தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?

 • திராவிட உடன்பிறப்புகள் அறிவார்ந்தரீதியில் தமிழ்தேசியவாதிகளை மடக்குவதாக நினைத்துக்கொண்டு ஒரு கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள்.

“தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? அவரால் விளைந்த ஒரு நன்மை சொல்லுங்கள். எங்களால் கருணாநிதி செய்த நன்மைகளை மணிக்கணக்காக பட்டியலிடமுடியும்”

இந்த கேள்வியால் எம்மை மடக்கிவிட்டார்களாம்.

• நான் பொதுவாக இத்தகைய கேள்விகளை கடந்து சென்றுவிடுவேன். இத்தகைய கேள்வி கேட்கும் மனிதர்களையும் கடந்து சென்றுவிடுவேன்.

காரணம் இத்தகைய கூமுட்டைகளோடு அர்த்தமுள்ள உரையாடலை வைக்கமுடியாது.

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு.

"Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience.“

இதன் பொருள்:

“முட்டாள்களோடு (கூமுட்டைகளோடு) வாதம் செய்வதில் பயனில்லை. கூமுட்டைகள் அவர்களது அறிவின் உயரம் எவ்வளவு தாழ்வாக இருக்கிறதோ, அந்த தாழ்வான இடத்திற்கு அறிவாளிகளை கீழே இழுத்து சென்றுவிடுவார்கள். அந்த தாழ்வான இடம் அவர்களுக்கு கைதேர்ந்த இடம். ஒரு சாக்கடை போல வாதங்களை வைத்து உங்களை வீழ்த்திவிடுவார்கள் அல்லது வீழ்த்தியது போன்ற ஒரு தோற்றம் உருவாகிவிடும்”

இந்த தாழ்வான இடத்திற்குள்தான் “தலைவர் பிரபாகரன் என்ன செய்தார்?” என்ற அந்த  அம்பூட்டு அறிவாவாவாவான கேள்வியும் வருகிறது.



• அப்படியானால் மாற்று கருத்துடையவர்களோடு வாதம் செய்யக்கூடாது என்பது பொருளா?

நிச்சயம் இல்லை. அவர்களோடு வாதம் அல்லது உரையாடல் வைத்துக்கொள்ள வேண்டும்.

அது எத்தகைய உயரத்தில் என்பதுதான் விடயம். அதாவது அறிவின் உயரம்.

உண்மையிலேயே ஒருவர் நேர்மையான அறிவு பசி உடையவராக இருந்தால், மாற்று கருத்துடையவரோடு மணிக்கணக்கில் உரையாடல் நடத்தமுடியும். 

மாற்று கருத்து உடையவரின் வாதங்களில் உள்ள பலவீனமான பகுதிகளை அல்லது அவர் கவனிக்க தவறிய இடங்களை சுட்டிக்காட்டி வாதங்களை வைக்கமுடியும். அவருக்கு தெரியாத பக்கங்களை முன்வைத்து வாதங்களை வைக்கமுடியும். 

மறுதரப்பில் உள்ள நேர்மையான அறிவு பசி உடையவரும் அதிலிருந்து கற்றுக்கொண்டு அவரது அறிவின் உயரத்தை உயர்த்த முயற்சிப்பார். இது ஒரு தொடர் செயற்பாடு. இதை எல்லா நேர்மையான அறிவு பசி உடையவரும் சதா காலமும்  செய்து கொண்டே இருப்பார்கள். 

நேற்று எனக்கு இருந்த அறிவை விட இன்று எனக்கு இருக்கும் அறிவுதான் மேன்மையானது. போன மணித்தியாலத்தில் எனக்கு இருந்த அறிவை விட இந்த மணித்துளியில் இருக்கும் எனது அறிவுதான் மேன்மையானது.

அறிவு தாகம் உயர முயற்சி செய்துகொண்டே இருக்கும்.


• மேலே நான் குறிப்பிட்ட கூமுட்டை கேள்வியை முன்வைப்பவர்கள் எல்லாம் அறிவின் உயரத்தை உயர்த்த முயற்சிப்பவர்கள் அல்ல. இவர்கள் வேறு ஒரு வகை. வேண்டுமென்றே கூமுட்டையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

அவர்கள் தங்கள் வாழ்வில் பொருளாதார ஏற்றத்தை அடைய, திமுக ஊடாக ஏற்றம் அடைய சொம்பு தூக்குபவர்கள்.

நீங்கள் எத்தகைய அறிவார்ந்த தளத்தில் உங்களது கருத்துக்களை முன்வைத்தாலும், கண்ணை மூடிக்கொண்டு கூமுட்டை போலவே பதில் வாதம் வைப்பார்கள்.

அவர்கள் இன்பநிதியின் கடைக்கண் பார்வையில், ஏதாவது பொருளாதார ஏற்றம் நிகழ்ந்துவிடாதா என ஏங்குபவர்கள்.

இவர்களை நீங்கள் எழுப்பவே முடியாது. அந்த சப்ஜெக்ட் அப்படித்தான் ரியாக்ட் பண்ணும். ஏனெனில் அவர்களின் இலக்கு ஏதாவது ஒருவகையில் அரசியல் அதிகாரம், பொருளாதார முன்னேற்றத்தை அடைவது. தமிழ்நாட்டில்தான் பேராசிரியர்கள், அறிவுஜீவிகள் எல்லாம் இப்படி அல்லக்கைகளாக சொம்பு தூக்குவதை பார்க்கிறேன்.

• சரி. இந்த அம்பூட்டு அறிவாவாவாவான கேள்விக்கு என்னதான் பதில்?

“தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?”

கார்ல் மார்க்ஸ் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? லெனின் எப்போது தமிழ்நாட்டில் வந்து அரசியல் செய்தார்? சேகுவரா தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? ஹோசிமின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்? அதுபோலத்தான் பிரபாகரனும்.

இவர்கள் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தவர்கள். 

ஆனால் உலகின் வேறு ஒரு முனையில் ஒரு சாமானியன் புரட்சியாளனாக மாறுவதற்கான உளவியலை தந்திருப்பார்கள்.

கார்ல் மார்க்ஸும் விளாடிமிர் லெனினும் தங்கள் வாழ்நாளில் சந்தித்துக்கொண்டதில்லை. ஆனால் கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் லெனினை உருவாக்கின.

லெனினது அரசியல் தத்துவம் வியட்நாமின் ஹோசிமின்னை செதுக்கியது. இவர்கள் இருவரும் வாழ்நாளில் சந்தித்து கொண்டதில்லை.

அதேபோல் எங்கோ இருந்த சேகுவேராவை கார்ல் மார்க்ஸினது அரசியல் தத்துவங்களும் லெனினது தத்துவங்களும் செதுக்கின.

இதுபோலத்தான் தலைவர் பிரபாகரனையும் உலகின் புரட்சியாளர்கள் செதுக்கினார்கள். தமிழர் வரலாறு அவருக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது.

இனி தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்டமும், தியாக வாழ்வும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சாமானியனை பாதிக்கும்.

எங்கோ நடக்கும் ஒரு ஆயுதப்போராட்டம் புலிகளது ஆயுதப்போராட்டத்திலிருந்து பாடம் படிக்கும்.


• அவ்வளவு தூரம் ஏன் போவானேன்? 

தமிழ்நாட்டையும், தமிழீழத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவும், இலங்கையும் வரலாற்றின் போக்கில் “தங்களை அறியாமலேயே” பெரும் தவறினை செய்திருக்கிறார்கள்.

அடுத்த ஒரு 500 வருடத்திற்கு தமிழ்நாட்டிலோ, தமிழீழத்திலோ இறையாண்மை அரசை உருவாக்குவதற்கான ஆயுதப்போராட்டம் எழும்போதெல்லாம் தலைவர் பிரபாகரனின் உருவம்தான் மேலே வரும். தண்ணீருக்குள் அமுக்க முடியாத ரப்பர் பந்து போல மேலேழுந்து கொண்டே இருக்கும்.

எப்பொழுதுமே ஒரு சாமானியனை புரட்சியாளனாக உளவியல் மாற்றம் செய்ய தூண்டுகோலாக இருப்பது இன்னொரு புரட்சியாளனின் வரலாறுதான்.

சொந்த இனத்திலேயே ஒருவர் இருக்கும்போது அதனது வீரியம் ஜாஸ்தி.

அதை இந்தியாவும், இலங்கையும் தங்களை அறியாமலேயே தமிழர்களின் கைக்கு தந்திருக்கிறார்கள்.

அடுத்த 500 வருடத்திற்காவது பிரபாகரன் எனும் வடிவம் தீப்பொறியாக இருந்து கொண்டே இருக்கும்.

இப்படித்தான் புரட்சியாளர்களை மதிப்பீடு செய்யவேண்டுமே ஒழிய, தேர்தல் அரசியல்வாதிகளை மதிப்பீடு செய்வது போல அல்ல.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]