தமிழ்நாட்டு மக்களின் அடிமைத்தன உளவியல் - திராவிட உருட்டுகள் (பகுதி-3)

 திராவிட கட்சிகளை ஆதரிக்கும் தமிழ்நாட்டின் சாதாரண பொது மக்களில், குறிப்பாக உயர்கல்வி கற்று இன்று “ஓரளவு” தொழில்ரீதியில், பொருளாதாரரீதியில் முன்னேறியிருக்கும் அனேகமானோருக்கு ஒரு உளவியல் இருப்பதை அவதானித்து இருக்கிறேன்.


அந்த உளவியல்தான் “நானோ அல்லது எனது குடும்பமோ இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் இந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சித்தானே! இந்த திராவிட ஆட்சியில்தானே நான் உயர் கல்வி பயின்று நல்ல வேலையில் இருக்கின்றேன். அல்லது வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கின்றேன். அல்லது பொருளாதாரரீதியில் ஏற்றமடைந்து இருக்கின்றேன்” என்ற நன்றி ததும்பும் உளவியல்.


• இந்த உளவியலை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?


ஆங்கிலத்தில் “false indebtedness" என்றும் "misplaced gratitude” என்றும் இரண்டு சொல்லாடல்கள் உண்டு.


அந்த இரண்டு சொல்லாடல்களுக்கும் பொருள் பின்வருமாறு வருகின்றன.


“False indebtedness” occurs when a person feels obligated to repay a debt that either doesn’t exist or is exaggerated.


“Misplaced gratitude" is a concept that, while not a formal term in psychology, describes a situation where someone feels thankful or indebted to another person or entity in a way that is inappropriate or unwarranted.


ஒருவர் தவறான ஒரு இடத்தின் மீது நன்றி கடன் செலுத்துவது. நன்றி கடன் செலுத்துவதற்கான எந்தவித நியாயங்களும் இல்லாதபோதும், பிழையான புரிதலால் தவறான ஒருவர் மீதோ அல்லது அமைப்பு மீதோ நன்றிக்கடன் செலுத்துவது என்பது பொருள்.


இதற்கான காரணங்களாக survivor syndrome, Cultural or Societal Pressures, Low Self-Esteem, etc  என்பவை அடையாளப்படுத்தப்படுகின்றன.


திராவிட கட்சிகள் மீது, மேலே நான் குறிப்பிட்ட உயர்கல்வி கற்று இன்று “ஓரளவு” தொழில்ரீதியில், பொருளாதாரரீதியில் முன்னேறியிருக்கும் அனேகமானோருக்கு இருக்கும் “நன்றிக்கடன் உளவியல்” என்பது இந்த “false indebtedness" அல்லது "misplaced gratitude” வகையை சார்ந்ததுதான்.


• இந்த “false indebtedness" அல்லது "misplaced gratitude” உளவியலுக்கான காரணம் எதுவாக இருக்கக்கூடும்?


இதற்கு வரலாற்றில் நீங்கள் பின்னோக்கி செல்லவேண்டும். குறைந்தது 30 வருடங்கள் பின்னோக்கி செல்லவேண்டும்.


அதாவது 1991 ஆம் ஆண்டிற்கு முன்னரான இந்தியா.


ஏன் குறிப்பாக 1991 ஆம் ஆண்டு?


அந்த ஆண்டுதான் இந்தியா அதனது பொருளாதாரத்தை திறந்தது. Liberalization, Privatization, and Globalization (LPG) reforms இனை செய்ய ஆரம்பித்தது.


அந்த பொருளாதார சீர்திருத்தங்கள் புதிய கதவுகளை திறக்க ஆரம்பித்தன. உள்நாட்டில் இருக்கும் பல skilled workers இற்கான வாய்ப்புகள் உருவாக ஆரம்பித்தன. 


அந்நிய முதலீடு (Foreign Direct Investment (FDI) உள்நுழைய ஆரம்பித்தது. 


வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்த அந்நிய முதலீடு ஊடாக குறைந்த ஊதியத்தில் தொழில்சார் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள், அரசுகளின் மானியங்கள் என்ற ஆதாய கணக்குகள் இருக்கின்றன. 


அதேநேரம் நிதியின்றி தவிக்கும் நாடுகள் தமது மனித வளத்தை பதிலுக்கு கொடுத்து, பொருளாதாரத்தை உயர்த்த முடியும். தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் என்பவை நிகழும்.


இது இரு தரப்பிற்குமே win-win situation. 



• தமிழ்நாடு 1991 ஆம் ஆண்டிற்கு முன்னர் எப்படி இருந்தது?


இதை நான் விலாவரியாக விளக்குவதற்கு பதில் சில தமிழ் திரைப்படங்களை உதாரணமாக தருகிறேன்.


அந்த திரைப்படங்கள் அன்றைய காலகட்டத்தை பிரதிபலித்தவை. நான் பல நூறு வார்த்தைகளில் விவரிப்பதை அந்த தமிழ் திரைப்படங்கள் எளிமையாக உங்களுக்கு சொல்லிவிடும்.


வறுமையின் நிறம் சிகப்பு, குடும்பம் ஒரு கதம்பம், பசி, தண்ணீர் தண்ணீர் , வீடு, சத்யா போன்ற திரைப்படங்கள் அன்றைய சமூக, பொருளாதார நிலையை பிரதிபலிப்பவை.


இதுதான் 1991 இற்கு முன்னர் இருந்த தமிழ்நாடு.


இந்த காலகட்டத்தில் பிறந்த பெரும்பான்மையானோர் வறுமையை வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சந்தித்திருப்பார்கள். 


அன்றைய காலகட்டத்தில் படித்த இளைஞர்கள் படிப்பிற்கு ஏற்ற ஊதியத்தில் வேலை எடுப்பது என்பது குதிரை கொம்பாக இருந்தது. வறுமையின் நிறம் சிகப்பு, சத்யா போன்றவை இந்த நிலையை பிரதிபலித்த படங்கள்.


இந்த நிலை 1990 களின் நடுப்பகுதி அல்லது கிட்டத்தட்ட இறுதிப்பகுதி வரை நீடித்தது. 


ஏனெனில் மேலே கூறிய LPG reforms களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வெளிப்படையாக பிரதிபலிக்க சில ஆண்டுகள் தேவைப்படும்.


ஆக 1990 களிற்கு முற்பட்ட தமிழ்நாட்டில் பிறந்த அனேகமானோருக்கு வறுமை என்பது ஏதோ ஒருவகையில் பரிச்சயம்.


இவர்கள்தான் இன்றைய தமிழ்நாட்டை 

அவர்களது Pre- 90’s தமிழ்நாட்டுடன் ஒப்பீடு செய்து, அதற்கான காரணமாக திராவிட கட்சிகளை நினைத்து அதற்கு நன்றி கடன் செலுத்துபவர்கள்.


இதில் இன்னொரு பக்கம் இருக்கிறது.


• #இந்திய அரசு 1991 இல் இந்த LPG reforms இனை கொண்டு வந்திருக்காவிடில் என்ன நடந்திருக்கும்? 


தமிழ்நாடு இந்த பொருளாதார வளர்ச்சியை தொட்டிருக்குமா? இது ஒரு Hypothetical question.


அனேகமாக தொட்டிருக்காது. ஏனெனில் Pre-90’s இருந்த அதே சிக்கலை தமிழ்நாடு சந்தித்து இருக்கும்.


அனேகமான skilled workers ஐ உருவாக்கியிருந்தாலும், அவர்களை பயன்படுத்துவதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நிதி தமிழ்நாட்டிற்கு இருந்திருக்காது. 


இதற்கான FDI உள்நுழைந்த பிறகுதான், அவர்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக ஆரம்பித்தன. 


சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில், இந்த மிகப் பெரும் policy change முடிவினை எடுத்தது 1991 இல் இருந்த நரசிம்மராவ் தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு. 


மத்திய அரசு இந்த பெரும் கொள்கை முடிவை எடுத்திருக்காவிடில், தமிழ்நாட்டில் இந்த மாற்றங்கள் நேராமலேயே போயிருக்கலாம்.


ஏனெனில் இந்திய ஒன்றிய அரசு எடுத்த கொள்கை முடிவினால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுமே வளர்ந்து இருக்கின்றன.


உதாரணத்திற்கு தமிழ்நாடு மட்டும்தான் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது என்றால், Tamil Nadu’s share of India’s GDP இல் அதனது பங்களிப்பு சதவீதம் அதிகரித்து கொண்டே சென்றிருக்கவேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.


கீழுள்ள தரவுகள் அதனை தெளிவாக காட்டுகின்றன.


1970 - 8.8%

1980 - 6.2%

1990 - 5.1%

2000 - 7.5%

2010 - 8.8%

2020 - 5.3%


தமிழ்நாடு அசுர வளர்ச்சி அடைகிறது ஆனால் மற்றைய மாநிலங்கள் நத்தை வேகத்தில்தான் நகர்வதாக இருந்திருந்தால், Tamil Nadu’s share of India’s GDP எங்கோ சென்றிருக்கவேண்டும். 


ஆனால் அதற்கு எதிர்மாறாக குறைந்து கொண்டு செல்கிறது.  (அட்டவணை கீழே)





ஆக இந்தியாவின் மற்றைய மாநிலங்களும் 1991 இற்கு பிறகான கொள்கை மாற்றத்திற்கு பிறகு, வளர்ச்சியடைந்திருக்கின்றன என்றே பொருள்.


இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்குமான, வளர்ச்சிக்குமான பெரும் பொருளாதார கொள்கை முடிவினை எடுத்தது இந்திய ஒன்றிய அரசே. அதனது கொள்கை முடிவுதான் தொடக்கமே.


சரி. இனி பதிவின் பேசுபொருளுக்கு திரும்புகிறேன்.


• என்னதான் இருந்தாலும் Pre- 90’s தமிழ்நாடு வறுமையை சந்தித்திருக்கிறது. இன்றைய தமிழ்நாடு சமூக, பொருளாதார படிநிலையில் மேலே இருக்கிறது. அப்படியெனில் ஆட்சியாளர்களுக்குத்தானே அந்த நன்றிக்கடனை செலுத்தவேண்டும் என உங்களுக்கு ஒரு கேள்வி எழும்.


இதுதான் இந்த பதிவின் மையப்புள்ளியே. 


முதலில் இன்று நாம் வாழ்வது நவீன அரசுகளின் காலகட்டத்தில் (Modern States) என்பதை நீங்கள் உணரவேண்டும்.


இந்த அரசுகளை நாம் தான் உருவாக்குகிறோம். நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். 


நவீன அரசுகளின் காலகட்டத்தில், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை உருவாக்குவதுதான் அரசுகளின் அடிப்படை வேலையே.


• இந்த modern states மக்களுக்கு கீழுள்ளவற்றையெல்லாம் தரவேண்டியது அவசியமாகிவிட்டது.


•Public Health Service

•Education 

•Social Security and Pensions 

•Housing Assistance 

•Family and Child Support 

•Welfare Payments 

•Public Utilities and Infrastructure 

•Food Security 

•Employment Programs


இது நவீன அரசுகளின் கடமையாக மாறிவிட்டது.


Social welfare is an essential part of modern states. இது ஒரு modern norms.


இந்த புரிதலில்தான் ஜனநாயகத்தின் உயிரே இருக்கிறது. 


இவையெல்லாம் அரசுகளின் கடமை என்ற புரிதல் உங்களுக்கு இருந்தால்தான், இவையெல்லாம் யாரோ ஒருவரது இரக்கத்தினால் கிடைத்தது, யாரோ ஒரு புனிதரின் கடைக்கண் பார்வையால் கிடைத்தது என்பது போன்ற அடிமைத்தன உளவியல் பார்வை எழாது. 


தமிழ்நாட்டு மக்களுக்கு இன்றைய நவீன அரசுகளை (Modern States) பற்றிய அடிப்படை புரிதல் இல்லாததால்தான், “false indebtedness" அல்லது "misplaced gratitude” உளவியலுக்குள் சிக்கி கொள்கிறார்கள்.


Pre- 90’s தமிழ்நாட்டில் இருந்த தங்களது கடந்த கால வறுமையை நினைவு கூறுகிறார்கள். பின்னர் இன்றைய காலத்துடன் ஒப்பீடு செய்துவிட்டு “கலைஞர் மட்டும் இல்லேன்னா! புரட்சி தலைவி மட்டும் இல்லேன்னா ! “ என நா தழு தழுக்க கண்ணீர் மல்கி பேச ஆரம்பிக்கிறார்கள்.


• தமிழ்நாட்டு மக்களின் இந்த “false indebtedness" அல்லது "misplaced gratitude” இனை, திராவிட கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.


அதனால்தான் திராவிட அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் எல்லோரும் பகிரங்கமாக “திராவிட ஆட்சியில் சமூக, பொருளாதார வளர்ச்சி அடைவதால், ஊழலை பொருட்படுத்தாதீர்கள், ஊழல் தவிர்க்கமுடியாது ” என வெளிப்படையாக பொதுவெளியில் வாதத்தை முன்வைக்கிறார்கள்.


தமிழ்நாட்டு மக்களின் இந்த “false indebtedness" அல்லது "misplaced gratitude” இனால்தான், தவறு செய்திருந்தாலும் ஒருவர் மீண்டும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வைக்கிறது.


இது ஒரு vicious cycle ஐ தொடக்கி வைக்கிறது.

கறைபடிந்த அதிகாரவர்க்கம், கறைபடிந்த காவல்துறை , கறைபடிந்த நீதித்துறை என மாறியிருக்கிறது.


இன்று ஒட்டுமொத்த சிஸ்டமுமே கறை படிந்தவொன்றாக இருக்கிறது.


ஆனால் இதற்கான தொடக்கம் தமிழ்நாட்டு மக்கள்தான். 


காரணம் அவர்களது இந்த “false indebtedness" அல்லது "misplaced gratitude” உளவியல்தான்.


• ஒரே ஒரு உதாரணத்துடன் முடிக்கிறேன்.


இன்று தமிழ்நாட்டில் ஒரு தொகுதிக்கு தலா 10-40 கோடி ரூபாய்  சட்டமன்ற தேர்தலின்போதும், 50-100 கோடி ரூபாய் நாடாளுமன்ற தேர்தலின்போதும் திராவிட கட்சிகள் செலவு செய்கின்றன.


இதில் பெரும்பாலான பணம் சாமானிய மக்களின் ஓட்டுக்கான பணமாக தரப்படுகிறது.


10- 100 கோடியை ரூபாயை செலவழித்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக வருபவர் இந்த செலவு செய்த பணத்தை எப்படி மீள எடுப்பார்?


அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துதான் இதனை மீள எடுக்கவேண்டும் அல்லது ஊழல் செய்தாகவே வேண்டும்.


இது 10 வயது சிறுபிள்ளையின் அறிவிற்கு  கூட புலப்படக்கூடிய விடயம்.


ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏதோ புத்திசாலித்தனமாக அரசியலை அணுகுவதாக நினைத்துக்கொண்டு “ஓட்டுக்கு பணம்” என்ற முறையை ஆதரிக்கிறார்கள்.


பிறகு முதல்வன், இந்தியன் படத்தை பார்த்துவிட்டு, மணிக்கட்டில் நரம்பு தெறிக்க, கண்கள் சிவக்க கைதட்டுகிறார்கள்.


க.ஜெயகாந்த்


தமிழகத்தின் வளர்ச்சியும் திராவிட அறிவுஜீவிகளின் சாமர்த்தியமான வாதமும் - திராவிடத்தின் பல உருட்டுகளில் இதுவும் ஒன்று (பகுதி 2 )



Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]