ரஷ்யாவின் புவிசார் அரசியல் பார்வையில் ரஷ்ய-உக்ரைன் போர்

ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு போர் தொடங்குவதற்கு முன்னர் எழுதிய எனது பதிவை மீள்பதிவு செய்கிறேன்.

• ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையிலான முறுகல் நிலை போரிற்கான சாத்தியங்களை திறந்திருக்கும் நிலையில், இதனது பின்னணியை ஆழமாக விளக்க முனைவதே இந்த பதிவு.  

முந்தைய பதிவில் ரஷ்யா ஏன் உக்ரைன் மீது இராணுவரீதியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை எனது புவிசார் அரசியல் நலன் பார்வையில் விளக்கியிருந்தேன்.

இது உண்மையில் ரஷ்யா-அமெரிக்காவிற்கு இடையிலான முறுகல் நிலைதான். அதுதான் மூல காரணி. ரஷ்யா-உக்ரைன் முறுகல் என்பது அந்த மூல காரணியிலிருந்து பிறந்தது.

அமெரிக்காவின் ரஷ்யா தொடர்பான வெளியுறவு கொள்கை எப்படி ரஷ்யாவை சீனாவுடனான strategic partner ஆக மாற்றியது என்பதையும் ‘அமெரிக்காவை வீழ்த்துவதற்கான சீனாவின் வியூகம் - குறுந்தொடர் பகுதி 4’ இல் விளக்கியிருந்தேன்.

இந்த பதிவில் ரஷ்யா-அமெரிக்காவிற்கு இடையிலான முறுகல் நிலையை வேறொரு கோணத்தில் விளக்க நினைக்கிறேன்.

இதை ரஷ்யாவின் பார்வையில் தர நினைக்கிறேன்.

இதற்காக ரஷ்யாவின் பிரபலமான ஊடகவியலாளரும்,எழுத்தாளருமான  Vladimir Pozner Jr. அவர்கள் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் Yale University இல் உரையாற்றியதை இந்த பதிவிற்காக பயன்படுத்தியிருக்கிறேன்.

Vladimir Pozner Jr தனது உரையில் சோவியத் யூனியன் உடைந்த பின்னர் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்குமான உறவில் ஏற்பட்ட மாற்றங்களை வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தருகிறார்.

குறிப்பாக 1985 இலிருந்து 2007 வரைக்குமான நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறார்.

அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆற்றிய உரையின் முக்கிய புள்ளிகளை, அந்த வரலாற்று நிகழ்வுகளை வரிசைப்படி கீழே தந்திருக்கிறேன்.

இது ரஷ்ய-அமெரிக்க முறுகல் நிலையை ஆழமாக அறிந்து கொள்ள உங்களுக்கு இது உதவும்.

இதனூடாக புவிசார் அரசியல் பற்றிய உங்களது புரிதலை இன்னும் ஆழமாக்க உதவுவதே எனது பதிவின் நோக்கங்களில் ஒன்று.

இனி  Vladimir Pozner Jr  உரையின் முக்கிய புள்ளிகள் வரிசையாக. தலைவர்களின் சில முக்கியமான கூற்றுகளை ஆங்கிலத்தில் அப்படியே தந்திருக்கிறேன்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகான உலக ஒழுங்கில், ரஷ்யா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட விரும்பியது.

1992 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் Boris Yeltsin அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றும்போது பின்வரும் அழைப்பை விடுத்தார்.

‘ ரஷ்யா அமெரிக்காவுடன் நட்புடன் ஒன்றிணைந்து செயலாற்ற விரும்புகிறது’



சோவியத் யூனியன் உடைந்த பிறகு அமெரிக்கா , ரஷ்யா என இரு நாடுகளுக்குமே ஒரு ‘புதிய’ சிக்கல் உருவாகியது.

 ரஷ்யாவுடனான அமெரிக்க உறவு எத்தகையதாக இருக்கவேண்டும்? என்ற கேள்வி அமெரிக்க இராஜதந்திர வட்டாரத்தில் எழுந்தது.

காரணம் முற்றிலும் புதிதான சூழல். 

கம்யூனிச சித்தாந்தத்துடன் இயங்கிய சோவியத் யூனியனுடான வெளியுறவு கொள்கை என்பது வேறு. அதற்கு அமெரிக்கா அதனது Containment Strategy ஐ கையாண்டது.

ஆனால் கம்யூனிசம் இல்லாத, இராணுவ ரீதியில் ‘இனி தனக்கு நிகரில்லாத’ ரஷ்யாவுடனான வெளியுறவு கொள்கையை எப்படி வடிவமைப்பது, எதை இலக்காக கொண்டு நகர்வது என்ற கேள்வி  அமெரிக்க இராஜதந்திர வட்டாரத்திற்கு எழுந்தது.

இதே சிக்கல்தான் ரஷ்யாவிற்கும். 

சோவியத் யூனியாக இருந்தபோது, அமெரிக்காவிற்கு எதிர்நிலையில்  நின்று கொண்டு வடிவமைத்திருந்த வெளியுறவு கொள்கையில்  மாற்றத்தை செய்யவேண்டிய நிலையில் ரஷ்யா இருந்தது.

அதன்படி மாறிய உலக ஒழுங்கின் நிலைக்கு ஏற்ப, ரஷ்யா அமெரிக்காவுடன் நட்புடன் இணைந்து இயங்க விரும்பியது.


அமெரிக்காவின் Strategic blunders

அமெரிக்கா முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன.

1. பொருளாதார ரீதியில், இராணுவ ரீதியில் பலவீனமடைந்த ரஷ்யாவை நட்புடன் அணுகி அதனுடன் இணைந்து செயலாற்றுவது.

அவ்வாறு இணைந்து செயலாற்றும் அதேவேளையில் ரஷ்யா எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு எதிரான எதிரியாக உருவாகாமல் பார்த்துக்கொள்வது.

இதே போன்ற ஒரு தெரிவை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் அமெரிக்கா எடுத்திருந்தது.

இரண்டாம் உலக போரில் எதிரியாக இருந்த ஜேர்மனியுடனும், ஜப்பானுடனும் போர் முடிவடைந்த பிறகு, அவர்களை strategic partner களாக அணுக தொடங்கியது.

அதேபோல் பொருளாதார ரீதியில் பெரும் இழப்புகளை சந்தித்திருந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி,இத்தாலி போன்ற நாடுகள் இதிலிருந்து மீள்வதற்கான பொருளாதார திட்டம் ஒன்றை செயற்படுத்தியது.

அந்த பொருளாதார திட்டத்தின் பெயர்தான் Marshall Plan.

The Marshall Plan (officially the European Recovery Program, ERP) was an American initiative enacted in 1948 to provide foreign aid to  Western Europe. 

The United States transferred over $13 billion (equivalent of about $114 billion in 2020).


இதன்மூலம் அமெரிக்கா அடைந்த பலன்

• போரில் தோற்ற எதிரி நாடுகளை அதனது நட்பாக மாற்றியதன் மூலம் அவை சோவியத் யூனியனின் கம்யூனிச சித்தாந்திற்குள் விழாமல் பார்த்து கொண்டது.

• இது எதிரி நாடுகளுக்கு என்று மட்டும் இல்லை. ஏனெனில் நட்பு நாடாக இருந்த பிரான்ஸில் கூட அன்றைய காலங்களில் கம்யூனிச கட்சிகள் பெரும் பலமுடையவையாக இருந்தன. அவைகளின் பிடியில் பிரான்ஸ் விழுந்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருந்தது.

அப்படி விழாமல் இருக்கவேண்டும் என்பதை உறுதிபடுத்தும் விதமாக, பொருளாதார ரீதியில் மேலே எழுவதற்கான உதவிகளை அமெரிக்கா  

தனது  Marshall Plan இனுடாக வழங்கியது.

2. இந்த இரண்டாவது தெரிவு  என்பது எதிரியாக இருந்தவர்களை எதிரியாகவே அணுகுவது

இந்த இரண்டாவது தெரிவை அமெரிக்கா 90 களின் இறுதி பகுதியில் எடுத்தது. 

1989-1993 வரையிலான காலப்பகுதியில்  Under Secretary of Defense for Policy என்ற பதவியை வகித்தவர்  Paul Wolfowitz.

இவரின் தலைமையில் உருவாகிய policy தான் Wolfowitz Doctrine.


Wolfowitz Doctrine

இது எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய நிலையில்  இன்னொரு நாடு உருவாகக்கூடாது என்பதை அடிப்படை இலக்காக வைத்துக்கொண்ட ஒரு கோட்பாடாகும்.

Wolfowitz Doctrine is an unofficial name given to the initial version of the Defense Planning Guidance for the 1994–99 fiscal years (dated February 18, 1992) published by US Under Secretary of Defense for Policy Paul Wolfowitz  and his deputy Scooter Libby.

The document was widely criticized as imperialist , as the document outlined a policy of unilateralism and pre-emptive military action to suppress potential threats from other nations and prevent dictatorships from rising to superpower status.

இது Wolfowitz Doctrine மீது கடுமையான விமர்சனம் பரவலாக எழுந்தது. அது பிற்காலத்தில் Bush Doctrine இல் உள்ளடக்கப்பட்டது.

90 களின் பிற்பகுதியில் அமெரிக்கா Wolfowitz Doctrine இற்கு ஏற்ப அதனது வெளியுறவு கொள்கையை அமைத்தது. அதன்படியே ரஷ்யாவுடனான் உறவும் கையாளப்பட்டது.



இது தொடர்பான மேலதிக தகவலுக்கு: Wolfowitz Doctrine


சோவியத் யூனியன் உடைவதற்கு முன்பு அமெரிக்கா வழங்கிய வாக்குறுதிகள்

அன்றைய அதிபர் Mikhail Gorbachev இற்கு மேற்கு ஐரோப்பிய தலைவர்களால் ஒரு உறுதிமொழி வழங்கப்பட்டது.

மேற்கு ஜேர்மனியும் கிழக்கு ஜேர்மனியும் இணைவதற்கு சோவியத் யூனியன் அனுமதிக்க வேண்டும். அதே நேரம் எக்காரணம் கொண்டும் NATO படைகள் ஜேர்மனியை தாண்டி செல்லாது.

“NATO will not move one inch eastward”

அதாவது NATO அமைப்பு ரஷ்யாவின் பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.

இது தொடர்பான உறுதி மொழியை அன்றைய United States Secretary of State இருந்த James Baker சோவியத் யூனியனின் Mikhail Gorbachev இற்கு வழங்கியிருந்தார்.

இதற்கான declassified National defense archives தரவுகள்,  Mikhail Gorbachev இற்கு James baker வழங்கிய உறுதிமொழி உண்மை என நிருபிக்கின்றன.


வழங்கிய உறுதிமொழியை மீறிய அமெரிக்கா

1999 ஆம் ஆண்டு NATO விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து நாடுகள் நேட்டோவி்ல் இணைந்தன.

அன்றிலிருந்து தொடர்ந்து இன்று வரை பல நாடுகளை புதிதாக நேட்டோவில் சேர்த்து கொண்டு அது விரிவாக்கம் செய்யப்பட்டு கொண்டே வருகிறது.


NATO வில் இணைய விரும்பிய ரஷ்யா  

2000 ஆண்டளவில் புட்டின் அதிபராக பதவியேற்றார். 

அதிபரான புட்டின், ரஷ்யாவும் நேட்டோவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.

அதுபோல ஐரோப்பிய யூனியனிலும் சேர விருப்பம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கார்டியன் பத்திரிகையில் வந்த விரிவான தகவலை கீழே  இணைப்பாக தந்திருக்கிறேன்.

Ex-Nato head says Putin wanted to join alliance early on in his rule



George Robertson a former Labour defence secretary who led Nato between 1999 and 2003, said Putin made it clear at their first meeting that he wanted Russia to be part of western Europe. 

“They wanted to be part of that secure, stable prosperous west that Russia was out of at the time,” he said.

புட்டின் கூறிய இன்னொரு விடயம் மிக முக்கியமானது.

“Russia is part of the European culture. And I cannot imagine my own country in isolation from  Europe and what we often call the civilised world.”

ஆனால் ரஷ்யா நேட்டோவிலும், EU விலும் இணைவதற்கு காட்டிய விருப்பத்தை அமெரிக்காவும், மேற்குலகமும் புறக்கணித்தன.


புட்டினின் 2007 Munich Speech

2007 ஆம் ஆண்டு Munich இல் நடந்த Munich Security Conference இல் புட்டின் அமெரிக்காவை நோக்கி வைத்த கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் உடையன.

 அமெரிக்க இராஜதந்திர வட்டாரத்தில் புழங்கி கொண்டிருந்த  மனநிலையான international system was unipolar and that Washington’s power was unchallengeable என்பதை நோக்கி புட்டின் பின்வருமாறு கேள்விகளை முன்வைத்தார்.

“However one might embellish this term, at the end of the day it refers to one type of situation, namely one centre of authority, one centre of force, one centre of decision-making. It is a world in which there is one master, one sovereign.”

Today we are witnessing an almost uncontained hyper use of force – military force – in international relations, force that is plunging the world into an abyss of permanent conflicts.” 

“And of course,” Putin continued, “this is extremely dangerous. It results in the fact that no one feels safe. I want to emphasise this – no one feels safe!”

NATO has put its frontline forces on our borders,” although as yet, we “do not react to these actions at all.” 

NATO expansion, he stated, “represents a serious provocation that reduces the level of mutual trust. 

புட்டின் கீழே உள்ள கேள்விகளை தீர்க்கமாக முன்வைத்தார்.

And we have the right to ask: 

• Against whom is this expansion intended? 

• And what happened to the assurances our western partners made after the dissolution of the Warsaw Pact?”

• Where are those declarations today?

• No one even remembers them

• Gives Soviet Union a firm security guarantee. Where are these guarantees?

இதற்கு மேற்குலகம் பின்வருமாறு பதில் தந்தது.

“Yes . But that was guarantee given to Soviet Union and You are Russia.”

புடின் ஆற்றிய உரையின் இணைப்பு கீழே.

A speech delivered at the MSC 2007 by the President Vladimir Putin



• இதுவரை மேலே கொடுத்த அனைத்தும்  Vladimir Pozner Jr ஆற்றிய உரையின் முக்கியமான புள்ளிகள்.

இடையிடையே உங்களின் புரிதலுக்காக நான் மேலதிக தகவல்களை விவரித்து எழுதியிருக்கிறேன்.

இந்த பதிவோடு தொடர்புடைய Vladimir Pozner Jr ஆற்றிய உரையின் காணொளி இணைப்பை கீழே  இணைத்திருக்கிறேன்.

https://youtu.be/8X7Ng75e5gQ

இது தொடர்பாக எனது புவிசார் அரசியல்/போரியல் பார்வையிலான கருத்துகளை அடுத்த பதிவில் தருகிறேன்.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]