ஈரானை நோக்கி நகரும் போர் மேகங்கள்
அமெரிக்கா கடந்த சில தினங்களாக B-2 Stealth Bomber களை Diego Garcia military base இற்கு நகர்த்திக்கொண்டிருக்கிறது.
அத்துடன் அமெரிக்க விமானப்படையின் KC-135 tankers களையும் நகர்த்தியிருக்கிறது.
மேலும் பல C-17A Globemaster III aircraft கள் Diego Garcia இல் இறங்கியிருக்கின்றன. இவைகள் military transport விமானங்கள்.
• இதன் பொருள் என்ன?
B-2 Bombers அடிப்படையில் Strategic Bombers. அதாவது எதிரி நாட்டின் இதயப்பகுதியில் இருக்கும் Strategic இலக்குகளை தாக்கியழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. அதனது combat radius அதிகம்.
இதை சில கணக்குகளோடு உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன்.
B-2 Stealth Bomber இன் range கிட்டத்தட்ட 11000km.
அதனது combat radius கிட்டத்தட்ட 5000km.
போர் விமானங்களில் Combat Radius என்பது மிக முக்கியமான அம்சம்.
போர் விமானங்களின் Range என்பது, விமானம் மேலே எழும்பியதிலிருந்து (take off) தரையிறங்கும் வரை (landing) அதனால் பறக்கக்கூடிய மொத்த தூரத்தின் அளவு.
இந்த மொத்த தூரத்தின் அளவை, விமானம் பறக்கும் உயரம் (altitude), அவை காவிச்செல்லும் ஆயுதங்களின் எடை (ordnance), மேலதிக எரிபொருள் டேங்க் (external tank) பொருத்தப்பட்டுள்ளதா என்பவை தீர்மானிக்கும். அதனை பொருத்து கூடி குறையும்.
ஆனால் போர் விமானம் ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, தாக்குதலை நடத்திவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் தூரத்தை குறிப்பதுதான் combat radius.
இந்த combat radius என்பது range ஐ விட மிக குறைவானதாகவே இருக்கும். range இனது 1/3 பங்குதான் combat radius இருக்கும்.
The Combat Radius calculation assumes 1/3 of the range to get to the mission area, one 1/3 for return flight and 1/3 for take-off/mission/landing.
அதாவது range இனது 1/3 பங்கு தாக்குதலிற்கான இடத்திற்கு செல்வதற்கும், அடுத்த 1/3 பங்கு combat operations இற்கும், மீதி 1/3 பங்கு தொடங்கிய இடத்திலேயே தரையிறங்குவதற்கும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Diego Garcia military base இற்கும் ஈரானிற்கும் இடையிலான தூரம் குறைந்தது 5000km.
B-2 Stealth Bomber இன் combat radius உம் கிட்டத்தட்ட அதே 5000km தான்.
ஆனால் நான் மேலே குறிப்பிட்டது போல ஈரானின் இதயப்பகுதியில் உள்ள strategic targets மீது தாக்குதலை நடத்திவிட்டு, மீண்டும் பத்திரமாக Diego Garcia இற்கு திரும்புவதற்கு இந்த combat radius போதாது.
அத்துடன் real - world operations இல் எதிரியிடமிருந்து எதிர்பார்க்காத எதிர் தாக்குதல் வந்தால், evasive maneuvers எல்லாம் செய்யவேண்டி வரும். அது எரிபொருளை இன்னும் தின்னும்.
அதற்காகத்தான் அமெரிக்கா aerial refueling (நடுவானில் எரிபொருள் நிரப்புவது) இற்காக KC-135 tankers களையும் நகர்த்தியிருக்கிறது.
இதன் மூலம் B-2 bomber இன் combat radius அதிகரிக்கும்.
ஈரானிற்குள் ஆழ ஊடுருவி சென்று, strategic இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.
இதன் ஊடாக இன்னொரு விடயத்தையும் நம்மால் ஊகிக்க முடியும்.
அமெரிக்கா aerial refueling இற்காக KC-135 tankers களை நகர்த்தியிருக்கிறது என்றால், அண்டை இஸ்லாமிய நாடுகள் தமது விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஈரான் மீதான தாக்குதலிற்கு பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்பது பொருள்.
• அடுத்த கேள்வி. ஈரானின் Air Defense System வலுவானதா?
இல்லை என்பதே எனது அனுமானம்.
ஈரான் அதனது True Promise-1 தாக்குதலை ஏப்ரல் 13 இல் நடத்தியது.
True Promise- 2 தாக்குதலை அக்டோபர் 1 இல் நடத்தியது.
இந்த இரு தாக்குதலுக்கும் எதிர்வினையாக இஸ்ரேல் retaliation தாக்குதலை நடத்தியது.
ஆனால் அந்த இரு முறையும் இஸ்ரேலிய விமான படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் Air defense ஆற்றலினை அது காட்டவில்லை.
எனக்கு தெரிந்தவரை ஈரான் ரஷ்யாவின் S-300 இனை வைத்திருக்கிறது.
அத்துடன் ஈரானது விமானப்படை 1970 காலகட்ட F-4 Phantom II, F-14 Tomcat களை இன்னும் வைத்திருக்கிறது. சமீபத்தில்தான் ரஷ்யாவின் Su-35 air superiority fighter ஐ வாங்குவதற்கான ஆயுத கொள்வனவு ஒப்பந்தத்தை செய்தது.
அதனால் எதிரியின் விமானப்படையை தடுத்து நிறுத்துவதற்கான விமானப்படையும் இல்லை. Air Defense System உம் இல்லை.
ஆனால் ஈரானிடம் asymmetric warfare வகை எதிர் தாக்குதலை நடத்துவதற்கான போரியல் ஆற்றல் உண்டு.
• இதற்கு எதிர்வினையாக ஈரான் மத்திய கிழக்கின் எண்ணெய் வழங்கல் பாதையை முடக்கமுடியும்.
அதை செய்வதற்கு ஏற்ற missiles களை வைத்திருக்கிறது.
ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகளின் தாக்குதிறனை (expansive ballistic missile arsenal) விளக்கும் படம் கீழே.
• Strait of Hormuz ஊடாக நடைபெறும் உலக எண்ணெய் கடல் வழங்கல் பாதையை அதனது நீர்மூழ்கி கப்பல்களின் மூலமாக தடுப்பது.
ஈரான் தனது கடற்படையை மரபு போரிற்கு ( conventional war) ஏற்ற வகையில் வடிவமைக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளவும்.
asymmetric naval warfare செய்வதற்கு ஏற்றவகையிலேயே வடிவமைத்திருக்கிறது.
• மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் Carrier Strike Group (CSG) ஐயும் ஈரானால் அதனது பலமான hypersonic missiles களை வைத்து தாக்கும் சாத்தியம் இருக்கிறது.
உண்மையிலேயே ஈரானிற்கு “மன உறுதி இருக்கும்பட்சத்தில்” Diego Garcia military base மீது preemptive strike நடத்தினால், அமெரிக்காவினால் B-2 bombers களை அங்கு வைக்க முடியாத நிலை தோன்றும்.
ஆனால் 5000km செல்லக்கூடிய intercontinental ballistic missiles (ICBMs) களை ஈரான் வைத்திருக்கிறதா என்பது பெரிய கேள்வி குறி. அத்தகைய எந்த ஏவுகணை பரிசோதனைகளையும் நடத்தியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
அடுத்தது அந்த “மன உறுதி”.
அமெரிக்கா மீது preemptive strike நடத்துவதற்கு அசாத்தியமான தலைமை, மன உறுதி தேவை.
• அடுத்தது இதனது இன்னொரு பரிமாணம்.
அமெரிக்காவினது bunker buster குண்டுகளிலேயே அதிக சக்தி வாய்ந்த குண்டு GBU-57 (Guided Bomb Unit-57) தான்.
GBU-57A/B MOP (Massive Ordnance Penetrator) என அழைக்கப்படும் இந்த குண்டுகள் 14000 kg எடையை கொண்டது. 6.2 m நீளம் உடையது.
இதனை B-2 Bomber மட்டுமே காவி செல்லமுடியும். அதனுடைய internal bomb bay மட்டுமே கொண்டு செல்லக்கூடிய வசதியை கொண்டுள்ளது. வேறு எந்த விமானமும் அதை காவி செல்லமுடியாது.
அமெரிக்காவிற்கு GBU-57 போன்ற bunker buster களை பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதால்தான், B-2 Bomber களை இங்கு நகர்த்தியிருக்கிறது எனவும் புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படியெனில் ஈரானினது underground இல் இருக்கும் nuclear facilities களை தாக்கப்போவது உறுதி.
அதை தாண்டி அமெரிக்கா ஈரானினது வேறு strategic இலக்குகளை தாக்க நினைக்கிறதா என்பதையும் நாம் ஆராய வேண்டும்.
அப்படி தாக்க முயல்கிறது எனில், ஈரானின் அணு ஆயுத ஆற்றலை மட்டும் அழிப்பது அதன் நோக்கமல்ல. அதை தாண்டி regime change இற்கான புறச்சூழலை உருவாக்க முயல்கிறது என்பது அதன் பொருள்.
ஆனால் இங்கு நாம் மறக்கக்கூடாத ஒரு விடயம்
ஈரானின் asymmetric warfare ஆற்றல்.
இவை பற்றி இந்த பதிவில் அனைத்தையும் விவரிக்கமுடியாது. அதற்கு நீங்கள் எனது முன்னைய கட்டுரைகளைத்தான் வாசிக்கவேண்டும்.
க. ஜெயகாந்த்











Comments
Post a Comment