21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும் அமெரிக்க- சீன போட்டி ( US-CHINA GREAT POWER COMPETITION) - குறுந்தொடர் (பகுதி-2)


3. சீனாவின் மூன்றாவது நகர்வு நீண்டகால அடிப்படையிலானது. இது Science and Technology (S&T) பற்றியது. 


இந்த பதிவை வாசிப்பதற்கு முன் , வரலாற்றின் முக்கியமான பகுதியை பற்றிய புரிதல் அவசியம். அதனால் அந்த வரலாற்றை முதலில்  விளக்குகிறேன்.

கடந்த 500 ஆண்டுகால உலக நிகழ்வுகளை பெரும்பாலும் வடிவமைத்தது ஐரோப்பியர்களே. அமெரிக்காவும் ஐரோப்பிய வேரை கொண்டதுதான்.

கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக ஐரோப்பியர் உருவாக்கிய விதிகளினூடாகவே உலக ஒழுங்கு செயற்பட்டு கொண்டிருக்கிறது. 

இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு கேள்விக்கு பதிலை பெற முயன்றுகொண்டிருக்கிறார்கள். 

உலக சனத்தொகையில் 10% இற்கும் குறைவான ஐரோப்பியனரால் எப்படி இந்த உலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது என்பதே அந்த கேள்வி. 

இன்றுவரை சகல வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புகொள்ளக்கூடிய துல்லியமான ஒற்றை விடையை பெற இயலவில்லை. 

ஆனால் ஒரு ‘தொடர்நிகழ்வு’ அவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்கு  வகித்ததை ஒப்புக்கொள்கிறார்கள். 


இது ஐரோப்பாவில் 14 ஆம் நூற்றாண்டில்  தொடங்கி 19 ம் நூற்றாண்டுவரை நீடித்த தொடர்நிகழ்வு ( chain reaction) . அவையாவன.


• மறுமலர்ச்சிகாலம் (renaissance )

• புதிய சிந்தனை காலம் (Age of Enlightenment) 

• நாடுகாண் பயணங்கள் (Age of discovery) 

• விஞ்ஞான புரட்சி (Scientific revolution) 

• தொழில்துறை புரட்சி (Industrial revolution) 


இந்த chain reaction தான்  ஐரோப்பிய நாடுகளின் இராணுவ ஆற்றலையும் , பொருளாதார ஆற்றலையும் பலமடங்கு பெருப்பித்தது. 

இந்த தொடர்நிகழ்வு ஐரோப்பிய நாடுகளை குறிப்பாக அறிவியலில் மற்றைய உலகநாடுகளை விட பலபடி தாண்டி முன்னிறுத்தின.

இந்த அறிவியலே ( S&T)  ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பெருப்பிக்க உதவுகிறது. 

அதைவிட முக்கியமாக போரியல் மேலாண்மையை (military superiority) தக்கவைக்க உதவும் முக்கியமான காரணியே இந்த அறிவியல்தான்.

இந்த கணம்வரை அமெரிக்காவும், ஐரோப்பாவும் அறிவியலில் ஒரு படி முன்னே இருப்பதை உறுதிசெய்வதன் மூலம்தான் தங்களது military superiority ஐ தக்கவைத்து கொள்கின்றன. 


Technology Superiority

சீனா தொடர்ச்சியாக அதனது இராணுவத்தை நவீனமயப்படுத்தி கொண்டு ( rapid modernization) வந்தபோதிலும் , இன்றுவரை அதற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் இடையில் கணிசமான இடைவெளி இருப்பதன் காரணம் அமெரிக்காவின் technology superiority தான். 

அதனால் military & economic superiority ஐ உறுதிப்படுத்த technology superiority ஐ தன்வசப்படுத்த வேண்டிய தேவையை  சீனா நன்கு உணர்ந்துள்ளது. 

அதற்காக 90 களின் மத்தியில்,  தனது பல்கலைகழகங்களை, உலகின் அதிசிறந்த பல்கலைகழகங்களின் தரத்துக்கு கொண்டுசெல்வதற்கான பல திட்டங்களை உருவாக்கியது.

In 1995 China started Project 211 to develop 100 universities and several key scientific disciplines by the early 21st century. Three years later it launched Project 985, which has come to focus on 39 key research universities of excellence. 

இங்கு சீனா அதனது பல்கலைகழகங்களினூடாக உருவாக்க முனைவது STEM ( Science, Technology, Engineering, and Mathematics) வல்லுனர்களையே.

ஆனால் இந்த technology superiority என்பது  உடனே நிகழக்கூடியது அல்ல. அது கைவசமாக பல பத்து வருடங்கள் ஆகும். 

அந்த நாட்டின் கல்வித்துறை சீரமைப்பு , உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு, Research and Development ( R&D) இற்கான நிதி ஒதுக்கீடு , மக்களின் சிந்தனை போக்கில் அறிவியலின் தாக்கம் என பல தளங்களினுனாடாக நிகழவேண்டிய ஒன்று என்பதை சீனா உணர்ந்துள்ளது. 


சீனாவின் இந்த technology superiority  இலக்கை நோக்கிய முன்னெடுப்புகள் அதற்கான பலனை தர தொடங்கியுள்ளதா?

தர தொடங்கியதற்கான சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. சில குறியீடுகள் மூலம் ஒரு நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி அளவிடப்படுகின்றன.

அவைகளில் முக்கியமானவை கீழே.


வருடத்தோறும் வெளியிடப்படும் விஞ்ஞான ஆய்வுகளின் எண்ணிக்கை (research papers published in top peer-reviewed journals around the world)


வருடந்தோறும் அதனது பல்கலைகழகங்கள் உருவாக்கும் STEM பட்டதாரிகளின் எண்ணிக்கை (The output of graduates trained in the sciences is an important indicator of how substantial, and sustainable, a research program is)


ஒரு ஆண்டில் ஒரு நாடு பெற்றுக்கொண்ட patent களின் எண்ணிக்கை.


ஒரு நாடு அதனது Research& Development (R&D) இற்காக ஒதுக்கும் நிதி. (Research is the foundation for engineering invention) 

இந்த குறியீடுகளை அடிப்படையாக கொண்டு அலசினால், அறிவியல் துறையில்  கடந்த இருபது வருடங்களில் சீனா பெருமளவு வளர்ச்சி அடைந்திருப்பதை காணலாம். ( பட இணைப்பு கீழே)

வருடந்தோறும் இன்று அதிகமான STEM பட்டதாரிகளை சீனாவும், இந்தியாவுமே உருவாக்குகின்றன. ( பட இணைப்பு கீழே)

By 2030, China and India could account for more than 60% of the STEM graduates in major economies, compared with only 8% in Europe and 4% in the United States.

மேலே நான் குறிப்பிட்ட குறியீடுகள் இதே போக்கில்  அடுத்த சில பத்து வருடங்களுக்கு தொடர்ந்து நீடிக்குமாயின் சீனா  அதனது technology superiority இலக்கை அடைவது சாத்தியமே. 

எனது பகுதி-1 இல் ‘economic strength என்பது மிக முக்கியமானது.military strength ஐ கட்டியெழுப்புவதற்கான அடிப்படை ஆதாரமே economic strength தான். இந்த புள்ளியை மையமாக வைத்தே சீனா காயை நகர்த்துகிறது. ‘ என குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது அந்த புள்ளியை விளக்குகிறேன்.


Economic strength, Technology superiority, Military superiority என்ற மூன்றும் சந்திக்கும் புள்ளி

சீனாவின் பொருளாதார வளர்ச்சி இதே வேகத்தில் தொடரும்போது இன்னும் இருபது வருடங்களில் அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிடும். 

சீனாவின் பொருளாதாரம் பெரிதாகும்போது அதனது  R&D இற்கான நிதி, Military expenses என்பவை பெருமளவில் அதிகரிக்கும். 

அதேநேரத்தில் அமெரிக்கா அதனது R&D , Military  என இரண்டிலும் சீனாவை விட அதிகமாக நிதி ஒதுக்குவதற்கு ( outspend) அதனது பொருளாதாரம் அனுமதிக்காது. 

அவ்வாறு அமெரிக்காவின் R&D சீனாவோடு போட்டிபோட முடியாத போது , அதனது Edge ஐ இழக்க ஆரம்பிக்கும். 

இது அமெரிக்கா அதனது technology superiority ஐ இழக்க வழிவகுக்கும்.அதை இழக்கும்போது அமெரிக்கா அதனது military superiority ஐயும் இழக்க ஆரம்பிக்கும். 

இப்பொழுதே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்  பல்கலைகழக படிப்பிற்கான செலவு அதிகமாக இருப்பதால் இளம் தலைமுறையினர் பட்டபடிப்பை  தவிர்க்க தொடங்கும் போக்கு உருவாகிவருகின்றது. 

அதைவிட முக்கியமானது இந்த நாட்டை சேர்ந்தவர்கள் STEM பாடங்களில் தங்களது பட்டபடிப்பை மேற்கொள்வது குறைந்துகொண்டே வருகிறது என்பதும் கவனிக்கதக்கது.


மேலே கூறியதன் சாராம்சம்

இப்பொழுது இந்த போக்கு அடுத்த சில பத்து வருடங்களுக்கு நடக்கும்போது , நான் கூறியதை வரிசைபடுத்தி பாருங்கள்.

ஒரு பக்கம் சீனா அதனது economic strength ஐயும் military strength ஐயும் பெருப்பித்து கொண்டே வருகிறது. அத்துடன் நான் மேற்சொன்ன technology superiority ஐயும் தொட்டுவிடும். 

மறுபக்கம் அமெரிக்காவினால் R&D , Military களில் சீனாவை outspend செய்யமுடியாதபோது அதனது Edge ஐ இழக்க ஆரம்பிக்கும்.அது அதனது technology superiority ஐ இழப்பதற்கு வழிவகுக்கும். அதை இழந்தால் அதனது military superiority ஐ இழப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இதுதான் சீனாவின் மூலோபாயத்தின் ( strategy) அடுக்குகள். 

நான் மேலே குறிப்பிட்டது போல அடுத்த சில பத்து வருடங்களுக்கு இது நடக்கும்போது , மோதலின்றி அமெரிக்கா அதனது primacy இடத்தை இழக்கும் என சீனா நினைக்கிறது.

அதேவேளை சீனா technology superiority இலக்கை  அடையும் வரை , தனக்கும் அமெரிக்காவின் superior weapons களுக்குமான இடைவெளியை குறைக்க,  espionage முறைகளையும் கையாண்டு ( உளவின் மூலம் தகவல் திருடுதல்) அதனது ஆயுத, தளவாடங்களை நவீனமயப்படுத்தி கொண்டிருக்கும்.


இதுவரை இந்த பந்தியை வாசித்தவர்களுக்கு சீனா அறிவியலில் ஐரோப்பா, அமெரிக்காவை வீழ்த்தமுடியுமா என்ற கேள்வியை எழுப்பலாம். 

அத்துடன் அறிவியலில் வளர்ச்சி அடைந்து இருந்தால் ஏன் espionage முறை மூலம் இராணுவதகவல்களை திருடவேண்டும் என்ற கேள்வியும் சேர்ந்து எழலாம். 

உலக வரலாறு நன்கு பரிச்சயமாகியிருந்தால் உங்களுக்கு இந்த இரண்டு  கேள்விகளுமே எழாது. 

நான் மேற்சொன்ன chain reaction ஐரோப்பாவில் தொடங்கும் முன்புவரை , சுமார் 15 நூற்றாண்டுகளாக அறிவியல் துறையில் முன்னோடியாக இருந்தது சீனாவே என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? 

சீனாவின் அறிவியல் துறை அறிவு  silk route trade மூலமாக மத்திய கிழக்கை வந்தடைந்தது. அதன் பின்னர் மத்திய கிழக்கில் பெரும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது. அதை வரலாற்று ஆய்வாளர்கள் Islamic Golden Age என்று அழைக்கிறார்கள். 

அதன்பின்னே அந்த அறிவு பரிமாற்றம் ஐரோப்பாவினுள் நிகழ்ந்தது. நான் மேற்சொன்ன renaissance உம் அதனூடாக நிகழ்ந்த ஒன்றுதான். 

அதேபோல espionage என்பதும் ராஜதந்திர/ போரியல் தளங்களில் இயல்பாக நடப்பதுதான். 

சீனா முதல் பதினைந்து நூற்றாண்டுகளில் எப்படி Middle Kingdom என்ற பெயரில் உலகின் most powerful country ஆக இருந்தது என்பதை இந்த தொடரின் இன்னொரு பகுதியில் விளக்குகிறேன்.

மற்றைய பகுதிகளுக்கான இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.


க.ஜெயகாந்த்


21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும் அமெரிக்க- சீன போட்டி

 (US-CHINA GREAT POWER COMPETITION) - குறுந்தொடர் 


(பகுதி - 1)

(பகுதி - 3)

(பகுதி - 5)

(பகுதி - 6)













Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]