புலிகள் நடத்திய ‘செய் அல்லது செத்துமடி சமர் 2’ - புலிகளின் சமர்கள் பற்றிய ஆவணப்படுத்தல் தொடர் (பகுதி 2)
இந்த தொடரின் பகுதி-1 இல் , புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய ‘ஜெயசிக்குறு’ எனும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு தெற்காசியாவில் நடந்த நீண்ட கால military campaign இனை பற்றி விரிவாக கூறியிருந்தேன்.
ஜெயசிக்குறு military campaign இனை முறியடிக்க புலிகள் பல counter offensive சமர்களை நடத்தினார்கள்.
அந்த counter offensive சமரில் முதலாவதுதான் ‘செய் அல்லது செத்துமடி கட்டம் 1’.
இந்த சமர் நடந்த திகதி 10-06-1997. இதைப்பற்றி பகுதி-1 இல் விவரித்திருந்தேன். (வாசிக்க பகுதி-1).
• இனி இந்த பகுதி-2 இல், ஜெயசிக்குறுவிற்கு எதிராக புலிகள் நடத்திய இரண்டாவது counter offensive சமர் பற்றிய விபரங்களை தரப்போகிறேன்.
இந்த இரண்டாவது counter offensive சமரின் பெயர் ‘செய் அல்லது செத்துமடி கட்டம்-2’.
சமர் நடந்த திகதி 24-06-1997.
சரியாக முதல் counter offensive நடந்து முடிந்து, இரு வாரங்களுக்குள் அடுத்த இடியை இறக்கினார்கள்.
இந்த ‘செய் அல்லது செத்துமடி கட்டம்-2’ தாக்குதல் நடப்பதற்கு முதல்நாள்தான், இலங்கை இராணுவம் புளியங்குளத்தை நோக்கி ஒரே நேரத்தில் இரு முனைகளில் நகர்ந்திருந்தன.
A9 பாதையின் மேற்கு பகுதியில் இருக்கும் பெரியமடு பகுதியில் இருந்து ஒரு நகர்வு. A9 பாதையின் கிழக்கு பகுதியில் இருக்கும் நெடுங்கேணியில் இருந்து மற்றைய நகர்வு.
ஜெயசிக்குறு படையணி மீதான தாக்குதலை புலிகள் இரு முனைகளில் நடத்தினார்கள்.
ஒன்று பெரியமடு ஊடாக நடத்தப்பட்டது. மற்றையது நெடுங்கேணி ஊடாக நகர்ந்து வந்த புலிகளின் அணியால் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் உள்நகர்வுகளை முழுமையாக விளக்குவதற்காக, அன்றைய காலத்தில் இந்த சமர் தொடர்பாக வந்த பத்திரிகை கட்டுரைகள், இணைய தளங்களின் இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.
இத்தனைக்கும் புலிகள் மிகப்பெரியதொரு தாக்குதலை நடத்த இருக்கிறார்கள் என்பதை இராணுவ புலனாய்வுதுறை முன்கூட்டியே அறிவித்திருந்ததாக போரியல் ஆய்வாளர் தராகி சிவராம் தனது கட்டுரையில் கூறுகிறார்.
“The Directorate of the Military Intelligence sent up a report last week of an impending LTTE assault on the army’s positions between Omanthai and Periyamadu. Yet the Tigers could not be stopped from wreaking havoc on Tuesday.”
(தராகி சிவராமின் ‘Blinded in the Wanni quagmire’ என்ற தலைப்பிலிட்ட கட்டுரையிலிருந்து - 29 June 1997)
இணைப்பு : Blinded in the Wanni quagmire
• இந்த ‘செய் அல்லது செத்துமடி கட்டம் 2- ஓமந்தை,பெரியமடு சமரில்’, இலங்கை இராணுவம் தமது தரப்பில் 119 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது.
ஆனால் போர் களத்தில் அடையாளம் காணப்படாத 150 இற்கும் மேற்பட்ட சடலங்கள் இருப்பதாக புலிகளின் தொலைக்காட்சி தெரிவித்தது. ஆக இலங்கை இராணுவத்தின் இழப்பு என்பது இதற்கும் அதிகமாக இருந்திருக்கவேண்டும்.
தமது தரப்பில் ஏற்படும் இழப்புகளை எப்பொழுதும் குறைத்து சொல்லும் வழக்கமுடைய இலங்கை இராணுவம் ஒப்புக்கொண்ட எண்ணிக்கை 119 பேர் ஆகும்.
இந்த சமரில் புலிகள் தமது தரப்பில் வீரச்சாவடைந்ததாக அறிவித்த போராளிகளின் எண்ணிக்கை 96.
• இந்த தாக்குதலில் புலிகளின் அணி, இலங்கை இராணுவத்தின் கனரக ஆயுதங்களான artillery களை கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தது.
புலிகளின் கைகளில் artillery வீழ்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த இலங்கை இராணுவம், கடகடவென 5 artillery களின் சுடு குழாய்களை (Barrel) கழற்றி எடுத்து தப்பித்துவிட்டது.
விடுதலை புலிகள் கைவசம் முழுமையாக சிக்கியது ஒரு 120mm artillery மட்டுமே. மீதி 5 artillery களையும் சுடுகுழாய்கள் அற்ற மீதி பாகங்களாக (lower vehicular segments) கைப்பற்றினார்கள்.
அத்துடன் இலங்கை இராணுவத்தின் armored vehicles களையும் பெருமளவிலான சிறு ரக ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள்.
LTTE press release states that the 'LTTE forces have dealt a devastating blow to the 'head' of Sri Lanka's army column' and that the 'army's entire 120mm artillery base at Periamadu was wiped out'.
It also said that they captured one 120mm long-range artillery piece with 300 shells and the lower vehicular segments of five more artillery pieces. The Tiger statement also has claimed that they captured 'a number of armored vehicles and small arms'.
24-6-97 செவ்வாய்கிழமை தொடங்கிய சண்டை புதன்கிழமை மதியம் வரை தொடர்ந்தது.
கைப்பற்றிய ஆயுதங்களையும், தமது தரப்பில் காயமடைந்த, பலியான போராளிகளை கண்டு பிடித்து செல்லவுமே புலிகளின் அணிகள் மதியம்வரை தாமதித்தன.
• ‘செய் அல்லது செத்துமடி கட்டம் 2- ஓமந்தை, பெரியமடு சமரின்’ முக்கிய அம்சம்
இந்த சமரில் புலிகளின் பெண்கள் படையணியே முக்கிய பாத்திரம் வகித்தது. பெண்கள் அணிக்கு துணைப்பாத்திரமாகவே ஆண்கள் படையணி சண்டையிட்டது.
இத்தனைக்கும் இந்த கட்டம்-2 சமரானது கட்டம்-1 இனை விட கடினமானதாகும்.
அதற்கான காரணம் கட்டம்-1 அழித்தொழிப்பு சமரில், புலிகள் ஜெயசிக்குறு படையணியின் பின்புற பகுதியை நோக்கியே தாக்குதல் நடத்தினார்கள்.
அதாவது அந்தநேரத்தில் இலங்கை இராணுவம் ஓமந்தை வரை முன்னேறியிருந்தது. அதற்கு பின்இயங்கு தளமாக இயங்கிய தாண்டிக்குளம்-நொச்சிமோட்டை பெருந்தளம் (Thandikulam - Nochchimoddai military complex) மீதுதான் தாக்குதல் நடத்தினார்கள்.
ஓமந்தையில்தான் கிட்டத்தட்ட 20000 இலங்கை இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தார்கள். அதற்கு பின்புறம் இருந்த தாண்டிக்குளம்-நொச்சிமோட்டை பெருந்தளத்தில் குறைந்தது 3000 இராணுவம், கடற்படையினர் இருந்ததாக தெரியவருகிறது.
அதனால் புலிகளின் ஒரு படைப்பிரிவு ஓமந்தையிற்கும் தாண்டிக்குளத்திற்கும் இடையில் தடுப்பு சுவராக இருந்து, ஓமந்தையில் இருந்த இராணுவம் தாண்டிக்குள இராணுவத்திற்கு உதவி செய்யமுடியாமல் தடுத்தது.
ஆனால் இந்த கட்டம்-2 சமரில், எங்கு பெரும்பான்மையான இலங்கை இராணுவம் நிலைகொண்டிருந்ததோ அந்த பகுதியை நோக்கியே புலிகள் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். அதனாலேயே கட்டம்-2 சமரானது கட்டம்-1 சமரை விட கடினமானது என குறிப்பிட்டிருந்தேன்.
• இந்த ‘செய் அல்லது செத்துமடி கட்டம் 2- ஓமந்தை, பெரியமடு சமரில்’ புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய இலங்கை படைப்பிரிவு 55வது டிவிசன் ஆகும்.
அதை தராகி சிவராம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“The LTTE’s second counter attack on the troops of Operation Jaya Sikurui was predicted and expected. The Division 55 headquarters under Brigadier Shantha Kottegoda was overrun and destroyed again —exactly two weeks after it was overwhelmed by the Tigers at Thandikulam.
The Brigadier has once more managed to make good his escape from the overrun headquarters”
(தராகி சிவராமின் ‘Blinded in the Wanni quagmire’ என்ற தலைப்பிலிட்ட கட்டுரையிலிருந்து - 29 June 1997)
• இந்த சமர் தளபதி ஜெயம் தலைமையில் நடந்ததாகவும், இந்த முழு சமரிற்கும் கட்டளை தளபதியாக செயற்பட்டவர் பால்ராஜ் எனவும் தராகி சிவராம் கூறுகிறார்.
“Contrary to earlier reports, both counter attacks on Div.55 headquarters had been led by Jeyam.
It is understood the LTTE’s military commander Balraj (the supreme commander is Prabhakaran) co-ordinated the assault from a temporary base near Mankulam.
Jeyam was the deputy commander of the Charles Anthony ‘Brigade’ which is now operating in the Trincomalee district under its commander Sornam.”
• 10-6-97 இல் புலிகள் நடத்திய ‘செய் அல்லது செத்துமடி கட்டம்-1 தாண்டிக்குள சமரிற்கு’ பின்பு தளபதி பால்ராஜ் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
‘இந்த கட்டம்-1 சமரானது ஒரு பரீட்சார்த்த தாக்குதலே. இனி வரும் காலங்களில் இதைப்போன்று நிறைய தாக்குதல்கள் நடத்தப்படும்’ என. (அன்றைய கால தினமுரசு பத்திரிகை செய்தி கீழே படமாக தரப்பட்டுள்ளது)
தராகி சிவராம் தனது கட்டுரையில் இதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“In fact, a Tamil weekly carried a lead story last week quoting LTTE’s military commander Balraj in Mankulam that the LTTE’s attack on Thandikulam-Nochchimoddai was only an experimental one and that his organization was about to unleash more destruction on the army in the coming weeks.”
• போரியல் நகர்விற்கு தொடர்பில்லாத ஆனால் சுவாரசியமான ஒரு தகவல் இந்த சமரில் இருக்கிறது.
‘செய் அல்லது செத்துமடி கட்டம்-1 தாண்டிக்குள சமர்’ புலிகளால் ஜெயசிக்குறு படையணியின் பின்இயங்கு தளமான தாண்டிக்குளம்-நொச்சிமோட்டை பெருந்தளத்தின் மீது நடத்தப்பட்டது என குறிப்பிட்டிருந்தேன்.
இந்த சமரில் இலங்கை இராணுவத்தினர் குறைந்தது 350 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான கனரக ஆயுதங்கள் புலிகளால் அழிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்டன. (வாசிக்க பகுதி-1)
இதையடுத்து அன்றைய இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ‘அனுருத்த ரத்வத்த’ பின்வரும் வாசகத்தை கூறியிருந்தார்.
‘புலிகள் வால் பகுதியில்தான் வந்து அடித்தார்கள்’
“At that time of the attack, the deputy defense minister dismissed it as a minor setback and proclaimed "Even our tail is more powerful than their joint forces".
இந்த ‘செய் அல்லது செத்துமடி கட்டம்-2 ஓமந்தை, பெரியமடு சமர்’ ஜெயசிக்குறு படையணியின் இதயபகுதியிலே நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
பொதுவாகவே தேர்தல் அரசியல்வாதிகள் வாய்சொல் வீரர்கள். இவர்களின் கூற்றை தலைவர் பிரபாகரன் என்றுமே பொருட்படுத்தியதில்லை. ஆனால் ‘தற்செயலாக’ கட்டம்-2 அழித்தொழிப்பு சமர் அனுருத்த ரத்வத்தையின் வார்த்தைகளுக்கு பெரிய ஆப்பாக இருந்துவிட்டது.
க.ஜெயகாந்த்














Comments
Post a Comment