இந்திய விமானப்படையின் நிலையும் சீனா மீதான இந்திய தளபதிகளின் பார்வை குறைபாடும்
நேற்று உலகின் முதன் முதல் 6th Generation Fighter Aircraft இனை சீனா அறிமுகப்படுத்தியதை பற்றி சிறிய குறிப்பு ஒன்றை தந்திருந்தேன்.
இந்த நேரத்தில் இந்தியாவின் கதையை பற்றி சொன்னால் பொருத்தமாயிருக்கும்.
• அண்மையில் இந்திய இராணுவத்தை சேர்ந்த Major Gaurav Arya (Retd) என்பவருடைய podcast நேர்காணல் நிகழ்ச்சிகளை காண நேர்ந்தது.
அந்த ஒன்றில் இந்திய விமானப்படையின் Air Marshal Anil Khosla (Retd.) ஐ நேர்காணல் செய்திருந்தார்.
இந்த உரையாடலில், Gaurav Arya சீன விமானப்படையின் 5th Generation Fighters (போர் விமானங்கள்) பற்றி குறிப்பிடும்போது ஒரு விடயத்தை குறிப்பிடுகிறார்.
அவர் அதனை குறிப்பிட்டபோது, அதில் இருக்கும் stereotype ஐ கண்டு சிறிது அதிர்ச்சியாக இருந்தது.
ஏனெனில் உரையாடும் இருவரும் முன்னாள் இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதில் Anil Khosla விமானப்படையின் Air Marshal ஆக பணியாற்றியவர். விமானப்படையின் இரண்டாவது அதி உச்ச பதவி.
என்ன குறிப்பிட்டார் Gaurav Arya சீன விமானப்படையின் 5th Generation Fighters ஐ பற்றி?
“சீன பொருட்கள் தரமற்றவை என்ற பார்வை உலகம் முழுவதிலும் இருக்கிறது. பார்க்க பளபளப்பாக இருக்கும். ஆனால் தரத்தில் மட்டமானவை என மக்களுக்கு ஒரு பார்வை உண்டு.” என கூறிக்கொண்டு சீனாவின் 5th Generation Fighters உடன் அதனை தொடர்புபடுத்துகிறார்.
இந்த கருத்தை Air Marshal Anil Khosla உம் ஆமோதிக்கிறார்.
அவர் அதிலிருந்து ஒரு படி மேலே போய், அவர் பங்கிற்கு சீனாவின் ஆயுதங்களை பற்றி விவரிக்கிறார்
“சீனாவிற்கு இரு வகையான பார்வை இருக்கிறது. சீனா தன்னுடைய Defense Industry இனை பலப்படுத்த அதனுடைய கனரக ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய முனைகிறது. ஆனால் அதேநேரம் அதனுடைய மற்றைய 5th Generation fighter jet ஆன J-35 விமாங்களை விற்கவும் தயங்குகிறது. காரணம் அப்படி விற்கும்போது, அதன் jet engine இனுடைய பலவீனங்கள் வெளி உலகிற்கு தெரிந்துவிடுமோ என அஞ்சுகிறது. அதனால் தயங்குகிறது”
அதே stereotype பார்வை.
சீனா தொடர்பான stereotype பார்வை இந்தியாவின் அதி உச்ச தளபதிகளிடம் பரவலாக இருப்பதை பலமுறை நான் கண்டிருக்கிறேன்.
• இதனுடைய உண்மைத்தன்மை என்ன?
இது ஏன் stereotype பார்வை என விளக்குகிறேன்.
இதற்கு முன்பு இந்த stereotype பார்வையை வெளிப்படுத்துகிற இந்தியாவின் அதி உச்ச தளபதிகளது இந்திய விமானப்படையின் லட்சணத்தை பார்ப்போம்.
இந்திய விமானப்படையிடம் 5th Generation Fighter Aircraft இருக்கிறதா?
இல்லை.
இந்தியா இப்போது பிரான்சிடம் இருந்து வாங்கி வைத்திருக்கும் Dassault Rafale போர் விமானம் 4.5 Generation Fighter Aircraft.
இந்தியா 5th Generation Fighter Aircraft விமானத்தை செய்ய தொடங்கிவிட்டதா?
இங்குதான் இந்தியாவின் “மிகப் புகழ் வாய்ந்த நத்தை வேக Bureaucracy” ஐ காணலாம்.
இந்தியா தனக்கு 5th Generation Fighter Aircraft வேண்டும் என்பதை 2010 ஆண்டளவில் முடிவு செய்கிறது.
அதனது ஒரு பகுதியாக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்குகிறது. அந்த ப்ராஜக்ட்தான் Fifth Generation Fighter Aircraft (FGFA).
மறுபுறம் இந்தியா தன்னுடைய உள்ளூர் உற்பத்தியாக (indigenous) ஒன்றை செய்யவும் திட்டமிடுகிறார்கள். அதுதான் Advanced Medium Combat Aircraft (AMCA).
இதற்கிடையில் 2018 இல் ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொண்ட Fifth Generation Fighter Aircraft (FGFA) இலிருந்து இந்தியா விலகிக்கொள்கிறது.
Technology transfer, cost தொடர்பில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இணக்கம் ஏற்படாததால்தான் இந்தியா இதிலிருந்து விலகியது.
2019 இல் இந்தியா AMCA தொடர்பான feasibility study இனை முடிக்கிறது. உத்தியோகபூர்வமாக இதனை தொடக்குகிறது.
அதன் பின்பு 2024 மார்ச்சில்தான், இந்திய அரசு design and development phase of the AMCA அனுமதியை வழங்குகிறது.
இனிதான் இந்திய விமானப்படையினது Advanced Medium Combat Aircraft (AMCA) இற்கான prototype இனை செய்வதற்கான வேலை நடக்கும்.
இந்த prototype செய்வதற்கு குறைந்தது 4-5வருடங்கள் ஆகும். அதாவது 2028-2030.
அதற்கு பிறகு Serial Production தொடங்கும். இதற்கு பிறகு இந்திய விமானப்படை testing ஐ ஆரம்பிக்கும். specific operational needs,pilot feedback என்பவற்றை உள்வாங்கி மீண்டும் மீண்டும் திருத்தங்கள் நடக்கும். Testing நடக்கும். Performance evaluation நடக்கும். இதற்கு ஒரு 5 -6 வருடங்கள் ஆகும். அதற்குள் 2035 ஆகிவிடும்.
இதுதான் final product என தீர்மானிக்கப்பட்ட பிறகுதான், Mass Production தொடங்கும்.
அதாவது இந்தியா அதனுடைய 5th Generation Fighter Aircraft ஆன Advanced Medium Combat Aircraft (AMCA) விமானத்தை Mass Production செய்யும்போது குறைந்தது 2035 ஆம் ஆண்டை நாம் எட்டியிருப்போம். அதுவும் குறைந்தது. சிலவேளை ஆண்டுகள் இன்னும் தள்ளிப்போகலாம்.
• இனி சீனாவின் 5th Generation Fighter Aircraft ஐ பார்ப்போம்.
சீன விமானப்படையினது 5th Generation Fighter Aircraft ஆன J-20 (Mighty Dragon) அதனுடைய maiden flight இனை 2011 இல் நடத்தியது.
2017 இல் J-20 இனது Serial Production தொடங்கியது.
2020 இல் J-20 இனது Mass Production தொடங்கிவிட்டது.
இன்றைய தேதியில் ஒவ்வொரு ஆண்டும் சீனா 100 J-20 Mighty Dragon விமானங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது.
இன்னும் 5 வருடங்களில், அமெரிக்க விமானப்படையிடம் இருக்கும் 5th Generation Fighter Aircraft களை விட அதிக எண்ணிக்கையில் சீன விமானப்படையிடம் இருக்கும். காரணம் சீனாவின் manufacturing capacity பலத்திற்கு முன்பு எந்தவொரு நாடும் அருகில் கூட வரமுடியாது.
• அடுத்தது இந்திய விமானப்படையின் Air Marshal Anil Khosla சொன்ன கருத்தை பார்ப்போம்.
அதாவது அவரது stereotype பார்வை.
“சீனா அதனுடைய 5th Generation fighter aircraft ஆன J-35 விமாங்களை விற்க தயங்குகிறது. காரணம் அப்படி விற்கும்போது, அதன் jet engine இனுடைய பலவீனங்கள் வெளி உலகிற்கு தெரிந்துவிடுமோ என அஞ்சுகிறது. அதனால் தயங்குகிறது”
• உண்மையில் Fighter Aircraft இனது jet engine தயாரிப்பது என்பது, அணு ஆயுதங்களை தயாரிப்பதை விட கடினமானது.
The reality is that developing a high-performance fighter aircraft engine is more challenging than making a nuclear weapon.
காரணம் ஒரு போர் விமானத்தின் jet engine சந்திக்கவேண்டிய சவால்கள்.
• ஒரு உலோகம் 1500 செல்சியஸ் வெப்பம், rotational speeds over 10,000 RPM என்பவற்றையெல்லாம் தாங்கும் திறன் இருக்கவேண்டும். பல ஆயிரம் பாகங்கள் extreme precision இல் இயங்கவேண்டும்.
A modern jet engine involves thousands of precision-engineered parts operating at extreme conditions (e.g., temperatures exceeding 1,500°C, pressures over 40 atmospheres, and rotational speeds over 10,000 RPM). Each part must perform flawlessly for extended periods, and even minor imperfections can lead to catastrophic failure.
• இதையெல்லாம் தாங்கக்கூடிய high-temperature superalloys, ceramic coatings, & advanced composite ஆன உலோகத்தை உருவாக்க வேண்டும். இதற்குள் Material Science சம்மந்தப்படுகிறது.
• இப்படி உருவாக்கப்பட்ட உலோகமானது பல ஆயிரம் மணித்தியாலங்கள் பறக்கக்கூடிய தாங்குதிறனை கொண்டிருக்கவேண்டும். அதாவது reliability. இந்த reliability என்ற காரணி இல்லாமல் போனால் பல நூறு மில்லியன் டாலர் பெறுமதியை உடைய போர் விமானத்தையும், பொக்கிஷமான போர் விமானியையும் இழக்க நேரிடும்.
• காலத்திற்கு காலம் போர் களம் கடுமையானதாக மாறும்போது ஆயுதங்களின் sophistication உம் கடுமையானதாக மாறும். அதன்படி போர் விமானங்களும் அதனுடைய sophistication ஐ அதிகரிக்கின்றன. அதனை அடிப்படையாக வைத்துத்தான் 1st, 2nd , 3rd, 4th, 5th Generation fighter aircraft என வகைப்படுத்துகிறோம்.
• ஒவ்வொரு Generation போர் விமானங்களினது sophistication அதிகரிக்கும்போதும், jet engine இனது தாங்குதிறன் அதற்கேற்ற ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இது மிகப்பெரிய சவால்.
இதனால்தான் நவீன போர் விமானங்களின் jet engine ஐ தயாரிப்பது என்பது அணு ஆயுதங்களை தயாரிப்பதை விட கடினமானது என்கிறோம்.
• அந்தவகையில் போர் விமானங்களின் jet engine களை தயாரிப்பதில் அமெரிக்கா, ரஷ்யா தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன.
கூட பிரான்ஸ், பிரிட்டனும் இருக்கிறது.
இந்த Elite Club இல் சீனாவும் சேர்ந்துவிட்டது.
இன்று அமெரிக்கா அதனுடைய 5th Generation Fighter Aircraft களான F-22 Raptor இற்கு Pratt & Whitney F119 engine ஐ பயன்படுத்துகிறது. F-35 இற்கு Pratt & Whitney F135 engine ஐ பயன்படுத்துகிறது.
அதேபோல் ரஷ்யா அதனுடைய 5th Generation Fighter Aircraft ஆன SU-57 இற்கு RD-33 engine ஐ பயன்படுத்துகிறது.
சீனா அதனுடைய 5th Generation Fighter Aircraft ஆன J-20 இற்கு அதனுடைய சொந்த தயாரிப்பான WS-15 engine ஐ பயன்படுத்துகிறது. இதற்கு முன்பு WS-10 engine ஐ பயன்படுத்தியது.
அதனுடைய மற்றைய 5th Generation Fighter Aircraft ஆன J-35 (carrier- based aircraft) இற்கு சொந்த தயாரிப்பான WS-19 பயன்படுத்துகிறது.
அதுபோல சீனாவின் Early Warning Aircraft ஆன Y-20 இற்கு அதனுடைய மற்றைய சொந்த தயாரிப்பான WS-20 இனை பயன்படுத்துகிறது.
• இந்த புள்ளியில்தான் Air Marshal Anil Khosla சொன்ன stereotype பார்வை வருகிறது.
சீனாவின் jet engine களது Reliability.
இதில் சிறிய உண்மை இருக்கிறது.
அதாவது சீன jet engine களது Reliability என்பது அமெரிக்க, ரஷ்ய jet engine களது Reliability ஐ விட குறைவானதாக இருக்கும் வாய்ப்பு.
ஏனெனில் சீனா இந்த Elite Club இல் சமீபத்தில் நுழைந்த நாடு.
இத்தகைய சவால்கள் நேருவது இயல்பானதே.
ஆனால் சீனா தொடர்ச்சியாக அதிக நிதியினை R&D இல் ஒதுக்குவதும், கடந்த பத்தாண்டுகளாக தொழில்நுட்பத்தில் சீனா அசுர வளர்ச்சி அடைந்துவருவதும், In the long run இல் சீனாவால் இத்தகைய “ஆரம்ப சவால்களை” வெற்றிகரமாக கடந்துவிட முடியும்.
அறிவியலின் மற்றைய பகுதிகளான AI, Quantum Science களில், சீனா சமீபகாலங்களில் எத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
ஆக நான் குறிப்பிட்டது போல In the long run இல், சீனாவால் jet engine களை தயாரிப்பதில் இருக்கும் ஆரம்ப சவால்களை வெற்றிகரமாக கடந்துவிட முடியும்.
• Jet engine களை தயாரிப்பதில் இந்தியாவின் நிலை என்ன?
இந்தியா தான் உருவாக்க நினைத்திருக்கும் “Kaveri” engine இன்னும் குழந்தை பிராந்தியத்தில்தான் இருக்கிறது.
இந்தியா அதனுடைய 5th Generation Fighter Aircraft ஆன AMCA விற்கு முற்று முழுதும் அமெரிக்காவின் jet engine களைத்தான் நம்பியிருக்கிறது.
இதுதான் இந்தியாவின் நிலை.
இந்த நிலையில் இருந்து கொண்டுதான், இந்தியாவின் அதி உச்ச தளபதிகள் சீனாவை பற்றி stereotype பார்வையிலான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.
• சமூக ஊடகங்களில்தான் சாமானிய இந்தியர்கள் இந்திய இராணுவ ஆற்றலை பற்றி விஜயகாந்த், அர்ஜூன் மாதிரி பதிவுகளை எழுதுகிறார்கள். ஒரு சிரிப்புடன் அத்தகைய பதிவுகளை பார்த்து கடந்துவிடுவேன்.
ஏனெனில் இந்திய இராணுவத்தை அதனுடைய பலம், பலவீனங்களை புரிந்தே அணுகுகிறேன்.
இந்தியா குறைத்து மதிப்பிட முடியாத இராணுவ ஆற்றல். ஆனால் அதேநேரம் அது strategic level இல் சில பலவீனங்களை வைத்திருக்கிறது என்பதும் எனக்கு தெரியும்.
அதனால் சாமானிய இந்தியர்கள் சமூக ஊடகங்களில் இந்தியாவின் இராணுவ ஆற்றலை பற்றி ஏதாவது புளுகும்போது சிரித்துவிட்டு கடந்துவிடுவேன். எனது முகநூல் பக்க நண்பர்களிலும் இப்படி அலப்பறை பதிவுகளை எழுதுபவர்கள் உண்டு.
ஆனால் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள், இராணுவத்தின் உச்ச தளபதிகள் இத்தகைய stereotype பார்வையில் இந்த புவிசார் அரசியல், போரியலை அணுகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment