ஈரான்-இஸ்ரேல் போர் ( நீண்ட update - 5)


இந்த போரில் ஈரானிற்கு இருக்கும் பெரும் சவாலாக நான் எதை கருதுகிறேன்?

அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் , இஸ்ரேல் ஈரானில் நிகழ்த்த துடிக்கும் ஆட்சி மாற்றம் (regime change).

ஈரான்-இஸ்ரேல் போரில் இருக்கும் போரியல் சமன்பாடுகள் என்பது வேறு. இந்த regime change என்பது வேறு. போரில் ஈரானிற்கு சாதகமான நிலை தோன்றினாலும், regime change எனும் ஒற்றை விடயம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டி போட்டுவிடும். Complete victory இஸ்ரேல், அமெரிக்காவிற்கு போய்விடும்.


அதனால் regime change இற்கு சாத்தியம் இருக்கிறதா என ஆராய்ந்து பார்ப்போம்.

regime change ஐ உறுதியாக நிகழ்த்துவதற்கான வாய்ப்பினை தரும் முதல் Option என்பது தரைப்படை ஈரானில் நுழைவது (Ground Invasion). அதாவது Boots on the Ground. எதிரிகள் physical ஆக ஈரானிற்குள் நுழைவது.


அதற்கான சாத்தியம் இருக்கிறதா?

நிச்சயம் இல்லை. ஏனெனில் ஈரான் தனது எல்லைகளை 7 நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. கிழக்கில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான். மேற்கில் துருக்கி,ஈராக்.வடக்கில் ஆர்மேனியா, அசர்பைஜான், துருக்மேனிஸ்தான்.

இந்த 7 நாடுகளில் ஏதாவது ஒரு நாடு வழியாகத்தான் ஈரானிற்குள் எதிரிகளின் தரைப்படை நுழையவேண்டும்.

மேலே குறிப்பிட்ட 7 நாடுகளும் ஈரானுடன் எதிர் நிலையில் இல்லை. 

இந்த  நாடுகளின் வழியாக எதிரிகளின் தரைப்படை நுழைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 

ஏனெனில் எதிரிகளின் தரைப்படை நுழைவதாக இருந்தால், பெருமளவிலான deployment நடக்கவேண்டும். இதற்கான logistics, ammunition என்பவற்றை எல்லை பகுதிக்கு நகர்த்துவது, தயார்படுத்துவது என்பது பல வாரங்களுக்காவது நடக்கும். இதையெல்லாம் மறுதரப்பு எளிதில் கண்டுவிடலாம்.

இந்த Option 1 இனைத்தான், 2003 இல் அமெரிக்கா ஈராக்கில் நடத்தியது. boots on the ground. இந்த தயார்படுத்தலுக்கு அமெரிக்கா பல மாதங்கள் எடுத்துக்கொண்டது நினைவிருக்கலாம்.

அத்துடன் எதிரிகள் Ground Invasion ஐ நிகழ்த்தினால், அதனது போரியல் சமன்பாட்டினை வேறொரு வகையில் அணுகவேண்டும். ஈரான் இராணுவத்தின் man power, அதன் conventional army இனுடைய Capacity, Capability என்பவற்றை தனியாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

Capacity (How Much You Can Do)

Capability (What You Can Do)  

ஈரானினது 8 லட்சம் படைகளை, எதிரிகள் மித மிஞ்சிய சூட்டாற்றலுடன் (Fire Power) எதிர்கொள்ள நினைத்தாலும் சில லட்சம் படைகளாவது எதிரிகளிடம் இருக்கவேண்டும்.

அந்த சில லட்சம் படைகளை ஈரானிற்கு அனுப்பும் நிலையில் அமெரிக்காவும் இல்லை. இஸ்ரேலும் இல்லை. 

அதைவிட முக்கியமாக நுழைய வேண்டிய வழிகளான அந்த 7 நாடுகளும் ஈரானின் எதிரிகளும் இல்லை. குறைந்தபட்சம் எதிர் நிலையில் இல்லை. அந்த 7 நாடுகளும் பிறநாட்டின் படைகளை தமது நாட்டின் வழியாக போவதற்கு அனுமதிக்கவும் போவதில்லை.

ஆக Regime Change இனை நடத்துவதற்கான உறுதியான வாய்ப்பினை வழங்கும் Option 1 இற்கு இங்கு சாத்தியமே இல்லை. அதாவது Ground Invasion அல்லது Boots on the Ground.


அடுத்தது Option 2. 

இது ஈரானில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆட்சியினை தூக்கி வீசுவதற்காக ஈரானிற்குள்ளேயே இருக்கும் சொந்த மக்களின் ஊடாக நிகழ்த்துவது. 

ஈரானின் இஸ்லாமிய ஆட்சியின் மீது மக்களுக்கு கணிசமான எதிர்ப்பு இருந்தாலும், அங்கு ஆட்சியாளருக்கு எதிராக பெருமளவில் ஆயுதப்போராட்டம் நிகழ்ந்ததில்லை. 

உதாரணத்திற்கு சிரியாவில் மேற்குலகம் regime change இனை நடத்துவதற்கான முயற்சிகளை 2011 இல் ஆரம்பித்தபோது, பல ஆயுத குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்துத்தான் போன வருட இறுதியில் அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. இந்த 13 வருடத்தில் போர் களம் பலவகையில் மாறுதலுக்கு உட்பட்டது. பல போர்கள் நடந்தன. ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா என நுழைந்தன. இஸ்லாமிய கடும் அடிப்படைவாத பயங்கரவாதிகளான ஐசிஸ் ஆட்சி நடைபெற்றது.

ஆனால் ஈரானை பொறுத்தவரையில் சிரியாவில் தோன்றிய நிலை இன்றுவரை தோன்றவில்லை. ஈரானிய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், அது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. ஆக ஈரானிற்குள் திடீரென ஆயுதப்போராட்டம் தொடங்கினாலும் ஈரானினது இராணுவம் அதனை அடக்கமுடியும்.



அடுத்தது Option 3.

இது ஈரானின் உச்சகட்ட தலைமைகளை எல்லாம் targeted killings இனுடாக அப்புறப்படுத்துவது. இது Decapitation என அழைக்கப்படும்.

இந்த  Decapitation வகை தாக்குதலில் இஸ்ரேலை மிஞ்ச உலகில் வேறு நாடுகள் இல்லை.

இஸ்ரேலின் கடந்த 75 வருடகால வரலாற்றை அலசினால், அதனுடைய எதிரிகளை Decapitation ஊடாகவே பலவீனப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது.

Decapitation ஊடாக, “நீண்ட கால அடிப்படையில் நிரந்தரமாக” எதிரிகளை முற்றாக அழிக்க முடியாது. ஆனால் எதிரிகளின் நகர்வை “தற்காலிகமாக” நிறுத்த முடியும். மந்தப்படுத்த முடியும். இந்த Decapitation தாக்குதல் எதிரிகளிடம் ஒருவித அதிர்ச்சியை (shock, jerk) இனை ஏற்படுத்துபவை. எதிரிகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு மறுபடியும் தன்னை நிலைப்படுத்தும் முன்பு இஸ்ரேல் tactical level இல் வெற்றிகளை பெற்றுவிடும்.

போன வருடம் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்திய Decapitation தாக்குதல் சிறந்த உதாரணம்.

ஹிஸ்புல்லாவின் பெரும் தலைவரான நஸருல்லாவையும், இரண்டாம் மட்ட ஒட்டுமொத்த தலைவர்களையும் Decapitation தாக்குதல் ஊடாக அப்புறப்படுத்தியது. இன்றும் ஹிஸ்புல்லா இருக்கிறது. ஆனால் அது தன்னை நிலைப்படுத்துவதற்கான mode இற்கு சென்றுவிட்டது. இது இஸ்ரேலிற்கு tactical level ஆதாயத்தை தந்திருக்கிறது. லெபனான் முனையில் இராணுவ வளங்களை ஒதுக்கவேண்டியதில்லை.


இந்த Option 3 தான் ஈரானிற்கு முன் இருக்கும் பெரும் சவாலாக நான் கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் Decapitation தாக்குதல் alarming rate இல் இருக்கிறது. இது நிச்சயம் நல்ல அறிகுறி கிடையாது.

இஸ்ரேல் வெற்றிகரமாக Decapitation தாக்குதலை தொடர்ந்து நடத்தினால், ஈரானினது தலைமைத்துவ அடுக்கு முற்றிலும் செயலிழந்து போகும்.

இதற்கு சமாந்தரமாக Print Media, Broadcast Media, Internet Media முழுவதும் அமெரிக்க, இஸ்ரேலின் propaganda வை ஈரான் மக்கள் மீது பிரயோகிக்கும். 

இது ஈரானிற்குள் ஒருவித Chaos நிலையினை ஏற்படுத்தும். ஈரானிற்குள் மக்கள் மேற்குலகத்தின் propaganda இன் ஊடாக செய்திகளை உள்வாங்கி, செய்வதறியாது நிலை தடுமாறும்போது உள்ளுக்குள்ளேயே Implosion நிகழும்.

ஈரானிற்குள்ளேயே மேற்குலகத்தின் liberalism இனை கொண்டுவந்து பொற்கால ஆட்சியினை வழங்குவதாக கூறிக்கொண்டு மேற்குலகத்தின் puppets கிளம்புவார்கள்.

ஈராக், லிபியா, சிரியாவிற்கு நடந்த அதே பேரழிவு ஈரானிற்கும் ஏற்படும்.

இந்த Option 3 நிகழ்வதற்கான சாத்தியம் களத்தில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதுதான் ஈரானிற்கு இருக்கும் பெரும் சவால்.

மேலே நான் கூறிய Regime Change என்பது Option 3 இற்குள்ளாக மட்டுமே நடக்கமுடியும்.


ஈரான் இந்த Option 3 இனை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட்டால் என்ன நடக்கும்?

இதனை போரியல் சமன்பாட்டுக்குள்ளாக அணுகவேண்டும்.

இன்று போர்களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

இஸ்ரேல் வசம் air superiority இருப்பதால், இஸ்ரேல் Counterforce targets மீதும், Countervalue targets மீதும் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.

 Countervalue targets - Civilians, cities, economy

Counterforce targets - Military bases, nuclear silos, command centers

இஸ்ரேல் அமெரிக்காவின் ஊடாக ELINT (Electronics Intelligence), IMINT (Imagery intelligence), SAR (Synthetic Aperture Radar) என்பவற்றை பெற்றுக்கொள்கிறது. மேற்கு ஐரோப்பாவும் Reconnaissance இற்கு உதவி செய்கிறது.

இதன் ஊடாக இஸ்ரேல் ஈரானின் Countervalue targets மீதும், Counterforce targets மீதும் தொடர்ச்சியான தாக்குதலை நடத்துகிறது.

இஸ்ரேல் எவ்வளவு முயற்சி செய்தும் செய்தாலும், ஈரானின் Underground Missiles Cities களை மட்டும் அழிக்க முடியாது.

ஏன் அழிக்க முடியாது என்பதை விளக்கி, இதற்கு முன்பு 3 கட்டுரைகள் எழுதியிருந்தேன். இணைப்புகள் கீழே.


இஸ்ரேலினால் ஈரானின்  Underground Missiles Cities களை அழிக்கமுடியாது என்றால் அதன் பொருள் என்ன?

ஈரானால் counter Offensive இனை இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தமுடியும்.

இஸ்ரேல் எப்படி ஈரான் முகத்தில் குத்துகிறதோ, அதேபோல ஈரானாலும் இஸ்ரேல் முகத்தில் குத்தமுடியும் என்பதுதான் பொருள்.

இரண்டு பேரும் முகத்தில் மாறி மாறி குத்து வாங்கினால் என்ன நடக்கும்? யாருக்கு தாங்கு திறன் அதிகம் இருக்கிறதோ அவருக்கு களம் சாதகமாக மாறும்.


அடுத்தது ஈரானினது counter Offensive பற்றியது.

இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்திவருவதாக கூறினாலும், இன்றுவரை ஈரானினது counter attack நிற்கவில்லை என்பதே ஈரானின் Underground Missiles Cities அழியவில்லை என்பதற்கான சிறந்த சான்று.

ஈரானும் Counterforce targets மீதும், Countervalue targets மீதும் தாக்குதல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.

Counterforce targets மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக, ஈரான் அதனது missiles களின் ஊடாக Suppression / Destruction of Enemy Air Defenses (SEAD/DEAD) செய்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

எதிரி நாட்டின் Radar installations, command & control nodes, SAM sites ஐ அழிப்பதுதான் SEAD/DEAD என அழைக்கப்படும்.

இஸ்ரேலின் missile defense system மீது ஈரான் நடத்திய hypersonic missiles தாக்குதல்களின் காணொளிகளை முந்தைய பதிவில் பதிவேற்றம் செய்திருந்தேன்.

ஈரான் தொடர்ச்சியாக counter offensive செய்வதும் இஸ்ரேலின் missile defense system அதனை interception செய்வதும் நடக்கும்போதுதான், அடுத்த இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது.

ஈரானினது missiles stockpile எவ்வளவு?

ஈரான் ஒரு நாளைக்கு எத்தனை missiles களை ஏவுகிறது? அதனால் ஒரு மாதத்திற்கு எத்தனை missiles களை செய்யமுடியும்?

ஈரானினது production rate இங்கு மிக முக்கியமானது.

ஈரான் ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கை ஈரானினது production rate ஐ விட அதிகமாக இருந்தால், ஒரு புள்ளியில் ஈரானினது missiles முடிந்துவிடும். 

அப்படியானால் ஈரானால் எத்தனை வாரங்களுக்கு, எத்தனை மாதங்களுக்கு இதே வகையான தாக்குதலை நடத்தமுடியும் என்ற கேள்வி வருகிறது.

இதே சிக்கல் இஸ்ரேலிற்கும் இருக்கிறது.

இஸ்ரேலின் கைவசம் எத்தனை interceptor missiles இருக்கின்றன?

இஸ்ரேலின் interceptor missiles களை தயாரிப்பதற்கான production rate எவ்வளவு?

சராசரியாக ஈரான் ஏவும் ஒவ்வொரு ballistic missile இற்கும் 2-3 interceptor missiles களை இஸ்ரேல் ஏவுகிறது.

ஈரானின் hypersonic missiles களை தடுப்பது சாத்தியம் இல்லை. இதுவரை arrow system தடுத்த ஒரு காணொளியை கூட நான் கண்டதில்லை. 

இதில் ஈரான் வேண்டுமென்றே இஸ்ரேல் அதனது  interceptor missiles களை வீணாக்கவேண்டும் என்று decoys களையும் அனுப்புகிறது.

இந்த 4 நாட்களில் குறைந்தது மொத்தமாக 450 ballistic missiles களும் hypersonic missiles களும் ஈரானால் ஏவப்பட்டிருக்கின்றன.

அப்படியெனில் இஸ்ரேல் கைவசம் இருக்கும் interceptor missiles களின் எண்ணிக்கை காலியாகும் நிலைக்கு வந்திருக்கவேண்டும் (running out of ammunition).

இது தொடர்பாக U.S. Secretary of Defense இல் பணியாற்றிய Dan Caldwell இனது ஒரு பதிவினை நேற்று தந்திருந்தேன்.

இஸ்ரேலின் interceptor missiles களின் எண்ணிக்கை காலியாகும் நிலைக்கு வந்திருக்கிறது என்பதற்கு சான்று கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரேல் அதிகமாக interceptor missiles களை ஏவவில்லை. 

அதிகம் selective ஆகவே interception செய்யமுனைந்ததை காணமுடிந்தது. மிக முக்கிய assets களை காப்பாற்ற மட்டுமே interception ஐ செய்யமுயல்கிறது.

அமெரிக்கா இனி அதனது Carrier Strike Group இனை நகர்த்தி, interception செய்ய முனைந்தாலும் அமெரிக்காவின் இருப்பும் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது.

ஈரான் இதேயளவு scale இல் தினமும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்தால், 2 வாரங்களிற்குள் இஸ்ரேல்,அமெரிக்காவின் interceptor missiles காலியாகும் நிலைக்கு வந்துவிடும்.


அந்த நிலை வந்தால், ஈரானிற்கு இன்னொரு tactical advantage கிடைக்கும்.

முந்தை தலைமுறை ballistic missiles களை அதிகம் அனுப்பமுடியும். hypersonic missile களை அனுப்ப வேண்டியதில்லை.

இதுவரை கவனித்ததில் ஈரான் அதனுடைய அதி நவீன Khorramshahr Family missiles களை பயன்படுத்தவில்லை.

Fattah-1 போன்ற hypersonic missile களையும் இடையிடையே துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேலினுடைய missile defense system தனக்கான interceptors missiles கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் தடுமாறும்போது, ஈரானிற்கு இந்த tactical advantage கிடைக்கும்.


ஈரானினது வெற்றி, தோல்வியை எப்படி அளவிடுவது?

மேலே கூறியதுபோல, அமெரிக்கா,இஸ்ரேல் Option 3 இனை நிகழ்த்தி காட்டிவிட்டால், அவைகளுக்கு அது complete victory.

அதேபோல ஈரான் மறுபுறத்தில் complete victory பெறத்தேவையில்லை.

இஸ்ரேல்,அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய கூட்டணி conventional warfare இல், Military Superiority ஐ வைத்திருக்கின்றன.

இதை ஈரான் asymmetrical warfare இன் ஊடாக எதிர்கொள்ளும் விதமாகத்தான் அதனது Military Doctrine வடிவமைத்திருக்கிறது.

இது unconventional warfare. இதைத்தான் asymmetrical warfare என அழைக்கிறோம். இராணுவ பலத்தில் பலவீனமான தரப்பு நேரடி மோதலை தவிர்த்து , எதிரியின் பலவீனமான பகுதியை தாக்குவது ( soft targets ) , மற்றைய வழிகளில்  எதிரிக்கு நெருக்கடியை தருவதே asymmetrical warfare.

இந்த asymmetrical warfare இன் பகுதியாகத்தான், ஈரான் அதனது இராணுவ வளங்களை missiles களில் குவித்தது. இன்று இந்த missile தொழில்நுட்பத்தில் சிறந்த நிலையில் இருப்பதால்தான், ஈரானால் இஸ்ரேலிற்கு counter punch தரமுடிகிறது.

இந்த asymmetrical warfare இன் பகுதியாகத்தான், மத்திய கிழக்கு முழுவதும் தனக்கான proxy military groups களை உருவாக்கியது. உதாரணம் ஹிஸ்புல்லா, ஹூத்திஸ்.

இன்று ஈரான் அதனது missile களை வைத்து strait of Hormuz இனை மூடிவிடமுடியும். 

இன்னொரு அதிமுக்கியமான விடயம், அமெரிக்கா போரில் குதித்தால், ஈரான் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்களை தாக்க short-range ballistic missiles (SRBMs) களையும், hypersonic missile களையும் பாவிக்கமுடியும். 

பெரும்பாலான அமெரிக்க இராணுவ தளங்கள் ஈரானினது short-range ballistic missiles (SRBMs) களின் range இற்குள்தான் வருகின்றன. உதாரணம் Qatar, UAE, Oman, Kuwait.

உண்மையில் ஈரான், போரில் அமெரிக்கா குதித்தபிறகு, அமெரிக்காவின் அதிக மதிப்புடைய military assets களை தாக்கியழிக்குமாயின் அமெரிக்கா பின்வாங்கும். ஏனெனில் இது அமெரிக்காவிற்கு survival போர் அல்ல. ஆனால் ஈரானிற்கு survival இற்கான போர்.

ஆக ஈரான் அதிக அளவிலான குத்துக்களை முகத்தில் வாங்கிக்கொண்டு, Option 3 இனை நடக்கவிடாமல், பதிலுக்கு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு இழப்புகளை ஏற்படுத்தினால், stalemate நிலைக்கு வந்துவிடும்.

அமெரிக்கா,இஸ்ரேலினால் தொடர்ந்து போரினை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டால், அது stalemate நிலைக்கு வந்து நிற்கும். ஈரான் stalemate நிலையை ஏற்படுத்தினாலே ஈரானிற்கு வெற்றிதான். 

ஆக அடுத்த இரண்டு வாரத்திற்குள் இஸ்ரேல்,அமெரிக்கா Option 3 இனை நிகழ்த்திகாட்டினால், அவர்களுக்கு Complete Victory.

ஈரான் போரினை இழுத்து சென்று, அமெரிக்கா, இஸ்ரேலினால் தொடர்ந்து போரினை நடத்தமுடியாத நிலைக்கு தள்ளவிட்டால், ஈரானிற்கு வெற்றி. ஈரான் அதனது strategic position அப்படியே தக்கவைத்துக்கொள்ளும்.


க.ஜெயகாந்த்


• ஈரான்-இஸ்ரேல் போர் update -2


https://www.facebook.com/100088344520382/posts/688885154066296/?app=fbl


• ஈரான்-இஸ்ரேல் போர் update -3


https://www.facebook.com/100088344520382/posts/689785477309597/?app=fbl


• ஈரான்-இஸ்ரேல் போர் update -4


https://www.facebook.com/100088344520382/videos/1441198117299602/?app=fbl

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]