ஆப்கானிஸ்தானில் Stinger missile உம், உக்ரைனில் Anti-Tank Guided Missile (ATGM) உம் - போரியல் பார்வையில்

மேலே தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நிகழ்வுகளில் உள்ள ஒரு பொதுவான போரியல் நகர்வை பற்றியது இந்த பதிவு.


• இரண்டு நிகழ்வுகள்


முதலாவது 80 களில்ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் படைகளுக்கும் முஜாகிதீன்களிற்கும் இடையிலான போர்


இரண்டாவது தற்போது ஓரளவு போர் சூழ்நிலையை  கொண்டிருக்கும் ரஷ்ய-உக்ரைன் மோதலை பற்றியது


• ஆப்கானிஸ்தானில் சோவியத்திற்கும் முஜாகிதீன்களிற்கும் இடையிலான போர்


இன்றுவரை இந்த போர் தொடர்பான ஒரு வாத பிரதிவாதம் போரியல் ஆய்வாளர்களுக்கு இடையே நீடித்துவருகிறது.


அது என்ன?


சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு பின்வாங்கியதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ஸ்டிங்கர் ஏவுகணை (Stinger missile) என ஒரு தரப்பால் குறிப்பிடப்படுகிறது


இன்றும் கூட சோவியத்தின் பின்வாங்கலை குறிப்பிடுவதற்கான குறியீடாக களத்தில் முஜாகிதீன்கள் ஸ்டிங்கருடன் இருக்கும் படத்தை ஊடகங்கள் வெளியிடுவதை காணலாம்.


• இந்த வரலாற்று நிகழ்வின் பின்னணி என்ன?


சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததிலிருந்து  80 களின் நடுப்பகுதிவரை போர்களம் முஜாஹிதீன்களுக்கு சாதகமாக இருக்கவில்லை.


அது ஒருவித stalemate நிலையில் இருந்ததாக அன்றைய ஆப்கானிற்கான சிஐஏ அதிகாரி குறிப்பிடுகிறார்.


"In 85 there was a prevailing sentiment — if you would look at the press and if you were in officialdom. 


if you walked around Washington and talked to people in the defense, intelligence, and executive branch in general — the view was that we were at a stalemate with them," 


Jack Devine, who took over the CIA's Afghan Task Force around that time, told Business Insider.


இந்த stalemate தொடரும் நிலையில்போர் களத்தை தமக்கு சாதகமாக மாற்ற அமெரிக்கா கடுமையாகமுயற்சி செய்கிறது


"There was a sentiment growing, 'How long are we just going to bleed the Russians?'"


President Ronald Reagan decided to make "one more big push" with the Afghan program, 


Devine said, "which I was surprised that the Russians, to the best of my knowledge, never picked up on."


Ronald Reagan தலைமையிலான அமெரிக்க அரசு முஜாகிதீன்களுக்கான ஆயுத உதவியை அதிகரிக்கிறது.


ஆனால் அதிகரிப்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வருவது மிக கடினமாக இருந்தது.


ரஷ்ய விமானப்படை அந்த ‘வழங்கல் பாதை’  மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி ஆயுத சப்ளையை கடினமாக்கி கொண்டிருந்தது.


• இந்த புள்ளியில் ரஷ்ய விமானப்படையை எப்படியாவது தடுத்து நிறுத்தும் தேவை அமெரிக்காவிற்கு எழுகிறது


 அன்றைய கால கட்டத்தில் அதி நவீனஆனால் ஆரம்ப கட்ட நிலையில் ( in development) இருந்த  stinger missile  வழங்க அமெரிக்கா முடிவு செய்கிறது.






Stinger Missile


இந்த stinger missile தனியொரு போர் வீரனால் இயக்கப்படக்கூடிய Man-Portable Air Defense Systems (MANPADS) ஆயுதமாகும்


இது heat seeking தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் Surface to Air Missile (SAM) ஆகும்.


இந்த அதி நவீன ஸ்டிங்கரை வழங்குவதில் அமெரிக்காவிற்கு சில பிரச்சினைகள் இருந்தன.


• இந்த அதி நவீன ஆயுதங்களை முஜாகிதீன்களிடம் இருந்து சோவியத் கைப்பற்றினால் என்ன ஆகும்?


• ஈரானின் கையில் கிடைத்தால் என்ன நடக்கும்?


• முஜாகிதீன்களிடம் கொடுத்தாலும் அது பாதுகாப்பானதா?


என்ற பல சிக்கல்கள் இருந்தன


போர் களத்தின் தேவை கருதி வழங்க முடிவு செய்யப்பட்டது.


1986 இல் 300 Stinger launchers உம் அடுத்த ஆண்டு 700 உம் வழங்கப்பட்டன. 2000-2500  வரையிலான missiles உம் வழங்கப்பட்டன.


“Three hundred were reportedly delivered in 1986, followed by 700 the next year — between 2000 and 2500 of the missiles were given away by the CIA during the war, according to journalist Steve Coll.”


• போர் களத்தில் Stinger ஏற்படுத்திய விளைவுகள்


முதல் தாக்குதல் செப்டம்பர் 26, 1986 அன்று நடந்ததுஅன்று இரண்டு Mi-24 attack helicopters வீழ்த்தப்பட்டன.


அடுத்த இரண்டு வருடங்களில் சோவியத் விமான படை குறைந்தது 270 ஹெலிகாப்டர்கள்போர் விமானங்களை ஸ்டிங்கர் தாக்குதலில் இழந்ததாக தரவுகள் கூறுகின்றன.


“Soviet officials calculated that within the first year of its use, the Stinger had a success rate of 20%, up from about 3% when the rebels were using the SA-7 system, which was a Soviet copy of a much older US weapon. Nearly 270 aircraft were downed in total, according to one report”


ஆக சோவியத் விமான படைக்கு ஸ்டிங்கர் ஏற்படுத்திய இழப்புகள்சோவியத் ஆப்கானிலிருந்து பின்வாங்கியதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக ஒரு தரப்பால் குறிப்பிடப்படுகிறது.


• இதை மறுக்கும் மறுதரப்பின் வாதங்கள்


இந்த மறுதரப்பு ஸ்டிங்கரை எதிர்கொள்ள சோவியத் விமான படை கையாண்ட உத்திகள் பலனளித்ததாக குறிப்பிடுகிறது.


• அதிக உயரத்தில் சோவியத் போர் விமானங்கள் பறக்க ஆரம்பித்தனகுறைந்தது 20000 அடி உயரத்தில்(safety altitude) பறந்தனஅந்த உயரம் ஸ்டிங்கரின் வீச்சு எல்லையை விட கூடியது.


• Stinger இன் heat seeking தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் வகையில் flares  பயன்படுத்தியது.


• தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இரவு நேரம் தாக்குதலை நடத்தினகாரணம் முஜாகிதீன்களிடம் night vision equipment இல்லாதிருந்தது.


• புதிதாக களத்தில் இறங்கியிருக்கும் அமெரிக்க ஸ்டிங்கர் பற்றிய மேலதிக தொழில்நுட்ப தகவல்கள் சோவியத்திற்கு தேவைப்பட்டதுஅந்த தொழில்நுட்ப தகவல்களை வைத்துக்கொண்டே சோவியத் விமானங்கள் தங்களுக்கான தற்காப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தமுடியும்.


அதன்படி போர் களத்தில் ஸ்டிங்கருடன் அலையும் முஜாகிதீன்களை பிடிப்பதற்கென சோவியத்தின் சிறப்பு படையணிகள் களம் இறக்கப்பட்டன.


அந்த முயற்சியில் 8 ஸ்டிங்கர்களை  சோவியத் கைப்பற்றியது


பின்னர் அதன் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சோவியத்தின் Sukhoi Su-25 போர்விமானத்திற்கான countermeasures மேம்படுத்தப்பட்டனஅதன்பிறகு இழப்புகள் குறைய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.


• இது எல்லாவற்றையும் விட முக்கியமான ஆதாரம் இந்த மறுதரப்பால் முன்வைக்கப்படுகிறது. 


அதாவது அக்டோபர் 1985 இலேயேகொர்பச்சேவ் தலைமையிலான சோவியத் அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகளை  வாபஸ் பெறுவது என்ற இரகசியமான முடிவை எடுத்துவிட்டதுஇது ஸ்டிங்கர் வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பு என்பது இங்கு முக்கியமான விடயம்.


“The Soviet decision to withdraw from Afghanistan was made in October 1985, several months before Stinger missiles entered Afghanistan in significant quantities in the autumn of 1986”


• இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் முடிவு என்னசோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு பின்வாங்கியதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஸ்டிங்கர் ஏவுகணையும் ஒன்றா அல்லது இல்லையா?


அன்று ஆப்கானில் சோவியத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் சிஐஏ அதிகாரி Milton Bearden முன்வைக்கும் ஒரு வாதம் மிக முக்கியமானது.


• ஏன் ஸ்டிங்கரை களத்தில் இறக்கினார்கள்?


பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிற்கான ஆயுத வழங்கல் பாதைக்கு சோவியத் விமான படை பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால்அதை எதிர்கொள்வதற்காகத்தான் ஸ்டிங்கரை களத்தில் இறக்கினார்கள்.


எப்பொழுது சோவியத் விமானங்கள் அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தனவோ அன்றே ஸ்டிங்கரின் போரியல் நோக்கம் நிறைவேறிவிட்டது.


அதிக உயரத்தில் பறந்து நடத்தும் விமான தாக்குதல்கள் துல்லியமாக இருப்பதில்லை.


இதை Milton Bearden பின்வருமாறு விவரிக்கிறார்.


“The only reliable Soviet countermeasures employed in Afghanistan were flying above 12,000 feet or at night. 


Either measure negated the tactical value of Soviet air forces and gave the mujahideen freedom of movement on the ground, which is why the United States introduced the Stinger in the first place. 


In short, the Stinger did its job.”


• முடிவு


இதை இன்னொரு கோணத்தில் நான் அணுகுகிறேன்.


உண்மையில் போரில் வெற்றி என்பதை போரியல் அறிஞர்கள் பின்வருமாறு வரையறுக்கிறார்கள்.


“Destroying the enemy's military assets and his/her will to fight is the defining aim of all wars”


எதிரியின் இராணுவ வளங்களை முற்றாக அழித்தல் அத்துடன் எதிரியின் போரிடுவதற்கான மன துணிவை முற்றாக அழித்தலே போரில் வெற்றி என்பதன் உண்மையான பொருள்.


மேலே கூறிய சோவியத் படையின் ஆப்கான் போரை எடுத்து கொண்டால்ஸ்டிங்கர் சோவியத் விமானபடைக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பெரும் இழப்புகளை விலையாக கொடுத்துத்தான் தொடர்ந்து சோவியத் படை ஆப்கானில் நிலைகொள்ளமுடியும் என்ற நிலையை ஸ்டிங்கர் ஏற்படுத்தியிருக்கிறதுஆனால் சோவியத் படையினை போரியல்ரீதியில் முற்றாக தோற்கடிக்கவில்லை.


இந்த புள்ளியில் சோவியத் படை தொடர்ந்து நீடிப்பதற்கான அதன் மன துணிவை அசைத்திருக்கிறது.


ஒரு அந்நிய இராணுவம் வேறொரு நாட்டின் நிலப்பரப்பை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போதுஅதனது பொருளாதார,இராணுவ வள இழப்புகள் தனது அரசியல்,போரியல் இலக்குகளுக்கு ஏற்றதுதானா என்பதை மதிப்பிட்டு கொண்டே இருக்கும்.


எப்பொழுது அதன் இழப்புகள் இலக்கின் பயனை விட அதிகமாக இருக்கிறதோ , அதன்பிறகு ஆக்கிரமிப்பினை தொடர்வதில் பயனில்லை.


“The cost of an occupation is composed of both direct and indirect costs. 


The direct costs include the financial costs of the troops that must be deployed to keep the peace in the occupied territory and the occupation administration that must be established. 


Additionally, any lives lost as a result of resistance to the occupation are a direct cost. 


The indirect costs of an occupation are more

difficult to measure. “


(David M. Edelstein  எழுதிய Occupational Hazards- Why Military Occupations Succeed or Fail எனும்ஆய்வு கட்டுரையிலிருந்து)


பெரும் இழப்புகளை விலையாக கொடுத்து ஆக்கிரமிப்பினை தொடர்வது சோவியத்தின் பார்வையில் இலக்கின் பயனைவிட அதிகமானது


அதனால் போரியல்ரீதியில் முற்றாக சோவியத் படைகள் தோற்கடிக்கப்படாத போதும் இழப்புகள்மற்றைய காரணிகளை அடிப்படையாக வைத்து சோவியத் படைகள் ஆப்கானை விட்டு விலக தீர்மானிக்கின்றன.


• மேலே இதுவரை கூறிய அதே புள்ளியை நோக்கித்தான் அமெரிக்கா உக்ரைனில் காயை நகர்த்துகிறது


ரஷ்ய-உக்ரைன் முறுகல் நிலை இறுக்கமடைந்தவுடன்மேற்குலக நாடுகள் பெருந்தொகையான anti-tank guided missile (ATGM) களை தொடர்ந்து உக்ரைனிற்கு தந்து கொண்டே இருக்கின்றன


அத்துடன் Man-Portable Air Defense Systems (MANPADS) ஐயும் அனுப்புகின்றன.


• என்ன காரணம்?


மேலே கூறியது போல ரஷ்ய ஆக்கிரமிப்பினை அதிக இழப்புகள் கொண்டதாக மாற்றுவது.


மரபு போரில் எண்ணிக்கை அடிப்படையிலும்தொழில்நுட்பத்திலும் ரஷ்ய படையின் main battle tank (MBT) உக்ரைனை விட பல மடங்கு பலம் வாய்ந்தவை.


ஒருவேளை’ ரஷ்ய இராணுவம் உக்ரைனில் நுழைந்தால்அதனது MBT களுக்கு பெரும் இழப்புகளைஏற்படுத்தும் விதமாக மேற்குலகம் ATGM களை உக்ரைனிற்கு வாரி வழங்கி வருகிறது


இந்த ‘ஒருவேளை’ என்ற சொல்லாடலை மிகவும் தேர்ந்தெடுத்தே பயன்படுத்துகிறேன்


காரணம் எனது அனுமானத்தின்படி ரஷ்யாவின் மிக கடைசி தெரிவாகத்தான் உக்ரைனிற்கு இராணுவத்தை அனுப்புவதாக இருக்கும்


அதனது பிரதான நோக்கம் தன்னை இலக்காக வைத்து நேட்டோ செய்யும் விரிவாக்கத்தினை தடுத்து நிறுத்துவதும்உக்ரைனை தனது செல்வாக்கிற்கு உட்பட்ட நாடாக வைத்திருக்க முனைவதுமே.


இதைப்பற்றி விரிவாக எனது முன்னைய பதிவில் விளக்கியிருக்கிறேன்.




• ஏன் anti-tank guided missile (ATGM)?


அமெரிக்காவின் FGM-148 Javelin இன்றைய உலகின் அதி நவீன anti-tank guided missile களில் ஒன்று.


அதன் சிறப்பம்சம் top attack. 


அதாவது இந்த ஏவுகணைகள் ஒரு tank இன் மேல்பகுதியை வானில் இருந்து  கீழாக தாக்குபவை. Tank இன் பலவீனமான பகுதி அதனது மேல்பகுதியே.


top attack weapon is designed to attack armoured vehicles from above as a form of plunging fire , as the armour is usually thinnest on the top of the vehicle.


இதனை எதிர்கொள்ளும் விதமாக ரஷ்யாவின் பெரும்பாலான MBT களுக்கு Arena-M எனும் ரஷ்ய Active protection system பொருத்தப்பட்டிருக்கிறது.


அத்துடன் இன்றைய MBT கள் Reactive armour களை கொண்டவை.


ஆனால் அமெரிக்காவும்,மேற்குலகும் தங்களுடைய ATGM ரஷ்யாவின் MBT களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் என நம்புகின்றன.


இதை போர்களம்தான் நிரூபிக்கும்.


ஆப்கானில் stinger ஒரு game changer ஆக இருந்ததாக அமெரிக்கா நம்புகிறதுஅதுபோல அதனுடைய்ATGM உக்ரைனிலும் ஒரு game changer ஆக இருக்கும் என நம்புவது போல இருக்கிறது.


இந்த இரண்டு நிகழ்விலும் பின்னே உள்ள போரியல் நகர்வு என்ன?


போரியல்ரீதியாக தோற்கடிக்க முடியாதபோதுஅந்த இராணுவத்தின் ஆக்கிரமிப்பினை பெரும் இழப்புகள்உடையதாக மாற்றுவது.


.ஜெயகாந்த்


( 16/02/2022 இந்த கட்டுரை எழுதப்பட்டது) 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]