ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய direct missile attack பற்றிய போரியல் ஆய்வு

 

ஏப்ரல் 13 அன்று, ஈரான் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தியது (retaliation). இந்த தாக்குதலில் ஈரான் drones, ballistic missiles களை பயன்படுத்தியது.

இந்த தாக்குதல் பற்றி mainstream media (MSM) சாமானியர்களிடையே உருவாக்கிய narrative என்ன?

ஈரான் நூற்றுக்கணக்கான drones, ballistic missiles களை இஸ்ரேல் மீது ஏவியதாகவும், அவைகளில் 99% இனை இஸ்ரேலினது integrated air defense system தடுத்து அழித்துவிட்டதாகவும் (interception) சாமானியர்களுக்கு ‘செய்தியாக’ சொல்லப்பட்டது. அதாவது narrative. 

இதனது உண்மைத்தன்மை என்ன?

இதனை நான் பல அடுக்குகளாகவே விளக்க வேண்டியிருக்கிறது.

இதில் tactical level இல் நடந்தது என்ன என்பதை கூறிவிட்டு, அது எத்தகைய தாக்கத்தை strategic level இல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளக்குகிறேன்.

ஈரானது direct missile attack இல் tactical level இல் என்ன நடந்தது?

ஈரான் இந்த retaliation எந்தவொரு கட்டத்திலும் regional war ஆக விரிவடையக்கூடாது என்பதை தெளிவுபடுத்திவிட்டது.

காரணம் தொடர்ச்சியான பொருளாதார தடைகளால், மரபு போரில் (conventional war) ஈரானின் இராணுவம் பலவீனமான நிலையிலேயே இருக்கிறது.

அதனால்தான் ஈரான் asymmetric warfare ஐ மையப்படுத்தி அதனது military doctrine இனை வடிவமைத்துள்ளது.

தற்போதைய நிலையில் ஈரான் direct confrontation சூழலை உருவாக்க விரும்பவில்லை.

அதனாலேயே தாங்கள் பதிலடி தாக்குதலை நடத்தபோகிறோம் என்பதை மேற்குலகிற்கு முன்கூட்டியே தெரிவித்து, உயிர் சேதங்கள் அதிகம் நேராத இலக்குகளாக தேர்ந்தெடுத்தது. மேற்குலகமும், இஸ்ரேலும் அந்த தாக்குதலை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை செய்வதற்கான நேரத்தை வழங்கியது.


ஈரான் எத்தகைய missiles களை பயன்படுத்தியது?

As Brigadier-General Ali Hajizadeh, the Islamic Revolutionary Guard Corps (IRGC) Aerospace Force’s commander, later stated:

“We attacked Israel using obsolete weapons and minimal means. At this stage, we did not use Khorramshahr, Sejjil, Shahid Haj Qassem, Kheibar Shekan[-2], and Hypersonic-2 missiles.”

இந்த தாக்குதலிற்கு ஈரான் அதனது பழைய தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட missiles களையே பயன்படுத்தியதாகவும், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட Kheibar Shekan[-2] , Shahid Haj Qassem போன்ற missiles களை பயன்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கிறது.


இதுபற்றி விரிவான கட்டுரையொன்றை The Cradle ஊடகம் வெளியிட்டிருக்கிறது. 

அது தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்ட பழைய தொழில்நுட்பத்தையுடைய missile களை பட்டியலிடுகிறது.

“So what missiles did Iran deploy from its significant domestically-produced arsenal, and why?

Ghadr: Despite being 20 years old, this missile proved effective by deploying decoy warheads to exhaust Israel’s Arrow-2 intercept capabilities. While traversing in space, the Ghadr releases about 10 decoy warheads to lure Arrow-2 to launch 10 interceptors each at all 10 Iranian decoys – draining the enemy’s munitions stock.

Dezful: A compact, cost-effective missile with a 600 to 700-kilogram payload, apparently used specifically to strike at an Israeli intelligence base in the occupied northern Golan, demonstrating its strategic deployment within its range limits. 

Emad: Approximately a decade old, this was used to test Iran’s countermeasures against newer air defense systems like Israel’s Arrow-3 and the American SM-3. It releases inflatable decoys in space to evade interception before re-entry.

Kheibar-Shekan-1: (early model, not the Kheibar-Shekan-2): IRGC’s answer to Israel’s Arrow-3. Kheibar-Shekan-1 entered service with IRGC Aerospace Force in 2022. It counters Arrow-3 by flying on a “depressed trajectory.” 

(The Cradle ஊடகத்தில் வெளியான “Precision over power: How Iran’s ‘obsolete’ missiles penetrated Israel’s air defenses” எனும் கட்டுரையிலிருந்து - 19/4/24)



Tactical level இல் ஈரான் ஏற்படுத்திய சேதாரம் என்ன?

ஈரானினது இந்த retaliation இல் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ஆனால் தெற்கு இஸ்ரேலில் இருக்கும் Ramon airbase இனை, இஸ்ரேலினது integrated air defense system அடுக்குகளை தாண்டி ஈரானினது missiles தாக்கின.

ஈரான் பயன்படுத்திய drones,ballistic missiles களது செலவு வெறும் 20 மில்லியன் டாலர்கள்தான்.

ஆனால் இதனை சமாளிக்க அமெரிக்கா,இஸ்ரேல் பயன்படுத்திய interceptor missiles இற்கு ஆன செலவு 1.4 பில்லியன் டாலர்.


இதில் ஒளிந்திருக்கும் செய்தி என்ன?

அதை கேள்விகளாக தருகிறேன். அதனூடாக புரிந்துகொள்ள முயலுங்கள்.

• ஈரான் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் surprising attack நடத்தினால் என்ன ஆகும்?

• பழைய தொழில்நுட்பத்தினை உடைய missiles இஸ்ரேலினது integrated air defense system இனை கணிசமானளவு ஊடறுக்க முடியும் என்றால், இதைவிட அதிக Mach வேகத்தையுடைய புதிய தொழில்நுட்ப missiles களை ஈரான் பயன்படுத்தினால் என்ன ஆகும்?

• அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் என்பவை ஈரானினது missiles களை intercept செய்ய உதவின. சவூதி அரேபியாவும், UAE உம் intelligence தகவல்களை வழங்கின.

இத்தனை நாடுகளினது உதவியுடன்தான் இஸ்ரேல் ஈரானினது direct missile attack இனை எதிர்கொண்டது. இந்த நாடுகள் உதவியை தராவிடில் என்ன நடக்கும்?

இந்த கேள்விகளுக்கான பதில்கள்தான் ஈரானினது strategic level தாக்கத்தை தீர்மானிக்கிறது.


இனி strategic level இல் ஈரானின் retaliation ஏற்படுத்திய தாக்கத்தை விளக்குகிறேன்.

ஈரானினது retaliation இற்கு எதிர்நகர்வாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்துமாயின், ஈரான் இனிமேல் பெரும் பதிலடியை தரும் என்ற எச்சரிக்கையை தந்திருக்கிறது.

அத்துடன் ஈரானிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளிற்கு உதவும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் உறுதியுடன் கூறியிருக்கிறது.

உதவும் நாடுகள் எவை?

அமெரிக்கா, சவூதி அரேபியா, UAE, ஜோர்டான் போன்றவை.

இதையடுத்து ஈரானிற்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளுக்கும் தமது மண்ணை பயன்படுத்தமுடியாது என சவூதியும்,UAE உம் அமெரிக்காவிடம் தெரிவித்துவிட்டன.

இதனூடாக அமெரிக்கா நினைத்தாலும் ஈரான் மீது தாக்குதலை நடத்தமுடியாத நிலையை ஈரான் strategic level இல் உருவாக்கி வைத்துள்ளது.


அமெரிக்காவின் முன்னாள் Assistant Secretary of Defense for International Security Affairs or ASD (ISA) ஆக பணியாற்றிய Chas Freeman பின்வருமாறு அதனை விவரிக்கிறார். (காணொளி கீழே)

“This is very important the saudis, the Emiratis and others informed the United States that they would not permit American operations against Iran from their territory, and Iran warned those states that if they did, they would become targets.

So in a sense Iran has achieved the neutralization of American forces in the Persian gulf that it long sought.

So this is, as someone has put it from a tactical military point of view it was a nothing burger.

But from a strategic point of view, from a soft power point of view it was a huge success. Iran  accomplished its objective and it left Israel with an intolerable dilemma.

Israel can not continue to behave as though it can act with impunity.“


• Chas Freeman சொல்வதுபோல ஈரான் tactical military point of view இல் ஒரு சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரு உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஈரான் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ பலத்தை neutralize செய்துவிட்டது.

ஏற்கனவே நான் பலதடவை முன்னைய பதிவுகளில் விவரித்தபடி ஈரான் asymmetric warfare இனை அதன் போரியல் வடிவமாக வைத்திருக்கிறது.

ஒரு புள்ளியில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இந்த முறுகல் நிலையினை all-out war நிலைக்கு கொண்டு சென்றால், மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்காவின் military assets இன் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும்.

Persian gulf இல் இருக்கும் அமெரிக்காவின் aircraft carrier மீது ஈரான் அதனது அதிவேக hypersonic missiles களை overwhelming number களில் ஏவினால் என்ன நடக்கும்? 

aircraft carrier இனுடைய air defense system இன் அடுக்குகளை தாண்டி ஒரு hypersonic missile மோதி வெடித்தாலும் அதோ கதிதான்.

Aircraft carrier இல் இருக்கும் சுமார் 5000 கடற்படை வீரர்களின் உயிரோடு, அந்த கப்பலோடு மட்டுமே இந்த தாக்கம் முடிவடைந்து விடாது.

ஈரானின் ஒரேயொரு hypersonic missile சரியாக மோதி வெடித்தாலும், அது அமெரிக்கா அதனது உலகளாவியரீதியிலான power projection இற்கு பயன்படுத்தும் carrier strike group (CSG) இனது vulnerability இனை expose ஆக்கிவிடும்.

இதுவும் strategic level இல் ஈரான் ஏற்படுத்திய தாக்கமாகும்.




அடுத்து ஈரானினது retaliation, இஸ்ரேலினுடைய Escalation Dominance இனை நீர்த்துபோக வைத்துவிட்டது.

இதுவரை இஸ்ரேலினது deterrent strategy இல் மையப்புள்ளியாக இருந்தது Escalation Dominance.

Escalation Dominance என்பதன் பொருள், இஸ்ரேல் மீது யார் கையை வைத்தாலும் அதற்கான பெரும் இழப்பை அந்த எதிர்தரப்பு கொடுக்கவேண்டிய நிலைக்கு இஸ்ரேல் அதனது பதிலடி தாக்குதல் ஊடாக ஏற்படுத்தும். இது மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலின் எதிர்தரப்பை ஒன்றுக்கு நூறு தடவை சிந்திக்க வைக்கும்.

ஆனால் இப்பொழுது ஈரான் retaliation ஐ நடத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதற்கு பதிலடி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது. ஏனெனில் பதிலடி கொடுக்கவேண்டாம் என அமெரிக்கா இஸ்ரேலிற்கு அழுத்தம் கொடுக்கிறது.

காரணம் நான் மேலே விவரித்தவை.

இதனால் இஸ்ரேலின் Escalation Dominance பலவீனமாகியிருக்கிறது.


மேலே நான் விவரித்தவற்றை சுருக்கமாக பாருங்கள்.

ஈரான் நடத்திய retaliation தாக்குதல் tactical level இல் ஒரு உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் strategic level இல், Persian gulf பிராந்தியத்தில் அமெரிக்காவை neutralize செய்துவிட்டது. இஸ்ரேலினுடைய Escalation Dominance இனை பலவீனப்படுத்திவிட்டது.

இதற்கு முன்பும் இதே tactical level, strategic level எப்படி செயல்படுகின்றன என்பதை கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.

புலிகள் இந்திய படையினருடனான தமது போரில் tactical level இல் பின்னடைவுகளை சந்தித்து இருந்தாலும் strategic level இல் இந்தியாவை எப்படி முறியடித்து இருந்தார்கள் என்பதை விளக்கியிருந்தேன். அவற்றின் இணைப்பு கீழே.

• புலிகளின் STRATEGIC GAIN உம் இந்திய அமைதிப்படையின் TACTICAL GAIN உம்


க.ஜெயகாந்த்




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]