திராவிட நாடு என வாயால் வடை சுட்ட திராவிட தலைவர்களும், அதை இன்னும் உண்மை வரலாறு என நம்பிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களும்
ஊடகங்களின் விவாதங்களில் திராவிடம் சார்பாக பேசவருபவர்கள் அவ்வப்போது தொட்டுச்செல்லும் விடயம்தான் “திராவிட நாட்டு கோரிக்கை”.
“அண்ணா திராவிட நாட்டு கோரிக்கையை கைவிட்டபோது” என அவர்கள் ஆரம்பிக்கும்போதே எனக்கு சிரிப்பு வந்துவிடும்.
“கேட்டு போராடினால்தானே கைவிட. அதுதான் போராடவே இல்லையே” என எனது மைன்ட்வாய்ஸ் பதில் சொல்லும்.
ஏன் அப்படி?
• முதலில் நாம் தனிநாடு என்று கூறுவதன் பொருள் என்ன?
ஒரு இறையாண்மை அரசு. அதாவது sovereign state. உலக ஒழுங்கில் தனித்து இயங்கும், மற்றைய இறையாண்மை அரசுகளுடன் புழங்கும் ஒரு இறையாண்மை அரசு.
• எப்பொழுது ஒரு புதிய இறையாண்மை அரசு உருவாகின்றன?
ஏற்கனவே உள்ள அரசுகள், இனிமேல் எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்போதே, புதிய இறையாண்மையுள்ள அரசுகள் உருவாவதை அனுமதிக்கிறார்கள்.
அதாவது ஒரு இறையாண்மை அரசு, தனது அதிகாரத்திற்குட்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதி பிரிந்து செல்ல எத்தனிக்கும்போது அதை நடக்க அனுமதிக்காது. எல்லா வழிகளையும் பிரயோகித்து தடுக்க முனையும். அது எல்லாம் பயனளிக்கவில்லை எனில், அது ‘அரசின் வன்முறை மீதான ஏகபோக உரிமை (monopoly on violence)’ என்பதை ஏவும்.
இந்த புள்ளியில்தான் இறையாண்மை அரசு தனி நாட்டை உருவாக்க போராடும் தரப்பை அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்போது, புதிய இறையாண்மையுள்ள அரசுகள் உருவாவதை அனுமதிக்கிறார்கள்.
இறையாண்மை அரசை எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளவேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யவேண்டும்.
உலக ஒழுங்கில் அந்த இறையாண்மை அரசு பலவீனமான நாடாக இருக்கும் பட்சத்தில், மனித வளம், பொருளாதார வளம் என்பதுடன் புவிசார் அரசியலின் புற அழுத்தம் (external pressure) என்ற காரணியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்படித்தான் புதிய நாடுகள் பிரசவமாகின்றன. அதாவது புதிய sovereign states.
ஒரு இறையாண்மை அரசு எப்படி பிரசவமாகும் என்பதற்கு நான் வைத்திருக்கும் தியரி மேலே கூறியது.
கடந்த 100 வருடங்களில் உலக ஒழுங்கில் உதயமான இறையாண்மை அரசுகள் எல்லாம் எனது தியரியிலுள்ள நிபந்தனையை பூர்த்தி செய்திருப்பதை காணலாம்.
• இப்போது அப்படியே கட் பண்ணி திராவிட நாட்டு கோரிக்கைக்கு வாருங்கள்.
எப்படி திராவிட நாட்டை கேட்டு போராடினார்கள்?
திராவிட தலைவர்கள் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியவேண்டும் என கர்ஜித்தார்கள், அண்ணாதுரை மாநில சுயாட்சி குறித்து பாராளுமன்றத்தில் பாடம் எடுத்தார், ஈவேரா இந்த திகதியில் விடுதலை, குடியரசு இதழில் எழுதினார், முழங்கினார் என்பதாகவே இருக்கும்.
வரிசையாக தேதி, வருடங்களை அள்ளி வீசுவார்கள்.
சரி. இந்திய இறையாண்மை அரசை எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளினார்களா?
வடிவேல் டவுசரின் ரெண்டு பாக்கெட்டுகளையும் தொங்கவிடுவதுதான் இதற்கான பதில்.
ஏன்னா ஒன்னுமில்ல.
இதை நீங்களும் நானுமே செய்துவிடலாம். இதை செய்வதற்கு ஒரு வாய் தேவை. எழுதுவதற்கு ஒரு பேனா தேவை.
இதை வைத்து ஒரு மேடையில் கர்ஜிக்கலாம். முழங்கலாம். கட்டுரை எழுதலாம்.
என்னது சட்ட சிக்கல்கள் நமக்கு வரும். இந்திய அரசுக்கு அல்ல.
நீங்கள் இப்படி செய்யும்போது, இந்திய அரசுக்கு அது ஒரு கொசு தொல்லை போல. அவ்வளவுதான்.
இந்த கொசு தொல்லையை தந்தவர்கள்தான் திராவிட தலைவர்கள்.
ஆனால் ஓரளவிற்கு இந்திய அரசிற்கு அழுத்தத்தை தந்தவர்கள் யார் என அறிய விரும்பினால் காஷ்மீர், நாகலாந்து என மற்றைய பகுதிகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
அவைகள்தான் இந்திய அரசின் monopoly on violence ஐ எதிர்கொண்டவைகள். அவர்கள்தான் கணிசமான குருதியை சிந்தியவர்கள்.
ஆனால் இது எதுவும் இல்லாமல், மேடைகளில் வாயால் மட்டுமே வடையை சுட்டுவிட்டு, அப்படி சுட்ட வடைதான் திராவிட நாட்டு போராட்டம் என நம்பவைத்து, பின்னர் அதை கைவிட்டுவிட்டதாக அறிவித்து, பின்னர் அதையே ஒரு வீர வரலாறாக ஆவணப்படுத்தி இன்றுவரை தமிழ்நாட்டு மக்களிடம் விற்று கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களும் “60 களில் திராவிட நாடு கோரி போராடிவிட்டு பின்னாளில் கைவிட்டோம்” என்ற இந்த ஓலா கதையை நம்பி நம்மிடம் கதை சொல்ல வரும்போது….
க.ஜெயகாந்த்
பின்குறிப்பு:
திராவிட நாடு கேட்டு போராடினோம், முழங்கினோம், கர்ஜனை செய்தோம் என கூறினால், இந்திய ஒன்றிய அரசு எவ்வாறு நக்கலுடன் சிரிக்கும் என்பதை குறியீடாக காட்டுவதற்காக இந்திய ஒன்றிய தலைவர்களின் சிரித்த படங்கள்
• இது தொடர்பான முன்னைய பதிவின் இணைப்பு
உலக வரலாறு தொடர்பான தமிழ்நாட்டின் பிழையான புரிதல்











Comments
Post a Comment