21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும் அமெரிக்க- சீன போட்டி ( US-CHINA GREAT POWER COMPETITION) - குறுந்தொடர் (பகுதி-3)
எனது முந்தைய பதிவில் உலக ஒழுங்கு, அதனது இயங்கு விதி, உலக ஒழுங்கில் அரசுகளுக்கு இடையேயான உறவுகள் , அதை தீர்மானிக்கும் காரணிகள், மற்றைய great powers களின் நடத்தை, நோக்கம், இயங்கும் பண்பு என்பவற்றை கணிக்க வேண்டிய தேவை,அதற்கு இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்த theory தேவைப்படுவதன் அவசியம்,அந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட INTERNATIONAL RELATIONS Theory என்பவற்றையெல்லாம் சுருக்கமாக விவரித்திருந்தேன்.
இன்று ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் நடக்கும் சீன-அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் ஆகிய நாடுகளுக்குஇடையேயான Great Power Politics எனும் ஆட்டத்தை ,International Relations Theory (IR) என்ற கண்ணாடியை உங்களுக்கு அணிவித்து அதனூடாக இதை எப்படி புரிந்துகொள்வது என்பதை மிக சுருக்கமாக விளக்கவே இந்த பதிவு.
உண்மையில் இந்த பதிவு ‘அமெரிக்காவை வீழ்த்துவதற்கான சீனாவின் வியூகம்’ என்ற எனது குறுந்தொடரின் ஒரு பகுதி.
இந்த பதிவை 04/07/20 அன்று எனது முடக்கப்பட்ட முன்னைய முகநூலில் பதிவிட்டிருந்தேன். இது ஒருவகையில் மீள்பதிவும் கூட.
அதேநேரம் இந்த பதிவின் கடைசி பகுதி அண்மையில் நிகழ்ந்த மாற்றங்களை உள்ளடக்கி எழுதியிருக்கிறேன்.
• இனி எனது முந்தைய பதிவு கீழே
அடுத்த சில பத்தாண்டுகளுக்கு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் விளையாடப்படும் இந்த புவிசார் அரசியலின் சதுரங்க ஆட்டத்தை தமிழர் சமூகம் புரிந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.
International Relations Theory (IR) இல் பெரும் செல்வாக்கு செலுத்தும் REALISM என்னும் கோட்பாடினூடாகவே இதை நான் அணுகுகிறேன்.
ஆசிய பிராந்தியத்தில் இன்று நடப்பதை புரிந்துகொள்ள , இந்த Realism theory இல் உள்ள சில அடிப்படை concepts களை சுருக்கமாக முதலில் விளக்கிவிடுகிறேன்.
• ANARCHIC SYSTEM
இந்த உலகம் இயங்கும் விதத்தை International system என அழைப்போம். இந்த International system ஐ இயக்குவது இறையாண்மையுள்ள அரசுகளே (states). இந்த அரசுகளை மிஞ்சிய அதிகாரம் உள்ள நிறுவனம் உலகில் எதுவுமில்லை. இந்த International system இன் Main Actors என்பது இந்த அரசுகள் தான்.
இந்த international system இல் பலவீனமான states களும் உண்டு. பலமான states களும் உண்டு. இந்த பலமான states களைதான் நாம் Great Powers என அழைக்கிறோம்.
ஆனால் Great Powers தான் உலகம் இயங்குவதற்கான விதிகளை வகுக்கின்றன.
பலவீனமான states விதிகளின் படி நடந்துகொள்ளும். ஆனால் Great Powers விதிகளின் படி நடந்துகொள்ளும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்த Great powers விதிகளை மீறி நடந்தாலோ, இன்னொரு நாட்டின் மீது அதிகாரத்தை பிரயோகித்தாலோ அதை தடுக்கும் அதிகாரம் உடைய நிறுவனம் எதுவுமில்லை.
உடனே ஐக்கிய நாடுகள் சபை ( UN) தடுத்து நிறுத்தும் என கூறிவிடாதீர்கள். அவைகள் அதிகாரம் உடையதாக தோற்றமளிப்பதன் காரணமே இந்த Great powers அதன் பின்னே இருப்பதால்தான்.
ஆகவே ஒரு குறிப்பிட்ட Great Power மற்றைய great power மீதோ , மற்றைய பலவீனமான states மீதோஅதிகாரத்தை செலுத்த முனையும்போது அதை தடுத்து நிறுத்த கூடிய அதிகாரமிக்க ஒன்றும் இந்த உலகத்தில் இல்லை. இந்த பாதுகாப்பற்ற , நிச்சயமற்ற தன்மையையே ANARCHIC SYSTEM என குறிப்பிடப்படுகிறது.
ANARCHY - A system operating in the absence of any central government. It does not imply chaos but the absence of political authority.
• SELF HELP
இந்த anarchic system இல், எந்த great power எந்த நோக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை கண்டறிவது கடினம். அதனால் ஒவ்வொரு states உம் அதனது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள தன்னாலான முயற்சிகளை எடுக்கவேண்டியது கட்டாயம். இது self help என அழைக்கப்படுகிறது.
• POWER
இங்கு ஒவ்வொரு states உம் ‘ தன்னை அதனது முயற்சியில்தான் காப்பாற்றி கொள்ளவேண்டும் ( self help) ‘ என்ற நிலையில் இருப்பதால், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களது POWER ஐ அதிகரித்து கொள்ளமுயலும். இங்கு POWER என்பது பெரும்பாலும் Military Power ஐ தான் குறிக்கிறது.
• SECURITY DILEMMA
இவ்வாறு ஒரு state தனது பாதுகாப்பை உறுதிபடுத்த அதனது Military Power ஐ அதிகரிக்கும்போது என்னநடக்கும்?
அதனது அண்டைநாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். காரணம் ஒரு குறிப்பிட்டstate தனது military power ஐ அதிகரிக்கும்போது, அதனது நோக்கம் குறித்து அண்டை நாடுகளுக்கு சந்தேகம், பயம் எழுவது தவிர்க்கமுடியாதது.
இதனால் அண்டை நாடுகளும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களது Military Power ஐ அதிகரிக்க தொடங்கும்.
இந்த states களுக்கு இடையே ஒரு ஆயுத போட்டி (arms race) உருவாகும். இந்த நிலைதான் security dilemma என அழைக்கப்படுகிறது.
• HEGEMONY & BALANCE OF POWER
இந்த security dilemma தொடர்ந்து கொண்டே போகையில் , ஏதோ ஒரு கட்டத்தில் அது போராக மாறும் சாத்தியம் உண்டு. இன்றைய நவீன States போரை முடிந்தளவு தவிர்க்க விரும்பினாலும், அவைகளின் விருப்பமின்றியே இந்த போரை நடத்த வேண்டிய நிர்ப்பந்ததிற்கு உள்ளாகலாம்.
அதை தடுத்து நிறுத்தும் வகையில் இரு வேறு வகையான ஏற்பாடுகளை states கையாளுகின்றன. அவையாவன
1) Hegemony
2) Balance Of Power
• HEGEMONY
இது ஒரு state தன்னுடைய பிராந்தியத்தில் , அண்டை நாட்டு states தன்னுடன் போட்டி போட முடியாத அளவிற்கு , POWER இல் உச்சநிலையை அடைதலை குறிக்கிறது. இந்த hegemony ஐ ஒரு state தொட்டுவிடும்போது, அதன் பிறகு அண்டை நாடுகள் அதனது arms race ஐ கைவிட்டு, hegemony ஐ அடைந்த நாட்டிற்கு ஏற்ப நெகிழ்வுதன்மை உடையதாக இயங்க ஆரம்பிக்கும்.
• BALANCE OF POWER
security dilemma இருக்கும் பிராந்தியத்தில் ஒவ்வொரு states களும் தங்களது military power ஐ அதிகரிக்க முயன்றுகொண்டே இருக்கும் என்று கூறினேன்.
ஒரு பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட state தனது military power ஐ அதிகரித்து ,அண்டை நாடுகள் மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் நிலைக்கு வளர்ந்துவிடுவதை தடுக்க மற்றைய நாடுகளும் தங்களது military power ஐ சமாந்தரமாக அதிகரித்து கொண்டே செல்லும்.
அப்படி நடக்கும்போது அந்த பிராந்தியத்தில் உள்ள states களின் military power ஒப்பீட்டளவில் சமமானதாகவே இருக்கும். அத்தகைய நிலையை அடையும்போது எந்த state உம் மற்றைய state மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் சாத்தியம் உருவாகாது. இந்த ஒப்பீட்டளவில் states களுக்கு இடையே சமமான power இருக்கும் நிலையே Balance Of Power என அழைக்கப்படுகிறது.
இந்த Balance Of Power ஐ இருவகையாக state அடையமுடியும்.
1 . Increasing their own power
தனது வளங்களை கொண்டே military power ஐ அதிகரித்து கொள்ளுதல்.
2 . Alliances
எல்லா state களுமே சுயமாகவே தங்களது military power ஐ அதிகரிக்கும் நிலையில் இருப்பதில்லை. காரணம் வள நெருக்கடி
(resource constraints), பொருளாதார நெருக்கடி ( monetary constraints) என்பவை அவைகளை தடுக்கலாம். அதை நிவர்த்தி செய்ய இன்னொரு states உடன் இணைந்து செயற்பட்டு அந்த power of balance ஐ தக்கவைக்க முயற்சிக்கும்.
இது தவிர்த்து ஒரு state அதனது பாதுகாப்பை உறுதிப்படுத்த தன் கைவசம் வைத்திருக்கும் strategies களை சுருக்கமாக நான்கு வகைக்குள் அடக்கலாம்.
• Balancing - நான் மேலே கூறிய balance of power செயற்பாட்டில் இறங்குவது.
• Buckpassing - ஒரு state தனக்கான பாதுகாப்பை உறுதி செய்ய , இதே பிரச்சினையை எதிர்கொள்ளும்இன்னொரு state இன் தலையில் பெரும் பொறுப்பை சுமத்துதல்.
உதாரணம்: Cold War காலங்களில் சோவியத் யூனியனின் ஆக்கிரப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியநிலையில் மேற்கு ஐரோப்பா இருந்தது. சோவியத்தை வீழ்த்த வேண்டிய தேவையில் இருந்த அமெரிக்காவின் தலையில், மேற்கு ஐரோப்பாவை காப்பாற்றுவதற்கான முழு பொறுப்பையும் , செலவுகளையும் மேற்கு ஐரோப்பா தூக்கிவைத்தது.
( states can let another state pay the cost of balancing)
• Bandwagoning- பலவீனமான state இந்த மாதிரி balancing வேலையில் இறங்காமல், பேசாமல் பலமானstate இன் பக்கம் சாய்ந்துவிடுவது.
( states can join with the most powerful states
to avoid the costs of balancing them)
• Hiding- இது ஒரு state யாருடைய அதிகார போட்டியிலும் சம்பந்தபடாமல், தான் மிக சிறியவன் என்றபோர்வையில் ஒதுங்க முயல்வது. ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிக குறைவு.
( states can try to stay so small. Powerful states will hopefully ignore or forgot you)
ஆக இதுவரை நீங்கள் வாசித்தது International Relations Theory இல் பெரும் செல்வாக்கு செலுத்தும் கோட்பாடான Realism இல் உள்ள concepts களை.
இப்பொழுது அதனூடாக ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் Great Power Politics ஐ புரிய வைக்கிறேன். இதில் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொரு great power ,state களையும், அதனோடு தொடர்புபட்ட ஒவ்வோரு விடயங்களையும் விலாவரியாக விவரிக்க போனால் ஒரு புத்தகமே தனியாக எழுதமுடியும்.
ஆனால் நான் மிக சுருக்கமாக ஒவ்வொரு state உம் எந்தவகையான செயற்பாடுகளை செய்ய முயல்கின்றன என்பதை மேலே குறிப்பிட்ட concepts களோடு மட்டும் தொடர்புபடுத்தி உங்களுக்கு விளக்கிவிடுகிறேன்.
• சீனாவின் hegemony இலக்கு
எனது முதல் இரு பகுதிகளிலும் குறிப்பட்டது போல ,சீனா ஆசிய பிராந்தியத்தில் மிகப்பலமான நாடாக உருவாவது தடுக்க முடியாதது.
தான் வளரும்போது தனது நலன்களை உறுதிப்படுத்த , தனக்கான பிராந்தியத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இருக்ககூடாது என்பதை சீனா உறுதிபடுத்த நினைக்கிறது.
ஆனால் சீனா ஆசிய பிராந்தியத்தில் மிக பலமான நாடாக மாறும்போது அமெரிக்காவிற்கு சிக்கல் உருவாகும். அவைகளுள் சில.
• International system மீதான அதனது பிடி தளறும்.
• ஆசிய பிராந்தியத்தில் அதனது நலன்களை தக்கவைக்க முடியாது.
• சிலவேளைகளில் Western Hemisphere இல் அமெரிக்கா தக்கவைத்திருக்கும் hegemony கூட சீனாவினால் பாதிப்புகுள்ளாகலாம். ( International system என்பது Anarchic என்பதால் இந்த பயம் தவிர்க்கமுடியாதது)
இந்த நிலையை தவிர்க்க, சீனா ஆசிய பிராந்தியத்தில் hegemony நிலையை அடைவதை தடுக்க அமெரிக்கா முனைகிறது.
• அதற்காக ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா அதனது கடற்படையையும், இராணுவத்தையும்நிறுத்தியுள்ளது.
• ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியினால் தங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என நினைக்கும் நாடுகளை balance of power செய்ய வைக்கிறது.
• சீனாவின் நகர்வு
சீனாவின் பார்வையில், ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பிரசன்னத்தை வைத்திருப்பதாலேயே ஆசியாவின் பலவீனமான states களான பிலிப்பைன்ஸ்,வியட்னாம், தாய்வான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு balance of power செயற்பாட்டை செய்யும் தைரியம் வருகிறது என்பதுதெரியும்.
இந்த balancing தொடர்ந்து நடந்தால், சீனா அதனது hegemony இலக்கை அடையமுடியாது.
அத்துடன் தன்னை சுற்றி அமெரிக்கா வகுத்திருக்கும் containment strategy எனும் வளையத்தையும் உடைக்கவேண்டிய கட்டாயம் சீனாவிற்கு இருக்கிறது.
அதனால் சீனா ஆசிய - பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை முற்றாக அகற்ற முயல்கிறது. அதற்காக ISLAND CHAIN STRATEGY எனும் திட்டத்தை வைத்திருக்கிறது( படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது).
First island chain, second island chain , third island chain என சிறிது சிறிதாக அமெரிக்காவை தள்ளி அப்புறப்படுத்த முயல்கிறது. அவ்வாறு அமெரிக்கா ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அகற்றப்பட்டவுடன் மேலே சொன்ன பலவீனமான states நான் மேற்சொன்ன Bandwagoning strategy இற்கு மாறிகொள்ளும் சாத்தியம்உண்டு.
அத்துடன் அவ்வாறு செய்யும்போது சீனா ஒருவேளை தாய்வானை இராணுவரீதியாக இணைக்க முனைந்தாலும் , அமெரிக்கா இராணுவரீதியாக அதை தடுக்க முடியாத வகையில் துண்டிக்கப்பட்டிருக்கும். அதாவது அமெரிக்காவின் கடற்படை,விமான படைகளின் combat radius ஐ தாண்டியதாக இருக்கும் என்பதே இதன் அர்த்தம்.
இந்தியா, ஜப்பான் போன்ற பலமான great powers , அமெரிக்காவை ஆசிய பிராந்தியத்திலிருந்து அகற்றினாலும் தொடர்ந்து Balancing செய்யக்கூடிய வல்லமை உள்ள states என்பது சீனாவிற்கு தெரியும்.
ஆனால் தனது பலமான economic power ஐ கொண்டு R&D , military expenses களில் இந்த நாடுகளைoutspend செய்து, தனது military power இற்கும் இந்தியா, ஜப்பானின் military power இற்கும் இடையே பெரிய இடைவெளியை தக்கவைக்க முடியும் என நினைக்கிறது.
நான் மேலே கூறியவை நடக்கும்போது சீனா அதனது hegemony இலக்கை அடையும்.
• இந்தியா, ஜப்பான் எனும் இரு Great powers களின் நகர்வுகள்
சீனா அதனது military power ஐ அதிகரிக்கும்போது நான் மேற்சொன்ன security dilemma எனும் நிலை உருவாகிறது. இதை சமாளிக்க இந்தியா, ஜப்பான் கைவசம் உள்ளது balance of power எனும் strategy மட்டுமே.
ஜப்பானிற்கு hegemony என்ற நிலையை அடைவது சாத்தியமில்லை. காரணம் அதனது மனித வளம்மட்டுபடுத்தப்பட்டது.
இந்தியாவிற்கு hegemony ஐ அடைவதற்கான வளங்கள் இருந்தாலும், அதற்கேற்ற தொலைநோக்கு பார்வை என்றுமே இருந்ததில்லை. அதற்கான திட்டங்களை வகுத்ததும் இல்லை.
இன்று இந்தியாவும்,ஜப்பானும் செய்வது Increasing their own power , Alliance எனும் இரண்டையும்உள்ளடக்கிய balance of power யே.
• ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பலவீனமான states களின் நகர்வுகள்
இந்தியா , ஜப்பான் போன்றவை நடைமுறைப்படுத்தும் balancing இலேயே இந்த நாடுகளும் முதலில் ஈடுபடும். சீனா அதனது hegemony ஐ அடைந்தபிறகு , இவை Bandwagoning strategy இற்கு மாறிக்கொள்ளும்.
• ரஷ்யாவின் நகர்வு
சீனாவிற்கு எதிராக balancing செய்யவேண்டிய நிலை ரஷ்யாவிற்கும் உண்டு. அட சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்காவிற்கு எதிரான நண்பர்களாயிற்றே என நீங்கள் வியப்புடன் பார்ப்பீர்கள். அதில் என்ன சூட்சுமம் இருக்கிறது என்பதை தனி பதிவாக விளக்குகிறேன்.
• அமெரிக்காவின் நகர்வு
தொடர்ந்து சீனா அதனது வளங்களை balance of power செயற்பாட்டுக்குள்ளேயே செலவழிக்கும் நிர்ப்பந்ததை , தனது ஆசிய alliance மூலம் ஏற்படுத்துவது அமெரிக்காவின் containment strategy.
அவ்வாறு சீனாவின் முழு கவனமும் ஆசிய- பசுபிக் பிராந்தியத்திற்குள்ளேயே இருக்கும் போது , அதனால் power projection ஐ மற்றைய பிராந்தியங்களில் செய்யமுடியாத நிர்ப்பந்ததிலேயே இருக்கும். அது அமெரிக்காஅதனது international system இன் பிடியை தொடர்ந்து தக்கவைக்க உதவும்.
• கடைசி பகுதி
சரி. இதுவரை International Relations Theory (IR) இல் பெரும் செல்வாக்கு செலுத்தும் REALISM என்னும் கோட்பாடினூடாக, ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் நடந்து கொண்டிருக்கும் சீன-அமெரிக்க Great Game இல் ஒவ்வொரு நாடுகளும் எத்தகைய நகர்வை செய்ய முயலும் என்பதை மேலே விவரித்திருந்தேன்.
• ஆனால் இந்த IR தியரியின் REALISM கோட்பாட்டிற்கு இசைவாகவே இந்த நாடுகள் தங்களது நகர்வைசெய்கின்றன என்பதை நான் எப்படி உங்களிடம் நிருபிப்பது?
அதை எளிமையாக மிக சுருக்கமாக உங்களுக்கு விளங்கப்படுத்ததான் இந்த கடைசி பகுதி.
இன்று இந்தியாவும், ஜப்பானும் செய்வது Increasing their own power , Alliance எனும் இரண்டையும் உள்ளடக்கிய balance of power யே என மேலே குறிப்பிட்டிருந்தேன்.
அதை உறுதிசெய்யும் விதமாக இந்த நாடுகள் எத்தகைய நகர்வை செய்துகொண்டிருக்கின்றன என்பதை கீழேவரிசையாக சுருக்கமாக பட்டியலிட்டிருக்கிறேன்.
உண்மையில் ஒவ்வொரு நகர்வும் தனித்தனி கட்டுரைகளாக எழுதக்கூடியளவு உள்ளடக்கத்தை கொண்டவை.
1) Australia-India-Japan Strategic Triangle
• இந்த முக்கோண உறவில் முதலில் இந்திய-ஜப்பான் உறவு
சீனாவிற்கு எதிரான இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டு உறவுக்கான விதை 2007 ஆம் ஆண்டிலேயே போடப்பட்டுவிட்டது.
2007 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் Shinzo Abe ஆற்றிய உரை அதற்கான தொடக்க புள்ளி.
அந்த உரை ‘Confluence of the Two Seas’ என்ற தலைப்பில் ராஜதந்திர வட்டாரத்தில் குறிப்பிடப்படுகிறது.
வருடந்தோறும் இந்திய- அமெரிக்க கடற்படை நடத்தும் Malabar exercise இல் இப்பொழுது ஜப்பானும் நிரந்தர பங்கேற்பாளராக மாறியிருக்கிறது.
மேலும் 2020 செப்டம்பர் மாதம், இந்தியாவும் ஜப்பானும் Acquisition and Cross-Servicing Agreement எனும்பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
• இந்திய-அவுஸ்திரேலிய உறவு
2020 ஜூன் மாதம், இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் Mutual Logistics Support Arrangement எனும் ஒப்பந்தத்திலும் Defence Science and Technology Implementing Arrangement எனும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டன.
இந்த இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களை பற்றியும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் பின்வருமாறுவிவரிக்கிறது.
“This arrangement paves the way for greater cross-service military activity, building on the success of our most complex exercise to date, AUSINDEX 2019, which focused on anti-submarine warfare.
The Science and Technology Implementing Arrangement will facilitate improved collaboration between our defence science and technology research organisations.”
2009 இல் Strategic Partnership என்ற நிலையில் இருந்த இந்திய-அவுஸ்திரேலிய உறவு இன்று Comprehensive Strategic Partnership என்ற உயர்நிலைக்கு நகர்ந்திருக்கிறது.
• ஜப்பான்-அவுஸ்திரேலிய உறவு
ஜப்பான்-அவுஸ்திரேலிய நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவு , 2007 ஆம் ஆண்டு Japan-Australia Joint Declaration on Security Cooperation என்பதன் ஊடாக தொடங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு Special Strategic Partnership என்ற உயர்நிலைக்கு உயர்த்தப்பட்டது.
அத்துடன் ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் Cross-Servicing Agreement மற்றும் Information Security Agreement என்பவற்றை 2013 ஆம் ஆண்டில் கைச்சாத்திட்டனர்.
2020 நவம்பர் மாதம் இரு நாடுகளும் Reciprocal Access Agreement எனும் முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
2) QUAD (Quadrilateral Security Dialogue)
மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து QUAD எனும் சீனாவிற்கு எதிரானகூட்டணியை உருவாக்கி வைத்திருக்கின்றன.
இந்த QUAD இற்கான விதையும் 2007 ஆம் ஆண்டு போடப்பட்டது.
இன்று இந்த QUAD கூட்டணி பலமான கூட்டணியாக உருமாறி கொண்டிருக்கிறது.
2020 ஆம் ஆண்டு நடந்த Malabar exercise எனும் கடற்படை போர் ஒத்திகையில் QUAD உறுப்பினர்களானஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான்,அவுஸ்திரேலியா என அனைவரும் பங்குபற்றினர்.
• உபரி தகவல்
மேலேயுள்ள உள்ளடக்கத்தை உன்னிப்பாக வாசித்து வந்தீர்களேயானால், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் Containment Strategy இல்
இந்தியா பெரும் பங்கு வகிப்பதை உணரமுடியும்.
இன்னும் துல்லியமாக கூறுவதாக இருந்தால் அமெரிக்காவின் containment strategy இந்தியா இல்லாவிடில் சாத்தியமில்லை.
காரணம் சீனாவின் மனித வளம்,பொருளாதர வலு இரண்டிற்கும் ஓரளவு ஈடான வலுவை கொண்டிருப்பது ஆசியாவில் இந்தியா மட்டுமே.
அதனால்தான் சீனாவை போலவே இந்தியாவிற்கும் hegemony ஐ அடைவதற்கான வளங்கள் உண்டு என மேலே குறிப்பிட்டிருந்தேன்.
ஜப்பானும்,அவுஸ்திரேலியாவும் அத்தகைய வலுவை கொண்டிராதவை.
சுருக்கமாக சொன்னால் அமெரிக்காவின் Containment Strategy வெற்றிபெற வேண்டுமானால் இந்தியா கட்டாயம் தேவை.
இங்குதான் விடுதலை புலிகளுக்கு எதிராக உலக ஒழுங்கை இந்தியா திரட்டிய புள்ளியும் வருகிறது.
விடுதலை புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலை புலிகள் இந்தியாவை விலக்கியே வைத்திருந்தனர்.
இந்தியாவை விலக்கி அமெரிக்கா,மேற்கு ஐரோப்பாவை உள்ளுக்குள் இழுத்திருந்தனர்.
காரணம் இந்தியா எக்காரணம் கொண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு என தமிழீழம் அமைவதை விரும்பாது என்பது விடுதலை புலிகளுக்கு தெரியும்.
அதனால்தான் இந்தியாவை neutralize செய்வதற்காக தலைவர் பிரபாகரன் அமெரிக்க,மேற்கு ஐரோப்பியநாடுகளை சமாதான பேச்சுவார்த்தைக்குள் உள்ளிழுத்திருந்தார்.
ஆனால் மறுவலமாக இலங்கை அரசு இந்தியாவை உள்ளிழுக்க முயன்றது. காரணம் இந்தியா உள்ளுக்குள் வந்தால் அதனது செல்வாக்கிற்குள் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் அடங்கிவிடும் என கணித்தது. இந்தியா நுழைந்தால் தலைவர் பிரபாகரனின் தமிழீழ இலக்கை உடைக்க முடியும் என்று கணித்தது.
கடைசியில் அந்த கணிப்பின் படி இந்தியாவின் செல்வாக்கிற்குள் அமெரிக்கா,ஜப்பான்,மேற்கு ஐரோப்பா எல்லாம் அடங்கி போயின.
பிறகு அந்த உலக ஒழுங்குதான் விடுதலை புலிகளின் கடல் வழி ஆயுத விநியோக பாதையை உடைத்தது. கடல்வழி ஆயுத விநியோக பாதை தடைப்பட்டதால் கனரக ஆயுத வரவு விடுதலை புலிகளுக்கு இல்லாமல்போனது.அந்த கனரக ஆயுத பற்றாக்குறை போரை விடுதலை புலிகளின் கடைசி போராக மாற்றியமைத்தது.
ஏன் அடங்கி போயின என்ற கேள்விக்கான பதில்தான் சீனாவிற்கு எதிரான இந்த வியூகம்.
அமெரிக்கா,ஜப்பான்,அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிரான தங்களது வியூகத்தில், 2009 இற்கு முன்னரேயே இந்தியாவை முக்கிய கூட்டாளியாக உள்ளிழுத்திருப்பதை மேலேயுள்ள பந்தியில்தெளிவாக காணலாம்.
அவர்களது சீனாவிற்கு எதிரான வியூகம் வெற்றி பெறவேண்டுமானால், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா சொல்வதை கேட்டே ஆகவேண்டும்.
நான் பலதடவை குறிப்பிட்டிருப்பது போல there are no permanent friends or enemies but permanent interests in international relation.
அதன்படி உலக ஒழுங்கு தங்களது permanent interests ஐ மனதில் வைத்துகொண்டு, தமிழீழம் என்பதை பகடை காயாக மாற்றியது. இதை நான் இப்படி சொல்லும்போது உங்களுக்கு குரூரமான தொனியை தரலாம். ஆனால் இப்படித்தான் புவிசார் நலன் அரசியல், ராஜதந்திரம் என்பவை இயங்கும்.
விடுதலை புலிகளின் இறுதிப்போரின் போது உலக ஒழுங்கை இந்தியா தனது செல்வாக்கிற்குள் கொண்டுவந்ததை பற்றி விரிவாக முன்னொரு பதிவில் விளக்கியிருக்கிறேன்.
மீண்டும் இந்த பதிவிற்கே வருகிறேன்.
3)AUKUS ( Australia, UK, US)
அண்மையில் ராஜதந்திர வட்டாரத்தில் பரபரப்பாக உச்சரிக்கப்பட்ட சொல்லாடல்தான் இந்த AUKUS.
இது அமெரிக்கா,பிரிட்டன்,அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி அமெரிக்க,பிரிட்டன் துணையுடன் அணு ஆயுதங்களை ஏவ கூடிய நீர்மூழ்கி கப்பல்களை (nuclear submarine) அவஸ்திரேலியா பெற்றுகொள்வது மிக முக்கிய அம்சம்.
ஒவ்வொரு நாடுகளும் எவ்வாறு தங்களது நகர்வை வடிவமைக்கிறார்கள் என்பதையும் அவை எப்படி International Relations Theory (IR) இல் பெரும் செல்வாக்கு செலுத்தும் REALISM கோட்பாட்டிற்கு மிக இசைவாக இருக்கின்றது என்பதையும் இந்த கட்டுரையில் எளிமையாக விளக்கியிருக்கிறேன்.
மற்றைய பகுதிகளுக்கான இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment