தலைகீழாக போய் கொண்டிருக்கும் ரஷ்யாவின் போர் நகர்வுகள்- போரியல் பார்வையில் (பகுதி -1)

 ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு அன்றைய நாட்களில் நான் எழுதிய எனது பதிவுகளை மீள்பதிவு செய்கிறேன். இந்த பதிவு எழுதப்பட்ட நாள் 07/03/22.

முந்தைய பதிவில் ரஷ்ய இராணுவம் மரபு போரில் (conventional war) உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடும். ஆனால் அதற்கு பிறகு தொடங்கும் occupation கட்டத்தில்தான் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் பெரும் சவாலை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் எனது இந்த அனுமானத்திற்கு மாறாக ரஷ்ய இராணுவம் மரபு போரிலேயே சில நாட்களிலேயே அடைந்திருக்க வேண்டிய பல போரியல் இலக்குகளை அடைய முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறது.

நேட்டோ நாடுகளின் இராணுவமே களத்தில் நடந்துகொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அவர்களும் ரஷ்ய இராணுவம் இவ்வளவு தடுமாறும் என எதிர்பார்க்கவில்லை.

என்ன நடந்தது?

இந்த பதிவில் போரியலோடு தொடர்புடைய பல jargons களை அப்படியே ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்த வேண்டியிருப்பதால், வழமையை விட இந்த பதிவில் அதிக ஆங்கில சொற்றொடர்கள் இருக்கும்.




ரஷ்யா அதனது போர் நகர்வில் சறுக்கிய புள்ளிகள் எவை?

1. உக்ரைனின் வான்வெளியில் ரஷ்ய விமான படை தனது air superiority ஐ இந்த கணம் வரை நிறுவாதது.

2. ரஷ்ய இராணுவத்தின் logistics force structure இன் உள்ளார்ந்த குறைபாடு

3. இந்த குறிப்பிட்ட போரில் ரஷ்ய இராணுவத்தின் உளவுறுதி குறைவாக இருப்பது.

மேலே குறிப்பிட்ட இந்த மூன்று பிரதான காரணத்தையும் சிறிது விரிவாக தருகிறேன்.


1. Air superiority ஐ நிறுவ தவறிய ரஷ்ய விமான படை

நவீன போர்களில் வெற்றி-தோல்வியை தீர்மானிப்பதில் விமான படை பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. 

இன்றைய நவீன போர்களில் முதலில் வான்வெளியை ‘முழு கட்டுப்பாட்டில்’ கொண்டுவருவது மிக இன்றியமையாததாக கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் விமானப்படை இத்தகைய ‘முழு கட்டுப்பாட்டில்’ கொண்டு வருவதையே Air superiority என அழைக்கிறோம்.

கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த போர்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, air superiority இற்கும் போரின் வெற்றிக்கும் இடையில் பலமான தொடர்பு இருப்பதை  போரியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

“We found that air superiority significantly improved a country’s probability of winning the decisive battle as well as the overall war”

While air power theorists like Trenchard, Mitchell, and Seversky have long maintained “that command of the air is of first priority to any military success in war” 

(Air superiority and battlefield victory எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து)

ஆனால் இதிலும் தர வரிசை இருக்கின்றது.

1. Air supremacy

2. Air superiority

3. Air parity

பல தடவைகளில் இந்த Air supremacy உம் Air superiority உம் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இவற்றிற்கு இடையே நுண்ணிய வேறுபாடு உண்டு.

1.Air supremacy

உங்களுடைய விமான படை வான் வெளியை ‘முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது’. 

Air supremacy is the highest level, where a side holds complete control of the skies.

2. Air superiority

இது இரண்டாவது நிலை. ஒப்பீட்டளவில் எதிரியை விட மிக பலமான நிலையில் வான்வெளியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.

Air superiority is the second level, where a side is in a more favorable position than the opponent.


ஏன் ரஷ்ய விமான படையால் Air superiority ஐ உக்ரைன் வான்வெளியில் நிறுவ முடியவில்லை?

ரஷ்ய விமான படை (Russian Aerospace Forces (VKS)) உக்ரைன் விமான படையை விட எண்ணிக்கை அடிப்படையிலும் நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையிலும் உயர்ந்த நிலையில் உள்ளது. (numerical superiority & capability).

GLOBAL FIREPOWER 2022 இன் புள்ளிவிபரம் கீழே.

ரஷ்ய விமான படையிடம் Fixed Wing Military Aircraft வகையில் Fighter aircraft சுமார் 800 உம் attack aircraft சுமார் 700 உம் இருக்கின்றன.

rotary-wing aircraft வகையில் Attack Helicopters குறைந்தது 550 இருக்கின்றன.

உக்ரைனிடம் இந்த இரண்டு வகையையும் சேர்த்து 150 ஐ தாண்டாது.

ஆக போரியல் கோட்பாடுகளின் படி ரஷ்யா தனது  Air superiority ஐ சில மணித்தியாலங்களிலேயே நிறுவியிருக்க வேண்டும்.


என்ன நடந்தது?

ரஷ்யா உக்ரைன் மீதான தனது தாக்குதலை பெப்ரவரி 24 ம் திகதி தொடங்கியபோது, முதல் மணித்தியாலங்களில் உக்ரைனில் இருக்கும் main ground-based early warning radars மீது துல்லியமான cruise missiles &  ballistic missiles தாக்குதலை நடத்தியது. 

அத்துடன் உக்ரைனின் long-range S-300P surface-to-air missile (SAM) batteries மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

கணிசமான உக்ரைன் விமான படையின் விமான தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்றைய நவீன போர்களில் Air superiority நிறுவ முயலும்போது , ஒரு நாட்டின் Air Defense ஐ பலவீனப்படுத்த இரண்டு போர் நகர்வுகள் தொடங்கும்.

Suppression of Enemy Air Defenses (SEAD)

இது அந்த நாட்டின் surface-to-air missile (SAM), Anti-aircraft artillery (AAA), Command Control and Communication (C3) என்பவற்றை விமான தாக்குதலில் தாக்கி அழிப்பது. 

அமெரிக்காவின் இன்றைய போர்களில், அதனது மொத்த விமான தாக்குதல்களில் 25% மானவை SEAD வகை தாக்குதல்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

Offensive Counter-Air (OCA)

இது எதிரி விமான படையின் சகல கூறுகளையும் அழிப்பது. 

Offensive counter-air (OCA) is a military term for the suppression of an enemy's military air power, primarily through ground attacks targeting enemy air bases. disabling or destroying parked aircraft,runways, fuel facilities, hangars, air traffic control facilities and other aviation infrastructure.

இது எதிரி விமானங்கள் பறக்க தொடங்கும் முன்பு அதனது விமான தளங்களில் தரித்து நிற்கும்போதே வீழ்த்துவதற்கான உத்தி.

இதில் OCA தாக்குதலில் மொத்தமாக எதிரி விமானங்களை அழித்துவிடலாம்.

அவைகள் பறக்க தொடங்கிவிட்டால் air combat இல் வைத்து ஒன்று ஒன்றாக வீழ்த்த வேண்டும். அவர்களும் பதில் தாக்குதல் நடத்துவார்கள்.

இந்த OCA தாக்குதலில் மிக குறைந்த இழப்புகளுடன் எதிரி நாட்டு விமானங்களை முற்றாக அழிக்க கூடிய சாத்தியம் உள்ளது.

அத்துடன் Ground attack munitions செலவு குறைந்தது. Air-to-Air Missile (AAM) செலவு கூடியது.

ஆக ஒரு நாட்டின் விமான படை SEAD ஐயும் OCA ஐயும் நடத்திய பிறகு அந்த ‘வான்வெளியில்’  Air superiority ஐ நிறுவலாம்.


ரஷ்ய விமான படை SEAD உம் OCA வையும் நடத்தியதா?

இல்லை. அத்தகைய தாக்குதலை ரஷ்ய விமான படை (VKS) நிகழ்த்தவில்லை என கள தகவல்கள் கூறுகின்றன.


ஏன் அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படவில்லை?

போரியல் ஆய்வாளர்களால் இதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.

குறைந்தளவிலான precision-guided munitions (PGM) களேயே ரஷ்ய விமான படை கொண்டிருப்பது.

precision-guided munition (PGM) is a guided munition intended to precisely hit a specific target, to minimize collateral damage and increase lethality against intended targets.

இந்த precision-guided munitions (PGM) வகை குண்டுகள் குறிப்பிட்ட இலக்கை மட்டும் துல்லியமாக தாக்கக்கூடியவை. 

ஏனெனில் unguided bombs களை பாவிக்கும்போது அது இலக்கை தவற விடுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. 

அதனால் இலக்கு அழிவதை உறுதிப்படுத்த விமான படை அதிகமான தடவை பறப்புகளையும் (Sortie), அதிகளவான unguided bombs களையும் பரந்த பரப்பில் போட வேண்டியதாகிறது. 

அத்துடன் PGM தாக்குதலில் அநாவசியமான உயிரிழப்புகளை (collateral damage) தவிர்க்கமுடியும். குறிப்பாக பொது மக்களின் இழப்பை தவிர்க்கலாம்.

ரஷ்ய விமான படை சிரியாவில் தாக்குதலை நடத்தியபோது Su-34 fleet மட்டுமே PGM ஐ பயன்படுத்தியிருக்கிறது. இது அவர்களின் PGM இருப்பு குறைந்தளவிலேயே இருப்பதை காட்டுவதாக இருக்கிறது.


PGM இல்லாவிடிலும், unguided bombs கள் மூலமாக SEAD ஐயும் OCA ஐயும் நடத்தியிருக்க முடியாதா என்ற அடுத்த கேள்வி எழுகின்றது.

முடியும். ஆனால் ஏன் நடத்தவில்லை?

"There's a lot of stuff they're doing that's perplexing," said Rob Lee, a Russian military specialist at the Foreign Policy Research Institute.

பொதுவாக ரஷ்ய விமான படை விமானிகளின் flying hours குறைவாக இருப்பது அவர்களின் நம்பிக்கையை குறைத்திருக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது.

"They're not necessarily willing to take high risks with their own aircraft and their own pilots," a senior U.S. defense official said.


• மறுபுறம் உக்ரைன் defensive counter-air (DCA) நடத்தி கணிசமான ரஷ்ய attack helicopters களை வீழ்த்தியிருக்கிறார்கள். காரணம் ரஷ்ய விமான படை Air superiority ஐ நிறுவாததால், வான்வெளியில் உக்ரைன் விமான படை அவ்வப்போது இந்த தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திவருகிறது.


ஏன் Air superiority மிக முக்கியமானது?

வான்வெளியை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிறகு, பல இராணுவ நகர்வுகள் எளிதில் சாத்தியமாகின்றன.

• Close Air Support (CAS)

உங்களது இராணுவம் தரையில் முன்னேறுகையில் தொடர்ச்சியான விமான தாக்குதலின் மூலம் எதிரியின் நிலையை பலவீனப்படுத்துதல்.

• Airborne forces ஐ பயன்படுத்தி எதிரியின் நிலப்பரப்பில் Airdrop செய்வது , Air assault செய்வது. 

• Tactical bombing

• Strategic bombing

“Air superiority increases combat power. the amount of force one can apply at a particular place and time. 

The actor with a combat power advantage is likely to win the engagement.”

(Air superiority and battlefield victory எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து)


ரஷ்யாவின் 40-mile long Russian convoy with tanks and artillery

இந்த செய்தியை கடந்த பல நாட்களாக நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

உக்ரைனின் Kyiv மீது பெரும் தாக்குதலை தொடுப்பதற்காக, ரஷ்யா பெரும் சூட்டாற்றல் (Fire Power) அதிகமுள்ள படையினை அனுப்பியிருக்கிறது.

இந்த படையின் convoy நீளம் மட்டுமே 40 மைல் நீளத்திற்கு இருக்கும் அளவு அதனது கனரக ஆயுதங்களை அனுப்பியிருக்கிறது. (படம் கீழே)



ஆனால் இந்த படையணி கிட்டத்தட்ட ஒரு வார காலமாக ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

ஊர்ந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள்.

• முதலாவது நான் மேலே குறிப்பிட்ட ரஷ்ய இராணுவத்திற்கு இருக்கும் logistics சிக்கல்.

• இரண்டாவது உக்ரைன் படைகள் நடத்தும் Counterattack 

ரஷ்ய படைகள் தங்களது Air superiority ஐ நிறுவியிருந்தால், பெரும்பாலான Airborne forces ஐயும் கனரக ஆயுதங்களையும் வான் வழியினூடாக தரை இறக்கியிருக்க முடியும் (Airdrop).

இனி ரஷ்ய இராணுவத்தின் logistics force structure இன் உள்ளார்ந்த குறைபாடு பகுதி-2 இல் தொடரும்.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]