தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயல்களும், சிங்கள,முஸ்லீம் மக்களை கொலை செய்த புலிகளின் செயல்களும் ஒரே வகையில் சமப்படுத்தமுடியுமா? - எண்கள் சொல்லும் செய்தி என்ன? - ஆய்வு பார்வையில் (பகுதி-5)

தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயல்களும்சிங்கள,முஸ்லீம் மக்களை  கொலை செய்த புலிகளின் செயல்களும் ஒரே வகையில் சமப்படுத்தமுடியுமா? - என்ற கேள்வியை முன்வைத்து இந்த இந்த கட்டுரை பகுதி-1 இல்தொடங்கியது.


இந்த கேள்விக்கான பதிலை எண்கள் மூலமாக அறியலாம் என ஒரு பார்வையை முன்வைத்திருந்தேன்.


இந்த எண்கள் சிக்கலான சர்வதேச சட்டங்கள்வரலாறுசித்தாந்தங்கள் என்பவற்றை விட எளிமையாக போர்களத்தின் உண்மையை விளக்குகின்றன.


எது அந்த எண்கள்?


இதற்கு 4 வகையான எண்கள் தேவைப்படுகின்றன.


1983-2009 வரையான 26 வருட போரில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களையும்விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டவர்களையும் எடுக்கவேண்டும்.


26 வருட போரில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை இரண்டு உப பிரிவுகளாக பிரிக்கவேண்டும்.


a. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை


b. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை


அடுத்ததாக இந்த போரில் விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டவர்களை எடுக்கவேண்டும்

அதையும் இரண்டுஉப பிரிவுகளாக பிரிக்கவேண்டும்.


c. விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை


d. விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்களமுஸ்லீம் மக்களின் எண்ணிக்கை


பிறகு இந்த எண்களை வைத்துக்கொண்டுவிடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்சிங்களமுஸ்லீம் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம் என பார்க்கவேண்டும்.


பிறகு இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்தமிழ் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம் என பார்க்கவேண்டும்.


இதில் கிடைக்கும் விடை ஏன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களையும்புலிகளினால் கொல்லப்பட்ட சிங்கள,முஸ்லீம் மக்களையும் ஒரே தராசில் வைத்து சமப்படுத்த முடியாது என்பதை உங்களுக்கு தெளிவாக காட்டும்.


இந்த 4 வகையான எண்களை பெறுவதற்காகத்தான், 4 பகுதிகளாக கட்டுரை எழுதியிருந்தேன்.


ஒவ்வொரு வகையான எண்களையும் எப்படி கணித்தேன் என்பதை வரலாற்று தரவுகள்ஆதாரங்கள்ஆவணங்கள் அடிப்படையில் விலாவரியாக விவரித்திருக்கிறேன்.


அதன்படி பகுதி-1 இல், 1983-2009 வரையான 26 வருட போரில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 239385 என்பது முடிவு செய்யப்பட்டது.


பகுதி-2 இல்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை 27000 என முடிவுசெய்யப்பட்டது.


பகுதி-3 இல்விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 44390 எனமுடிவு செய்யப்பட்டது.


பகுதி-4 இல் 26 வருட போரில்புலிகளால் கொல்லப்பட்ட மொத்த பொதுமக்களின் எண்ணிக்கை 11750. (இது இலங்கை அரசாங்கத்தால் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பதை தரவுகளுடன் காட்டியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது)


இனி இந்த எண்களை வைத்து அது சொல்ல வரும் செய்தியை பார்ப்போம்.


1983-2009 வரையான 26 வருட போரில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்கள் 239385, விடுதலை புலிகள் 27000.


ஆக இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 239385 +27000= 266385


அப்படியாயின் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்தமிழ்பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம்?


(239385/266385 ) * 100 = 89.86%


இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்விடுதலை புலிகளின் சதவீதம்100 இற்கு எத்தனை சதவீதம்?


(27000/266385) * 100 = 10.14%


1983-2009 வரையான 26 வருட போரில்விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவம் 44390, சிங்கள,முஸ்லீம் பொதுமக்கள் 11750.


ஆக விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 

44390+11750 = 56140


அப்படியாயின் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்இலங்கைஇராணுவத்தின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம்?


(44390/56140) * 100 = 79%


அப்படியாயின் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்சிங்கள,முஸ்லீம்பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம்?


(11750/56140) * 100 = 21%


மேலே குறிப்பிடும் இந்த எண்கள் சொல்லும் செய்தி என்ன?


மீண்டும் கூர்ந்து கவனியுங்கள்.


1983-2009 வரையான 26 வருட போரில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்தமிழ் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு 90%. 


இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்விடுதலை புலிகளின் சதவீதம் 100 இற்கு வெறும் 10% மட்டுமே.


ஆனால் மறுவலமாக விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்சிங்கள,முஸ்லீம் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு 21%.


விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்இலங்கை இராணுவத்தின் சதவீதம் 100 இற்கு 79%.


இதனை அட்டவணையாக கீழே தந்துள்ளேன்.







மேலேயிருக்கும் எண்கள் சொல்லும் செய்தியினைஎந்தவொரு மந்த புத்தியுள்ள மனிதனும் புரிந்துகொள்ளமுடியும்.


இலங்கையின் நிலப்பரப்பில் வாழும் சகலரும் இலங்கை குடிமகன்கள்’ என கூறும் இறையாண்மை அரசான ( Sovereign State) இலங்கைபோரில் நூற்றிற்கு 90% தமிழ் பொதுமக்களை (civilians)  மட்டும் கொலை செய்திருக்கிறது.


ஆனால் உலக ஒழுங்கால் ‘பயங்கரவாதிகள்’ என அழைக்கப்பட்ட புலிகள் போரில்நூற்றிற்கு 79% போர்களத்தில் எதிரியாக இருந்த இலங்கை இராணுவத்தை மட்டும் கொன்றிருக்கிறார்கள்.


அதனால்தான் “தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயல்களும்சிங்கள,முஸ்லீம்மக்களை  கொலை செய்த புலிகளின் செயல்களும் ஒரே வகையில் சமப்படுத்தமுடியுமா?” என்ற கேள்வியை தலைப்பாக வைத்தேன்.


இந்த கேள்விக்கான பதில் என்ன?


ஒரே வகையில் சமப்படுத்த முடியாது.


விடுதலை புலிகள் இலங்கை இராணுவத்தை இலக்காக வைத்தே இந்த 26 வருட போரினையும் நடத்தியிருக்கிறார்கள் என்பதை எண்கள் தெளிவாக காட்டுகின்றன.


ஆனால் இதனையும் மீறி தவிர்க்க முடியாத அழுத்தங்களை இலங்கை இராணுவம் ஏற்படுத்தியதால் (ஜிகாத்படைசிங்கள குடியேற்றம்சிங்கள ஊர்காவல் படைபொது மக்களின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.


ஆனால் மறுபுறம் இலங்கை இராணுவம் போரினை நடத்திக்கொண்டேதமிழ் மக்கள் மீது மறைமுகமாக இனப்படுகொலையை நடத்தியிருக்கிறது.


இது இனப்படுகொலையா?


இனப்படுகொலைதான்


அதனை கீழே விவரிக்கிறேன்.


கட்டுரையின் மையப்புள்ளி 1983-2009 காலகட்டத்தில்  நடந்த பொதுமக்கள் படுகொலையை மட்டுமே பேசுவதால்இதில் இரண்டு மிக முக்கியமான பக்கங்களை நான் உள்ளடக்கவில்லை


அந்த உள்ளடக்கப்படாத இரண்டு முக்கியமான பக்கங்கள்.



1.இலங்கை இராணுவம் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் வல்லுறவு


Tamil Centre for Human Rights (TCHR) இன் அறிக்கையின்படி, 1983-2004 காலகட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 9000 தமிழ் பெண்கள் இலங்கை இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ( இந்திய படை இருந்த 1988,1989 ஆண்டு எண்ணிக்கையை கழித்துபடம் கீழே.


போர் நடந்த 2005-2009 காலகட்டத்தில் நடந்த பாலியல் வல்லுறவுகள்போரிற்கு பின்னர் தடை முகாம்களில்2 1/2 லட்சம் தமிழ் மக்களை அடைத்து வைத்திருந்தபோது நடத்திய பாலியல் வல்லுறவுகள் என்பவை தனி. ( ஐக்கிய நாடுகள் சபையால், 31-03-2011 இல் வெளியிடப்பட்ட Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka அறிக்கை இத்தகைய செயல்கள் நடந்ததை சுட்டி காட்டுகிறது)


2. போர் முடிவடைந்த பின்னர் தடை முகாம்களில் 2 1/2 லட்சம் தமிழ் மக்களை அடைத்து வைத்திருந்தபோதுஇலங்கை இராணுவம் படுகொலை செய்தகாணாமல் ஆக்கிய எண்ணிக்கையும் இதில் உள்ளடக்கப்படவில்லை


காரணம் மேலே சொல்லியபடிகட்டுரையின் மையப்புள்ளியில் இருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காகவேயாகும்.


• இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலையா?


இந்த கேள்விக்கான பதிலை அளிக்கநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (Transnational Government of Tamil Eelam - TGTE) செனட்டரான அவுஸ்திரேலியாவை சேர்ந்த 

Dr. Brian Seneviratne இனது ஒரு கட்டுரையை எடுத்திருக்கிறேன்இவர் ஒரு சிங்களவர் என்பது உபரி தகவல்.


இந்த கட்டுரையின் தலைப்பு ‘Sri Lanka: If This Is Not Genocide, Then What Is It?’. இந்த கட்டுரை வெளியான ஆண்டு Oct 2013.


இந்த கட்டுரை மிக முக்கியமான கட்டுரைநீங்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரைஇந்த கட்டுரையில்உள்ள சகலவற்றையும் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாதுஅதனால் நீங்கள் வாசிக்க இந்த கட்டுரையின் இணைப்பை தந்திருக்கிறேன்.


‘Sri Lanka: If This Is Not Genocide, Then What Is It?’




இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தை வைத்துக்கொண்டு இந்த இனப்படுகொலை பற்றி விவரிக்கிறேன்.


இனப்படுகொலை (Genocide)


இனப்படுகொலை சட்டமூலம் (Genocide Convention) ஐக்கிய நாடுகள் சபையால் டிசம்பர் 9, 1948 இல்கொண்டுவரப்பட்டதுஇது நடைமுறைக்கு வந்த ஆண்டு 12 ஜனவரி 1951.


The Genocide Convention was the first human rights treaty adopted by the General Assembly of the United Nations on 9 December 1948.


இனப்படுகொலை என்பதற்கான வரையறை என்ன?


ஐநாவின் Article 2, இனப்படுகொலை என்பதன் வரையறையை பின்வருமாறு தருகிறது.


genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:


Killing members of the group;


Causing serious bodily or mental harm to members of the group;


Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;


Imposing measures intended to prevent births within the group;


Forcibly transferring children of the group to another group.


அதாவது தேசம்இனம்மொழிமதம் இத்யாதி என ஏதாவது ஒன்றின் அடிப்படையில்ஒரு குழுவினை அழிக்கும்நோக்கத்தில்’, கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குற்ற செயல்களை கொண்டு அந்த குழுவினை ‘முற்றாகஅழித்தலோ’ அல்லது ‘பகுதியாக அழித்தலோ’ இனப்படுகொலையாகும்.


அந்த குழுவினை கொல்லுதல்


அந்த குழுவினை படு காயத்திற்கு உள்ளாக்குதல் அல்லது உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல்


அந்த குழு ‘முழுமையாகவோ’ அல்லது ‘பகுதியாகவோ’ அழிவதனை உறுதி செய்யும் நோக்கில்அந்தஇனக்குழுவினது வாழ்க்கையில் அழுத்தத்தை பிரயோகித்தல்


அந்த குழுவில் புதிதாக பிறப்புகளை தடுக்கும் நோக்கில் செயற்படுவது


அந்த குழுவினது குழந்தைகளை வலுக்கட்டாயமாக இன்னொரு குழுவில் சேர்த்துவிடுவது


மேலேயுள்ள இந்த சகல குற்றங்களையுமே இலங்கை அரசு செய்திருப்பதாக Dr. Brian Seneviratne கூறுகிறார்.


பெரும்பாலானவர்கள் இனப்படுகொலையின் பொருளை பிழையாக புரிந்து கொள்கிறார்கள் எனகுறிப்பிடுகிறார்.


அதாவது ‘இனப்படுகொலை’ எனில் அந்த குழுவினை ‘முழுமையாக (in whole)’ அழித்திருக்கவேண்டும் என பெரும்பாலானவர்களின் பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது.


அப்படி ‘முழுமையாக அழித்திருக்கப்படாவிட்டால்’, அது இனப்படுகொலை அல்ல என நினைக்கிறார்கள்.


ஆனால் Genocide Convention தெளிவாக குறிப்பிடுகிறது.


முழுமையாக’ அல்லது ‘அதனது ஒரு பகுதியை


The Genocide Convention clearly states that it is act committed to destroy, in whole or in part, an ethnic group.


இன்றும் கூட தமிழீழத்திற்கு எதிரான அறிவுஜீவிகள்ஊடகங்கள் ‘இது இனப்படுகொலை அல்லஏனெனில் இலங்கையின் வட-கிழக்கை தவிர்ந்த பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பாதுகாப்பாகத்தானே வாழ்கிறார்கள்’ என்ற குயுக்தியான வாதங்களை வைப்பதுண்டு.


ஆனால் அது உங்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்படும் வாதம்.


ஏனெனில் இனப்படுகொலை என்பது ‘முழுமையாக (in whole)’ அல்லது ‘அதனது ஒரு பகுதியாக (in part)’.


அதாவது ‘ஒரு பகுதியை (in part)’ அழித்திருந்தாலும் அது இனப்படுகொலைதான்.


தமிழர்களது ‘ஒரு பகுதியை (in part)’ அழித்ததற்கான சகல ஆதாரங்களும் நம் கண் முன்னே இருக்கின்றனஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றனநான் மேலே கூறிய எண்களும் அதைத்தான் சுட்டி காட்டுகின்றது.


“The official definition and a popular misconception


The Genocide Convention clearly states that it is act committed to destroy, in whole or in part, an ethnic group.


Unfortunately, the popular concept of genocide is an attempt to destroy the whole ethnic group – ie all the Tamils in Sri Lanka. This is clearly wrong.”


மேலும் இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிடுகிறார்.


ஊடகங்கள் தங்களது செய்தி பசிக்கு ‘தடாலென நடக்கும் இனப்படுகொலைக்கு’ முக்கியத்துவம் தருகின்றனஆனால் ‘சிறுக சிறுக மெதுவாக நடக்கும் இனப்படுகொலையை (slow genocide)’ பற்றி பொருட்படுத்துவதே இல்லை என.


“A further problem is that the media focuses on the more ‘newsworthy’ sudden outbursts of mass killing but overlooks the ‘slow’ or more ‘chronic’ killing, such as is occurring today in the Tamil North and East.


The result is that this ‘slow genocide’, despite being Genocide, is ignored.”


எத்தனை பேர் கொல்லப்பட்டால்அது இனப்படுகொலை?


Genocide Convention ஒரு எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இனப்படுகொலையை வரையறுக்கவில்லை.


அது எந்த எண்ணிக்கையாகவும் இருக்கலாம். 50 ஆக இருந்தாலும் சரி. 5000 ஆக இருந்தாலும் சரி.


ஒரு குழுவினை ‘முற்றாக அழிப்பதையோ’ அல்லது ‘பகுதியாக அழிப்பதையோ’  நோக்கமாக கொண்டிருப்பதை (intention to destroy)’ நிறுவமுடிந்தால்அது இனப்படுகொலை ஆகும்.


இங்கு intention to destroy என்பதனை நிறுவ வேண்டும்.


“All that has to be done is to prove the intention to destroy ‘in whole or in part’ an ethnic group. 


In Sri Lanka, the ‘part’ is the part that lives in the North and East.”


இலங்கை விடயத்தில்தமிழர்களின் ‘ஒரு பகுதி’ என்பது வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழர்களை குறிக்கிறது.


அந்த ‘ஒரு பகுதியை’ அழிப்பதற்கான ‘நோக்கத்தை (intention to destroy)’ இலங்கை அரசு கொண்டிருந்ததுஎன்பதற்கான உதாரணம் நான் மேலே தந்த எண்கள்.


உலக வரலாற்றில் இருந்து ஒரு உதாரணம்


Bosnia's Srebrenica massacre 


இந்த படுகொலை ஜூலை 1995 இல்பொஸ்னிய முஸ்லீம் மக்களுக்கு (Bosnian Muslims) எதிராக பொஸ்னிய செர்பிய படைகளால் நடத்தப்பட்டது.


இதில் குறைந்தது 8000 பொஸ்னிய முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.


பின்னாளில் இந்த படுகொலை ‘இனப்படுகொலை’ என்பதாக International Criminal Tribunal for the former Yugoslavia (ICTYஇல் தீர்ப்பு வழங்கப்பட்டது.


“In 2004, in a unanimous ruling on the case of  prosecutor v. Krstic, the Appeals Chamber of the International Criminal Tribunal for the former Yugoslavia (ICTY), in The Hague, ruled that the massacre of the enclave’s male inhabitants constituted genocide , a crime under international law.”


இந்த படுகொலையை விட பலமடங்கு அதிகமானது 2009 இன் முதல் 5 மாதங்களில் நிகழ்ந்தவையும்போரிற்கு பின்னர் நடந்தவையும்.




The spectrum of Genocide


ஒரு குழுவினது ‘முழுமையையோ’ அல்லது ‘ஒரு பகுதியையோ’ கொல்லுவதுபடு காயப்படுத்துவதுஉளவியல் சித்தரவதைக்கு உள்ளாக்குவதுஅழிப்பதை நோக்கமாக கொண்டு அவர்களது வாழ்வில் அழுத்தங்களை உருவாக்குவது என்ற physical genocide இல் Genocide Convention கவனம் செலுத்துகிறதுஆனால் இதை தாண்டியும் இனப்படுகொலை (Genocide) என்பதை விரிக்க முடியும்அது பல அடுக்குகளை கொண்டது எனDr. Brian Seneviratne கூறுகிறார்


“Although the Genocide Convention focuses on physical genocide – killing, causing serious bodily harm and mental harm, and deliberately inflicting on a group conditions of life calculated to bring about their physical destruction, there is a lot more to it than that. There are different types of Genocide.” 


Types of Genocide


Physical Genocide


Cultural Genocide


Educational Genocide


Economic Genocide


Religious Genocide


Structural Genocide


மேலே கூறிய இந்த ஒவ்வொரு வகைகளை பற்றியும் விரிவாக அவர் விவரித்து செல்கிறார்அதனைமுழுமையாக இந்த கட்டுரையில் தரும் வாய்ப்பு இல்லைஅதனால் நான் சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன்.


Physical Genocide - இதுதான் நமக்கு தெரிந்தநாம் எல்லோரும் உள்வாங்கியிருக்கும்புரிந்துவைத்திருக்கும் இனப்படுகொலை.


Cultural Genocide - Eg. the destruction of the Jaffna Public library with more than 90,000 books, documents and material, some of which dealt with Tamil culture.


உதாரணமாக யாழ் பொது நூலகத்தை அழித்தது ஒரு Cultural Genocide என்பதற்குள் வரும்.


போரிற்கு பின்னர் வட கிழக்கில்தமிழ் மக்களது எந்தவொரு விழாவிற்கும் இலங்கை இராணுவத்தின்அனுமதி பெறவேண்டும் என்ற நிலை இன்று இருக்கின்றதுஇயல்பு நிலையில் நிகழவேண்டிய பல நிகழ்வுகள்இராணுவத்தின் உள்ளீடுகளுடன் நடக்கிறது.


Educational Genocide - This is a serious matter for an ethnic group, the Tamils, who have, for centuries, put education as the top priority. No other group in Sri Lanka has given education as high a priority as the Tamils have.


இலங்கையில் இருந்த இனங்களிலேயே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த இனம் ஈழ தமிழர் இனம்.


இதை விளக்க எனது முன்னைய கட்டுரையில் நான் தந்த உதாரணத்தையே இங்கு தருகிறேன்.


இலங்கையில் ‘தனி சிங்களம்’  (Sinhala Only Act) எனும் சட்டம் 1956 இல் இயற்றப்பட்டதுஇந்த ‘தனிசிங்களம்’ எனும் சட்டத்தினால்எப்படி ஈழ தமிழர்கள் அரச நிர்வாகம்உயர் தொழில்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள் என்பதை Fighting Words: Language Policy and Ethnic Relations in Asia எனும் புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது.


 "In 1956, 30 percent of the Ceylon administrative service, 50 percent of the clerical service, 60 percent of engineers and doctors, and 40 percent of the armed forces were Tamil. 


By 1970 those numbers had plummeted to 5 percent, 5 percent, 10 percent, and 1 percent, respectively."


இதில் உள்ள புள்ளிவிபரங்கள்இலங்கையில் 1956 இற்கு முன்பு வரை ஈழ தமிழர் இனம் கல்வியில் சிறந்துவிளங்கிஅரச நிர்வாகம்உயர் தொழில்களில் தனது மக்கள் தொகை சதவீதத்திற்கும் அதிகமான பங்கை எப்படி கைப்பற்றியிருந்தது என்பதை தெளிவாக காட்டுகிறது


அன்றைய இலங்கையின் சனத்தொகையில் இலங்கை தமிழர்கள் 12% இற்கும் குறைவுஆனால் இலங்கைஅரச நிர்வாகத்தில் 30% ஐயும்மருத்துவர்பொறியாளர்களில் 60% பங்கையும் கொண்டிருந்தார்கள்


அதனால் ஈழ தமிழரின் கல்வியை குறிவைத்துபின்னர் 1971 இல் ‘பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை(Standardisation of University entrance marks)’ கொண்டுவரப்பட்டது.


ஆயுத போராட்டம் உருவாகியதில்இந்த ‘தரப்படுத்தல்’ முக்கிய பங்காற்றியது.


போர் காலங்களில் பல பாடசாலைகள் இலங்கை விமானப்படையின் குண்டு தாக்குதலில் தரைமட்டமாகி இருக்கின்றன.


Economic Genocide : போர் காலத்தில் தமிழ் மக்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு பிறிதொரு இடத்திற்கு அகதியாக (Internally displaced person - IDP) மாறி மாறி செல்ல வேண்டிய சூழல் இருந்ததுஇதனால் IDP தமிழ் மக்கள் தங்களது தொழில்அதனை சார்ந்த நிலம் எல்லாவற்றையும் விட்டு உயிரை தற்காத்து கொள்ள ஓடவேண்டியதாக இருந்தது


இன்று அவர்களது வாழ்வாதார நிலம் இலங்கை இராணுவத்தின் கைகளில் இருக்கிறதுஇலங்கை இராணுவம் இந்த நிலங்களை கையகப்படுத்தி ‘உச்ச பாதுகாப்பு வலயம் (High Security Zones) என்ற பெயரில்வைத்திருக்கிறது.


வட-கிழக்கில் நிலங்கள்இராணுவத்தின் குடும்பங்கள் வந்து குடியேறி தொழில் தொடங்க வழங்கப்படுகின்றன.


Religious genocide - பல நூறு சைவகிறித்துவ வழிபாட்டு தலங்கள் போர் காலத்தில் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சு தாக்குதலில் தரைமட்டமானது இதற்கு சான்று.


இன்று அந்த பகுதிகளில் பௌத்த மத சின்னங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன.


Structural Genocide - This is the destruction of anything built by the Tamils, however functional it is.


“The most serious aspect of structural genocide is the Government-directed (massive) settlement of Sinhalese from the South (many of them ex-military people) in the Tamil North and East. It an attempt to permanently destroy the reality of a “Tamil homeland”, once and for all. It is ‘Sinhalisation’ of the Tami area, a demographic change which might well be irreversible.”


ஆக இனப்படுகொலை (Genocide) என்பது வெறுமனே Physical Genocide என்பது மட்டுமல்லஅதையும் தாண்டி அது விரிவடைய கூடியது.


“This is an extension of the Genocide Convention, being the “intention backed by the act of destroying, in whole or in part”, the people, their culture, education, economic existence, religion and structures.


All of these (and more) the Sri Lankan (Sinhalese) Government has done, and what is serious, is continuing to do with increased zeal, determination and alarming speed.”


• The time-frame for genocide ( கால அளவு அடிப்படையில்)


1. ‘Acute’ genocide


2009 இன் முதல் 5 மாதங்களில் நடந்தது இதுதான்கொத்து கொத்தாக (mass killing) தமிழ் மக்களை கொன்றது இதில்தான் வரும்.


“This is ‘mass killing’ of a population or part of a population. 


It is dramatic and easily recognised as genocide. This is what happened in the last 5 months of the conflict in Sri Lanka – massive aerial bombardment, shelling and shooting.”



2. ‘Intermittent’ genocide


இது ‘சிறிது காலம் விட்டு மீண்டும் தொடங்குகிற’ அல்லது ‘இடைவெளி விட்டு மறுபடியும் தொடங்குகிற’ என்ற பொருளில் வருகிறது.


இடைவெளி விட்டு வந்துமீண்டும் இடைவெளி விட்டு வந்து தமிழர்களை படுகொலை செய்த அரச ஆதரவுடன் நடந்த இனக்கலவரங்கள்  (pogrom) எல்லாமே இந்த வகைதான்.


1958 இனக்கலவரம்

1977 இனக்கலவரம்

1983 இனக்கலவரம் (கறுப்பு ஜூலை)


3. ‘Slow’ genocide


மேலே கூறிய ‘Acute’ genocide , ‘Intermittent’ genocide விட மோசமானது இந்த ‘Slow’ genocide தான்.


ஏனெனில் ஒரு genocide நடந்து கொண்டிருக்கிறது என்பதே இங்கு தெரியாதுஉணரும்வகையில் அதனது புறத்தோற்றம் இருக்காது.


போரிற்கு பின்னரான காலங்களில் நடந்ததுநடந்து கொண்டிருப்பது இதுதான்.


பட்டினி சாவுகள்மருத்துவ உதவியின்மைமன அழுத்தத்தில் நேர்ந்த தற்கொலைகள்காணாமல்ஆக்கப்படுதல் என.


“This is what Madeline Albright, former US Secretary of State and an advisor to President Obama, called the ‘Rolling Genocide’ (with reference to Dafur)”


ஆக இதுவரை Genocide என்பதற்கான துல்லியமான வரையறைஅதனது அடுக்குகள்கால அளவின்அடிப்படையில் அது இயங்கும் விதம் என பலவற்றை மேலே தந்திருந்தேன்.


Bosnia's Srebrenica massacre  இனப்படுகொலை என அறிவித்ததற்கும்இலங்கையில் தமிழ் மக்கள் மீதுஇலங்கை அரசு நடத்திய படுகொலைகளை பற்றி உலக ஒழுங்கு மூச்சே விடாமல் இருப்பதற்கும் என்ன காரணம்?


உலக ஒழுங்கின் புவிசார் நலன் அரசியல்தான்.


அது எப்படி போரின் இறுதி மாதங்களின் செயற்பட்டது என்பதை விரிவாக பகுதி-1 இல் தந்திருக்கிறேன்.


இனி அடுத்த பகுதியில் பார்ப்போம்.


.ஜெயகாந்த்


















































Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]