இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய “Balakot surgical strike” வெற்றி பெற்றதா? உண்மையில் இல்லை. இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பங்குகொண்ட Dogfight இல் இந்திய விமானப்படை tactical வெற்றி பெற்றதா ? உண்மையில் இல்லை. - இந்தியா புளுகிய பொய்கள் பற்றிய ஒரு அலசல்

 இந்த பதிவு பல காலத்திற்கு முன்பே நான் எழுத நினைத்தது. ஆனால் தட்டுப்பட்டுக்கொண்டே போனது.  

ஆனால் இன்று அதற்கான புறசூழல் எழுந்துள்ளதால், இந்த கட்டுரையை எழுதி பதிவேற்றுகிறேன்.

இந்த கட்டுரையின் மையப்புள்ளி இதுதான்.

இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய “Balakot surgical strike” வெற்றி பெற்றதா? 

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பங்குகொண்ட Dogfight இல் இந்திய விமானப்படை tactical வெற்றி பெற்றதா ? 

இந்த இரண்டிலுமே இந்தியா எப்படி புளுகி கொண்டு திரிகிறது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிறுவ முயலும் கட்டுரை இது.


• 2019, பெப்ரவரி 14 அன்று Pulwama தற்கொலை தாக்குதல் நடந்ததை அனைவரும் அறிவீர்கள். இதில் 40 CRPF (Central Reserve Police Force) கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான்தான் இதற்கான காரணம் என குற்றச்சாட்டியது.

அதனை தொடர்ந்து 2019, பெப்ரவரி 26 அன்று இந்திய போர் விமானங்கள், Balakot எனும் பிரதேசத்தில் அமைந்திருந்ததாக சொல்லப்படும் JeM எனும் இயக்கத்தின் முகாம் மீது தாக்குதலை நடத்தியது. 

இந்த  Balakot பாகிஸ்தானின் Khyber Pakhtunkhwa (KPK) மாகாணத்தில் இருக்கிறது. 

இந்திய போர் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலைதான் சுருக்கமாக Balakot surgical strike என இந்தியா அழைக்கிறது.

உண்மையில் Balakot பிரதேசத்தில், JeM இயக்கத்தின் முகாம் இருந்ததா என்பதிலேயே சர்ச்சை இருக்கின்றது.

மேற்குலக புலனாய்வு அமைப்புகள் அந்த முகாம் முன்பு இருந்து பின்னர் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. இது தொடர்பான பல செய்திகள் இணையத்தளம் எங்கும் இருக்கின்றன.

இந்த சர்ச்சைக்குள் நான் நுழைய விரும்பவில்லை.

“இருந்ததாகவே” இந்த கட்டுரையின் மையப்புள்ளிக்காக எடுத்துக்கொள்கிறேன்.

இந்த தாக்குதலில் JeM எனும் இயக்கத்தை சேர்ந்த 300 பேர் வரை கொல்லப்பட்டதாக இந்திய தரப்பு கூறுகிறது.

“India’s foreign secretary, Vijay Gokhale, said in a statement the strikes had killed a ‘very large number of JeM terrorists, trainers, senior commanders and groups of jihadis being trained for fidayeen [suicide] action’ ”.

இந்தியாவின் Mirage-2000 போர் விமானங்கள், இஸ்ரேலிய SPICE-2000 precision-guided munitions (PGM) குண்டுகளை வீசியிருக்கின்றன. 

இந்த SPICE 2000 என்பது EO/GPS guidance kit. இது unguided bombs களை precision-guided bombs களாக இயங்கவைக்கும்.

“The SPICE 2000 is essentially a strap-on guidance kit that can transform a 2,000-pound ‘dumb’ bomb into a very precise way to deliver more than 400 kilograms of high explosives at a range of up to 60 kilometres. The weapon can be both GPS- and electro-optically guided.”

இந்த SPICE 2000 குண்டுகள், JeM இயக்கத்தின் முகாம் என சொல்லப்படும் கட்டிடத்தை தாக்கி அழித்ததா என்பதுதான் இந்த கட்டுரையின் மைய கேள்விகளில் ஒன்று.


இந்த குண்டுகள் அந்த கட்டிடத்தை தாக்காமல், இலக்கை தவறவிட்டு வேறு எங்கோ வெடித்திருக்கிறது என்பதுதான் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கும் செய்தி.

ஏனெனில் satellite-data analysis இன்படி, open-source satellite imagery ஊடாக பெறப்பட்ட செய்மதி படங்களில், அந்த கட்டிடம் தாக்கி அழிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அந்த படங்கள் அந்த கட்டிடங்கள் ஒரு ஊசி முனையளவு கூட மாறாமல் அப்படியே இருப்பதை காட்டுகின்றன.

பல Independent நிறுவனங்கள் satellite imagery ஐயும்  ground-level imagery ஐயும் ஒப்பிட்டு, தாக்குதல் நடந்த இடத்தை துல்லியமாக தந்திருக்கின்றன. 

“While most  sources at the time identified the strike as taking place in the Pakistani town of Balakot, others located the strike at “Jaba Top,” a likely reference to a mountain top near the village of Jaba , about 10 kilometers south of Balakot.”

தாக்குதல் நடந்த இடம் Jaba Top. Jaba எனும் கிராமத்தை ஒட்டியுள்ள குன்றுப்பகுதி.

குண்டுகள் விழுந்த Jaba Top பகுதிக்கு சென்று எடுத்த வீடியாக்களையும் (ground-level imagery), அதே நிலப்பகுதியை காட்டும் செய்மதி ஊடாக பெறப்பட்ட satellite imagery ஐயும் வைத்து, அந்த கட்டிடத்திற்கு ஏதாவது சேதாரம் நிகழ்ந்திருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வுகள் அந்த கட்டிடத்திற்கு எந்த சேதாரமும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

JeM இயக்கத்தின் முகாம் என சொல்லப்படும் கட்டிடம் தாக்கியழிக்கப்படவில்லை என்பதை நிறுவி பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதனது இணைப்புகளில் “சிலவற்றை” மட்டும் கீழே தந்திருக்கிறேன். 


•  Surgical Strike in Pakistan a Botched Operation?


• Did Balakot Airstrikes Hit Their Target? Satellite Imagery Raises Doubts


• Kashmir's fog of war: how conflicting accounts benefit both sides


• இது தொடர்பாக Australian Strategic Policy Institute இனது “THE STRATEGIST” இணையத்தளம் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதியிருந்தது.

இது இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் ஏன் இலக்கை தாக்கி அழிக்கமுடியாமல் தோல்வி அடைந்தன என்பதை தொழில்நுட்பரீதியாக விளக்கியிருக்கிறது. 

கட்டுரை பின்வருமாறு தொடங்குகிறது.

“சாமானியர்கள் தங்களது பொதுப்புத்தியில், precision-guided munitions (PGM) இலக்கை நோக்கி தானாகவே போய் தாக்கியழித்துவிடும் என நம்புகிறார்கள். ஆனால் அது ஒரு art and science. வெற்றிகரமாக தாக்கியழிக்க practice and enabling systems முக்கியம். வெறுமனே PGM ஐ வாங்கிவைத்தாலே போதுமானது அல்ல”

“But India’s recent air strike on a purported Jaish-e-Mohammad terrorist camp in Balakot in Pakistan on 26 February suggests that precision strike is still an art and science that requires both practice and enabling systems to achieve the intended effect. Simply buying precision munitions off the shelf is not enough.”

(THE STRATEGIST தளத்தில் வெளியான “India’s strike on Balakot: a very precise miss?” எனும் கட்டுரையிலிருந்து)

இணைப்பு : https://www.aspistrategist.org.au/indias-strike-on-balakot-a-very-precise-miss/


மேலும் அந்த கட்டுரை European Space Imaging ஊடாக பெறப்பட்ட செய்மதி படங்களை ஆய்வு செய்ததில், அந்த கட்டிடம் தாக்கப்படவே இல்லை என்பதை உறுதி செய்கிறது.

 “However, publicly available imagery acquired by European Space Imaging the day after the strike suggests that buildings at the camp were not visibly damaged or destroyed (see image below). This imagery, which is of a higher resolution than that available previously, shows conspicuously undamaged roofs that are not consistent with either a SPICE 2000 strike or a strike with other munitions. We believe that even a weapon with reduced explosive fill would cause damage to buildings that would be identifiable in the satellite imagery.”

(அதே கட்டுரையிலிருந்து. Ibid)

இதை தொடர்ந்து அந்த கட்டுரை, ஏன் இந்திய போர்விமானங்கள் ஏவிய PGM இலக்கை அழிப்பதில் தோல்வியடைந்தன என்பதை தொழில்நுட்பரீதியாக விளக்குகிறது.

அதனை முழுவதுமாக இங்கு பதிவிடுவது சாத்தியமில்லை. அதனால் அந்த கட்டுரையை முழுமையாக வாசியுங்கள். 

“There are two striking aspects to the images. The first is that all three weapons missed by similar (but not identical) distances, and certainly by much more than the 3 metre ‘circular error probable’ attributed to the SPICE 2000. The second is that all three weapons missed in virtually the same direction. These two factors suggest that the misses were caused by a systematic targeting error.”

(அதே கட்டுரையிலிருந்து. Ibid)

ஆக இந்தியா நடத்தியதாக சொல்லப்படும் Balakot surgical strike என்பது தோல்வியடைந்த operation என்பதை மேலேயுள்ள கட்டுரைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவுகின்றன. 

இதனை நிறுவும் மேலும் பல கட்டுரை இணைப்புகள் உண்டு. அத்தனையையும் இணைப்பது தேவையற்றது என்பதால் இணைக்கவில்லை.

ஆக இந்திய அரசு 26/02/2019 திகதியன்று, பாகிஸ்தானில் இயங்கும்  JeM தீவிரவாதிகள் மீது surgical strike நடத்தி அழித்துவிட்டதாக புளுகிவிட்டு, அதன் மூலம் உருவாக்கிய narrative, பில்டப்புக்களை வைத்து அடுத்த சில மாதங்களில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றிருக்கிறது.


இந்த கட்டுரையின் அடுத்த மையக்கேள்வியான “இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பங்குகொண்ட Dogfight இல் இந்திய விமானப்படை tactical வெற்றி பெற்றதா ?” என்ற கேள்விக்கு வருவோம்.

மேலே விவரித்தபடி இந்திய விமானப்படை 26/02/2019 அன்று, பாகிஸ்தானில் இருக்கும் balakot எனும் பிரதேசத்தில் இருக்கும் JeM முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு அடுத்த நாளே, அதாவது 27/02/2019 அன்று பாகிஸ்தானின் போர்விமானங்கள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலிற்கு பாகிஸ்தான் சூட்டிய பெயர் “Operation Swift Retort”.

பாகிஸ்தானின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இந்த தாக்குதலை அதனது defensive capabilities & strategic restraint காட்டுவதற்காக நடத்தியதாக கூறுகிறது.

அதேநேரம் இந்த தாக்குதல் escalation ஐ நோக்கி நகராமல் இருப்பதை உறுதிசெய்ய, பாகிஸ்தானின் போர் விமானங்கள் non-military targets மீது மட்டும் குண்டுகளை வீசியதாக கூறுகிறது. 

ஆனால் இந்திய இராணுவமோ, பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்தியாவின் military targets மீது குண்டுகளை வீசியதாக கூறுகிறது. ஆனால் அவைகள் இலக்கை தாக்கியழிப்பதில் தோல்வியடைந்தன என கூறுகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் போர் விமானங்களுக்கும் பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கும் இடையில் வான்வெளியில் Dogfight நடந்தது.

இந்த Dogfight இன் முடிவில், இந்திய விமானப்படையின் MiG -21 சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் விமானியான அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு இந்தியாவின்  Mi-17 இராணுவ ஹெலிகாப்டரும்  இந்தியாவால் தெரியாத்தனமாக Friendly fire இனால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த 6 பேரும் கொல்லப்பட்டனர்.

முதலில் இந்தியா இதனை மறுத்தது. 

ஏனெனில் தேர்தல் நேரத்தில் இந்தியா தனது சொந்த இராணுவ ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்தியது என்பதை வெளியே சொன்னால் சிக்கல் வரும் என்பதால்.

ஆனால் தேர்தல் முடிந்த சில மாதங்களிற்கு பிறகு, Friendly fire இனால்தான் Mi-17 இராணுவ ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டது. 

இதற்கான செய்தி ஊடக இணைப்பு கீழே.


• IAF probe confirms 27 February Budgam chopper crash was caused by friendly fire


இந்த Dogfight இல், இந்திய இராணுவம் பாகிஸ்தானின் F-16 ஐ சுட்டு வீழ்த்தியதாக உரிமை கோரியது.

ஆனால் அமெரிக்க தரப்பு பாகிஸ்தான் வசமிருந்த F-16 போர் விமானங்களை தாம் எண்ணி பார்த்ததாகவும், எந்த எண்ணிக்கையும் குறையவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

“A US count of the F-16s with Pakistan has found that none of them are missing, contradicting  india’s claim that one of its fighter jets shot down a Pakistani F-16 during an aerial dogfight on February 27, a leading American magazine reported Thursday.

Two senior US defense officials with direct knowledge of the situation told the Foreign Policy magazine that American personnel recently counted Islamabad's F-16s and found none of the planes missing.


இது தொடர்பான செய்தி இணைப்பு கீழே.


https://m.economictimes.com/news/defence/us-count-of-pakistans-f-16s-fighter-jets-found-none-of-them-missing-report/amp_articleshow/68733231.cms


ஆக இந்திய இராணுவம் கூறுவது போல பாகிஸ்தானின் போர் விமானமான F-16 வீழ்த்தப்படவில்லை. அது பொய் கதை.

சரி. இனி இந்திய-பாகிஸ்தான் போர்விமானங்களிற்கு இடையே நடந்த Dogfight இனை tactical level இல் அலசி பார்ப்போம்.


• பாகிஸ்தான், இந்தியாவின் surgical strike இற்கு எதிர்வினையாக retaliatory strike இனை நடத்த முடிவு செய்கிறது. அதன் ஊடாக  பாகிஸ்தான் அதனது strategic deterrence இனை உறுதிப்படுத்த நினைக்கிறது.

அடுத்த நாளே retaliatory strike இனை நடத்தக்கூடியளவு இருப்பது பாகிஸ்தானின் operational readiness ஐ காட்டுகிறது.


• இந்திய விமானப்படை MiG-21 போர் விமானத்தையும், Mi-17 இராணுவ ஹெலிகாப்டரையும் இழந்திருக்கிறது.

ஆனால் பாகிஸ்தான் விமானப்படை தரப்பில் ஒரு இழப்பும் நேரவில்லை.


• பாகிஸ்தானின் retaliatory strike நடக்கும் என இந்திய விமானப்படை எதிர்ப்பார்த்து இருந்தபோதிலும், Dogfight இல் இந்தியாவால் upper hand எடுக்கமுடியவில்லை.


• இதில் இன்னொரு முக்கியமான விடயமும் மறைந்திருக்கிறது.


Pravin sawhney போன்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள், பாகிஸ்தானின் electronic warfare இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதனாலேயே இந்தியாவின் MiG-21 போர் விமானத்தை communication jamming ஊடாக வீழ்த்தியதாக கூறுகிறார்கள்.


சில வருடங்களிற்கு முன்னர் PRAVIN SAWHNEY இன் “THE LAST WAR” எனும் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை தமிழில் மொழிபெயர்த்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.


அதனது இணைப்பு கீழே: 


இந்தியாவிற்கும் சீனாவிற்கும்‘நாளையே’ போர் நடந்தால், அந்த போர் எத்தகையதாகஇருக்கும்? - போரியல் பார்வையில் கற்பனை காட்சி (DEFENSE ANALYST ஆன PRAVIN SAWHNEY இன் “THE LAST WAR” எனும் புத்தகத்திலிருந்து)

https://tamildesiyam2009.blogspot.com/2023/02/blog-post.html?m=1


ஆக tactical level இல் பாகிஸ்தானின் “Operation Swift Retort” இல் பாகிஸ்தான் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெற்றிருக்கிறது.


இந்த கட்டுரையின் மையப்புள்ளியாக நான் குறிப்பிட்டிருந்தது இரண்டு கேள்விகளை.


இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய “Balakot surgical strike” வெற்றி பெற்றதா? 


இல்லை. அதனை பல ஆதாரங்களுடன் நிறுவியுள்ளேன்.


இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பங்குகொண்ட Dogfight இல் இந்திய விமானப்படை tactical வெற்றி பெற்றதா ? 


இல்லை. அதனையும் tactical level இல் விளக்கப்படுத்தியிருக்கிறேன்.


ஆக இந்த இரண்டு விடயங்களையும் மறைத்து இந்தியா பொய்யாக புளுகி அதனது சொந்த மக்களை ஏமாற்றிவைத்திருக்கிறது.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]