திராவிடம் இல்லேன்னா தமிழர்கள் நீங்க படிச்சிருப்பீங்களா?
இதுதான் திராவிடம் வழமையாக வைக்கும் முக்கிய வாதங்களில் ஒன்று.
• சரி. இலங்கையில் இருந்த தமிழர்களை யார் படிக்க வைத்தது?
ஒரு உதாரணம் தருகிறேன்.
சில தினங்களுக்கு முன்பு தமிழர்களின் தைப்பொங்கல் திருவிழா வந்தது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், எதிர் கட்சி தலைவர் Keir Starmer, மற்றும் பல MP களும் பிரிட்டனில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது தைப்பொங்கல் வாழ்த்தை தெரிவித்திருந்தார்கள்.
• இங்கு வாழும் தமிழர்கள் என நான் குறிப்பிடுவது இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய தமிழர்களைத்தான்.
ஏனெனில் பிரிட்டன் அரசியல்வாதிகளின் பார்வையில் தமிழர்கள் என்பது இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள்தான். தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் இங்கே இருந்தாலும் ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் இலங்கை தமிழர்களை விட குறைவு.
அதனால்தான் பிரிட்டன் அரசியல்வாதிகளின் தைப்பொங்கல் வாழ்த்து செய்திகளில் எப்பொழுதும் ‘இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்’ போன்ற வசனங்களை சேர்த்துகொள்வார்கள்.
சரி.
• மேலே கூறிய பிரிட்டன் அரசியல்வாதிகளின் தைப்பொங்கல் செய்திகளை கவனித்து பாருங்கள்.
பிரதமர் ரிஷி சுனாக், மற்றும் பல MP களும் ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதுதான் பிரிட்டனின் சுகாதார துறையில் இலங்கை தமிழர்கள் வழங்கும் பங்களிப்பு.
பிரிட்டனின் National Health Service (NHS) இல் மருத்துவர்,தாதியராக (doctors and nurses) இருக்கும் இலங்கை தமிழர்களின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்டிருப்பார்கள்.
கீழே ரிஷி சுனாக்கின் வாழ்த்து செய்தி.
"I want to send my best wishes to everyone celebrating Thai Pongal this weekend," Sunak said.
"I want to say an enormous thank you to British Tamils for your hard work and the sacrifices you make for the good of your families and communities and for demonstrating the true meaning of service, #especially in our NHS," he added.
"Let me wish everyone here and around the world helath, happiness and prosperity this Thai Pongal."
அதைப்போல மற்ற அரசியல்வாதிகளின் வாழ்த்து செய்திக்கான இணைப்பு கீழே.
பிரிட்டன் அரசியல்வாதிகளின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி
• ஆக பிரதமர், MP கள் அனைவரும் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இலங்கை தமிழர்கள் doctors and nurses ஆக NHS இல் தமது பங்களிப்பை வழங்கி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இத்தனைக்கும் பிரிட்டனின் வாழும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 2-3 லட்சம்தான்.
இந்த இரண்டு - மூன்று லட்சத்திற்கு உட்பட்ட தொகைய வைத்துக்கொண்டு, 6 கோடி மக்கள் தொகையை கொண்ட பிரிட்டனின் NHS இல் முக்கிய பங்களிப்பை தருகிறார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
இலங்கையில் இருந்து பெரும்பாலோனார் அகதிகளாக குடியேறி, முதல் தலைமுறை immigrants ஆக சிரமப்பட்டு, அடுத்த தலைமுறையை கல்வியில் சிறந்த இடத்தை அடைய வைத்திருக்கிறார்கள்.
• இனி அடுத்த கேள்வி.
இது தற்செயலாக ஐரோப்பிய நாட்டில் குடியேறியதால் இந்த மாற்றம் நிகழ்ந்ததா?
இல்லை.
இதற்கும் ஒரு உதாரணம் தருகிறேன்.
இலங்கையில் ‘தனி சிங்களம்’ (Sinhala Only Act) எனும் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டது. இந்த ‘தனி சிங்களம்’ எனும் சட்டத்தினால், எப்படி இலங்கை தமிழர்கள் அரச நிர்வாகம், உயர் தொழில்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள் என்பதை Fighting Words: Language Policy and Ethnic Relations in Asia எனும் புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது.
"In 1956, 30 percent of the Ceylon administrative service, 50 percent of the clerical service, 60 percent of engineers and doctors, and 40 percent of the armed forces were Tamil.
By 1970 those numbers had plummeted to 5 percent, 5 percent, 10 percent, and 1 percent, respectively."
இந்த உதாரணம் தனி சிங்கள சட்டத்தை பற்றியது அல்ல. இந்த உதாரணத்தில் உள்ள புள்ளிவிபரங்கள், இலங்கையில் 1956 இற்கு முன்பு வரை இலங்கை தமிழ் சமூகம் கல்வியில் சிறந்து விளங்கி, அரச நிர்வாகம், உயர் தொழில்களில் தனது மக்கள் தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்கை எப்படி கைப்பற்றியிருந்தது என்பதை தெளிவாக காட்டுகிறது.
அன்றைய இலங்கையின் சனத்தொகையில் இலங்கை தமிழர்கள் 12% இற்கும் குறைவு. ஆனால் இலங்கை அரச நிர்வாகத்தில் 30% ஐயும், மருத்துவர், பொறியாளர்களில் 60% பங்கையும் கொண்டிருந்தார்கள்.
ஆக இலங்கை தமிழர்கள் 100 வருடத்திற்கு முன்பு இலங்கையில் இருந்த காலத்திலும் கல்வியில் சிறந்த இடத்தில் இருந்திருக்கிறார்கள்.
பின்னர் போரினால் மற்றைய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த பின்னரும் கல்வியில் சிறந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள்.
Moving up and getting on: Migration, Integration and Social Cohesion in the UK எனும் புத்தகம், பிரிட்டனில் பள்ளி கல்வியில் இலங்கை தமிழர்கள் எத்தகைய சிறந்த பெறுபேறுகளை பெறுகிறார்கள் என்பதை தரவுகளுடன் தருகிறது. அந்த தரவு படம் கீழே.
• ஆக இலங்கை தமிழர்கள் இலங்கையில் இருந்தபோதும் சரி. பின்னர் போரில் பாதிக்கப்பட்டு உலகின் பல பாகங்களுக்கும் அகதிகளாக குடியேறிய போதும் சரி. கல்வியை கெட்டியாக பிடித்து வைத்திருந்திருக்கிறார்கள்.
இந்த இலங்கை தமிழர்கள் எவரும், தமிழ்நாட்டில் மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் திராவிடம், பெரியார் தாக்கத்திற்கு சிறிதும் உட்படாதவர்கள்.
ஆனால் கல்வியில் சிறந்த நிலையை எட்டி பிடித்து இருக்கிறார்கள்.
காரணம் இலங்கை தமிழர்களின் வாழ்வியல், பண்பாட்டு கூறு நெடுகிலும் கல்விக்கு ஒரு முக்கிய இடம் இருந்திருக்கிறது.
இது ஒரு உள்ளார்ந்த பண்பாக இருக்கிறது.
அதனைத்தான் இது காட்டுகிறது.
• இதே பண்பு தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் பொருந்தும்.
இதே ‘கல்விக்கான முக்கியத்துவம்’ என்ற உள்ளார்ந்த பண்பு தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இருக்கிறது.
அதைத்தான் தமிழ்நாட்டு தமிழர்களின் வரலாறு காட்டுகிறது.
ஒரே வார்த்தையில் கூறுவதாக இருந்தால் ‘ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வியலில் கல்வி மீதான முக்கியத்துவம்’ ஒரு உள்ளார்ந்த பண்பாக வரலாறு நெடுக நீடித்து இருந்திருக்கிறது.
இந்த உள்ளார்ந்த பண்புகள் வரலாற்று ரீதியாக பல்வேறு வடிவங்களில் கடத்தப்பட்டு கொண்டே வரும். அவை அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளாக, நெறிகளாக, பண்பாடுகளாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு கொண்டே வரும்.
இதைப்பற்றி விரிவாக “திராவிடத்தின் பல உருட்டுகளில் இதுவும் ஒன்று - பகுதி 2” என்ற கட்டுரையில் விவரித்திருந்தேன்.
அதை வாசிக்க இணைப்பு கீழே.
https://tamildesiyam2009.blogspot.com/2022/12/2.html?m=1
க.ஜெயகாந்த்












Comments
Post a Comment