சீன நாகரீகம் (Chinese Civilization) சீன நாடாக (State) பரிணமித்தது. ஏன் இந்திய நாகரீகம் இந்திய நாடாக உருவாகவில்லை?
எப்பொழுது பிரிட்டிஷார் இந்திய நிலப்பரப்பில் இருக்கும் பல ராஜ்ஜியங்களையும் வெட்டி தைத்து ‘ஒரு துணியாக’ உருவாக்கினார்களோ அத்தனை வயதுதான் “இந்தியா எனும் புதிய நாட்டின் வயது” என முன்னர் கட்டுரைகள் எழுதியிருந்தேன்.
அதனை போரியல் பார்வையில் விவரித்தும் இருந்தேன். (இணைப்புகளை கீழே தனியாக தருகிறேன்)
• ஆனால் இதற்கு எதிர்வாதமாக இந்திய தேசியவாதிகள் சாமர்த்தியமான ஒரு வாதத்தை முன்வைப்பார்கள்.
இந்தியா எனும் நாடு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பதற்கு ஆதாரமாக மதங்கள், இந்திய பண்பாடு, இதிகாசங்கள், மொழி, இசை என்பவற்றை முன்வைப்பார்கள்.
• அதாவது இந்துமதம், பௌத்த மதம், சமண மதம், இத்யாதி இந்திய நிலப்பரப்பு எங்கும் விரவியிருந்தன. மதங்கள் இந்தியாவின் பலமுனை மக்களையும் தொடர்புப்படுத்தின. உதாரணத்திற்கு இந்து மதத்தை பின்தொடரும் தென்னிந்தியருக்கு வடமுனையின் காசி புனித தலம். மறுவலமாக வட இந்தியருக்கு ராமேஸ்வரம் புனித தலம்.
• இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் இந்திய நிலப்பரப்பெங்கும் பரவியிருக்கிறது. எல்லா கலைவடிவங்களிலும் நிறைந்திருக்கிறது.
• மொழிகள் தமக்குள் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கின்றன.
• இந்திய நிலப்பரப்பின் பல முனைகளிலும் ஊற்றெடுக்கும் இசையில் ஒரு பொதுத்தன்மையிருக்கும். அதனது ஆன்மாவுடன் எல்லோராலும் தம்மை இணைத்து பார்க்கமுடியும்.
மதங்கள், இதிகாசங்கள், பண்பாடு,
மொழி, இசை என்பவை இந்திய நிலப்பரப்பின் சகல மக்களையும் தொடர்புபடுத்தியதால், இதனை முக்கிய ஆதாரமாக முன்வைத்து இந்தியா எனும் நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததாக இந்திய தேசியவாதிகள் நிறுவுவார்கள்.
இதுதான் நான் குறிப்பிட்ட அவர்களது சாமர்த்தியமான வாதம்.
• ஏன் சாமர்த்தியமான வாதம்?
மேலே அவர்கள் ஆதாரமாக தந்தவை அனைத்தும்
ஒரு Civilization இற்கான ஆதாரங்கள்.
ஆம். Indian Civilization என்ற ஒன்று இருந்ததை, இருப்பதை நிறுவும் ஆதாரங்கள்.
Indian Civilization என்ற ஒன்று இருப்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுதான் எனது வாதம்.
Civilization என்பது வேறு. State என்பது வேறு.
இந்த இரண்டையும் இந்திய தேசியவாதிகள் வேண்டுமென்றே ஒன்றானதாக காட்டி தங்களது வாதத்தை கட்டமைக்கிறார்கள்.
• இதை எளிமையாக விளக்குகிறேன்.
உதாரணத்திற்கு சில Civilization களை பட்டியலிடுகிறேன்.
• Western Civilization
• Islamic Civilization
• Indian Civilization
• Chinese Civilization
இங்கு Civilization என்பது அப்படியே State ஆக மாறிவிடாது.
சில மாறியிருக்கும். சில மாறாமல் போயிருக்கும்.
மாறவேண்டும் என்பது கட்டாயமல்ல. விதி அல்ல.
• Western Civilization ஐ எடுத்துக்கொள்வோம்.
Western Civilization என்பது ஐரோப்பா கண்டத்தையும், வட அமெரிக்க கண்டத்தையும் உள்ளடக்கியது.
Western Civilization உம் இதே மதம்,பண்பாடு , மொழி , இதிகாசங்கள் என பொதுவான அடையாளத்தை கொண்டுள்ளது.
• மொழி
Roman Empire இருந்தபோது அதன் நிலப்பரப்பில் இரண்டே இரண்டு மொழிகள்தான் பெருவாரியான மக்களால் பேசப்பட்டு வந்தது.
ரோம சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் லத்தின் மொழியும் கிழக்கு பகுதியில் கிரேக்க மொழியும் பேசப்பட்டது.
“There were two universal languages in the Roman Empire: Latin in the west and Greek in the east.”
பிற்காலங்களில் Roman Empire இரண்டாக உடைந்து , அதில் 476 ம் ஆண்டோடு Western Roman Empire முற்றாக இல்லாமல் போகிறது.
பின்னர் லத்தீன் மொழி வேறு வேறு மொழிகளாக பரிணாமம் அடைகின்றன.
இன்றைய பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளின் தாய் லத்தீன்.
அவைகளைதான் Romance languages என அழைக்கிறோம்.
அவைகளில் முக்கியமானவை Italian, Spanish, Portuguese, French, Romanian மொழிகள்.
“Once the empire broke up, Latin evolved into a number of separate languages, which are known as Romance languages.”
• கிறிஸ்தவ மதம் (Christianity)
ரோம சாம்ராஜ்யத்தின் மன்னன் Constantine கிறித்துவத்தை ஏற்று கொண்டதிலிருந்து , ஐரோப்பாவில் கிறித்துவம் வேர் கொள்ள ஆரம்பித்தது.
“An emperor, Constantine, in 313 AD became a Christian or at least gave official support to the Christian churches.”
அன்றிலிருந்து சுமார் 1700 ஆண்டுகளாக ஐரோப்பாவின் மத அடையாளமாக நீடிப்பது, பல அரசியல் நகர்வுகளை தீர்மானித்தது எல்லாமே கிறித்துவ மதம்தான்.
அத்துடன் கிறித்துவ மதத்தின் அதிகார மையமாக உருவான pope இற்கும் ஐரோப்பிய மன்னர்களுக்கும் எத்தகைய அதிகார தள்ளு முள்ளு நடந்தது என்பதை ஐரோப்பிய வரலாறு கூறுகிறது.
“Pope and emperor fought each other to a standstill. They never had a complete victory, one or the other.”
“The effect of the long-term struggle between emperor and pope was that they weakened each other.”
“In central Europe two great powers—emperor and pope—had been struggling, trading away their local authority in order to fight each other. The result was that the smaller units gained power rather than lost it.”
அத்துடன் கிறித்துவ மதத்தை அடிப்படையாக வைத்தே சிலுவை போர் (Crusades) சுமார் 200 வருடங்கள் நடந்தன.
ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து Holy Land ஐ கைப்பற்ற இந்த Crusades ஐ நடத்தியது.
• பண்பாடு, இதிகாசங்கள்
இன்றும் நீங்கள் காணும் western civilization தனது வேர்களாக கொண்டிருப்பது கிரேக்க நாகரீகத்தையும் ரோம சாம்ராஜ்யத்தின் பண்பாட்டு கூறுகளையும்தான் (the culture of Ancient Greece and Rome).
• கட்டிடக்கலை
இன்றும் ஐரோப்பாவில் பரவலாக பொதுவான கட்டிட கலையாக ரோம கட்டிட கலைகள் இருப்பதை காணலாம்.
“Romanesque architecture is descended from Roman forms of architecture.”
• Western Civilization அப்படியே ஒற்றை நாடாக (State) மாறியதா?
இல்லை. இன்று அதற்குள் குறைந்தது 40 நாடுகள் (sovereign states) இருக்கின்றன.
இதேதான் Islamic Civilization இற்கும் நடந்தது. அதற்குள் பல நாடுகள் உருவாகியிருக்கின்றன.
ஆக மேலே நான் குறிப்பிட்டதுபோல, Civilization என்பது அதன் அடுத்த பரிணாமவளர்ச்சி கட்டமாக state ஆக மாறவேண்டும் என்பது கட்டாயமல்ல. விதியல்ல. மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம்.
மாறாமல் போனவை western civilization, Islamic civilization.
ஆனால் மாறியதற்கான உதாரணம் Chinese Civilization.
Chinese Civilization ஒரே நாடாக உருமாறி, இன்றுவரை ஒற்றை நாடாக இருக்கிறது.
இது ஒரே இரவில் நடந்ததா?
இல்லை.
• Chine Civilization காலவோட்டத்தில் ஒற்றை நாடாக மாறியதன் வரலாறு மிக சுருக்கமாக.
1) Early Civilizational Foundations (Shang & Zhou Dynasties, 1600 BCE – 221 BCE)
அதிகாரங்கள் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்ட மத்திய அரசின் கீழ் ஆட்சி நடக்கவேண்டும் என்ற பார்வை உருவாகிய காலகட்டம். “Mandate of Heaven” என இது அழைக்கப்பட்டது.
இதில் Zhou Dynasty ((1046-221 BCE) காலகட்டத்தில்தான் Confucianism, Daoism (Taoism), and Legalism போன்ற தத்துவங்கள் (philosophy) உருவாகின.
2) First Political Unification (Qin Dynasty, 221-207 BCE)
இந்த காலகட்டத்தில்தான் முதன் முறையாக ஒற்றை குடையின் கீழ் சீனாவின் முழு ஆளுகையும் (first centralized Chinese state) கொண்டுவரப்பட்டது.
இதற்கு முன்பு நிலவிய Warring States period (475 – 221 BC) காலகட்டத்தில், பல அரசுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டிருந்தன.
பின்னர் Qin Shi Huang எனும் அரசர், சகல அரசுகளையும் வீழ்த்தி ஒற்றை குடையின் கீழ் Qin Dynasty எனும் பேரரசை தோற்றுவிக்கிறார்.
இந்த Qin Dynasty காலகட்டத்தில்தான், சீனா ஒரு single centralized political entity ஆக மாறுகிறது.
இந்த காலகட்டத்தில்தான் centralized bureaucratic system அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் ஊடாக பொதுவான சிவில் சட்டம் முழு சீனாவிற்கும் கொண்டுவரப்பட்டது.
முழு சீனாவிற்கும் ஒரே நாணயம், ஒரே எழுத்துமுறை , அளவுமுறைகள் என்பவை கொண்டுவரப்பட்டன. (Standardized writing, currency, weights, and measures)
Qin Shihuang is known for ruling his dynasty with the rule of law and a powerful central government.
3) The Imperial Model (Han Dynasty – Qing Dynasty, 202 BCE – 1912 CE)
Qin Dynasty வீழ்ந்ததிலிருந்து 1912 இல் Republic of China ஆக மாறுவதற்கு முன்புவரையான, இந்த இடைப்பட்ட காலகட்டம் தொடர்ச்சியாக பல Empires களால் ஆளப்பட்டிருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலகட்டம் என்பது குறைந்தது 2100 வருடங்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பல Empires ஆண்டிருக்கின்றன. அவைகளில் முக்கிமானவற்றை வரிசைப்படி தருகிறேன்.
அது சீனா எப்படி படிப்படியாக civilization இலிருந்து state ஆக மாறியது என்பதை காட்டும்.
Qin Dynasty இன் வீழ்ச்சிக்கு பிறகு Han Dynasty உருவாகிறது.
• Han Dynasty (202 BCE–220 CE)
இவர்களுடைய காலகட்டத்தில்தான் முழு சீனாவிற்கும் Chinese civil service examination system அறிமுகப்படுத்தப்பட்டது.
Qin Dynasty காலகட்டத்தில் இருந்த பல கடுமையான சட்டங்கள் அகற்றப்பட்டு, Confucian philosophy அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்பட்டன.
இத்தகைய நடைமுறைகள் தொடர்ந்து centralized governance ஐ தொடர்ந்து வலுப்படுத்தின.
• Sui Dynasty (581-617 CE)
இதனது காலகட்டத்தில்தான், Chinese civil service examination system முழுமையான சீர்படுத்தப்பட்டது. standardized, empire-wide civil service exam ஆக மாறியது.
பணியாளர்களின் தேர்வு என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையிலானதாக மாற்றப்பட்டது.
This system aimed to replace aristocratic appointments with merit-based selection.
• Tang Dynasty (618–907 CE)
அரச பணியாளராக உள்நுழைய விரும்பினால், civil service examination system இற்குள் நுழைந்துதான் ஆகவேண்டும் என்ற நிலை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டது.
Confucian philosophy, law, and poetry போன்ற துறைகளில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
மீண்டும் மீண்டும் நடைமுறைகள் centralized governance ஐ வலுப்படுத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் காணலாம்.
• Song Dynasty (960–1279 CE)
மேலும் மேலும் civil service examination system முறைப்படுத்தப்பட்டன. aristocratic முறைகள் களையப்பட்டு meritocracy வலுப்படுத்தப்பட்டன.
• Ming & Qing Dynasties (1368–1912)
civil service examination system தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.
centralized bureaucratic system இன் முக்கிய கூறாக civil service examination system இருந்ததை காணலாம்.
இந்த civil service examination system இல் பிறப்பின் அடிப்படையிலான தேர்வுகள் அகற்றப்பட்டு தகுதி அடிப்படையிலான தேர்வுகள் வலுப்படுத்தப்பட்டன.
civil service examination system ஊடாக மட்டுமே அரச சேவை பணியாளராக ஒருவர் இணைய முடியும்.
• இதுவரை வாசித்ததை நீங்கள் உற்று நோக்கினால், சீனாவில் பல Dynasties உருவாகியபோதும் (மேலே வரிசைப்படுத்தப்பட்ட), அதனது centralized governance என்ற political system என்பதில் மாற்றம் ஏற்படவே இல்லை. அது வலுவானதாக தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது.
இத்தனைக்கும் இந்த வரிசையில் வரும் இரண்டு Empires கள் அந்நிய ஆட்சியாகும்.
The Yuan Dynasty (1279-1368) - மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானின் பேரன் Kublai Khan இனால் உருவாக்கப்பட்டது.
The Qing Dynasty (1644-1911) - இன்றைய சீனாவின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும், சீனாவின் பூர்வீக குடிகள் அல்லாத, அந்நியர் என கருதப்பட்ட manchus இன மக்களால் ஆளப்பட்டது.
ஆனால் சகல Empires களும் political unification, centralized governance, cultural continuity என்பதை இறுக்கமாக கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
அது காலப்போக்கில் civilizational identity ஒரு political entity ஆக மாற அடிப்படை காரணமாக அமைந்தது.
• இந்த புள்ளியில்தான் அடுத்த மிக முக்கியமான ஒரு பண்பு வந்து இதற்குள் நுழைகிறது.
அதுதான் “Collective consciousness”.
தமிழில் இதற்கான துல்லியமான சொல்லாடல் எனக்கு தெரியவில்லை. “கூட்டுணர்வு” அல்லது “பொது அகம்” என்ற சொல்லாடல் இப்போதைக்கு பாவிக்கிறேன்.
இந்த “கூட்டுணர்வு” (Collective consciousness) என்பது ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களை பொதுவான நம்பிக்கைகள், வாழ்வியல் விழுமியங்கள், இதிகாசங்கள், வரலாறு என்பவை ஊடாக ஒன்றாக கட்டிப்போடுதல். ஒரு “பொது அடையாளம்” என்பது உருவாகியிருக்கும்.
அதனது விளைவாக பெருந்திரள் மக்களில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அந்த “பொது அடையாளத்தின் ஒரு பிரதிநிதியாக தன்னை உருவகித்து கொள்வான்”.
ஒவ்வொரு மனிதனும் அந்த பொது அடையாளத்தோடு உணர்வுரீதியான பந்தத்தை உருவாக்கியிருப்பான்.
இந்த “கூட்டுணர்வு” (Collective consciousness) இருக்கும்போதுதான், அவன் தனது பொது அடையாளத்திற்கு ஆபத்து நேர்கையில் அதனை காப்பாற்ற குதிக்கிறான்.
“Collective consciousness in the context of nationalism refers to the shared set of beliefs, values, symbols, myths, and historical narratives that bind members of a nation together. It creates a sense of unity and belonging among individuals, making them feel part of a larger, cohesive community—even if they have never met each other. This collective identity helps people see themselves as part of a nation, often inspiring loyalty and solidarity.”
இப்போது Chinese civilization ஐ பார்த்தீர்களேயானால், இந்த கூட்டுணர்வு (Collective consciousness) எனும் பண்பு, எப்படி படிப்படியாக பரிணாமவளர்ச்சி அடைந்தது என்பதை காணலாம்.
Shared Values and Beliefs - பொதுவான வாழ்வியல் விழுமியங்கள், நம்பிக்கைகள், ஒழுக்கம், பண்பாட்டு கூறுகள் என்பவற்றை உள்ளடக்கியது. சீனாவில் Confucian philosophy முக்கிய பங்கு வகிக்கிறது.
Common History and Heritage - வரலாறு, வரலாற்றின் வீர கதாநாயகர்கள், இதிகாசங்கள் என்பவற்றை உள்ளடக்கியது.
Cultural Unity - மொழி, கலை என்பவற்றை உள்ளடக்கியது.
இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Civilization ஐ வடிவமைக்கின்றன.
அப்படித்தான் Chine Civilization உம் உருவாகிறது.
அதற்கு சமாந்தரமாக Centralized Governance என்ற ஒன்று உருவாகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீனா அப்படியே ஆளப்பட்டு வருகிறது.
அதன்மூலம் சீனா ஒரு single centralized political entity ஆக எப்போதோ உருவாகிவிட்டது.
Civilization என்ற சமூக,பண்பாட்டு கூறுகளையும் தாண்டி, ஒரு State என்ற கட்டத்தை அது அடைந்துவிட்டது.
அதனூடாக சீனா தனக்கென Collective consciousness ஐ வலுவாக உருவாக்கிக்கொண்டது.
• இந்தியாவும் தனக்கென Indian Civilization ஐ உருவாக்கிக்கொண்டது.
ஆனால் அது Civilization என்ற கட்டத்துடன் நின்றுவிட்டது.
State என்ற அடுத்த கட்டத்திற்குள் நுழையவில்லை.
இந்தியா தொடர்ந்து பல துண்டு துண்டான ராஜ்யங்களாகவே நீடித்து வந்தது. இந்த Civilization ஐ State என்ற கட்டத்திற்குள் யாராலும் தள்ள முடியவில்லை.
அவ்வப்போது பேரரசுகள் உருவானாலும், தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்கு முழு இந்தியாவையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஒரு single centralized political entity ஆக உருவாக்கமுடியவில்லை.
இதனால் இந்தியாவில் Collective consciousness வலுவானதாக உருவாகவில்லை.
அப்படி ஒரு Collective consciousness இந்தியாவில் இருந்திருந்தால், இந்தியா எனும் நிலப்பரப்பை பிரிட்டிஷாரால் கைப்பற்றவே முடியாமல் போயிருக்கும்.
• ஏன் கைப்பற்றியிருக்க முடியாது?
18 ம் நூற்றாண்டில் இந்திய நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை குறைந்தது 16 கோடி.
பிரிட்டிஷாரின் மொத்த சனத்தொகை 80 லட்சம் மட்டுமே.
வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வின்படி, இந்தியாவில் இருந்த East India company (EIC) எனும் வியாபார நிறுவனத்தில் இருந்த பிரிட்டிஷ் படைவீரர்களின் எண்ணிக்கை எந்தவொரு கட்டத்திலும் 20000 ஐ தாண்டியதில்லை.
பின்னர் 1858 இல் British crown இற்கு மாறியபின்னரும் , அதனது ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்த அதிகபட்ச British army இன் எண்ணிக்கையே வெறும் 30000 தான்.
இந்திய நிலப்பரப்பிற்கும் பிரிட்டனிற்கும் இடையிலான தூரம் பல ஆயிரம் மைல்கள்.
போரியல்ரீதியில் வெறும் 30000 இற்கும் குறைவான பிரிட்டிஷ் படைகள், பல ஆயிரம் மைல்கள் தொலைவிலிருக்கும் 16 கோடி மக்களை கொண்ட நிலப்பரப்பை எப்படி கட்டுக்குள் வைத்திருக்கமுடியும்?
போரியல்ரீதியில் இது சாத்தியமே இல்லாதது.
இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்னர் எழுதியுள்ளேன். இணைப்பு கீழே.
https://tamildesiyam2009.blogspot.com/2022/07/1.html?m=1
உடனே நீங்கள் பாய்ந்தடித்து கொண்டு பிரிட்டிஷார் நவீன ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஒரு கதையை உருட்டுவீர்கள் என்று தெரியும்.
அதுவும் உண்மையில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்னர் எழுதியுள்ளேன். இணைப்பு கீழே.
https://tamildesiyam2009.blogspot.com/2022/07/2_24.html?m=1
• பின்னர் எப்படி பிரிட்டிஷார் தமது ஆளுகைக்குள் இந்திய நிலப்பரப்பை கொண்டு வந்தார்கள்?
இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த அன்றைய மக்களுக்கு இந்திய தேசம் என்ற உளவியல் அல்லது கூட்டுணர்வு (Collective consciousness) இருக்கவில்லை. இன்று உங்களின் மனதில் இந்திய தேசம் என்பது எத்தகைய படிமத்தை உருவாக்குகிறதோ அது அன்றைய காலத்தில் நிலவவில்லை.
அதனால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை கொண்டே இந்திய நிலப்பரப்பின் மக்களை ஆண்டார்கள்.
• பின்னர் இந்திய சுதந்திரம் எப்படி கனிந்தது?
மேலே சொன்னது போல, இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்களின் மனதில் இந்திய தேசம் என்ற உளவியலை கட்டியமைத்துவிட்டாலே பிரிட்டிஷாரால் அங்கு நிலைகொள்ள முடியாது.
நான் மேலே கூறிய “பெருந்திரள் மக்களில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அந்த பொது அடையாளத்தின் ஒரு பிரதிநிதியாக தன்னை உருவகித்து கொள்ளுதல்” என்ற நிலையை உருவாக்குதல். அந்த Collective consciousness.
காரணம் இந்திய நிலப்பரப்பை பூர்வீகமாக கொண்ட மக்களின் சதவீதம் 99.99.
பிரிட்டிஷாரின் சதவீதம் 0.01
0.01 சதவீதம் 99.99 சதவீதத்தை ஆள்வது சாத்தியம் இல்லை.
காந்தி போன்றவர்கள் இந்திய தேசம் என்ற உளவியலை வெற்றிகரமாக கட்டியெழுப்பினார்கள். அதே Collective consciousness.
ஆக Indian Civilization என்பதாக மட்டும் இருந்த இந்திய நிலப்பரப்பில், பல துண்டுகளாக இருந்த ராஜ்யங்களை தைத்து ஒரு நிர்வாக அலகாக மாற்றியவர்கள் பிரிட்டிஷார்.
இதுதான் இந்திய தேசியவாதிகளுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.
பிரிட்டிஷாரை அப்புறப்படுத்தியதும், இந்த நவீன உலக ஒழுங்கில் “இந்தியா எனும் sovereign state” என்ற ஜாக்பாட் கையில் கிடைத்துவிட்டது.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியா ஒரு sovereign state ஆக இயங்குகிறது.
அன்றிலிருந்து Indian Civilization ஒரு Sovereign State ஆக இயங்கிவருகிறது.
இன்று இந்தியா தனக்கென Collective consciousness ஐ உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. நாளாந்தம் அது வலுப்பெற்றும் வருகிறது.
நான் கூட சொல்வதுண்டு “இந்தியா இப்போது அதனது Qin Dynasty காலத்தில் இருக்கிறது” என்று.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment