ஆபத்தான அடுத்த கட்டத்தை நோக்கிநகரும் ரஷ்ய-உக்ரைன் போர்
போர் தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந்த போர் தொடங்குவதற்கு காரணமாக இருந்த புவிசார் அரசியல் இலக்குகளை, இதில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று நாடுகளும் அடைந்துவிட்டனவா?
• எவை அந்த மூன்று நாடுகள்?
1. ரஷ்யா
2. அமெரிக்கா
3. உக்ரைன்
• ரஷ்யாவின் இலக்கு எது?
NATO இன் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் (Nato’s Eastward Expansion) என்பதை தனது இருப்பை கேள்விக்குறியாக்கும் Existential Threat ஆக ரஷ்யா கருதுகிறது.
NATO விரிவாக்கம் என்பது ரஷ்யாவை சிறுக சிறுக encroachment செய்யும் ஒரு நகர்வு.
இது ரஷ்யாவின் Great Power நிலையை மிகவும் பலவீனப்படுத்தும்.
புட்டின் ஒரு Imperialist , புட்டின் ஒரு அகன்ற ரஷ்யாவை (Greater Russia) உருவாக்க முயல்கிறார் போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் சாமானிய மக்களை ரஷ்யாவிற்கு எதிராக ஒரு புள்ளியில் குவிப்பதற்கு உருவாக்கப்பட்ட மேற்குலகின் narrative.
ஆக NATO வின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவதுதான் ரஷ்யாவின் புவிசார் நலன்இலக்கு.
• இந்த இலக்கை ரஷ்யா எவ்வாறு அடைய முயல்கிறது?
இதை விளக்குவதற்கு, இதற்கு முன்னர் என்னென்ன நடந்தது என்பதை விளக்கியாக வேண்டும்.
1999 இல் இருந்து படிப்படியாக NATO கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தொடங்கியது.
அதை தடுக்க முடியாத நிலையில் அன்றைய ரஷ்யா பொருளாதார ரீதியிலும், போரியல் ஆற்றலிலும் பலவீனமாக இருந்தது.
NATO அமைப்பு 2008 April இல் Bucharest Summit இல், தனது உறுப்பினர்களாக உக்ரேனையும், ஜோர்ஜியாவையும் சேர்க்க போவதாக அறிவித்தது.
இந்த நிகழ்வுதான் ரஷ்யாவை ‘இதுவரை பொறுத்தது போதும்’ என்ற புள்ளிக்கு தள்ளிய நிகழ்வு.
அதை விளாடிமிர் புட்டினின் வார்த்தைகளிலேயே தருகிறேன்.
“Georgia and Ukraine becoming part of NATO is a DIRECT THREAT to Russia”
• NATO இந்த Bucharest Declaration ஐ எடுத்தது April 2008 இல்.
சரியாக August 2008 இல், ரஷ்யா ஒரு காரணத்தை சொல்லி ஜோர்ஜியாவுடன் போரை நடத்தியது.
பின்னர் 2014 இல், ரஷ்யா உக்ரேனுடன் போரை நடத்தி, உக்ரேனின் ஒரு பகுதியான Crimea வை , தன்னுடன் இணைத்து கொண்டது.
ஆக உக்ரைன் NATO இல் சேருவது என்பதை ரஷ்யா கடைசி வரை அனுமதிக்காது.
அதை தடுத்து நிறுத்தும் வரை இந்த போரை நடத்தும்.
• அமெரிக்காவின் இலக்கு என்ன?
‘The central aim of U.S grand strategy is to preserve its current position for as long as possible’ என்பதுதான் அமெரிக்காவின் Grand Strategy என்பதை பலமுறை கூறியிருக்கிறேன்.
அதன்படி சோவியத் யூனியன் உடைந்து நொறுங்கிய பின்னர் இந்த உலக ஒழுங்கு Unipolar World ஆகமாறியது.
ஒரே ஒரு Super Power இன் கீழ் உலக ஒழுங்கு இயங்குவதுதான் Unipolar World. அந்த Super Power அமெரிக்கா.
அதற்கு முன்பு Cold War இருந்த காலத்தில், அமெரிக்கா, சோவியத் கட்டுப்படுத்திய உலக ஒழுங்கு Bipolar World என அழைக்கப்பட்டது.
ஆனால் Unipolar World ஆக இருந்தாலும், ரஷ்யாவின் போரியல் ஆற்றல், அதனது புவியியல் அமைவிடம், அதனது பரப்பளவு என்பது மத்திய ஆசியாவில் அதனது செல்வாக்கினை தக்கவைத்து கொள்ளும் Great Power ஆகவே வைத்திருக்கிறது.
ரஷ்யாவின் இந்த Great Power நிலையினை பலவீனமாக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாக அமெரிக்கா நினைக்கிறது.
அதை நோக்கிய அமெரிக்காவின் இலக்குதான் Nato வின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் (Nato’s Eastward Expansion).
அத்துடன் Cold War காலத்திற்கு பின்னர் ரஷ்யா பொருளாதார ரீதியிலும், போரியல் ஆற்றலிலும் பலவீனம் அடைந்த இந்த நேரத்தில், அதனை பலவீனப்படுத்தும் முயற்சிகளை எடுக்க அமெரிக்கா முயல்கிறது.
அதனாலேயே இந்த ரஷ்ய- உக்ரைன் போரை உக்ரைனை விட அமெரிக்கா மும்முரமாக தொடர்ந்து நடத்தமுயல்கிறது.
சுருக்கமாக சொன்னால் இந்த ரஷ்ய-உக்ரைன் போர் அமெரிக்காவின் proxy war.
அமெரிக்கா அதனது புவிசார் அரசியல் இலக்கை அடையும்வரை இதில் விட்டுக்கொடுக்க போவதில்லை என்பதை சமீபத்திய மாதங்களில் அதனது நகர்வுகள் உணர்த்துகின்றன.
‘The WEST will fight Russia to the Last Drop of Ukrainian Blood’
• உக்ரைனின் இலக்கு என்ன?
அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் உச்ச ஆதரவு தரும் இந்த நிலையிலேயே ரஷ்யாவின் sphere of influence இலிருந்து வெளியேறிவிட உக்ரைன் நினைக்கிறது. இது வரலாறு தந்த பெரும் வாய்ப்பு. இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்பது உக்ரைனின் பார்வை.
ஆக மேலே குறிப்பிட்டவைதான் ரஷ்யா, அமெரிக்க தலைமையிலான மேற்குலகம், உக்ரைன் மூன்றும் போரில் இறங்குவதற்கு காரணமாக அமைந்த புவிசார் அரசியல் இலக்குகள்.
இந்த மூன்றும் இன்றுவரை அவைகளின் புவிசார் அரசியல் இலக்கினை அடையவில்லை.
• அடுத்து என்ன நடக்கும்? அதுதான் இந்த பதிவின் தலைப்பில் குறிப்பிட்ட ‘ஆபத்தான அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ரஷ்ய-உக்ரைன் போர்’
இந்த மூன்றும் இன்றுவரை அவைகளின் புவிசார் அரசியல் இலக்கினை அடைவதில் மிக உறுதியாக இருப்பதால்தான், இந்த போர் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது.
International Relations (IR) தியரியில் மிக முக்கியமான ஆளுமையான John Mearsheimer அண்மையில் கூறிய கருத்துகள் மிக முக்கியமானவை.
அவரது சமீபத்திய நேர்காணலை கீழே இணைத்திருக்கிறேன்.
ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யா அதிகமாக artillery ஐ பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறார்.
உக்ரைனை போரில் வீழ்த்துவதை விட , உக்ரைன் நாட்டினை முற்று முழுதாக தரை மட்டம் (wreck) ஆக்குவதை ரஷ்யா ஒரு முக்கிய போரியல் நகர்வாக செய்வதை குறிப்பிடுகிறார்.
இதற்கான காரணம் ‘ஒருவேளை’ மீண்டும் சொல்கிறேன் ‘ஒருவேளை’ ரஷ்யா இந்த போரில் தோற்றால், முழுக்க தரை மட்டமாக மாறியிருக்கும் உக்ரைனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது என்பது இமாலய பணி.
எந்த உக்ரைன் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் அவைகளின் புவிசார் நலனுக்கான நண்பனாக இருந்ததோ, நாளை போர் முடிந்தபிறகு அவைகளுக்கு அதே உக்ரைன் ‘பெரும் சுமையாக’ மாறும்.
காரணம் மீண்டும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனிற்கு பெரும் நிதி சிக்கலினை தரும் சுமையாக மாறும்.
போர் முடிந்த பிறகு நேட்டோவிலும், ஐரோப்பிய யூனியனிலும் உக்ரைன் சேரும்போது, உக்ரைனில் இருந்து உக்ரேனிய மக்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக மேற்கு ஐரோப்பாவிற்கு வருகை தருவதை தடுக்க முடியாது. ஐரோப்பிய யூனியனின் முக்கிய அம்சங்களில் ஒன்று Free Movement.
ரஷ்யா உக்ரைனை தரைமட்டம் ஆக்குவதன் ஊடாக, இனிமேல் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் ஏதாவது ஒரு நாடு நேட்டோவில் சேருவதற்கு தயங்கும் நிலையை உருவாக்க நினைக்கிறது.
• ஒருவேளை ரஷ்யா இந்த போரில் தோல்வி அடைய நேரிட்டால்?
இந்த ‘ஒருவேளை’ என்பதை மிக கவனமாக பயன்படுத்துவதற்கு காரணம் இருக்கிறது.
மேலே இந்த பந்தியில் குறிப்பிட்டது போல ரஷ்யாவிற்கு இது existential threat.
இதில் ரஷ்யா சமரசம் செய்து கொள்ளாது.
ஆனால் மேற்குலகின் தங்கு தடையற்ற நவீன ஆயுதங்களின் வழங்கலினால் ஒருவேளை ரஷ்யா தோல்வி அடைய நேரிடுமாயின், ஒரு முக்கியமான நிகழ்வு நடப்பதற்கான அத்தனை சாத்தியமும் இருக்கின்றது.
• அந்த முக்கியமான நிகழ்வுதான் John Mearsheimer குறிப்பிடும் ரஷ்யா tactical nuclear weapon பாவிப்பதற்கான சாத்தியம்.
tactical nuclear weapon என்பது போர் களத்தில் உள்ள எதிரி படைகளை இலக்காக வைத்து உபயோகிக்கப்படும் அணு ஆயுதம். இது குறைந்தளவிலான yield இனை கொண்டது ஆகும்.
Strategic nuclear weapons என்பது அதற்கு நேரெதிரானது. அதனது yield அதிகம். அதனது கதிரியக்க தாக்க பரப்பளவு அதிகமானது. இது எதிரி நாட்டின் strategic இலக்கான பொருளாதார, கட்டுமான, மக்கள் என்பவற்றை இலக்காக வைத்து பயன்படுத்தப்படுபவை.
ரஷ்யா இந்த போரை existential threat ஆக அணுகுவதால் , இந்த போரில் ரஷ்யா தோற்க முடியாது.
Russia can not afford to lose this war.
அப்படி தோற்க வேண்டிய நிலை ஏற்படுமாயின், அதை தடுக்க ரஷ்யா tactical nuclear weapon இனை பாவிப்பதற்கு அத்தனை சாத்தியமும் உண்டு.
பதிலுக்கு உக்ரைனால் அணு ஆயுத தாக்குதலை நடத்த முடியாது
(retaliatory strike). காரணம் உக்ரைனிடம் அணு ஆயுதம் இல்லை.
அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்ஸோ இதற்கு பதிலடியாக அணு ஆயுத தாக்குதலை நடத்த முடியாது. ஏனெனில் ரஷ்யா இவைகளின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. நேட்டோ நாடொன்றின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை.
அதையும் மீறி மேற்குலகம் அணு ஆயுத பதில் தாக்குதலில் ஈடுபடுமாயின் அது உலக முடிவின் ஆரம்பம் என பொருள். ஆக இது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
• சீனா
நான் இதுவரை கூறிய Nato’s Eastward Expansion என்பது ரஷ்யாவை encroach செய்வதோடு முடிவடைந்துவிடாது.
அதற்கு அப்பாலும் இன்னொரு நாடு உண்டு.
இந்த நூற்றாண்டில் அமெரிக்காவை வீழ்த்தக்கூடிய பொருளாதார பலமும், போரியல் ஆற்றலும் கொண்ட சீனாதான் அது.
இந்த ரஷ்ய-உக்ரைன் போரில் ‘ஒருவேளை’ ரஷ்யா தோல்வி அடைந்தால், மேலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் மத்திய ஆசிய நாடுகளையும் NATO அதனது உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளும்.
பின்னர் அது சீனாவை நோக்கி நகரும்.
ஏற்கனவே அறிவிக்கப்படாத NATO ஆக QUAD, AUKUS என்பன சீனாவிற்கு எதிரான நகர்வுகளை செய்துகொண்டு வருகின்றன.
அத்துடன் NATO போன வருடம் 2022 ஏப்ரல் 6,7 இல் Brussels ஒன்று கூடியது. இதற்கு Japan, South Korea, Australia, New Zealand என்பவையும் கலந்து கொண்டன.
இது NATO ஆசிய பசுபிக் நாடுகளையும் எதிர்காலத்தில் உள்ளிழுக்கும் சாத்தியத்தை காட்டுகிறது.
In a press conference on April 5, Secretary General Jens Stoltenberg announced that the Western powers plan to “deepen NATO’s cooperation with our Asia-Pacific partners, including in areas such as arms control, cyber, hybrid, and technology.”
Stoltenberg complained that “China has been unwilling to condemn Russia” over its war in Ukraine , and made it clear that Beijing is NATO’s next target.
NATO எதிர்காலத்தில் மத்திய ஆசிய நாடுகளையும் ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா போன்ற ஆசிய பசுபிக் நாடுகளையும் உள்ளிழுக்குமாயின் இது சீனாவிற்கு எதிரான existential threat. அந்த புள்ளியை நோக்கித்தான் அமெரிக்காவின் நகர்வுகள் செல்கின்றன.
அவ்வாறு எதிர்காலத்தில் நடப்பதை தடுப்பதற்கு சீனா கட்டாயம் ரஷ்ய-உக்ரைன் போரில், ரஷ்யா தோல்வி அடைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் மட்டுமே NATO இனது விரிவாக்கம் ‘இப்போதைக்காவது நிறுத்தப்படும்’. இதை மனதில் வைத்துத்தான் சீனா அதனது நகர்வுகளை செய்கிறது.
இதுவரை நான் மேலே கூறிய ரஷ்யா,அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், உக்ரைன் என மூன்று தரப்பு மட்டுமே சம்பந்தப்பட்டிருந்த இந்த போரில் சீனாவின் புவிசார் அரசியல் நலனும் தொடர்புபட்டிருப்பதை தெளிவாக காணலாம்.
இது இதை மேலும் சிக்கலான புள்ளிக்கு நகர்த்தியிருக்கிறது.
இந்த ரஷ்ய-உக்ரைன் போர் மெல்ல மெல்ல ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment