2001 இற்கு பிறகான உலக அரசியலை புலிகள் புரிந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு சரியா பிழையா?


கேள்வி: 2001 இற்கு பிறகான உலக அரசியலை புலிகள் புரிந்து கொள்ளவில்லை என்பது சரியா?


இதற்கான பதிலை வெறும் ஒற்றை வரியில் கூறுவது கடினம்.


இந்த போரின் பின்னே போரியல் நகர்வுகள்ராஜதந்திர நகர்வுகள்உலக ஒழுங்கின் நகர்வுகள் என பல பரிமாணங்கள் உண்டு.


முடிந்தவரை சுருக்கி மேலதிக தகவல்களுக்கு எனது முன்னைய கட்டுரைகளை மேற்கோள் காட்டி இந்த

பதிவை எழுதியிருக்கிறேன்.


• போரின் இலக்கு என்ன?


போர் என்பது அரசியல் இலக்கை நோக்கி நகர்வதற்கான ஒரு வழிபோர் ஒன்றினூடாக இந்த அரசியல்இலக்கை அடையவே எல்லா தரப்பும் முயல்கின்றன


தலைவர் பிரபாகரனும் இந்த அரசியல் இலக்கை நோக்கியே இந்த போரை நடத்தினார்


• அவரின் இலக்கு எதுவாக இருந்தது?


உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள தமிழீழ அரசு.


• உண்மையில் 9/11 இற்கு பிறகான சூழ்நிலை மட்டும்தான் விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்க காரணமா?


இல்லை.


9/11 என்ற தாக்குதல் நடந்தது 11-Sep-2001.


இதற்கு ஒன்பது மாதங்களிற்கு முன்னரேயே விடுதலை புலிகள் தங்களது பேச்சுவார்த்தைக்கான ராஜதந்திர நகர்வுகளை தொடங்கிவிட்டார்கள்.


24/12/2000 இலிருந்து ஒரு மாதத்திற்கு ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் செய்வதாக விடுதலை புலிகள்அறிவித்தார்கள்.


பிறகு அதன் முடிவில் மேலும் ஒரு மாதம் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டது


இவ்வாறு 24/4/2001 வரையில் 4 மாதங்கள் விடுதலை புலிகள் ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை கடைப்பிடித்தார்கள். (இதற்கான இணைப்புபடங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன)


Tigers declare "goodwill" month-long ceasefire - December




Tigers extend unilateral ceasefire - January



LTTE extends unilateral ceasefire - February




Tigers extend cease-fire, warn Sri Lanka over attacks - March






அது என்ன ஒருதலைப்பட்சம்


காரணம் இலங்கை விடுதலை புலிகளின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க விரும்பவில்லை.


ஆக விடுதலை புலிகள் 4 மாதங்கள் போர் நிறுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக கடைப்பிடித்தார்கள்எந்தவிதமான offensive இராணுவ நகர்வுகளையும் செய்யவில்லை.


மறுபுறத்தில் இலங்கை இராணுவம் வழமைபோல தாக்குதல்களை நடத்தியது.


• ஏன் விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள்?


நான் மேலே சொன்ன அதே அரசியல் இலக்கு.


அவர்களின் டிசம்பர் மாத போர் நிறுத்தத்திற்கான உத்தியோக அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.


“If Sri Lanka responds positively by ceasing armed hostilities against our forces and takes steps to implement the Norwegian proposal of mutual confidence building measures, the LTTE will be prepared to extend the period of peace to create cordial conditions for a stable cease-fire and direct negotiations”.


• ஏன் விடுதலை புலிகள் கடைசி வரை போரிட்டே தமிழீழத்தை அடைந்திருக்க முடியாதா?


இதற்கு போரின் உள்ளா்ந்த தன்மையே காரணம்.


விடுதலை புலிகள் ஒரு Non State Military Power.


ஒரு Non state military power இற்கு என்றே போரியல் போதாமைகள் இருக்கின்றன.


அவைகளில் சிலவற்றை தருகிறேன்.


1. விடுதலை புலிகள் இலங்கை இராணுவத்துடன் மரபு போர் (conventional war) நடத்தினார்கள்ஆனால் புலிகளிடம் கனரக ஆயுதங்கள் பெருமளவில் இருந்ததில்லை.


ஒரு மரபுபோரில்  சூட்டு வலு ( Fire Power) மிக முக்கியமானதுஇதற்கு பெருமளவிலான 

Artillery, Rocket artillery, Tanks போன்ற கனரக ஆயுதங்கள் தேவை


ஆனால் tanks, artillery என்பவற்றை ஒரு non state actor கள்ள சந்தையில் வாங்கி வரமுடியாது.

இத்தகைய கனரக ஆயுதங்களுக்கு இன்னொரு இறையாண்மை அரசின் உதவி தேவை.


விடுதலை புலிகள் தம் வசம் வைத்திருந்த Artillery அத்தனையும் தமது அழித்தொழிப்பு சமரினூடாக இலங்கைஇராணுவத்திடம் கைப்பற்றியவை.


இந்த குறைவான இராணுவ வளங்களை வைத்துக்கொண்டு அதி உச்ச பயன்பாட்டை பெற்றார்கள்.


2. அதே போல மரபு போரில் Air superiority என்பது மிக முக்கியமானது


அதற்கு air to air combat செய்யக்கூடிய Fighter Aircraft , தரையில் எதிரியின் இலக்குகளை தாக்கக்கூடிய ground-attack aircraft என்பவை தேவை.


இதையெல்லாம் கள்ள சந்தையில் வாங்க முடியாதுமீண்டும் உங்களுக்கு ஒரு இறையாண்மை அரசின் உதவிதேவை.


அல்லது இலங்கை விமானப்படையின் தாக்குதலை neutralize செய்வதற்கு ஏதுவான Surface to Air Missile (SAM) ஐ வைத்திருக்கவேண்டும்.


முன்னர் சோவியத் யூனியன் உடைந்த போது, கிடைத்த வாய்ப்பில் புலிகள் மிக சிறு தொகையிலான SAM களை வாங்கி உபயோகித்திருந்தார்கள்.


அதை ஈழப்போர் 3 இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தினார்கள். காரணம் அவர்கள் கைவசம் இருந்தது மிக குறைந்த எண்ணிக்கையிலானவை.


இதை புரிந்துகொள்ள இன்னொரு வரலாற்று உதாரணம் தருகிறேன்.


80 களில் சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது, அமெரிக்காவினால் முஜாஹிதீன்களுக்கு stinger வழங்கப்பட்டது. 


இது heat seeking தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் Surface to Air Missile (SAM) ஆகும்.


இந்த stinger missile தனியொரு போர் வீரனால் இயக்கப்படக்கூடிய Man-Portable Air Defense Systems (MANPADS) ஆயுதமாகும்


அமெரிக்கா முஜாஹதீன்களுக்கு வழங்கிய stinger எண்ணிக்கை எவ்வளவு?


 1986 இல் 300 Stinger launchers உம் அடுத்த ஆண்டு 700 உம் வழங்கப்பட்டன. 2000-2500  வரையிலான missiles உம் வழங்கப்பட்டன.


“Three hundred were reportedly delivered in 1986, followed by 700 the next year — between 2000 and 2500 of the missiles were given away by the CIA during the war, according to journalist Steve Coll.”



அதேபோல் விடுதலை புலிகள் வைத்திருந்த விமானங்கள் என்பது 1960 களில் இருந்த செக் நாட்டின் Zlin Z-143 வகைஅதை asymmetric warfare இற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து இருந்தார்கள்


ஆனால் அதை வைத்து air to air combat செய்யமுடியாதுஅதைப்போல ஒரு  ground-attack , close air support (CAS) என்பவற்றை செய்ய முடியாது.


மேலே கூறியது போல சில அதிர்ச்சி தாக்குதல்களை asymmetric முறையில் செய்யலாம்.


3)அதுபோல இலங்கையின் சனத்தொகை.


இலங்கையின் மொத்த சனத்தொகை தோராயமாக 2 கோடி.


அதில் சிங்களவர்கள் ஒன்றரை கோடி பேர்மொத்த சனத்தொகையில் 75%. 

முஸ்லீம் இன மக்கள் 19 லட்சம்

மொத்த சனத்தொகையில் 9%. 


இலங்கை தமிழர்கள் கிட்டத்தட்ட 22 லட்சம் பேர்மொத்த சனத்தொகையில் 11%.


இந்த சனத்தொகையின் வீதத்திற்கு ஏற்பவே படைவலுவும் இருக்கும்.


இதை Military Participation Ratio (MPR) அளவுகோலை வைத்து விளங்கிகொள்ள முடியும்.


ஆக எப்பொழுதுமே 84% vs 11% .


தமிழர்களின் 11% இற்கு ஏற்பவே MPR உம் இருக்கும்


இந்த சனத்தொகை எத்தகைய தாக்கத்தை போர் களத்தில் ஏற்படுத்தும் என்பதை இன்னொரு வகையில்விளக்குகிறேன்.


• விடுதலை புலிகளின் அதி உச்ச போரியல் இலக்காக எது இருக்கும்?


வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் முற்றிலும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது.


அதாவது வட-கிழக்கில் இருந்த இலங்கை இராணுவத்தை முற்றாக அழிப்பது அல்லது அகற்றுவது.


வடகிழக்கில் இருந்த இலங்கை இராணுவத்தை முற்றாக அழிக்கலாமே ஒழிய , விடுதலை புலிகளால் இலங்கையின் மற்றைய பகுதிகளில் இருக்கும் இலங்கை இராணுவத்தை முற்றாக அழிக்கமுடியாது


காரணம் 11% என்றுமே 84%  முற்றிலும் வீழ்த்த முடியாது


வட-கிழக்கிலிருந்து இலங்கை இராணுவத்தை முற்றிலும் அகற்றி அதனை புலிகள் தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் இலங்கை இராணுவம் தமது படைகளை மீள கட்டியமைத்து போர் நகர்வுகளை செய்யவே முனையும்.


ஆக போர் என்பது தொடர் கதையாக நீண்டு கொண்டே செல்லும்.


• இதற்கு எது முற்றுப்புள்ளி?


விடுதலை புலிகள் தமது பிரதேசங்களில் தொடர்ந்து de facto state  மட்டுமே நடத்தி கொண்டிருக்கமுடியாது


அப்படியே நடத்தி கொண்டிருந்தால் இலங்கை இராணுவம் போர் நகர்வுகளை செய்து கொண்டேதான் இருக்கும்


இதற்கு முற்றுப்புள்ளி புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பிற்கூ உலக ஒழுங்கின் அங்கீகாரம் பெறுவதுதான்.


உலக ஒழுங்கின் அங்கீகாரம் இல்லாமல் இறையாண்மை அரசை அமைக்கவே முடியாது


அதனால் வன்னி நிலப்பரப்பில் விடுதலை புலிகள் de facto state  நிறுவினார்கள்.


ஆனையிறவு மீதான ஓயாத அலைகள் அழித்தொழிப்பு சமர் உட்பட பல சமர்கள் விடுதலை புலிகளின் பேரம் பேசும் சக்தியை கூட்டியது.


இலங்கை இராணுவத்தால் தனித்து விடுதலை புலிகளை அழிக்கமுடியாது என்ற புள்ளிக்கு நகர்ந்தது.


இந்த புள்ளிக்கு வந்தபோது தலைவர் பிரபாகரன் இந்த போரியல் வெற்றியை அரசியல் இலக்காக மாற்றுவதற்கான ராஜதந்திர நகர்வுகளை செய்தார்.


அந்த ராஜதந்திர நகர்வுகளில் ஒன்றுதான் ஒருதலைப்பட்சமான 4 மாத போர் நிறுத்தும்நோர்வே மத்தியஸ்தம் எல்லாம்.


இந்த ராஜதந்திர நகர்வெல்லாம் 9/11 நிகழ்வுக்கு பல மாதங்கள் முன்னரேயே தொடங்கிவிட்டது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்.


• இனி சமாதான பேச்சுவார்த்தை காலங்களில் என்ன நடந்தது?


விடுதலை புலிகளின் ஒரே இலக்கான இறையாண்மையுள்ள தமிழீழ அரசை உலக ஒழுங்கு அங்கீகரிக்கவில்லை.


இந்த பேச்சுவார்த்தை காலங்களில் இலங்கைஉலக ஒழுங்கு என்பவை எத்தகைய நகர்வுகளை செய்தன என்பதை விரிவாக எனது முந்தைய கட்டுரையில் பதிவு செய்திருந்தேன்.


அந்த கட்டுரையின் தலைப்பு “எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும் சமாதானத்தை நோக்கியது அல்ல அவை ராஜதந்திர/போரியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கும்பகுதி-1.”


இந்த கட்டுரைக்கான இணைப்பு


எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும் சமாதானத்தை நோக்கியது அல்ல. அவை ராஜதந்திர/போரியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கும். (பகுதி-1)


இந்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தை இலங்கை அரசு எப்படி தமது முதுகெலும்பு முறிக்கப்பட்ட இராணுவத்தை மீள கட்டியெழுப்ப பயன்படுத்தியது என்பதை பகுதி-2 இல் விவரித்திருக்கிறேன்.


இந்த சமாதான பேச்சுவார்த்தையை விடுதலை புலிகளை முடக்குவதற்கான பொறியாகவே உலக ஒழுங்கு பயன்படுத்தியது.


இது தலைவர் பிரபாகரனுக்கு தெரியுமா?


தெரியும்ஆனால் இந்த ஆபத்தான பொறிக்குள் பயணப்பட்டாகவே வேண்டும்.


உலக ஒழுங்கு அங்கீகரித்தால் மட்டுமே இறையாண்மை அரசு சாத்தியம்.


• விடுதலை புலிகள் நகர்த்திய அடுத்த ராஜதந்திர நகர்வு


உலக ஒழுங்கும்இலங்கையும் திணிக்கும் அரசியல் தீர்வுக்கு மாற்றாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை( Interim Self Governing Authority- ISGA) என்ற தீர்வை விடுதலை புலிகள் முன்வைத்தார்கள்.


இந்த ISGA தீர்வு என்பது உலக ஒழுங்கிற்கு தெரியாத ஒரு தீர்வல்ல


அதே 2002 ஆம் ஆண்டு இதே உலக ஒழுங்கு இதே தீர்வு திட்டத்தை Machakos Protocol என்ற பெயரில்   தென் சூடான் ‘இறையாண்மையுள்ள நாடாக’ உருவாவதற்கு பரிந்துரைத்திருந்தது


இந்த Machakos Protocol  முன்மாதிரியாக வைத்துதான் விடுதலை புலிகள் ISGA தீர்வு திட்டத்தை முன்வைத்திருந்தார்கள்.


இந்த ISGA இல் தான் விடுதலை புலிகள் தங்களது ராஜ தந்திர நகர்வை வைத்திருந்தார்கள்


ஏனெனில் இந்த Machakos Protocol தென் சூடானினது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறதுஅத்துடன் தான் பிரிந்து போவதா இல்லையா என்பதை referendum மூலம் தீர்மானிக்கவும் அனுமதிக்கிறது.


நேரடியாக இறையாண்மையுள்ள தமிழீழம் உடனடியாக கிடைக்காவிட்டாலும் , Machakos Protocol ஐ முன்மாதிரியாக கொண்ட ISGA தீர்வுதிட்டம் மூலம் சுற்றி வளைத்து கிடைக்ககூடியதான ராஜதந்திர நகர்வாக புலிகள் இதை முன்வைத்தார்கள்அந்த ISGA வை தான் உலக ஒழுங்கு நிராகரித்தது.


• தலைவர் பிரபாகரன் பொறியை உடைக்க முடிவெடுத்த தருணம்


தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வை உலக ஒழுங்குஇலங்கை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது


அதே நேரம் சமாதான பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இலங்கை அதனது போர் வலுவையும்பொருளாதாரவலுவையும்  பலப்படுத்துவதற்காக உருவாக்க நினைக்கும் ‘கால அவகாசத்தை’ உடைக்க வேண்டியதும் முக்கியம்


இல்லாவிடில் மீண்டும் போர் தொடங்கும் போது  புலிகளுக்கு பெரும் பாதகமான விளைவை தரும். தந்தது என்பதைதான் இறுதிப்போர் நிருபித்தது.


இந்த ‘கால அவகாசத்தில்’ sovereign state பலமடங்கு வித்தியாசத்தில் non state actor  விட தன்னை பலப்படுத்த முடியும் என்பதை உலகின் பல பாகங்களிலும் நடந்த ஆயுதப்போராட்டங்களின் வரலாறு காட்டுகிறது


இலங்கை இந்த சமாதான காலத்தில் படை வலு சமநிலையை எப்படி தனக்கு சாதகமாக மாற்றியது என்பதை தனியாக விளக்குகிறேன்.


இந்த புள்ளியில்தான் தலைவர் பிரபாகரன் உலக ஒழுங்கு/இலங்கை வடிவமைத்த பொறியை உடைத்துகொண்டு வெளியே வர முடிவெடுத்தார்.


•  விடுதலை புலிகளின் ஒரே இலக்கு இறையாண்மையுள்ள தமிழீழ அரசுஇந்த இலக்கில் அவர்கள் சமரசம்செய்து கொண்டதில்லை.


• அந்த இலக்கை அடிப்படையாக வைத்து போர் களத்தில் தமது பேரம் பேசும் சக்தியை கூட்டினார்கள்.


• பின்னர் அந்த பேரம் பேசும் சக்தியை அடிப்படையாக வைத்து இறையாண்மையுள்ள தமிழீழ அரசுக்கான பேச்சுவார்த்தையை உலக ஒழுங்குடன் நடத்தினார்கள்.


• உலக ஒழுங்கு தரவே போவதில்லை என்பது உறுதியானவுடன் திரும்ப போர் களத்தில் இறங்கினார்கள்.


தலைவர் பிரபாகரன் சொன்னது போல  போராடினாலும் அழிவோம்போராடாவிட்டாலும் அழிவோம்ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்பதுதான் காரணம்.


உலக ஒழுங்கில் இறையாண்மை அரசுகள் தமக்கிடையில் ஆடும் சதுரங்க ஆட்டம் மிக கடினமானதுபல பரிமாணங்களை உடையது.

பல நகர்வுகளை கொண்டதுசில நகர்வுகள் தோல்வியில் முடியலாம்ஆனால் இந்த சதுரங்க ஆட்டத்தைஆடியே ஆகவேண்டும்.


.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]