தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயல்களும், சிங்கள,முஸ்லீம் மக்களை கொலை செய்த புலிகளின் செயல்களும் ஒரே வகையில் சமப்படுத்தமுடியுமா? - எண்கள் சொல்லும் செய்தி என்ன? - ஆய்வு பார்வையில் (பகுதி-4)

இனி விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்களமுஸ்லீம் மக்களின் எண்ணிக்கை.


• விடுதலை புலிகளினால் சிங்களமுஸ்லீம் மக்கள்  கொல்லப்பட்டிருக்கிறார்களா?


கொல்லப்பட்டிருக்கிறார்கள்.



எத்தனை சிங்களமுஸ்லீம் மக்கள் விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை விபரங்களை தருவதற்கு முன்இதனது வரலாற்று பின்புலத்தை உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன்.


விடுதலை புலிகளால் சிங்களமுஸ்லீம் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகளை சில வகைக்குள் அடக்கமுடியும்.


1. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஜிகாத் படை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய படுகொலைக்குகுறைந்தபட்ச’ எதிர் நகர்வாக நடத்தியவை.


2. தமிழீழ இலக்கை பலவீனமாக்கஇலங்கை அரசு கிழக்கு மாகாணத்தில் செய்த சிங்கள குடியேற்றங்களுக்குஎதிராக நடத்தியவை.


3. இலங்கை அரசின் இராணுவபொருளாதார இலக்குகளை தாக்கும்போது ஏற்பட்ட collateral damage. 


4. மேலேயுள்ள மூன்று பிரதான காரணங்களுக்குள் அடங்காமல்போரியல் நிர்ப்பந்தத்தில் அமைந்த தாக்குதல்தல்விதிவிலக்காக அமைந்த தாக்குதல்களும் உண்டு.


இனி இந்த பிரதான வகையை ஒவ்வொன்றாக விவரிக்கிறேன்.


1. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஜிகாத் படை தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைக்கு ‘குறைந்தபட்ச’ எதிர்நகர்வாக நடத்தியவை.


இதன் பின்னணி என்ன?


ஈழப்போர்-2  (1990-1994) தொடங்கிய போதே இலங்கை அரசு , கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான பிளவை கூர்மைப்படுத்துவதை அதனது பிரதான போரியல் யுக்தியாக பாவிக்கதொடங்கியது


இந்த பிளவை உருவாக்குதல் முதலாம் ஈழப்போரிலும் இருந்ததுஆனால் மிகவும் கூர்மையடைந்தது இரண்டாம் ஈழப்போரிலேயே.


கிழக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பெரும்பான்மையாக கொண்ட மாகாணம்


1981 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் சதவீதம் 42%. முஸ்லிம்களின் சதவீதம் 32%.


இலங்கை அரசின் பிரித்தாளும் யுக்தி( divide and rule) என்பது போரியல் ரீதியிலும்தமிழீழம் என்ற கருத்தியலை இடியாப்ப சிக்கலாக மாற்றுவதற்கு பெருமளவு உதவகூடியது.


• அதன்படி இலங்கை இராணுவம்முஸ்லீம் மக்களை கொண்ட  ஜிகாத் படையை (para military) உருவாக்கி , தமிழ் மக்கள் மீதான படுகொலையை தொடுத்தது


ஈழப்போர் - 2 தொடங்கிய போது இலங்கை இராணுவத்தின் இந்த புதிய போரியல் யுக்தியால் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை மற்றைய ஈழப்போர்களில் கூட நடந்ததில்லை


• ஈழப்போர் -2 இல் (1990-1994) இலங்கை இராணுவத்தாலும்முஸ்லிம் ஆயுத படையாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலை


ஈழப்போர்-2 தொடங்கியது 11-6-90 ஆம் ஆண்டில்.


புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றியது 30-10-90 ஆம் ஆண்டு.


இந்த இடைப்பட்ட நான்கு மாதங்களில் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவமும்முஸ்லீம் ஆயுத படையினரும் நடத்திய படுகொலையில் இறந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைந்தது பல ஆயிரம் பேர்.


இந்த படுகொலைகளின் சிலவற்றை கீழே தருகிறேன்.


10/06/1990 சம்மாந்துறை படுகொலை -


இதில் 37 தமிழர்கள் கொல்லப்பட்டனர்


கொல்லப்பட்டோரில் 7 பேரது பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.


• 20/07/90 -27/07/90 சித்தாண்டி படுகொலை


137 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


• வீரமுனை படுகொலைகள் 20/6/1990 - 15/08/90


200 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


கொல்லப்பட்டோரில் 233 தமிழர்களுடைய பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டது


• 30/07/90 பொத்துவில் படுகொலை 


125 இற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


கொல்லப்பட்டோரில் 110 தமிழர்களுடைய பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டது


• 08/08/90 திராய்கேணி படுகொலை 


முஸ்லீம் ஜிகாத் படையினர் நடத்திய தாக்குதலில் 90 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.


இந்த தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோதுஇலங்கை இராணுவம் வெளியில் நின்று அவர்களுக்குபாதுகாப்பு அளித்து கொண்டிருந்தது.


கொல்லப்பட்டோரில் 50 தமிழர்களுடைய பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.


• 12/08/90 துறைநீலாவணை படுகொலை


60 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


கொல்லப்பட்டோரில் 47 தமிழர்களுடைய பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.


• 14/08/90 கோராவெளி,ஈச்சையடித்தீவு படுகொலை


• 21/09/90 மட்டக்களப்புபுதுக்குடியிருப்பு படுகொலை


• 09/09/90 சத்துருக்கொண்டான் படுகொலை


கொல்லப்பட்டோரில் 199 தமிழர்களுடைய பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.


பாலியல் வல்லுறவுசித்திரவதைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டனர்.



• இந்த படுகொலைகளை NorthEast Secretariat on Human Rights (NESoHR - வடகிழக்கு மனிதஉரிமைகள் செயலகம்அமைப்பு ஆவணப்படுத்தியிருக்கிறது


இலங்கை இராணுவத்தாலும்முஸ்லிம் ஜிகாத் படையினராலும் பெண்கள்சிறுவர்கள்குழந்தைகள்ஆண்கள் எப்படி குரூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்எப்படி பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்எப்படி உயிருடன் எரிக்கப்பட்டார்கள் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது.


இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்வயதுதொழில் போன்ற விபரங்களையும்ஆவணப்படுத்தியிருக்கிறது.


இந்த தகவல்களை பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் இடங்களுக்கே சென்று ஆய்வு செய்து ஆவணப்படுத்தப்பட்டவையாகும்.


எவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டது என்ற தகவல்களை NESoHR அதனது படுகொலை அறிக்கையின் முன்பகுதியில் கூறியிருக்கிறது.


மேலே குறிப்பிட்ட படுகொலைகளை NESoHR இன் அறிக்கையிலிருந்து ஆதாரமாக படமாக கீழே தந்திருக்கிறேன்.


NESoHR இனது தமிழின படுகொலை அறிக்கைக்கான இணைப்பு:























TCHR இனது ‘1983-2004 வரையிலான தமிழ் மக்களது படுகொலை’ அறிக்கையினை பாருங்கள்.





1990,1991 இல்கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான அம்பாறைமட்டக்களப்புதிருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை பாருங்கள்.


1990 

அம்பாறை - 1400

மட்டக்களப்பு - 1700

திருகோணமலை - 1175


மொத்தம் 4275


1991

அம்பாறை - 900

மட்டக்களப்பு - 1110

திருகோணமலை- 400


மொத்தம் 2410


•அதுபோல TCHR இனது ‘1983-2004 காலகட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் (Enforced disappearance)’ அறிக்கையினை பாருங்கள்.





1990 

அம்பாறை - 2900

மட்டக்களப்பு - 5600

திருகோணமலை - 800


மொத்தம் 9300


1990 இல் மட்டும் கிழக்கு மாகாணத்தில் 9300 தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்டோர் வேறு வார்த்தையில் சொல்லப்போனால் கொல்லப்பட்டோர்ஏனெனில்காணாமலாக்கப்பட்டோர் உயிருடன் திரும்பி வந்ததில்லைசில காலங்கள் கழித்து எலும்பு கூடுகளாகமீட்கப்படும்.


ஆக 1990 இல் கொல்லப்பட்டோர்காணாமலாக்கப்பட்டோர் என இரண்டையும் சேர்க்கும்போது 13575 எனவருகிறது.


4275 + 9300 = 13575


ஈழப்போர் - 2 தொடங்கியது ஜூன் மாதம் 1990 இல்தான். 6 மாதங்களுக்குள் 13575 தமிழர்கள்கொல்லப்பட்டிருக்கிறார்கள்


கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவமும் முஸ்லீம் ஜிகாத் படைகளும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளுக்கு எதிர் நகர்வாக விடுதலை புலிகள் முஸ்லீம் மக்கள் மீது சில தாக்குதல்களை நடத்தினார்கள்.


அவைதான் இன்றும் பொதுவெளியில் பேசப்படும் 03/08/90 இல் நடந்த காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, 11/08/90 இல் நடந்த ஏறாவூர் படுகொலை.


ஆனால் இந்த காத்தான்குடி படுகொலையை புலிகள் செய்யவில்லை என மறுப்பவர்கள் வேறொரு கோணத்தை முன்வைக்கிறார்கள்.


மேற்படி படுகொலை நடந்த இடம் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி எனவும்படுகொலை நடக்கும்போது கேட்ட வெடிச்சத்தங்களை வைத்து இலங்கை இராணுவம் சம்பவ பகுதிக்கு வந்திருக்க முடியும் எனவும்ஏன் அவ்வாறு இலங்கை இராணுவம் செய்யவில்லை என்ற கோணத்தை வைக்கிறார்கள்.


இன்னொரு முக்கியமான பக்கத்தை இங்கு சொல்லவேண்டியது அவசியமாகிறது.


கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்ட எல்லா சம்பவங்களும் புலிகளால் செய்யப்பட்டது அல்ல என்பதே அந்த பக்கம்.


இலங்கை இராணுவம் முஸ்லீம்களை படுகொலை செய்துவிட்டுபழியை புலிகள் மீது போட்ட நிகழ்வுகள் இருக்கின்றன.


ஒரு உதாரணம் தருகிறேன்.


செப்டெம்பர் 18, 2006 இல்பொத்துவில் பகுதியில் 10 முஸ்லீம்கள் வெட்டி கொல்லப்பட்டு இருந்தார்கள்.


இலங்கை அரசு இந்த படுகொலையை புலிகள்தான் செய்தார்கள் என குற்றம் சாட்டியது.


ஆனால் அந்த பகுதியை சேர்ந்த முஸ்லீம் மக்கள் ‘ இந்த படுகொலையை இலங்கையின் விசேடஅதிரடிப்படைதான் (STF- Special Task Force) செய்ததுஇந்த பகுதி STF இன் கட்டுப்பாட்டில் இருக்கும்பகுதி’ என ஆணித்தரமாக கூறினார்கள்.


இலங்கை அரசு இந்த படுகொலையை விசாரணை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து மூன்று நாட்களாக ஹர்த்தால் போராட்டம் நடத்தப்பட்டது.


சகல ஆதாரங்களும் தெளிவாக காட்டின இந்த படுகொலையை நடத்தியது STF தான் என்பதை.


இது தொடர்பாக அன்றைய காலங்களில் ஊடகங்களில் வந்த செய்தியினை இணைப்பாக கீழேதந்திருக்கிறேன்.






http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5355088.stm


https://www.wsws.org/en/articles/2006/09/sril-s21.html


இன்னொரு வரலாற்று நிகழ்வு.


தராகி சிவராம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்ட சம்பவத்தை இங்கு உதாரணமாக காட்ட விரும்புகிறேன்


“The Tamils were made to believe that the most feared military officer in the east at the time, held responsible for many gory massacres of civilians, was a Muslim named Captain Munaz. The army was never known to have operated with nom de guerre like the militants. Hence the people of Batticaloa assumed that Munaz was Muslim.


It transpired the man was a Sinhalese named Richard Dias when in 1993 Justice Souza investigated the massacre of refugees in the eastern university in September 1990.”


அந்த சம்பவத்தின் உள்ளடக்கம் இதுதான்.


அன்றைய காலங்களில் ‘கேப்டன் முனாஸ்’ எனும் முஸ்லீம் இராணுவ அதிகாரியின் பெயரை கேட்டால் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் குலை நடுங்கியிருக்கிறார்கள்ஏனெனில் அவரின் தலைமையில் பல படுகொலைகள் கிழக்கில் இடம்பெற்றிருந்தன.பின்னாளில்தான் தெரிந்தது அவர் Richard Dias எனும் சிங்களவர் என்பது


இரு இனங்களுக்கு இடையிலான பகைமையை கூர்தீட்ட இலங்கை அரசு செய்த மேற்படி உதாரணம் ஒரு போரில் எத்தகைய பக்கங்கள் உண்டு என்பதை உங்களுக்கு தெளிவாக காட்டும்.அத்தோடு இது ஒரு உதாரணம் மட்டுமேஇவை போல இன்னும் பல வரலாற்று சம்பவங்கள் உண்டு.


2. அடுத்தது தமிழீழ இலக்கை பலவீனமாக்க இலங்கை அரசு கிழக்கு மாகாணத்தில் செய்த சிங்களகுடியேற்றங்களுக்கு எதிராக நடத்தியவை.


இதன் பின்னணி 


1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரை இலங்கை அரசுதமிழர்களின் வரலாற்று தாயகநிலமான கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவு சிங்கள குடியேற்றங்களை நடத்திவருகிறது.


இந்த அரச ஆதரவு குடியேற்றங்களிற்கு இரு பரிமாணங்கள் உண்டு


  1. அரசியல் பரிமாணம்
  2. போரியல்ரீதியான பரிமாணம்


இலங்கை தமிழர்களின் தமிழீழம் என்ற கருத்தியலிற்கான அடிப்படை வரலாற்று தாயக நிலமே வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும்தான்.


• முதலில் அரசியல் பரிமாணம்


சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை அரசு இந்த தமிழீழ கோட்பாட்டை பலவீனப்படுத்த கிழக்கு மாகாணத்தின்குடிப்பரம்பலை மாற்ற ஆரம்பித்தது. 


அதன் முதற்படிதான் அரச ஆதரவு சிங்கள குடியேற்றங்கள்அதாவது இலங்கை அரசு கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றியது


1946 இல் 8.4%  ஆக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை, 1981 சனத்தொகை கணக்கெடுப்பில் 24.99% ஆக அதிகரித்தது.


இந்த பெரும்பாலான சிங்கள குடியேற்றங்கள் வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான எல்லை பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டன.


இவ்வாறு செய்ததன் காரணம் என்ன?


தமிழர்களது வரலாற்று தாயகமான வடக்கு கிழக்கின் ‘நில தொடர்ச்சி’ எனும் அம்சத்தை அழிக்கவேண்டும் என்பதற்காக.


இலங்கை அரசின் இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இரு விடயங்களை சாதித்திருக்கிறது.


தமிழீழம் என்ற கருத்தியலின் வரலாற்று தாயக நிலப்பரப்பை பலவீனமாக்கியது.


தமிழீழ நிலப்பரப்பின் அளவை சுருக்கியது.



• அடுத்தது இதன் போரியல்ரீதியான பரிமாணம்


வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் எல்லை பகுதியிலேதான் இலங்கை அரசு அதனது சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி இருந்தது என மேலே குறிப்பிட்டிருந்தேன்.


அதனால் போராளிகள் தரைவழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு செல்வதாக இருந்தால் இந்த சிங்கள குடியேற்றங்களை தாண்டியே செல்லவேண்டும்


இந்த சிங்கள குடியேற்றங்கள் இராணுவத்திற்கு Front Defense Line ( FDL) போலவே செயல்பட்டதுஏனெனில் விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களையோ , படை நகர்த்தலையோ இலகுவாக சிங்கள மக்கள் இலங்கை இராணுவத்திற்கு தெரியபடுத்த முடியும்.


முல்லைத்தீவு தளப்பிரதேசத்திலிருந்து கிழக்கிற்கு படைகளைபடை வளங்களை நகர்த்துவதற்கு தடையாக இருக்கும் இந்த எல்லையோர இராணுவ வேலியை அப்புறப்படுத்த வேண்டிய போரியல் தேவை விடுதலைப்புலிகளுக்கு இருந்தது.


போரியல்ரீதியாக இலங்கை இராணுவத்திற்கு இந்த பெரும் அனுகூலத்தை வழங்கும் சிங்கள குடியேற்றங்கள் மீதும் விடுதலைப்புலிகள் சில தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள்.


இந்த தாக்குதல்களில் சிங்கள பொதுமக்கள் கணிசமானோர் கொல்லப்பட்டனர்.


இலங்கை அரசு எப்படி கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவு குடியேற்றங்களை ஏற்படுத்தியதுஅதில் குற்றவாளிகளையும் குடியேற்றியதுஇவர்களை கொண்டு ‘ஊர்காவல் படை’ எனும் துணைப்படையை உருவாக்கியதுஇந்த ஊர்காவல் படை இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது எப்படி படுகொலையை அவிழ்த்துவிட்டார்கள் என்பதை Human Rights Watch அறிக்கை பின்வருமாறு விவரிக்கிறது.


“The government resettled thousands of former prisoners, Sinhalese fishing families, retired military personnel and families displaced by the huge Mahavelli water project into the north and east. 


By 1985, state resources were used to move more than 50,000 Sinhalese into traditionally Tamil areas like Trincomalee, Vavuniya and Mullaitivu. 


These settlements also created buffers between Tamil and Sinhalese districts, and provided communal barriers between Jaffna and the Tamil villages of the Eastern province. 


Needless to say, these communities proved extremely vulnerable to attack, leading the government to arm residents known as "home guards" to protect them. 


By 1987, there were an estimated 11,000 armed home guards in the Northern and Eastern provinces. These home guards participated in a number of extrajudicial executions and massacres, sometimes acting independently, at other times operating in conjunction with military personnel.”


(Human Rights Watch வெளியிட்ட ‘Playing the communal card’ எனும் தலைப்பிட்ட அறிக்கையிலிருந்து)


அறிக்கையின் இணைப்பு: 

https://www.hrw.org/legacy/reports/1995/communal/


3. இலங்கை அரசின் இராணுவபொருளாதார இலக்குகளை தாக்கும்போது ஏற்பட்ட collateral damage. 


அது என்ன collateral damage?


Collateral damage is any death, injury, or other damage inflicted that is an unintended result of military operations. 


அதாவது இராணுவபொருளாதார இலக்குகளே தாக்குதலின் பிரதான இலக்குபொது மக்களை இலக்காக வைத்து அந்த தாக்குதல் திட்டமிடப்படவில்லை


ஆனால் ‘எதிர்பாராத வகையில்’ , ‘தவிர்க்க முடியாத வகையில்’ இடையில் சிக்கி கொல்லப்பட்ட பொதுமக்கள்தான் இங்கு collateral damage என அழைக்கப்படுபவர்கள்.


4. மேலே நான் விவரித்திருந்த மூன்று பிரதான காரணங்களுக்குள் அடங்காமல்போரியல் நிர்ப்பந்தத்தில் அமைந்த தாக்குதல்கள்விதிவிலக்காக அமைந்த தாக்குதல்களும் உண்டு.


உதாரணமாக மே 14, 1985 இல் புலிகள் அனுராதபுரத்தில் சிங்கள் மக்கள் மீது நடத்திய படுகொலை


இந்த படுகொலையில் 120 சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


இந்த படுகொலைக்கு இரு வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.


முதலாவது Human Rights Watch இனது அறிக்கை.


அந்த அறிக்கைஇலங்கை இராணுவம் மே 12, 1985 இல் வல்வெட்டித்துறையில் தமிழ் மக்கள் 70 பேரைபடுகொலை செய்ததற்கான எதிர்வினையாகவே புலிகள் இந்த அனுராதபுரம் படுகொலையை நடத்தினார்கள்என கூறுகிறது.


“Tamil militants also continued to engage in massacres of civilians. One of the largest occurred on May 14, 1985 when a group of Tamil militants dressed in army uniforms captured a bus and drove it into the bus station in Anuradhapura, the ancient Sinhala Buddhist capital. 


Once in Anuradhapura, they opened fire with automatic weapons, shooting pedestrians as they made their way to the sacred bo tree22, one of the holiest Buddhist shrines in Sri Lanka. In all, 146 Buddhist pilgrims and other civilians were killed. 


The massacre was apparently in retaliation for an earlier killing of forty-three Tamil civilians by Sri Lankan military at Valvetithurai.”


(Human Rights Watch வெளியிட்ட ‘Playing the communal card’ எனும் தலைப்பிட்ட அறிக்கையிலிருந்து)


ஆனால் ‘அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’  எனும் ஆயுத போராட்ட வரலாற்று தொடரை எழுதிய அற்புதன்புலிகளது இந்த அனுராதபுரம் படுகொலைக்கு வேறொரு காரணத்தை முன்வைக்கிறார்


ஏனெனில் இந்த அற்புதன் முன்பு EPRLF இன் போராளியாக இருந்து பின்னர் ஈபிடிபி இல் இணைந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்


1985 களில் டெலோஈரோஸ், EPRLF, புலிகள் என்ற நான்கு தமிழ் போராளி இயக்கங்களும் சேர்ந்து ஈழதேசிய விடுதலை முன்னணி (E.N.L.F) என்ற கூட்டமைப்பை உருவாக்கி வைத்திருந்தனர்.


அந்த காலகட்டத்தில் இந்த 4 நான்கு போராளி இயக்கங்களும் தங்களுக்குள் பரஸ்பரம் உரையாடி   இயங்கியமையால்புலிகளது இந்த செயலுக்கான நேரடி காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்.


அந்த (E.N.L.F) அமைப்பில் இந்த அற்புதன் பொறுப்பில் இருந்தார்.


புலிகளது அனுராதபுரம் படுகொலைக்கான வேறொரு காரணத்தை அற்புதன் பின்வருமாறு கூறுகிறார்.


1985 இல் இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒரு உடன்பாடு கண்டு அதை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்க முனைந்தது.


அதனால் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்துமாறு இந்திய அரசு தமிழ் போராளி இயக்கங்களுக்கு அழுத்தத்தை தந்தது


தமிழீழத்திற்கு குறைவான எதையும் புலிகள் ஏற்கமாட்டார்கள் என்பது தெரிந்ததுதான்


அதனால் இந்த அனுராதபுர படுகொலையை நடத்தினால்இலங்கை அரசிற்கு தமிழ் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்த முடியாதளவு தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகும் எனபுலிகள் கருதியதாக கூறுகிறார்.


அதுபோல போரியல் நிர்பந்தங்களில் நடத்திய தாக்குதல்கள் உண்டு.


இனி முக்கியமான புள்ளிக்கு வருகிறேன்.


விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்களமுஸ்லீம் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?


இந்த எண்ணிக்கையை பெற இலங்கை அரசு கூறிய தகவலையே எடுத்துக்கொள்கிறேன்.


இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் ஜூலை 2011 ஆம் ஆண்டு , “Humanitarian Operation Factual Analysis  July 2006 - May 2009” எனும் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது.


இந்த அறிக்கையானது விடுதலை புலிகளின் ஆயுதபோராட்ட வரலாறுபுலிகள் அமைப்பின் கட்டமைப்புஅவர்களது தாக்குதல்கள்அவர்களது ஆயுத இருப்புஅவர்களது அமைப்பு இயங்கிய விதம்புலிகளின் தாக்குதலால் கொல்லப்பட்ட இராணுவம்பொதுமக்கள்இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள்இலங்கை இராணுவம் நடத்திய போர் நகர்வுகள் என அனைத்தையும் விளக்கும் 161 பக்கஅறிக்கை அது.


ஐக்கிய நாடுகள் சபையால் (UN), 31-03-2011 இல் வெளியிடப்பட்டதுதான் Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka அறிக்கை


இந்த அறிக்கை வெளியாகி நான்கு மாதங்களுக்குள்ஜூலை 2011 இல் , இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கைதான் இந்த “Humanitarian Operation Factual Analysis  July 2006 - May 2009” ஆகும்.


ஐநா அறிக்கை வெளிவந்த நான்கு மாதத்தில்சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த அறிக்கை இலங்கை நலன் சார்ந்து வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.


இந்த முழு அறிக்கைக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது


Humanitarian Operation Factual Analysis July 2006 - May 2009 அறிக்கை


அத்துடன் அதன் சில பக்கங்கள் படமாக கீழே தரப்பட்டுள்ளது.





சரிவிடுதலை புலிகளால் கொல்லப்பட்ட பொது மக்கள் எத்தனை பேரென இலங்கை அரசின் இந்த அறிக்கைகூறுகிறது?


இந்த அறிக்கையின் பக்கம் 6 இல், LTTE Atrocities against Civilians என்ற தலைப்பில் பின்வருமாறுவருகிறது.


“The LTTE carried out attacks on civilian targets throughout Sri Lanka using human bombs, vehicle bombs, time bombs, claymore mines, different Improvised Explosive Devices (IEDs) and armed attacks. 


The attacks on innocent civilians using these methods killed over 9,800 and grievously injured more than 10,000 in Government controlled areas. The number of civilians killed and injured by the LTTE in areas under its dominance is unknown.”


அதாவது பொதுமக்கள் இலக்கு மீது விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தியதால், 1983-2009 காலகட்டத்தில் 9800 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.









இத்தகைய தாக்குதல்களை Annex B இல், SOME OF THE ATTACKS CARRIED OUT BY LTTE ON CIVILIAN TARGETS என்ற தலைப்பில் வரிசைப்படுத்தி பட்டியலிட்டிருக்கிறது. (பக்கம் 96 இல் தொடங்குகிறது)


இந்த வகை தாக்குதல்களின் எண்ணிக்கை மொத்தம் 137 வருகின்றனஅதில் Killed, Wounded, Missing என பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை வரிசையாக தந்திருக்கிறது.







இந்த 137 தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட (Killed) பொதுமக்களின் எண்ணிக்கையை கூட்டினால் மொத்தம் 2487 தான் வருகிறது.


என்னதான் Annex B இல், ‘Some of the Attacks’ என தலைப்பிட்டிருந்தாலும்இந்த அறிக்கை கூறிய 9800 பேரில், 2487 பேர்களையே இந்த அறிக்கையால் பட்டியலிட முடிந்திருக்கிறது.


அதாவது இந்த அறிக்கை கூறும் கொல்லப்பட்ட பொதுமக்களின் 9800 பேரில், 25% பேரையே பட்டியலிட முடிந்திருக்கிறது. 75% பொதுமக்கள் இறந்ததற்கான பட்டியல் இந்த அறிக்கையில் இல்லை


குறைந்தபட்சம் 50% எண்ணிக்கையாவது இந்த நீண்ட அறிக்கையில் பட்டியலிட்டிருக்கலாம்.


தமிழ் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட படுகொலையை ஆவணப்படுத்துவதில் சந்தித்த இடர்பாடுகளைஇலங்கை அரசு சந்தித்ததாக யாரும் கூறமுடியாது.


ஆக இலங்கை அரசு ‘The Attacks Carried Out By LTTE On Civilian Targets’ என்ற வகையில் கூறும் எண்ணிக்கை என்பது பொய்யான மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பது தெளிவு.


மேலும் பக்கம் 7 இல்அரசு ஆதரவு சிங்கள குடியேற்றங்கள் நிகழ்ந்த எல்லையோர கிராமங்களில் விடுதலைபுலிகள் நடத்திய தாக்குதலால்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1950 என கூறுகிறது.


“The LTTE also attacked civilians in vulnerable villages,using automatic weapons, small arms, swords, machetes, clubs and other handheld weapons.


These attacks were mostly carried out under cover of night and indiscriminately targeted innocentmen, women and children. 


In sum,LTTE attacks on vulnerable villages are estimated to have killed over 1,950 civilians and injured over 400.”




இந்த தாக்குதல்களை Annex C இல், “THE LIST OF LTTE ATTACKS ON VULNERABLE VILLAGES” என்றதலைப்பில் வரிசையாக பட்டியலிட்டிருக்கிறது. (பக்கம் 106 இல் தொடங்குகிறது)





இந்த வகை தாக்குதல்களின் எண்ணிக்கை மொத்தம் 109 வருகின்றனஅதில் Killed, Wounded, Missing என பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை வரிசையாக தந்திருக்கிறது.


இந்த 109 தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட (Killed) பொதுமக்களின் எண்ணிக்கையை கூட்டினால் மொத்தம் 1956 வருகிறதுஇந்த எண்ணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையுடன் பொருந்தி போகிறது



இந்த அறிக்கையில் இருக்கும் காந்தி கணக்கு


இந்த அறிக்கையில் Annex E இல்,   “ATTACKS ON VVIPs/ VIPs” என்ற தலைப்பில்புலிகளால் கொல்லப்பட்ட முக்கிய பிரமுகர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.


இதில் ‘இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது’ என்பது போல,இலங்கை இராணுவம் செய்த கொலைகளை புலிகள் கொன்றதாக பட்டியல் இட்டிருக்கிறார்கள்.


இந்த கட்டுரையின் பகுதி-1 இல்இலங்கை அரசு இனப்படுகொலை ஆவணப்படுத்தலை தடுக்க பாராளுமன்றஉறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும்சந்திர நேருவையும் படுகொலை செய்தது என குறிப்பிட்டிருந்தேன்.


ஆனால் இங்கு இந்த இருவரையும் புலிகள் கொலை செய்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.


அதைப்போல மேலும் சில அரசியல் பிரமுகர்களை புலிகள் கொன்றதாக பொய்யாக பட்டியலிடுகிறது


லலித் அத்துலத்முதலிமுன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த இவரை கொன்றது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசசந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நியமித்த விசாரணை குழு கூட பிரேமதாசவைத்தான் குற்றவாளியாக சுட்டி காட்டியது.


02/11/1999 இல்ஈபிடிபி  சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா அற்புதராஜா சுட்டு கொல்லப்பட்டார்


இவர்தான் மேலே நான் குறிப்பிட்ட ‘அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’  எனும் ஆயுத போராட்ட வரலாற்று தொடரை எழுதிய அற்புதன்இவரை கொலை செய்தது ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா என்பது இலங்கையில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.


இன்னொன்றை பார்த்து என்னை அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது.


16/09/2000 இல் நடந்தமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சராகவும் இருந்த அஷ்ரப் இனது மரணம்.


அஷ்ரப் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்சர்வசாதாரணமாக காந்தி கணக்கில் சேர்ப்பதுபோலபுலிகள் செய்ததாக பட்டயிலிட்டிருக்கிறார்கள்.


10/11/2006 இல் கொல்லப்பட்ட நடராஜா ரவிராஜ் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர் என்பது சிங்களவர்களுக்கு கூட தெரியும்.


அந்த ‘காந்தி கணக்கு’ பக்கங்களை கீழே தந்திருக்கிறேன்.






சரிமீண்டும் கட்டுரையின் மையப்புள்ளிக்கு வருகிறேன்.


விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்களமுஸ்லீம் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?


இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட “Humanitarian Operation Factual Analysis  July 2006 - May 2009” அறிக்கையின் எண்ணிக்கையையே எடுத்துக்கொள்கிறேன்.


இந்த அறிக்கையில் புலிகளால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியுள்ளதை தரவுகளுடன் சுட்டி காட்டியுள்ளபோதும்பொய்யாக காந்தி கணக்கு எழுதியுள்ளபோதும் அவர்கள் கூறியிருக்கும் எண்ணிக்கையையே எடுத்துக்கொள்கிறேன்.


ஏனெனில் இந்த எண்ணிக்கையை நான் குறைத்தால்இலங்கை அரசுக்கு சார்பான அரசுகள்ஊடகங்கள்தமிழீழ கருத்தியலுக்கு எதிரான ஊடகவியலாளர்கள்அறிவுஜீவிகள்இத்யாதிகள் எல்லோரும்பொங்கிவிடுவார்கள்.


சரிஇந்த அறிக்கையில் கூறியிருக்கும் இந்த இரண்டு எண்ணிக்கையையும் கூட்டுகிறேன்.


அதன்படி 9800 + 1950 = 11750    


ஆக இலங்கை அரசின் அறிக்கைப்படி, 1983-2009 வரையான 26 வருடகாலத்தில்புலிகளால் கொல்லப்பட்டமொத்த பொதுமக்களின் எண்ணிக்கை 11750.


எண்கள் சொல்லும் செய்தியை கண்டறிய நான்கு தரப்பினரது எண்ணிக்கை தேவைப்பட்டது.


அந்த நான்கு தரப்பினரது எண்ணிக்கையையும் கண்டறிந்தாயிற்று.


இனி ‘எண்கள் சொல்லும் செய்தி’ பகுதி-5 இல்.


க.ஜெயகாந்த்


















Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]