காசு வாங்கி ஓட்டு போட்டுவிட்டு பின்னர் சிஸ்டம் சரியில்லை என புலம்பும் தமிழ்நாட்டு மக்கள் - அவலமான நகைச்சுவை
தமிழ்நாட்டு மக்கள் இந்தியன்,முதல்வன் மாதிரியான படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, மணிக்கட்டில் நரம்பெல்லாம் புடைக்க புரட்சி வசனம் பேசும்போது எனக்கு எப்போதுமே சிரிப்புத்தான் வரும்.
ஏன்?
• உதாரணத்திற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள்.
போன இடைத்தேர்தலில் திமுக மக்களை காலையிலேயே எழுப்பி பட்டியில் அடைத்து வைத்து, வித்தைகள் காட்டி, மாலை நேரம் வரை வைத்திருந்து , பணம் கொடுத்து ஓட்டை அறுவடை செய்தது.
இதை கண்டு மக்கள் யாருக்கும் சிறிதளவு கூட அறச்சீற்றம் வரவில்லை.
இந்த இடைத்தேர்தலிலும் திமுக வழமைபோல ஓட்டுக்கு பணத்தினை கொடுத்தார்கள்.
மக்களும் வாங்குகிறார்கள்.
மக்கள் இதையெல்லாம் செய்யும்போது, தங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். “அரசியல்வாதி கொள்ளையடிச்ச நம்ம வரிப்பணத்த நாம திரும்ப எடுக்கிறோம்” என பதில் வாதம் வைக்கிறார்கள்.
மறுபக்கம் “இந்த நாட்டுல சிஸ்டம் சரியில்ல சார்! எல்லாத்துலயும் ஊழல்,லஞ்சம் அக்கிரமம் சார்!” என கூறிவிட்டு புரட்சி படங்களை பார்த்துவிட்டு மணிக்கட்டில் நரம்பு தெறிக்க பஞ்ச் டயலாக்குகளை அள்ளி விடுகிறார்கள்.
பணம் வாங்கி ஓட்டு போடுவது எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாதா? அது ஒரு தனித்த செயற்பாடுதானா? இதற்கு பின்விளைவுகளே இல்லையா?
இத்தகைய அரசியல் போக்கு எதிர்மறை விளைவுகளை நிச்சயம் உருவாக்கும்.
இந்த எதிர்மறை விளைவுகள் ஒரு சங்கிலி தொடரை (Chain Reaction) களத்தில் ஏற்படுத்தி கொண்டேயிருக்கும்.
• முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து தேர்தலை எதிர்கொள்வது என்பது எத்தகைய நேரடி விளைவுகளை ஏற்படுத்தும்?
1. இன்று ஒரு சட்டசபை தேர்தலில், திராவிட கட்சிகள் ஒரு தொகுதிக்கு 30-50 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது. ஒரு வேட்பாளர் 50 கோடி ரூபாயை செலவழிக்க தயாராக இருக்கிறார் எனில், செலவழித்த பணத்தை 5 வருடத்தில் சம்பாதிக்கமுடியும் என அவர் நம்புகிறார் என்று பொருள். அவரால் அப்படி சம்பாதிக்கமுடியும் எனில், உங்களது சிஸ்டம் ஒரு அழுகிய பழமாக மாறியிருக்கிறது என்று பொருள். அந்த சிஸ்டத்தில் Institutionalized Corruption இருக்கிறது என்பது பொருள்.
2. அடுத்தது ஒரு தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் 50 கோடி செலவழிக்க வேண்டும் என்பதுதான் கள யதார்த்தம் என்றால், பணமில்லாத ஒருவர் தேர்தல் அரசியலில் உயிர் பிழைக்க முடியாத நிலை உருவாகிறது. அதாவது பணம் இல்லாத ஒருவர் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கோ, பாராளுமன்றத்திற்கோ செல்ல முடியாது என்பது பொருள். இவை இரண்டும் சட்டமியற்றும் நிறுவனங்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சட்டமியற்றும் நிறுவனங்களுக்கு ஒரு அரசியல் களம் தொடர்ச்சியாக பணம் படைத்தவர்களை மட்டுமே அனுப்பும் நிலை உருவாகும்போது, அது democracy அல்ல. அதற்கு பெயர் plutocracy.
A plutocracy is a system of government or society where wealthy individuals and corporations hold the most power.
3. அடுத்தது தேர்தல் அரசியலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தரம்
பணம் வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பை தரும்போது, மோசமான பின்னணியை கொண்ட ஒரு வேட்பாளர் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அது உருவாக்குகிறது.
இங்கு ஒரு வாதத்தை அனேகமானோர் முன்வைப்பார்கள். பணம்தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தால், அதிக பணத்தை வைத்திருக்கும் பாஜகவினால் ஏன் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் அந்த வாதம்.
வெற்றி பெறுவதை தீர்மானிக்கும் பல காரணிகளில் பணமும் ஒரு காரணி. ஆனால் அது மிக முக்கியமான காரணி.
இதேயே நான் மறுவலமாக கேட்கிறேன். பணம் இங்கு வெற்றியை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கவில்லை எனில், எந்தவொரு வேட்பாளரும் 50 கோடி ரூபாயை செலவழிக்க மாட்டார். இங்கு பணம் ஒரு edge இனை தருவதால்தான், பெரிய கட்சிகள் பணத்தினை துரும்பு சீட்டாக பயன்படுத்துகின்றன.
ஆக பணம் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக மாறும்போது, மிக மோசமான பின்னணியை கொண்ட வேட்பாளர் கூட வெற்றி பெறும் சூழல் உருவாகிறது. மோசமான வேட்பாளர்கள் உங்களுக்கான சட்டங்களை இயற்றும் நிறுவனத்திற்கு உங்களின் பிரதிநிதியாக செல்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது democracy என்பது காலப்போக்கில் Criminalized Democracy அல்லது kleptocracy ஆக மாறுகிறது.
A kleptocracy is a form of government where leaders use their political power to steal public resources and enrich themselves, their families, and their allies.
4. ஒரு வேட்பாளர் பணத்தை வாக்காளருக்கு கொடுத்து வெற்றி பெறும் சூழல் இருக்கிறது எனில், அந்த democracy ஐ Corrupt Democracy அல்லது Bribe Democracy என அழைக்கலாம்.
மேலே நான் கூறியவை அனைத்தும் தேர்தல் அரசியலில் பணம் நுழையும்போது ஏற்படக்கூடிய நேரடியான எதிர்மறை விளைவுகள்.
இந்த ஒவ்வொரு நேரடி விளைவுகளும் அதற்குரிய chain reaction ஐ உங்களது சிஸ்டத்தில் உருவாக்கும்.
• இந்த kleptocracy இனது குணாம்சங்கள் எவை?
Widespread Corruption – ஒரு நாட்டினது சிஸ்டம் முழுவதிலும் corruption பரவியிருக்கும்.
Wealth Concentration – அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களும், பெரும் பணக்காரர்களும் செல்வத்தை குவித்துக்கொண்டே இருப்பார்கள்.
Weak Rule of Law – நீதித்துறை பலவீனமாக இருக்கும். மேலே குறிப்பிட்ட corruption இற்கு காரணமானவர்கள் நீதித்துறையின் பிடியில் அகப்படமாட்டார்கள்.
Lack of Accountability – தவறுகளுக்கு பொறுப்பு கூறுதல் என்பது இருக்காது.
Use of State Institutions for Personal Gain – அரசின் அடிப்படை கட்டுமானமாக இருக்கும் நிறுவனங்கள் அதிகார வர்க்கத்திற்கு ஏற்ப இயங்கும். உதாரணம் நீதித்துறை, காவல்துறை, தேர்தல் ஆணையம்.
மேலே கூறிய kleptocracy இனது குணாம்சங்கள் சகலதும் இந்தியாவில் இருப்பதை எளிதாக காணமுடியும்.
• இதில் இன்னொரு பக்கம் இருக்கிறது. இந்த பக்கத்தை பெரும்பாலோனார் கவனிப்பதில்லை.
உதாரணத்திற்கு இந்தியாவினது சிஸ்டம் என்பது Institutionalized Corruption ஐ கொண்டது என குறிப்பிட்டிருந்தேன்.
இங்கு அரசியல், bureaucracy என இரண்டுமே கறை படிந்ததாக இருக்கிறது.
இந்த இரண்டுமே கறை படிந்ததாக இருந்தால், நீங்கள் அடிக்கடி கூறும் சாதிய ஒடுக்குமுறையை கூட வீழ்த்தமுடியாது.
• சாதிய அடுக்கு என்பது இந்திய நிலப்பரப்பிற்கே உரிய பிரத்தியேகமான சமூக கட்டமைப்பு.
இதற்குள் இந்து மதத்தின் சில கூறுகளும் ஒரு பங்கு வகிப்பதை அறியமுடிகிறது.
இத்தகைய பெரும் சிக்கல்களை ஒரு அரசு எப்படி வீழ்த்த முடியும்?
• ஒரு அரசு எத்தகைய பெரும் சிக்கல்களையும் இரண்டு படிமுறைகளுக்குள்ளாகவே தீர்க்கமுடியும்.
முதலாவது படிமுறை Legislative Level
இரண்டாவது படிமுறை Execution Level
• இந்த முதலாவது படிமுறையான Legislative Level இற்குள்தான் Policies & Law வருகின்றன.
இந்த படிமுறைக்குள்தான் பிரச்சினையின் மூல காரணியை அறிந்து, அதனை தீர்ப்பதற்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
சாதியத்தின் ஒரு கூறான தீண்டாமையை வேரறுப்பதற்கு இந்திய அரசியலைப்பில் Article 17 (1950) ஐ உள்ளடக்கியதும், The Untouchability (Offences) Act, 1955 எனும் சட்டத்தை இயற்றியதும் இந்த Legislative Level இற்குள் வருகிறது.
• ஆனால் களத்தில் இந்த தீண்டாமை அழிவதை உறுதிப்படுத்த இரண்டாவது படிமுறையான Execution Level திறம்பட வேலை செய்யவேண்டும்.
இந்த Execution Level இற்குள்தான் சட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
காவல்துறை (Law Enforcement)
நீதித்துறை (Judicial System)
ஆனால் இந்தியாவில் ஒட்டுமொத்த சிஸ்டமுமே Institutionalized Corruption ஆக இருப்பதால், இந்த Execution Level சட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்தாது.
இன்னும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இருக்கும் இரட்டை குவளை முறை, ஒடுக்கப்பட்ட சாதியின் பிணம் வீதி வழியாக செல்ல தடை, ஒடுக்கப்பட்ட சாதிகள் அரசியல் அதிகாரத்தை அடைந்தாலும் அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது, சாதிய ஆணவக்கொலை, இத்யாதி என்பவை தமிழ்நாட்டின் Execution Level எவ்வளவு சீழ் படிந்ததாக இருக்கிறது என்பதை காட்டுகின்றது.
• இதனை இன்னும் எளிதாக விளங்கவைக்க நான் வாழும் பிரிட்டனை உதாரணமாக தருகிறேன்.
இந்தியாவிற்கு சாதியம் எப்படி பிரத்தியேகமான சிக்கலாக இருக்கிறதோ, அதே போல பிரிட்டனில் Racism பிரத்தியேகமான சிக்கல்.
இங்கு இருக்கும் பூர்வீக குடிகளான வெள்ளை நிற மக்களுக்கு மற்றைய நிற மக்கள் மீது ஒவ்வாமை இருக்கிறது. இதற்கான காரணங்கள் வரலாற்றிலிருந்து தொடங்குகிறது. அது ஒரு தனி விவாதம்.
இந்த சிக்கலை தீர்ப்பதற்கு அரசு சட்டங்களை இயற்றி வைத்திருக்கிறது. அதாவது Legislative Level.
இங்கு மாற்று நிறத்தவர் Racism சிக்கலை சந்திக்கும்போது, காவல்துறையும், நீதித்துறையும் “ஒப்பீட்டளவில்” திறம்பட செயல்படுகின்றன. அதாவது Execution Level.
வெள்ளை நிற மக்களிடையே நிறவெறி வராமல் இருப்பதற்கு, அத்தகைய உளவியல் உருவாகாமல் இருப்பதற்கு Legislative Level இல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. racism த்திற்கு எதிரான உளவியல் உருவாகும் வகையில் கல்வி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அதையும் மீறி racism வெள்ளை நிற மக்களிடையே அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.
ஆனால் எங்களை போன்ற மாற்று நிறத்தவர்கள் இந்த racism சிக்கலை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருப்பது Execution Level திறம்பட செயல்படுவதாலேயே.
இந்த Execution Level திறம்பட செயல்படாமல் போனால் எனக்கான நீதி கிடைக்காது.
• சமீபத்திய உதாரணமான “வேங்கைவயல் மலம் கலந்த நீர் பிரச்சினையை” எடுத்துக்கொள்ளுங்கள்.
ஏன் நீதி கிடைக்கவில்லை?
ஏனெனில் Execution Level இல் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை corrupted ஆக இருக்கிறது. இந்தியாவின் சிஸ்டத்தில் இருக்கும் Institutionalized Corruption இல் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டின் திராவிட அறிவுஜீவிகள் சாமர்த்தியமாக “தாங்கள் சாதிய அடக்குமுறையை வீழ்த்தி சமூக நீதியை நிலைநாட்ட போராடுகிறோம்” என கூறி, அதற்கான சான்றாக Legislative Level இல் உள்ள சட்டங்களை உங்களுக்கு காட்டுவார்கள்.
ஆனால் அவர்கள் உருவாக்கிய ஒட்டுமொத்த சிஸ்டமும் Criminalized Democracy அல்லது kleptocracy ஆக இருப்பதால், இங்கு Execution Level சீழ்படிந்து இருக்கிறது. அதனால் நீதியை நிலை நாட்டமுடியாது.
இங்கு சாமானிய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமை, அரசியலை உற்று கவனிக்காமை, பணத்திற்கு ஓட்டு போடுதல் எல்லாம் சேர்ந்து ஒரு democracy ஐ plutocracy ஆக மாற்றுகின்றன. காலப்போக்கில் Criminalized Democracy அல்லது kleptocracy ஆக மாற்றுகின்றது. மொத்த சிஸ்டத்தையும் Institutionalized Corruption உடையதாக மாற்றுகின்றன.
இதையெல்லாம் சாமானிய மக்கள் செய்யவேண்டியது. அப்புறம் இந்தியன்,முதல்வன் மாதிரியான படங்களை பார்த்துவிட்டு பொங்கவேண்டியது.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment