending 0.75% of our GDP on R&D whereas China spends 3.5%. The Chinese economy is five times bigger than ours. So, of a five times bigger economy, they are doing five times more R&D, which means they are spending 25 times more than us,” he explained.

(அதே கட்டுரையிலிருந்து. Ibid)

அடுத்தது சீன உற்பத்தி துறையின் நவீனமயப்படுத்தலும் அதன் வேகமும் 

Industrial Automation ஐ எடுத்துகொள்வோம்.

ஒவ்வொரு வருடமும் சீனா அதனது உற்பத்தி துறையில் சேர்க்கும் industrial robots எண்ணிக்கை மற்றைய நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

2022 இல் சீனா சேர்த்த industrial robots களின் எண்ணிக்கை, உலகின் மற்றைய நாடுகள் அனைத்தும் சேர்த்த தொகையை கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகம்.

In fact, in 2021, China installed more industrial robots than all other countries in the world combined. (படம் கீழே)




அடுத்தது Rare-earth elements (REEs)

சிறுவயதில் நீங்கள் விஞ்ஞான பாடத்தில் படித்த periodic table இல் வரும் chemical element களை பற்றியது. இதில் சில chemical element கள் மிக அரிதானவை. அதனாலேயே Rare-earth elements (REEs) என குறிப்பிடப்படுகின்றன.

இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தியில் இந்த Rare-earth elements முக்கியமான பங்கை வகிக்கின்றன.

Rare-earth elements (REEs) are used as components in high technology devices, including smart phones, digital cameras, computer hard disks, fluorescent and light-emitting-diode (LED) lights, flat screen televisions, computer monitors, and electronic displays. Large quantities of some REEs are used in clean energy and defense technologies.

இன்றைய Rare-earth elements களில் பெரும்பாலானவற்றை சீனா அதனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

Although rare earths are found across the world, no country has exploited them like China. Beijing recognised the strategic importance of these resources more than three decades ago and has built a dominant position in the production of global rare earth oxides — the raw, mined product from which rare earth elements can be separated.

அது என்ன REE உலகின் எல்லா பாகங்களிலும்தானே இருக்கிறது. அந்தந்த நாடுகள் அவற்றை அகழ்ந்து எடுத்து கொள்ளலாமே! அது எப்படி சீனா பெரும்பாலானவற்றை அதனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஏனெனில் அகழ்ந்தெடுத்து, அதனை refine செய்து அடுத்த கட்டங்களிற்கு கொண்டு செல்வது என்பது ஒரு process. அதில் தொழில்நுட்பங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. சீனா இதில் பெருமளவு முதலீடு செய்து, அதில் சிறப்பு தேர்ச்சியை அடைந்திருக்கிறது. மற்றைய நாடுகள் இதில் பின்தங்கியிருக்கின்றன. 

“Mining is only the first step. Rare earth elements must be separated from the oxides, refined and forged into alloys in a complex, highly specialised, multi-stage process, before they can be turned into magnets.

Here, too, there is a lot of ground for relative newcomers like Europe to make up. China has established a controlling position at each step of this process, through a concerted, long-term industrial strategy, backed by state subsidies.”

(Financial Times இல் வெளியான “Can Europe go green without China’s rare earths?” என்ற கட்டுரையிலிருந்து. 20 Sep 2023)

வளர்ந்த மேற்குலக நாடுகள் இதில் நுழைந்து இந்த போக்கை மாற்ற நினைத்தாலும், உடனடியாக சீனாவை தூக்கியெறிய முடியாது.

“In the short term, China will still be the major player,” says Edoardo Righetti, a researcher at Brussels-based think tank CEPS. “You can't break the competitive advantage they built over the last 30 years in the space of five years.”

(அதே கட்டுரையிலிருந்து. Ibid)

இந்த REE விடயத்தில், சீனா எத்தகைய தொலைநோக்கு பார்வையுடன் இருந்தது என்பதை காட்ட ஒரு நிகழ்வை தருகிறேன்.

சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தை 1970 களில் அறிமுகப்படுத்திய அன்றைய சீன அதிபர் Deng Xiaoping அவர்கள் Rare-earth elements களை பற்றி பின்வருமாறு கூறினார்.

“The Middle East has oil, China has rare earths,”

அவர் இதை கூறியது 1987 இல்.




ஒரு நாடு super power இற்கு சவாலாக உருவாகும்போது, super power சகல வளங்களையும் ஒன்று திரட்டி அதனை தடுக்க முயலும்.

சீனா தனக்கு சவாலாக வருவதை தடுக்க அமெரிக்கா எப்படி சகல முனைகளிலும் காய் நகர்த்துகிறது என்பதை பார்த்தாலே தெரியும்.

குறிப்பாக science and technology இல் சீனா அமெரிக்காவை தாண்டி சென்றுவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கிறது.

சீனா Science and Technology இல் முன்னேறினால், technology superiority நிலையை அடையும். அந்த நிலையை அடைந்தால், சீனா military superiority இனை தன் வசப்படுத்தும். 

சில உதாரணங்களை இந்த பதிவில் சுருக்கமாக தருகிறேன். இதனை பற்றி விரிவாக இந்த குறுந்தொடரில் தனி பகுதியாக எழுதுவேன்.

சீனா Advanced chip தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா பல தடைகளை விதித்திருக்கிறது.

இதனை CHIP WAR என்ற தலைப்பில், இந்த  குறுந்தொடரின் (பகுதி-6) இல் விரிவாக விவரித்திருக்கிறேன்.

இத்தனை தடைகளை அமெரிக்கா ஏற்படுத்தியபிறகும், சீனா DUV lithography கருவிகளை கொண்டே 7nm chip களை அண்மையில் தயாரித்தது. 

2011 இல், அமெரிக்கா Wolf Amendment எனும் சட்டத்தினை கொண்டுவந்தது. இது NASA சீனாவுடன் சேர்ந்து கூட்டு முயற்சியில் விண்வெளி ஆய்வுகள் செய்வதை தடை செய்கிறது.

அதன்படி அமெரிக்காவின் International Space Station இற்கு சீனாவின் astronauts களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

China has been barred from the International Space Station (ISS) since 2011, when Congress passed a law prohibiting official American contact with the Chinese space program due to concerns about national security.

சீனா இன்று தனக்கென சொந்தமாக Tiangong space station இனை கட்டி முடித்துவிட்டது.




அடுத்தது global navigation satellite system (GNSS).

இன்று நாம் அடிக்கடி உச்சரிக்கும்  Global Positioning System (GPS) என்பது GNSS ஆகும். இது அமெரிக்காவினுடையது.

இன்றைய பெரும்பாலான ஏவுகணைகள் இந்த GPS தொழில்நுட்பத்தை பாவித்துத்தான் இலக்கை அழிக்கின்றன.

ஆனால் அமெரிக்காவின் GPS இனை முழுக்க சார்ந்திருப்பது எதிர்காலத்தில் சிக்கலை தரும் என்பதால், சீனா தனக்கென BeiDou எனும் Navigation Satellite System ஒன்றினை உருவாக்கிவிட்டது. இது அமெரிக்காவின் GPS இனை விட துல்லியமானது என கள நிலவரங்கள் கூறுகின்றன.

ரஷ்யாவும் தனக்கென GLONASS எனும் Navigation Satellite System வைத்திருக்கிறது.

ஐரோப்பாவும் தமக்கென Galileo எனும் Navigation Satellite System உருவாக்கி வைத்திருக்கிறது.

மேலே நான் தந்திருப்பது சில உதாரணங்கள் மட்டுமே.

சீனா Artificial Intelligence , Quantum Information Science , Bio Technology, Energy and environment , Advanced materials and manufacturing, Space, Robotics என அறிவியலின் பலதுறைகளிலும் பெருமளவிலான முதலீடுகளை செய்து அதிவேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

சீனாவின் வேகத்தை அமெரிக்காவினால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. 

சீனா ஒதுக்கும் நிதியோடு அமெரிக்காவின் நிதியும் போட்டி போடமுடியவில்லை. நான் மேலே கூறியதுபோல GDP பெரிதாக பெரிதாக R&D இற்கு ஒதுக்கப்படும் நிதியும் பெரிதாகும்.

சீனாவின் இந்த அதிவேகமான வளர்ச்சிக்கு பிரதான காரணம் எது?

எல்லாவற்றையும் தொகுத்து ஒரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் சீனாவின் Political System.

சீனாவின் Political System என்பது ஒரு கட்சி ஆட்சிமுறை. தேர்தலினூடாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி முறை அல்ல. அதாவது ஜனநாயக ஆட்சி முறை அல்ல.

சீனாவின் Political System இல் சில பாதகங்கள் இருக்கின்றன என விமர்சனம் வைக்கப்படுவதுண்டு . அவை தனி விவாதத்திற்கு உரியவை.

ஆனால் சீனாவின் இந்த Political System  நீண்டகால இலக்கினை வரையறுத்து, அந்த இலக்கினை நோக்கி வளங்களை குவித்து அசுர வேகத்தில் நகர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

ஆனால் தேர்தல் அரசியலில் அமைந்த அரசு முறையில் சில சுணக்கங்கள் அடிக்கடி நிகழும். ஏனெனில் பல தரப்பட்ட எண்ணங்களை, சித்தாந்தங்களை கொண்ட மனிதர்கள், சமூகங்கள், கட்சிகள் என்பவற்றுக்கு ஒருமித்த கருத்து உருவாகும்வரை உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும். இதில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கமுடியாதது. 

இதற்குள் அரசு அதிகாரத்தை அடைய கட்சிகள் தொலைநோக்கு பார்வையிலான திட்டங்களை வகுக்காமல், தேர்தல் வெற்றிக்கு ஏற்ப திட்டங்களை வகுக்கும் நிலை அடிக்கடி நேரும். இந்த நிலை வளர்ந்த, வளர்ந்துவரும் நாடுகள் எல்லாவற்றிலும் உண்டு. அளவு மட்டும் கூடி குறையும்.

இவையெல்லாம் ஜனநாயக அரசு முறையில் இருக்கும் உள்ளார்ந்த பண்புகள். இவைகள் கால தாமதத்தையும், தொலை நோக்கற்ற திட்டங்களையும் காலத்திற்கு காலம் உருவாக்கி கொண்டேயிருக்கும்.

சீனா அதனது political system இனுடாக இந்த சிக்கல்களை கடந்து விடுகின்றது.

மறுவலமாக இந்தியாவின் தேர்தல் அரசியலில் நடக்கும் காமடிகள் உலக பிரசித்தம். அதனை நான் விவரிக்க தேவையில்லை. 

இந்தியாவினால் சீனாவின் அதே வேகத்திற்கு வளர்ச்சியை முடுக்கிவிட முடியாது. அதனது உள்ளார்ந்த அரசியல் பண்பு அதனது வேகத்தை குறைத்துக்கொண்டேயிருக்கும்.

ஒரு உதாரணம் தருகிறேன்.

1977 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் GDP சீனாவின் GDP ஐ விட பெரியது. 1978 இல்தான் முதன்முறையாக சீனாவின் GDP இந்தியாவின் GDP இனை தாண்டியது.

“In 1960, the Chinese gross domestic product (GDP, constant 2010 USD) was at $128.3 billion. That same year, the Indian GDP was at $148.8 billion, or 16% more. This trend of the Indian GDP being higher than the Chinese GDP continued nearly for the next two decades.

In 1978, the Chinese GDP was $293.6 billion in comparison to India’s $293.2 billion. Since then the gap between the GDP of the two countries has exploded.”

2023 இல் சீனாவின் GDP 19.4 டிரில்லியன் டாலர். இந்தியாவின் GDP 3.7 டிரில்லியன் டாலர். சீனாவின் பொருளாதாரம் இந்தியாவின் பொருளாதாரத்தை விட குறைந்தது 5 மடங்காவது பெரியது.




சீனா இதே வேகத்தில் வளர்ச்சி அடைந்து செல்லும்போது, இந்தியா அதற்கே உரித்தான அரசியல் குறைபாடுகளுடன் இந்த வேகத்தை தொடுவதென்பது சாத்தியம் இல்லை.

இது சீனாவிற்கு தெரியும். சீனா ஒரு வகையில் இந்தியாவை தனக்கான போட்டியாளராக கருதவில்லை. அதைத்தான் சீனாவின் கொள்கை வகுப்பாளர்களின் கருத்துக்களும் பிரதிபலிக்கின்றன.

அமெரிக்காவும் அதனது பார்வையில், இந்தியா சீனா அடைந்த உயரத்தை அடையாது என்றே மதிப்பீடு செய்திருக்கும். ஏனெனில் சீனா அடைந்த உயரத்தை இந்தியா அடையாது எனில் அமெரிக்கா கவலையடைய தேவையில்லை. இந்தியா அதற்கு சவாலை தரப்போவதும் இல்லை.

சீனாவிற்கு எதிராக இந்தியாவை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்வதே அதற்கு போதுமானது. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனை பயன்படுத்தியது போல.

ஒரு முத்தாய்ப்பான உதாரணத்துடன் முடிக்கிறேன்.

இன்றைய நவீன உலகின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றுதான் அதிவேக ரயில் (High Speed Rail (HSR)).

2007 ஆம் ஆண்டுவரை சீனாவில் High Speed Rail கிடையாது. 2008 இல் முதன் முதலாக 672 கிமீ நீளத்திற்கு HSR network கட்டப்பட்டது.

2022 வரை சீனாவில் கட்டிமுடிக்கப்பட்ட HSR network இன் நீளம் 42000 km.

உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கும் HSR network இன் நீளத்தை கூட்டினால் கூட, சீனாவில் இருக்கும் network இன் நீளத்தை விட மிக குறைவு. இதுதான் சீனாவின் வேகம் (படம் கீழே).









எதிர்காலத்தில் சீனா கட்டி முடிக்கப்போகும் HSR network இன் இலக்கையும் கீழே தருகிறேன். நீங்களே சீனாவின் வேகத்தை ஊகித்து கொள்ளலாம்.

“China's first high-speed railway started operating in 2008 between Beijing and Tianjin. 

Since then, the country has built a network that spans nearly 40,000km (25,000 miles) and is now the world’s largest for bullet trains that can travel up to 350km/h (220mph). 

The network is getting bigger, with plans to extend it to 50,000km by 2025, and 200,000km by 2035.”

(South China Morning Post இல் வெளியான “How China built the world’s largest high-speed rail network” கட்டுரையிலிருந்து. 
24 நவம்பர் 2022)

க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]