Stalemate இல் முடிந்த ஈரான்- இஸ்ரேல் போர் (update - 7)
இந்த கட்டுரை எழுதும் இந்தவேளையில், ஈரான்-இஸ்ரேல் போர் போர்நிறுத்தத்திற்கு வந்துவிட்டது.
இந்த ‘12 Day War’ இல் யார் வெற்றியாளர்? வெற்றியாளரை எப்படி மதிப்பீடு செய்வது? எதன் ஊடாக மதிப்பீடு செய்வது?
இந்த போரை தொடங்கியது யார்?
இஸ்ரேல்.
எப்படி தொடங்கியது?
Preemptive strike இன் ஊடாக போரை தொடங்கியது.
போரை தொடங்கியபோது, இஸ்ரேல் அதனது War Objectives களாக எதனை குறிப்பிட்டது?
• ஈரானின் nuclear facilities ஐ அழிப்பது.
• ஈரானில் Regime Change இனை நடத்துவது.
• அத்துடன் ஈரானின் Counter Offensive Capabilities இனை அழிப்பது.
• இந்த War Objectives களில் எதனை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறது?
• ஈரானின் nuclear facilities ஐ அழிப்பது - இன்றுவரை Fordo nuclear facilities மீதான தாக்குதலின் Battle Damage Assessment அறிக்கையினை முழுமையாக யாரும் தரவில்லை.
இரு தரப்பும் தமது narrative இற்கு ஏற்றவாறு அதனை அர்த்தப்படுத்தி கூறுகிறார்கள்.
“Reports from Israeli officials and defense analysts confirmed that Iran moved about 400 kilograms of uranium enriched to 60% purity before the attacks. The material was likely relocated from Fordow and Isfahan to a secret place.”
(ஜூன் 23 அன்று, The Economic Times இல் வெளியான கட்டுரையிலிருந்து - “Where is 400 kg enriched uranium? Iran claims to secretly move nuclear material to undisclosed location before US airstrikes hit nuclear sites. Here’s how uranium may have been transported secretly”)
• ஈரானில் Regime Change இனை நடத்துவது - இன்றுவரை நடக்கவில்லை. அதற்கான சாத்தியமும் இல்லை என்பதை கள நிலவரங்கள் காட்டுகின்றன. மாறாக ஈரானிய மக்களிடையே nationalism உணர்வு அதிகரித்திருக்கிறது.
• ஈரானின் Counter Offensive Capabilities இனை அழிப்பது- அப்படியெனில் ஈரானினது underground missile cities களை அழிக்கவேண்டும். அதனது industrial capacity இனை அழிக்கவேண்டும்.
இந்த கட்டுரை எழுதும் இந்த நிமிடம் வரை ஈரான் தினமும் இஸ்ரேல் மீது missiles களை ஏவிகொண்டுதான் இருக்கிறது.
இந்த ‘12 Day War’ இல், ஈரான் தினமும் இஸ்ரேலின் Counterforce targets மீதும், Countervalue targets மீதும் தாக்குதல் நடத்தித்தான் வந்திருக்கிறது.
Countervalue targets - Civilians, cities, economy
Counterforce targets - Military bases, nuclear silos, command centers
• ஆக இஸ்ரேல், அதனது War Objectives எதுவும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனில், ஏன் போர்நிறுத்தம் செய்ய தயார் என தானாகவே முன்வந்தது?
இஸ்ரேல்தான் மற்றைய அரபு நாடுகளின் ஊடாக போர் நிறுத்தம் ஒன்றிற்கு தான் தயாராக இருப்பதாக ஈரானிற்கு செய்தியினை கடத்தியது.
ஈரான் அதற்கு “போர்நிறுத்தத்திற்கான நேரம் வரவில்லை” என பதில் அனுப்பியது.
இது தொடர்பான செய்திகளை Wall Street Journal, The Times Of Israel பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. இந்த செய்திகள் சரியாக அமெரிக்கா ஈரானின் nuclear facilities தாக்கிய அன்றிலிருந்து வர ஆரம்பித்தன.
Fordo nuclear facilities மீதான தாக்குதலின் Battle Damage Assessment வருவதற்கு முன்பேயே, இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத வல்லமையை அழிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் எப்படி முடிவு செய்தது?
அத்தோடு இஸ்ரேல் மற்றைய இரண்டு War Objectives களையும் பூர்த்தி செய்யாமல், ஏன் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என முயற்சியை தொடங்கவேண்டும்?
இந்த போர் நிறுத்த அழைப்பை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிடில், இஸ்ரேல் கடுமையான தாக்குதலை ஈரான் மீது நடத்தும் என இஸ்ரேலிற்கு ஆதரவான ஊடகங்கள் செய்தி் வெளியிட்டன.
“If Iran does not stop firing at Israel, the Walla news site reported on Monday, Israel will intensify its strikes with a focus on undermining the regime.”
• ஈரான் மீது போரினை நடத்தவேண்டும் என பல வருட காலமாக தவமிருந்த இஸ்ரேல் ஏன் தானாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முயலவேண்டும்?
காரணம் இஸ்ரேலினால் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கக்கூடிய Shock & Awe வகை போரினை மட்டுமே நடத்தமுடியும். அந்த குறுகிய போரிற்குள் decisive Victory பெறமுயலும்.
Attrition Warfare இனை இஸ்ரேலினால் தாக்குப்பிடிக்க முடியாது.
இதனை இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் குறிப்பிட்டிருந்தார்.
Netanyahu: Israel very close to reaching goals in Iran, will avoid ‘war of attrition’
He promised not to let Israel be dragged into a “war of attrition” with the Islamic Republic, but stressed that this did not mean he would be prepared to end the campaign before all its objectives had been met.
ஏன் Attrition Warfare இனை இஸ்ரேலினால் எதிர்கொள்ளமுடியாது என்பது பற்றி சுருக்கமாக
நேற்றைய கட்டுரையில் விவரித்திருந்தேன். இணைப்பு கீழே.
ஈரான்-இஸ்ரேல் போர் (update -6)
https://www.facebook.com/100088344520382/posts/695526263402185/?app=fbl
மேலும் இதனை பற்றி விவரித்து இன்னொரு கட்டுரை எழுதுவேன்.
• அத்துடன் எனது முன்னைய கட்டுரைகளில் எல்லாம், இஸ்ரேலினது Interceptor Missiles களின் எண்ணிக்கை எப்படி குறைந்து கொண்டே போகிறது என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.
எண்ணிக்கை குறைய குறைய ஈரான் missiles களின் hit rate கூடிக்கொண்டே வரும்.
பொதுவாக இஸ்ரேலின் Missile Defense System இனது success rate குறைந்தது 90%.
அதாவது எதிரிகள் 100 ஏவுகணைகளை ஏவினால், குறைந்தது 90 ஏவுகணைகளாவது தடுக்கப்பட்டு அழிக்கப்படும் என்பது பொருள்.
ஆனால் இஸ்ரேலின் Interceptor Missiles எண்ணிக்கை குறைய குறைய இந்த success rate உம் குறையும். மறுவார்த்தையில் சொன்னால் ஈரானினது hit rate கூடும்.
கடந்த சில தினங்களாக ஈரானினது hit rate கிட்டத்தட்ட 50% ஐ எட்டியுள்ளது. ஈரான் ஏவிய missiles களில் அரைவாசிக்கும் மேலே வெற்றிகரமாக இஸ்ரேலின் Missile Defense System ஊடறுத்து தாக்கியிருக்கின்றன என்பது பொருள்.
இன்னொரு முக்கியமான விடயம் ஈரான் அதனது missiles களின் ஊடாக Suppression / Destruction of Enemy Air Defenses (SEAD/DEAD) செய்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
எதிரி நாட்டின் Radar installations, command & control nodes, SAM sites ஐ அழிப்பதுதான் SEAD/DEAD என அழைக்கப்படும்.
போர் இழுபட இழுபட, இஸ்ரேலின் Missile Defense System அடிமட்டத்திற்கு போகும். ஈரானின் hit rate அதிகரித்து கொண்டே செல்லும். அப்படி போகும்போது ஈரானால் இஸ்ரேலின் பெரும்பாலான Counterforce targets மீதும், Countervalue targets மீதும் எளிதாக தாக்குதலை நடத்தி இஸ்ரேலின் பொருளாதாரத்தை முடக்கமுடியும். ஈரானால் அதனது பழைய தலைமுறை missiles களை வைத்துக்கூட இதை செய்யமுடியும்.
இஸ்ரேலின் பொருளாதாரம் எப்படி நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதை தனி கட்டுரையாக பிறிதொரு நேரத்தில் தருகிறேன்.
நேற்று எனது பதிவில் ஈரான் இந்த போரினை அப்படியே இழுக்கவேண்டும். இஸ்ரேலினை attrition warfare trap இற்குள் விழவைக்கவேண்டும் என கூறியிருந்தேன்.
அப்படி ஈரான் செய்தால், இஸ்ரேலினால் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் இந்த attrition warfare இல் பயணிக்கமுடியாது.
இதுதான் இஸ்ரேலின் பலவீனமான பக்கம்.
இஸ்ரேல் எப்போதும் superior firepower இனை அடிப்படையாக வைத்து, Shock and Awe வகை போர் ஒன்றினை நடத்தி அதன் ஊடாக decisive Victory ஐ பெறும் வகையிலேயே தன்னை வடிவமைத்திருக்கிறது. அதுமட்டும்தான் அதனால் செய்யமுடியும்.
அதனால்தான் இஸ்ரேல் attrition warfare இற்குள் அகப்படாமல், இதிலிருந்து வெளியே வர நினைக்கிறது.
• இன்னுமொரு முக்கியமான ஒரு விடயமும் இருக்கிறது.
அது இஸ்ரேல் buying time to strengthen itself.
உண்மையில் இஸ்ரேல் இப்போது இந்த போரினை நிறுத்திவிட்டு, மீண்டும் தனக்கு தேவையான Fire Power இனை முழுமையாக நிரப்பிவிட்டு, தேவையான Intel இனை எல்லாம் பெற்றுக்கொண்டு தனக்கு தோதான நேரத்தில் ஈரான் மீது போரினை தொடுக்கும்.
Israel is strategically buying time to recover and prepare for a renewed offensive.
அதனால்தான் நேற்றைய பதிவில் கூட ஈரான் இந்த போரினை இழுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் ஈரானும் ‘buying time to strengthen itself’ என்ற நிலைக்கு நகரவே முனைகிறது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் இஸ்ரேலும் ஈரானின் Counterforce targets மீதும், Countervalue targets வலுவான தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
ஈரானும் குறிப்பிட்ட கால அவகாசத்தை பெற்றுக்கொண்டு, இதுவரை நடந்த போரினை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்ப அதனது இராணுவ ஆற்றலில் மாறுதல்கள் செய்ய முயலும்.
போர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ஈரான் சீனாவிடம் இருந்து அதனது solid-fuel missiles களுக்கு தேவையான ammonium perchlorate வாங்கவிருப்பதாக The Times Of Israel பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
“The Journal report, which cited people familiar with the transaction, said Tehran had ordered enough ammonium perchlorate to potentially manufacture up to 800 missiles. The material is used to produce solid-fuel missiles.”
இது மட்டும் அல்லாமல் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக்கொண்டு, ஈரான் சீனாவுடன் Strategic Partnerships இனை உருவாக்க முனையலாம். அதன் ஊடாக அதனது Air Defense இனை பலப்படுத்த முயலலாம்.
ஆக மொத்தத்தில் ஈரானும் இந்த கால அவகாசத்தை பெற்றுக்கொள்ள முயல்கிறது என்பது போலவே தோற்றமளிக்கிறது (buying time to strengthen itself). தோற்றமளிக்கிறது என்ற சொல்லாடலை பயன்படுத்துவதற்கு காரணம் போரில் போர்நிறுத்தமும் ஒரு போரியல் நகர்வுகளில் ஒன்றுதான். அதற்குள் deception இருக்கும்.
• திரும்ப இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய புள்ளிக்கே வருகிறேன்.
இந்த ‘12 Day War’ இல் யார் வெற்றியாளர்? வெற்றியாளரை எப்படி மதிப்பீடு செய்வது? எதன் ஊடாக மதிப்பீடு செய்வது?
இஸ்ரேல் preemptive strike இன் ஊடாக போரினை தொடங்கும் போது, எவையெவை தனது War Objectives என கூறியதோ அதனை பூர்த்தி செய்யவில்லை.
மறுபுறத்தில் ஈரான் இந்த போரினை தொடங்கவில்லை. அதற்கு அந்த எண்ணமும் இருக்கவில்லை. ஈரான் asymmetrical warfare இன் ஊடாக எதிர்கொள்ளும் விதமாகத்தான் அதனது Military Doctrine ஐ வடிவமைத்திருக்கிறது. அதன் ஊடாகவே மத்திய கிழக்கில் அதனது செல்வாக்கினை பிரயோகிக்க முயல்கிறது.
அந்தவகையில் “ஈரான் போரினை இழுத்து சென்று, அமெரிக்கா,இஸ்ரேலினால் தொடர்ந்து போரினை நடத்தமுடியாத நிலைக்கு தள்ளவிட்டால், ஈரானிற்கு வெற்றி. ஈரான் அதனது strategic position அப்படியே தக்கவைத்துக்கொள்ளும்.” என முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
ஈரான்-இஸ்ரேல் போர் (நீண்ட update -5)
https://www.facebook.com/100088344520382/posts/691278437160301/?app=fbl
அது நடந்திருக்கிறது.
அமெரிக்கா நினைத்தால் கூட ஒரு conventional war இனை நடத்தமுடியாத deterrence ஐ ஈரான் உருவாக்கியிருக்கிறது. அமெரிக்காவும் ஈரானிற்குள் காலை வைத்து சேற்றுக்குள் அகப்பட விரும்பவில்லை. பெயரளவுக்கு nuclear facilities மீது குண்டை போட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டது. இதற்குள் இருக்கும் விடயத்தை பற்றி தனி கட்டுரையொன்றை எழுதுவேன்.
அதே நேரம் ஈரானினால் குறுகிய காலத்தில் இஸ்ரேலிற்கு killer blow ஐ தரமுடியாத நிலை இருப்பதையும் கவனிக்கவேண்டும்.
ஈரான் போரினை இழுத்து attrition warfare இற்கு இஸ்ரேலை தள்ளினால் மட்டும்தான், இஸ்ரேலை பலவீனமாக்க முடியும் என்பதுதான் கள யதார்த்தம்.
ஆனால் ஈரான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி attrition warfare இற்குள் இஸ்ரேலை தள்ளவில்லை. ஈரானும் ‘buying time to strengthen itself’ என்ற நிலைக்குத்தான் போக முயல்கிறது.
அதனால்தான் கட்டுரையின் தலைப்பை Stalemate இல் முடிந்த ஈரான்- இஸ்ரேல் போர் என வைத்தேன்.
இது தற்காலிகமான போர் நிறுத்தம் மட்டுமே.
இஸ்ரேல் குறுகிய காலத்திற்குள் தன்னை பலப்படுத்திக்கொண்டு, மீண்டும் ஈரானை தாக்கமுயலும். அதற்கேற்ப narrative இனை உருவாக்கி preemptive strike இனை செய்யும். ஈரானும் தனக்கு கிடைத்த கால அவகாசத்தில், தன்னை பலப்படுத்திக்கொண்டு இஸ்ரேலின் தாக்குதலிற்கு காத்துக்கொண்டிருக்கும்.
ஆக இது எவ்வளவு காலத்திற்குள் நடக்கும் என்பதுதான் விடை தெரியாத கேள்வி.
க.ஜெயகாந்த்










Comments
Post a Comment