புலிகளின் strategic gain உம் இந்திய அமைதிப்படையின் tactical gain உம்
• ஒரு sovereign state இற்கும் non state actor இற்கும் போர் நடக்கும்போது, இரண்டு தரப்பினது வெற்றி எல்லைக்கோடும் வேறு வேறு வகையானது. வெறும் தட்டையாக tactical level இல் வெற்றியினை மதிப்பீடு செய்யக்கூடாது.
பல மாதங்களுக்கு முன்னர், என்னிடம் முகநூல் நண்பர் ஒருவர் ‘புலிகள்- இந்திய படையினருக்கு இடையிலான War அல்லது Counter insurgency இனை எப்படி மதிப்பீடு செய்வது?’ என கேட்டிருந்தார்.
• அதற்கு பதிலளித்து ஒரு கட்டுரையினை எழுதியிருந்தேன்.
அந்த கட்டுரையின் உள்ளடக்கம் இதுதான்.
“இந்திய படைகள் வட கிழக்கினை கைப்பற்றி tactical gains அடைந்திருந்தார்கள்.
ஆனால் புலிகள் வன்னி காட்டிற்கு பின்னகர்ந்திருந்தபோதும் strategic gains அடைந்திருந்தார்கள். அந்த strategic gains என்பது, இந்திய படையினருடனான போர், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் (sole representative) புலிகள் மட்டுமே என்ற நிலைக்கு அவர்களை உயர்த்தியது.
இந்திய படையினருடனான போரில் விடுதலை புலிகளுக்கு tactical பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அவர்களின் strategic gains இந்த tactical பின்னடைவை தூக்கி சாப்பிட்டுவிட்டது” என குறிப்பிட்டிருந்தேன்.
• இதை நீங்கள் ஆழமாக புரிந்துகொள்ள மேலும் சில உதாரணங்களை தருகிறேன்.
உங்களில் பெரும்பாலோனோருக்கு Henry Kissinger ஐ பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் Secretary of State ஆக 1973- 1977 வரை பணியாற்றியவர்.
வியட்னாமில் அமெரிக்கா அடைந்த தோல்விக்கு பிறகு, அவர் sovereign state Vs non state actor இற்கு இடையில் போரியல் சமன்பாடுகள் வேலை செய்யும் விதம் குறித்து பின்வருமாறு கூறியிருப்பார்.
“We fought a military war. Our opponents fought a political one. We sought physical attrition. Our opponents aimed for our psychological exhaustion.
In the process we lost sight of one of the cardinal maxims of guerrilla war.
The guerrilla wins if he does not lose. The conventional army loses if it does not win."
“நாங்கள் இராணுவ பார்வையில் போரினை செய்தோம். வியட்னாம் அரசியல் பார்வையோடு போரினை நடத்தியது.
நாங்கள் அவர்களது இராணுவ வளங்களை அழிப்பதில் முனைப்பாக இருந்தோம். வியட்னாம் எங்களது உளவுறுதியை குலைப்பதில் முனைப்பாக இருந்தது.
இந்த செயற்பாட்டில் ‘கெரில்லா போர்முறையின்’ அடிப்படை விதியை கவனிக்க தவறிவிட்டோம்.
அதுதான் ‘ஒரு கெரில்லா இயக்கம் தோற்காமல் இருந்தாலே போதும். அவர்கள் வென்றதாக பொருள். ஒரு அரசின் மரபு இராணுவம் வெல்லாமல் போனால் அவர்கள் தோற்றதாக பொருள்’ என்ற விதியை.
இந்த வரிகளை மீண்டும் தருகிறேன்.
“The guerrilla wins if he does not lose. The conventional army loses if it does not win."
இந்த வரிகளுக்குள்தான் நான் மேலே கூறிய tactical level & strategic level சமாச்சாரம் வருகிறது.
இப்பொழுது இந்த வரிகளின் விதியை மட்டும் நான் பட்டியலிடும் வரலாற்று நிகழ்வுகளுக்கு பிரயோகித்து பாருங்கள்.
• புலிகள் தமது வட-கிழக்கு பிரதேசங்களை இழந்து காட்டுக்குள் பின்வாங்கினார்கள்.
இந்திய படை வட-கிழக்கு பிரதேசங்களை கைப்பற்றி, அதனது ஒட்டுக்குழுவின் ஊடாக மாகாண அரசை நடத்தியது.
ஆனால் புலிகள் தோற்கவில்லை.
கடைசிவரை களத்தில் இருந்துகொண்டு, தொடர்ச்சியாக இந்திய படை மீது கெரில்லா தாக்குதலை நடத்தி கொண்டிருந்தார்கள்.
இலங்கையுடன் ராஜதந்திர நகர்வுகளை செய்து, இந்தியா அதனது படைகளை மீள அழைத்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.
முடிவில் strategic level இல் புலிகள் வெற்றியாளர் ஆனார்கள்.
• அடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான்
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்த 20 வருடங்களில், இழந்த அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை 2500 இற்கும் கீழேதான்.
இதே காலப்பகுதியில் தலிபான் 50000 இற்கும் மேற்பட்ட தனது வீரர்களை இழந்தது.
ஆனால் 2500 Vs 50000 என அணுகுவதற்கு இது கிரிக்கெட் ஸ்கோரா?
இல்லை.
அமெரிக்கா ஆப்கானிஸ்தான் போரில் செலவழித்த தொகை மட்டும் 2 டிரில்லியன் டாலர் என Watson Institute for International and Public Affairs இன் ஆய்வறிக்கை சொல்கிறது. (HUMAN AND BUDGETARY COSTS TO DATE OF THE U.S. WAR IN AFGHANISTAN, 2001-2022)
சீனாவிற்கு எதிராக வளங்களை குவிப்பதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தானில் வளங்களை குவித்து வீணடித்து கொண்டிருக்கிறோம் என அமெரிக்கா நொந்து போகுமளவிற்கு, 20 வருடமாக தலிபான் களத்தில் இருந்து கொண்டேயிருந்தது.
இறுதியில் ஆப்கானிஸ்தான் தலிபான் கைக்கு மீளவந்தது. தலிபான் strategic level இல் வெற்றியாளர் ஆனது.
• அடுத்தது வியட்னாம்
வியட்னாம் போர் 1955-1975 வரை, சுமார் 20 வருடங்கள் நடந்தது.
வியட்னாமில் ஏற்பட்ட உயிரிழப்புகளை பார்ப்போம்.
அமெரிக்க படைகளின் உயிரிழப்பு குறைந்தது 50000 பேர்.
ஆனால் வியட்நாம் தரப்பில் இறந்த வியட்காங் போராளிகள் & வட வியட்னாம் படைகளின் (Viet Cong (VC) & People's Army of Vietnam (PAVN)) எண்ணிக்கை குறைந்தது 450000- 650000.
அமெரிக்க இழப்பைவிட 10 மடங்கு அதிகம்.
அன்றைய வட வியட்நாமின் இராணுவ தளபதியாக இருந்த Võ Nguyên Giáp தங்களது இழப்பை பற்றி பின்வருமாறு கூறியிருந்தார்.
"No other wars for national liberation were as fierce or caused as many losses as this war,"
"But we still fought because for Vietnam, nothing is more precious than independence and freedom," he said, repeating a famous quote by Ho Chi Minh.
(GIAP told the Associated Press in 2005 in one of his last-known interviews with foreign media on the eve of the 30th anniversary of the fall of Saigon, the former South Vietnamese capital)
ஆனால் Võ Nguyên Giáp இற்கு தெரியும். தாங்கள் கொடுக்கும் அதே விலையை அமெரிக்காவினால் கொடுக்கமுடியாது என்று. அந்நிய மண்ணில் ஒரு நாடு அதனது இராணுவ வீரர்களை இழக்கும்போது, மக்கள் சொல்லும் ஒரே பதில் ‘விட்டுவிட்டு வாருங்கள்’ என்பதாகத்தான் இருக்கும்.
ஏனெனில் survival போரிற்கான உளவியலும் அந்நிய மண்ணில் நடக்கும் போரிற்கான உளவியலும் வேறுவேறானவை.
கடைசியில் வட வியட்னாம் strategic level இல் வெற்றியாளர் ஆனது.
• அடுத்து காஸாவில் ஹமாஸிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர்
எவ்வளவு நிலப்பரப்பை இழந்தாலும், ஹமாஸ் கடைசிவரை தோற்காமலே இருந்தாலே போதும். இஸ்ரேல் தோல்வியடைந்ததாகவே பொருள்.
பாலஸ்தீனத்தில் இன்னுமொரு முக்கியமான கூறும் உண்டு.
ஹமாஸ் முற்றாக அழிந்தாலும், இன்னொரு இயக்கம் எளிதாக அதனது இடத்தை நிரப்பிவிடும். அதுதான் பாலஸ்தீனிய மக்களின் போராட்ட குணம்.
• போரும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தவை. அரசியல் இலக்கை அடைவதற்காக நடத்தப்படும் வன்முறை செயற்பாடுதான் போர்.
அரசியல் இலக்கை நோக்கி நெருங்குவதை strategic level வெற்றி உறுதிப்படுத்துகிறது.
இந்த போரின் ஆழமான பொருள் பெரும்பாலோனோருக்கு புரிபடுவதில்லை.
அதனால்தான் tactical level இல் நடந்தவைகளை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டு, ‘இந்திய படை மட்டும் நினைச்சிருந்தா அப்பவே புலிகளை முடிச்சிருப்போம். ஆனால் நாங்க நினைக்கல!’ என தமிழ் சினிமா டயலாக்குகளை பேசிகொண்டு இருப்பார்கள்.
போர் இன்னும் ஆழமானது. சிக்கலானது. இந்த கட்டுரை கூட முழுமையானது அல்ல. இது போரின் ஒரு பக்கத்தை மட்டுமே விவரிக்கிறது.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment