‘புலிகள் நடத்திய ‘செய் அல்லது செத்துமடி சமர்’ - புலிகளின் சமர்கள் பற்றிய ஆவணப்படுத்தல் தொடர் (பகுதி 1)
இந்த பதிவை தொடராக எழுதுவதற்கான காரணத்தை முதலிலேயே சொல்லிவிடுகின்றேன்.
விடுதலை புலிகளின் போரியல் சாதனைகளை பற்றிய பேச்சுவரும்போது, பெரும்பாலானவர்களின் புரிதல் முல்லைத்தீவு முகாம் மீதான ஓயாத அலைகள்-1 சமர் (1996), கிளிநொச்சி பெரும் தளம் மீதான ஓயாத அலைகள்-2 சமர் (1998), பின்னர் வன்னி பெருநிலப்பரப்பை மீட்க நடத்திய ஓயாத அலைகள்-3 (1999), ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பை கைப்பற்ற நடத்திய ஓயாத அலைகள்-3 (கட்டம் 3,கட்டம் 4) (2000) என்பவற்றோடு நின்றுவிடும்.
அனேகமாக மேலே குறிப்பிட்டவற்றை தாண்டி புலிகளின் மற்றைய சமர்களை நினைவு கூறுபவர்கள் குறைவு.
• ஆனால் 1983-2009 இற்கு இடைப்பட்ட 26 வருட போரில் கிட்டத்தட்ட நூறு சமர்களாவது (Battle) நடந்திருக்கும். பல Military Campaigns உம் நடந்திருக்கின்றன.
ஆக புலிகள் நடத்திய மற்றைய சமர்களை அதாவது புலிகள் நடத்திய அழித்தொழிப்பு சமர்களை (offensive military operations), தற்காப்பு சமர்களை ஆவணப்படுத்துவதே இந்த தொடரின் நோக்கம்.
• சரி. Battle இற்கும் Military Campaign இற்கும் என்ன வேறுபாடு?
Battle என்பது குறுகிய காலத்தில் நடந்துமுடியும் ஒரு சண்டை (military engagement). இதை தமிழில் ‘சமர்’ என அழைக்கிறோம்.
Battle இனது தாக்கம் Tactical Level ஐ சேர்ந்தது.
Military Campaign இனது தாக்கம் என்பது Strategic Level அல்லது Operational Level ஐ சேர்ந்தது.
• அது என்ன Strategic Level, Operational Level, Tactical Level ?
போர் (War) எனும் வன்முறை செயற்பாட்டின் இறுதி இலக்கு என்பது அரசியல் இலக்குதான்.
அதில் War என்பதன் போரியல் இலக்கை அடைய Levels Of War எனும் இராணுவ கோட்பாடு மிக மிக முக்கியமானதொன்று. உயிர்நாடி என சொல்லலாம்.
அந்த Levels Of War இன் மூன்று அடுக்குகள்தான் மேற்கூறிய Strategic Level, Operational Level, Tactical Level.
இதில் Strategic Level என்பது உச்ச அடுக்கு.
Tactical Level என்பது அடியில் உள்ள அடுக்கு.
இரண்டுக்கும் நடுவில் வருவது Operational Level.
• சமர் (battle), military campaign, போர் (war) இவைகளுக்குள் என்ன வேறுபாடு?
Battle என்பது ஒரு சமர்.
உதாரணமாக புலிகளின் முல்லைத்தீவு இராணுவ தளம் மீதான ஓயாத அலைகள் - 1 தாக்குதல் ஒரு சமர். அது ‘அழித்தொழிப்பு சமர்’ வகையை சேர்ந்தது.
இதைப்போல புலிகள் பல அழித்தொழிப்பு சமர்களை செய்து இருக்கிறார்கள். பூநகரி இராணுவ தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ சமர், தீச்சுவாலை எதிர் சமர், புலிப்பாய்ச்சல் சமர், யாழ்கோட்டை இராணுவ தளம் மீதான சமர், மாங்குளம் முகாம் மீதான சமர் என நீண்ட பட்டியல் இருக்கிறது.
ஆனால் சமரின் தாக்கம் என்பது tactical level இற்கு உட்பட்டது.
Military campaign என்பதன் தாக்கம் சமரினையும் தாண்டியது. கால அளவிலும் கூடியது. அதாவது பல மாதங்கள் கூட அந்த campaign நீடிக்கலாம். பல மாதங்கள் நீடிக்கும் அந்த campaign இனுற்குள் பல சமர்கள் அதற்குள்ளேயே நடந்திருக்கும். ஆக ஒரு military campaign என்பதே தனக்குள் பல சமர்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதனுடைய தாக்கம் என்பது strategic Level இற்கு உட்பட்டது.
"A campaign is a phase of a war involving a series of operations related in time and space and aimed towards a single, specific, strategic objective or result in the war.
A campaign may include a single battle, but more often it comprises a number of battles over a protracted period of time or a considerable distance, but within a single theatre of operations or delimited area.
A campaign may last only a few weeks, but usually lasts several months or even a year".
- (Military Historian Trevor Nevitt Dupuy)
போர் என்பது ஒட்டுமொத்தத்தையும் குறிக்கும்.
உதாரணமாக ஈழப்போர் என்பது War. 1983-2009 வரையான 26 வருட காலத்தில் நடந்த அனைத்தும் இந்த War என்பதற்குள் அடங்கிவிடும்.
ஆக ஒரு போர் (War) என்பது தன்னுள்ளே பல Military Campaign களையும், பல சமர்களையும் (Battle), உள்ளடக்கியது.
சமர்கள் தனித்த சமர்களாகவும் இருக்கலாம். அல்லது ஒரு Military Campaign இற்குள்ளே நடந்த சமராகவும் இருக்கலாம்.
சரி. இதுவரை War, Military Campaign, Battle என்பதன் பொருள்களை தந்தேன்.
• இனி பதிவின் பிரதான நோக்கத்திற்கு வருகிறேன்.
இந்த பதிவின் பிரதான நோக்கம் விடுதலை புலிகளின் சமர்களை ஆவணப்படுத்துவது.
இந்த பதிவு இலங்கை இராணுவம் 1997 இல் தொடங்கிய ‘ஜெயசிக்குறு’ எனும் Military Campaign இற்கு எதிராக புலிகள் நடத்திய ‘செய் அல்லது செத்து மடி - 1’ சமரை பற்றியது. ‘ஜெயசிக்குறு’ எனும் சிங்கள சொல்லின் தமிழ் அர்த்தம் ‘வெற்றி நிச்சயம்’.
• ஜெயசிக்குறு Military Campaign
இந்த ஜெயசிக்குறு Military Campaign தொடங்கிய காலப்பகுதி என்பது மிக முக்கியமான காலப்பகுதியாகும்.
இது தொடங்குவதற்கு முன்பு இருந்த கள நிலவரத்தை கூறினால் இதன் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்.
1995 டிசம்பரில் யாழ் நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியது.
1996 இறுதி பகுதியில் கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது.
விடுதலை புலிகளின் இருப்பு என்பது வன்னி நிலப்பரப்பிற்குள் மட்டும்தான் என்ற நிலையில் சுருக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த புள்ளியில்தான் இலங்கை இராணுவம், விடுதலை புலிகளின் மரபு வழி இராணுவ ஆற்றலை அழித்து ஒரு கெரில்லா இயக்கமாக உருமாற்ற இந்த ஜெயசிக்குறு எனும் Military campaign திட்டத்தினை வகுத்தது.
• இந்த திட்டத்தினை சுருக்கமாக இந்த பதிவில் விவரிக்கிறேன்.
வவுனியா இல் இருந்த யாழ்குடா நோக்கி செல்லும் A9 பாதையினை கைப்பற்றுதல் இதனுடைய இலக்கு. இந்த A9 பாதை வன்னி பெரு நிரப்பரப்பின் நடுவே செல்வது.
இந்த பாதையை இலங்கை இராணுவம் கைப்பற்றுமாயின் வன்னி பெரு நிலப்பரப்பு A9 மேற்கு வன்னி பகுதி, A9 கிழக்கு வன்னி பகுதி என இரண்டாக பிளக்கப்படும்.
அதிலும் A9 கிழக்கு வன்னி பகுதியில், A9 பாதையில் இருந்து கிளையாக பிரிந்து புளியங்குளம், நெடுங்கேணி ஊடாக முல்லைத்தீவிற்கு செல்லும் பாதையையும் இலங்கை இராணுவம் அதனது கட்டுப்பாட்டில் கொண்டுவருமாயின், வன்னி பெரு நிலப்பரப்பு 3 பகுதிகளாக உடைப்பட்டிருக்கும்.
அதிலும் விடுதலை புலிகளின் ‘இதயபூமியான’ வன்னிப்பகுதி என்பதும் 3 பக்கங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும்.
புலிகளின் வன்னி பகுதிக்கு வடக்கே ஆனையிறவு-வெற்றிலைக்கேணி பெருந்தளங்களின் Front Defence Line (FDL) இருக்கும். தெற்கே புளியங்குளம்,நெடுங்கேணி, வெலிஓயா,கொக்குத்தொடுவாய் என FDL சுற்றி வளைத்திருக்கும். மேற்கே புளியங்குளம், கிளிநொச்சி,ஆனையிறவு என FDL சுற்றி இருக்கும். (கீழேயுள்ள படத்தில் விளக்கியுள்ளேன்)
புலிகளின் ‘இதயபூமியான’ வன்னிப்பகுதி 3 பக்கங்களாலும் இலங்கை இராணுவத்தால் முற்றுகை இடப்பட்டிருக்கும். கிழக்கு பகுதியில் உள்ள கடல் மட்டுமே புலிகளுக்கான ஒரே வழியாக இருந்திருக்கும்.
வன்னிப்பகுதியை புலிகளின் ‘இதயபூமி’ என்ற சொல்லாடலில் புலிகள் குறிப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது. இந்த வன்னிப்பகுதியிற்குள்தான் புலிகளின் Command and Control (C2), ordnance units, fuel dumps, underground military hospitals, communications bases என சகல வளங்களும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்த ஜெயசிக்குறு military campaign அதனது இலக்கை அடைந்தால், புலிகளுக்கு ஏற்படும் சிக்கலை போரியல் ஆய்வாளரான தராகி சிவராம் பின்வருமாறு விவரித்திருப்பார்.
“This will set the stage for the army to carve the vast region of the Vanni into three ‘manageable’ segments in a single stroke.
Once the security forces at Kilinochchi and at Puliyankulam (in this scenario) gain control of the sixty kilometer stretch of the Jaffna road between them, the LTTE’s heartland in the Vanni would be covered (or even constricted) on three sides with the sea to the east.
To the north will be the Elephant Pass - Vettilaikerni FDL running west to east; to the south will be the Puliyankulam - Nedunkerni - Weli Oya - Kokkuthoduvai FDL running west to east; to the west would be the Puliyankulam - Kilinochchi - Elephant Pass FDL on the north south axis.”
(தராகி சிவராமின் ‘Geographical dimension of Operation Jaya Sikuru’ எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து - 25 May 1997)
இணைப்பு : Geographical dimension of Operation Jaya Sikuru
நான் மேலே குறிப்பிட்டது போல military campaign என்பது strategic Level இனை சேர்ந்தது. அதன்படி இலங்கை இராணுவம் ஜெயசிக்குறுவின் ஊடாக அதனது இலக்கினை அடைந்திருந்தால் விடுதலை புலிகளின் மரபு வழி இராணுவ ஆற்றல் (conventional warfare capability) பெருமளவு சிதைக்கப்பட்டிருக்கும்.
விடுதலை புலிகளின் இராணுவ ஆற்றல் என்பது கெரில்லா இயக்கமாக உருமாற வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கும்.
இறையாண்மை அரசுகள் தமக்கு எதிராக மரபு வழி இராணுவ ஆற்றல் உருவாக ஏன் அனுமதிப்பதில்லை என்பதை தெளிவாக விளக்கி முன்பு ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதனது இணைப்பு கீழே.
விடுதலை புலிகள் ஏன் கெரில்லா போர்முறையிலிருந்து மரபு போர் படையணியாக மாறினார்கள்?
• இனி ஜெயசிக்குறு military campaign ஐ பற்றி.
மே 13, 1997 அன்று ஜெயசிக்குறு தாக்குதல் தொடங்கியது.
இந்த campaign இல் 53வது டிவிசன், 54 வது டிவிசன், 55 வது டிவிசன், 56 வது டிவிசன், 21 வது டிவிசன் என்பவை பங்குபற்றின. ஒரு டிவிசன் என்பது 10000-15000 படையினரை கொண்டது.
இந்த நடவடிக்கையில் பிரதானமாக 53வது டிவிசன்தான் spearhead force ஆக செயற்பட்ட படையணி.
ஏனெனில் இந்த 53 டிவிசன், பெரும் இராணுவ நடவடிக்கையில் offensive ஆக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட படையணி.
The 53 Division is an elite division of the Srilanka Army . Trained and formed in 1996 under the leadership of US military officers, the unit was used as a principal offensive division during the War.
இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஜெயசிக்குறுவை பற்றி விபரிக்கையில் பின்வருமாறு கூறுகிறது.
“The Army’s 53 division consists of a Commando Brigade, a Special Forces Brigade and an Air Mobile Brigade that took the brunt of most of the confrontations along with 54, 55, 56 and 21 Divisions.”
இந்த military campaign இன் செயற்பாடு என்பது, ஒரு நகர்வு வவுனியாவில் இருந்து A9 பாதையினுடாக முன்னேறி கிளிநொச்சி பெருந்தளத்துடன் இணைவது.
இரண்டாவது முனை நகர்வு என்பது வெலிஓயாவில் இருந்து முன்னேறி நெடுங்கேணியை கைப்பற்றுவது. பின்னர் நெடுங்கேணியில் உள்ள இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்றும் இராணுவத்துடன் இணைவது.
இவ்வாறு இணைந்தால் நான் ஏற்கனவே கூறியதுபோல புலிகளின் ‘இதயபூமி’ மூன்று பக்கங்களாலும் முற்றுகைக்கு உள்ளாகும்.
அதன்படி முதற்கட்ட நடவடிக்கையில் வெலிஓயாவில் இருந்து புறப்பட்ட இலங்கை இராணுவம் நெடுங்கேணியை கைப்பற்றியது.
வவுனியாவில் இருந்து புறப்பட்ட இலங்கை இராணுவம் ஓமந்தையை கைப்பற்றியது.
அடுத்து ஓமந்தையில் இருந்து புளியங்குளம் 10km தூரம்.
நெடுங்கேணியில் இருந்து புளியங்குளம் 20 km தூரம்.
புளியங்குளத்திலிருந்து கிளிநொச்சி 56km தூரம்.
புளியங்குளத்தை கைப்பற்றி நெடுங்கேணியுடன் இணைப்பை ஏற்படுத்தினால் புலிகளின் இதயபூமியின் தென்பகுதி அடைபடும்.
புளியங்குளம் கிளிநொச்சியுடன் இணைப்பை ஏற்படுத்தினால் இதயபூமியின் மேற்கு பகுதி அடைபடும்.
இலங்கை இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்றினார்களா?
நெடுங்கேணி இராணுவத்துடன் இணைப்பை ஏற்படுத்தியதா?
பிறகு புளியங்குளம் கிளிநொச்சியுடன் இணைப்பை ஏற்படுத்தியதா?
இவற்றையெல்லாம் ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என்ற தலைப்பில் தனி போரியல் ஆய்வு கட்டுரையாக பின்னொரு நாளில் தருகிறேன்.
• இந்த ஜெயசிக்குறு military campaign இற்கு கடைசியில் என்ன நடந்தது?
இந்த இராணுவ நடவடிக்கைதான், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு தெற்காசியாவில் நடந்த நீண்ட கால இராணுவ நடவடிக்கை ஆகும்.
ஏனெனில் இந்த இராணுவ நடவடிக்கை 1997 மே மாதம் தொடங்கி 1999 பெப்ரவரி மாதம் வரை தொடர்ந்தது. அதாவது 1 வருடம் 8 மாதங்கள் இந்த military campaign தொடர்ந்தது. பின்னர் இலங்கை இராணுவம் இதை பாதியிலேயே நிறுத்துவதாக அறிவித்தது.
ஏனெனில் இந்த ‘ஜெயசிக்குறுவிற்கு’ எதிரான சமரில், விடுதலை புலிகள் ‘செய் அல்லது செத்து மடி-1’, செய் அல்லது செத்து மடி-2’, ‘செய் அல்லது செத்து மடி-3’, ‘ஓயாத அலைகள்-2’ என பல சமர்களை செய்து இலங்கை இராணுவத்தினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி இருந்தார்கள்.
இலங்கை இராணுவம் இந்த ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கையில் மட்டுமே 5000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை இழந்தது.
இந்த ‘ஜெயசிக்குறு’ campaign இனை முறியடிக்க விடுதலை புலிகள் பல counter-offensive சமர்களை நடத்தினார்கள். அத்தகைய பல சமர்களில் ஒன்றுதான் ‘செய் அல்லது செத்து மடி -1 ‘ சமர்.
சரி. இதுவரை war, military campaign, Battle என்பவற்றிற்கான வேறுபாடுகளை விளக்கினேன்.
இலங்கை இராணுவத்தின் ஜெயசிக்குறு military campaign இன் போரியல் இலக்கினை விளக்கினேன்.
இனி ஜெயசிக்குறு military campaign இற்கு எதிராக புலிகள் நடத்திய எதிர் சமர்களில் ஒன்றுதான் ‘செய் அல்லது செத்து மடி -1’. புலிகள் ஜெயசிக்குறுவிற்கு எதிராக நடத்திய இந்த சமர்களை ‘ஜெயசிக்குறு எதிர்சமர்’ என்ற சொல்லாடலில்தான் விளிக்கிறார்கள்.
• இனி ‘செய் அல்லது செத்து மடி - 1’ சமர்
10-06-1997 அன்று விடுதலை புலிகளின் இந்த அழித்தொழிப்பு சமரை நடத்தினார்கள்.
ஓமந்தை வரை இராணுவம் முன்னேறியிருந்தது.
இதற்கு பின் இயங்கு தளமாக இருந்தது தாண்டிக்குளம்-நொச்சிமோட்டை பெருந்தளமாகும் (Thandikulam - Nochchimoddai military complex). இதன் மீதுதான் புலிகள் தாக்குதலை தொடுத்தார்கள்.
இந்த தாண்டிக்குளம்- நொச்சிமோட்டை பெருந்தளம் என்பது எவ்வளவு தூரம் பலப்படுத்தப்பட்ட தளம் என்பதை போரியல் ஆய்வாளர் தராகி சிவராம் பின்வருமாறு கூறுகிறார்.
“The army had good reasons to feel quite secure in its defenses in the Thandikulam - Nochchimoddai area because it had been an absolutely uncontested part of the larger Vavuniya security zone since 1990.
The western and northwestern FDL of this zone was expanded in several stages between 1992 and 94.
The army in the Thandikulam-Nochchimoddai area had to face the LTTE directly only to the north in the direction of Omanthai until Jayasikurui began.
And after that with thousands of troops massed up on the road all the way up to Periyamadu through Omanthai, there was little or no danger, logically that is, from the northern approach which had also become immensely secure.”
(தராகி சிவராமின் ‘The bloody lessons of Thandikulam’ என்ற தலைப்பிலிட்ட கட்டுரையிலிருந்து - 15 June 1997)
இணைப்பு: The bloody lessons of Thandikulam
மிகவும் பலப்படுத்தப்பட்டு இருந்த இந்த பெருந்தளத்தின் மீதான தாக்குதல் திட்டத்தை வகுப்பதற்கு தேவைப்படும் reconnaissance ஐ செய்வதும் கடினமாகும்.
இந்த அழித்தொழிப்பு சமரில் என்ன நடந்தது, அதற்கு உள்ளே என்னென்ன நடந்தது என்பதை நான் இங்கு முழுமையாக விவரிக்கவில்லை. காரணம் பதிவினை இன்னும் நீளமாக்கிவிடும். ஆனால் சுருக்கமாக தந்திருக்கிறேன்.
அன்றைய காலத்தில் இந்த சமர் தொடர்பாக வந்த பத்திரிகை கட்டுரைகள், இணைய தளங்களின் இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.
• சமரில் என்ன நடந்தது?
புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவம் குறைந்தது 350 பேர்.
புலிகளின் தரப்பில் வீரச்சாவடைந்தோர் 81 பேர்.
இந்த தாண்டிக்குளம்-நொச்சிமோட்டை பெருந்தளம், அதனை சுற்றியிருந்த பகுதிகள் என்பவை சுமார் 26 மணித்தியாலங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 5 main battle tank (MBT) அழிக்கப்பட்டன. 5 artillery அழிக்கப்பட்டன. 2 ஆயுதக் களஞ்சியங்கள் (ammunition dumps) அழிக்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் MI 24 தாக்குதல் ஹெலிகாப்டர் சேதமடைந்தது.
60 mm மோட்டார்கள், பெரும் தொகையான artillery shells , மற்றும் பல ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
இந்த தாக்குதலில் பங்குபற்றியோர் பெரும்பாலும் புதிதாக புலிகள் இயக்கத்தில் இணைந்தோர். அதிலும் பெருமளவிலான பெண் புலிகள் பங்குபற்றியதாக தராகி சிவராம் குறிப்பிடுகிறார்.
“The units selected and sent in for the Thandikulam -Nochchimoddai Operation were from some of the troops the LTTE had raised in 1995 -96, including several female groups. The latter were given some key tasks in the ‘interior operation’ in which the army’s 55 division headquarters and artillery positions were targeted.”
விடுதலை புலிகளின் இந்த அதிரடி தாக்குதலில்,
இலங்கை இராணுவம் நிலைகுலைந்து பின்வாங்கி தப்பி ஓடின.
இந்த பெருந்தளத்தை சுற்றியிருந்த நகர்களிலிருந்த மக்கள் தாக்குதல் தொடங்கிவுடன், உயிர் பாதுகாப்பிற்காக வவுனியாவிற்கு தப்பி ஓடினர்.
தப்பி ஓடிய மக்களிடம் உடைகளை வாங்கி இலங்கை இராணுவமும் பொது மக்கள் போல நடித்து தப்பி ஓடியதை அன்றைய ஊடகங்கள் பதிவு செய்திருந்தன.
“Some security forces personnel, according to ex Tamil militant sources in the Vavuniya suburbs, had made good their escape by getting into civilian clothing apparently taken from the fleeing Tamil population.”
• நான் மேலே குறிப்பிட்டது போல, 20 மாதங்கள் நடந்த ஜெயசிக்குறு military campaign இற்கு எதிரான புலிகளின் எதிர் சமரில், புலிகள் பல counter offensive இனை நடத்தியிருக்கிறார்கள்.
அதில் முதலாவதுதான் 10-06-1997 இல் புலிகள் நடத்திய செய் அல்லது செத்துமடி-1 சமர். அதற்காகவே அதனையொட்டி இந்த வாரத்தில் இந்த பதிவை எழுதினேன்.
செய் அல்லது செத்துமடி -2 சமரை 24-06-1997 இல் நடத்தினார்கள். அதனது விபரம் அடுத்த பகுதியில்.
க.ஜெயகாந்த்












Comments
Post a Comment