தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயல்களும், சிங்கள,முஸ்லீம் மக்களை கொலைசெய்த புலிகளின் செயல்களும் ஒரே வகையில் சமப்படுத்தமுடியுமா? - எண்கள் சொல்லும் செய்தி என்ன? - ஆய்வு பார்வையில் (பகுதி - 1)

  


தமிழீழ ஆயுதப்போராட்டம் பற்றிய உரையாடலில்இலங்கை இராணுவம் படுகொலை செய்த தமிழ் மக்களை பற்றி குறிப்பிடும்போது எதிர்தரப்பு வழமையாக ஒரு வாதத்தை முன்வைக்கும்.


விடுதலை புலிகளும்தான் அப்பாவி சிங்களமுஸ்லீம் மக்களை படுகொலை செய்தார்கள்.காத்தான்குடி படுகொலைஅனுராதபுரம் படுகொலைஇத்யாதிஇத்யாதி’ என தங்களின் வாதத்தை உருட்ட ஆரம்பிப்பார்கள்.


அதாவது இங்கு இரண்டு தரப்புமே பொதுமக்களை படுகொலை செய்திருக்கிறார்கள்அதனால் இரண்டுதரப்புமே ஒரே வகையான குற்றவாளிதான் என்ற பொருளில் வாதம் இருக்கும்.


இந்த எதிர்தரப்பு என்பது யார்?


அரசுகள்ஊடகங்கள்தமிழீழ கருத்தியலுக்கு எதிரான ஊடகவியலாளர்கள்அறிவுஜீவிகள்இத்யாதிகள்தான்இந்த எதிர்தரப்பு.


இந்த வாதம் சரியானதா?


இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்விடுதலை புலிகளால் கணிசமான சிங்கள,முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்அதனால் இரண்டையும் சமப்படுத்தமுடியுமா?


இது ஒரே வகையில் சமப்படுத்தக்கூடியதல்ல என்பதை உங்களுக்கு புரியவைக்கவே இந்த கட்டுரை.


இதை ஒரு எண்ணிக்கை கணக்கொன்றின் மூலம் விளங்கப்படுத்துகிறேன்.


இந்த கணக்கின் முடிவில் கிடைக்கும் எண்கள் என்ன செய்தியை சொல்கின்றது என்பது பற்றியதுதான் இந்த பதிவு


  • எண்ணிக்கை கணக்கு செயற்படும் விதம்

இந்த கணக்கிற்காக இலங்கையின் ஆயுத போராட்ட காலமாக 1983-2009 காலகட்டத்தை எடுத்திருக்கிறேன்.


ஏனெனில் முறையான போர் என தொடங்கியது 1983 இல் தான்அதனால்தான் இந்த 1983-2009 கணக்கு.


அப்படியெனில் 26 வருடங்கள் என வரும்.


• இந்த 26 வருட போரில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை இரண்டாக பிரிப்போம்.


a. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை


b. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை



அடுத்ததாக இந்த போரில் விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டவர்களை இரண்டாக பிரிப்போம்.


c.விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்களமுஸ்லீம் மக்களின் எண்ணிக்கை


d.விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை


பிறகு விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்சிங்களமுஸ்லீம் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம் என பார்ப்போம்.


பிறகு இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்தமிழ் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம் என பார்ப்போம்.


இதில் கிடைக்கும் விடை ஏன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களையும்புலிகளினால் கொல்லப்பட்ட சிங்களமுஸ்லீம் மக்களையும் ஒரே தராசில் வைத்து சமப்படுத்த முடியாது என்பதை உங்களுக்கு தெளிவாக காட்டும்.


அத்துடன் மேலே நான் கூறிய ‘எதிர்தரப்பு’ எப்படி உங்கள் மண்டையில் இத்தனை நாளும் மிளகாய்அரைத்திருக்கிறது என்பதும் புரியும்


சரிஇனி கணக்கிற்கு வருவோம்.


இங்கு நான்கு தரப்பினரது எண்ணிக்கையை நாம் முதலில் கண்டறியவேண்டும்அவையாவன


a. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை


b. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை


c. விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்களமுஸ்லீம் மக்களின் எண்ணிக்கை


d. விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை


• கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை எப்படி எடுப்பது?


மேலே குறிப்பிட்ட நான்கு தரப்பின் எண்ணிக்கையையும் நேரடியாக எளிதாக எடுக்கமுடியாது.


பல்வேறு தரவுகள்அதனது வரலாற்று பின்னணிஅதனது நம்பகத்தன்மை என பல்வேறு கோணங்களில் அலசித்தான் இந்த எண்ணிக்கையை எடுக்கவேண்டும்.


உதாரணத்திற்கு போரிலே இலங்கை இராணுவம் அதனது உயிரிழப்புகளை மிகவும் குறைத்து சொல்வதும்தன்னால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சொல்வதும் இலங்கையில் காலம்காலமாக நடந்த ஒன்று.


இலங்கை இராணுவம் இதுவரை தான் கொன்றதாக சொல்லும் விடுதலை புலிகளின் எண்ணிக்கையை கூட்டினால் இலங்கையின் சனத்தொகையை மிஞ்சிவிடும் என சிங்கள மக்களே தமக்குள் காமெடியாக சொல்லி சிரித்து கொள்ளும் நிலையில்தான் அவர்களின் கணக்கு இருந்தது.


அதனால் மேலே நான் குறிப்பிட்ட இந்த நான்கு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெவ்வேறு  வழிமுறைகளின் ஊடாகவே பெற்றிருக்கிறேன்.


இந்த வழிமுறைகள் உண்மைக்கு மிக நெருக்கமானவைஅதனால் அந்த வழிமுறைகளை பயன்படுத்தியிருக்கிறேன்.


• முதலில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 


இந்த எண்ணிக்கையை பெறுவதற்கான முறைதான் இந்த நான்கு எண்ணிக்கையிலும் மிக கடினமான ஒன்று


கடினமாக இது இருப்பதற்கு பின்னாலும் ஒரு ‘அரசியல்’ உண்டு.


ஏன் கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதை இந்த பதிவின் பிற்பகுதியில் விவரிக்கிறேன்.


இந்த இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை சில அமைப்புகள்முடிந்தவரை’ ஆவணப்படுத்தியுள்ளன.


• ஏன் முடிந்தவரை?


ஏனெனில் போர்கள சூழலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் விபரங்களை ஆவணப்படுத்துவது என்பது எவ்வளவு உயிராபத்து நிறைந்ததுஇதன் பின்னே உள்ள அரசியல் என்பது என்ன என்பவற்றை பிற்பகுதியில் விவரிக்கிறேன்.


சரிஇந்த இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை ‘முடிந்தவரை’ ஆவணப்படுத்தியுள்ள ஆவணங்கள் எவை எவை?


1 . TCHR (Tamil Centre for Human Rights - TCHR ) அமைப்பின் அறிக்கை (1956-2004 தமிழ் மக்கள்படுகொலைகள்)


இந்த அறிக்கை கொல்லப்பட்டோர் (Killings), காணாமல் ஆக்கப்பட்டோர் (Disappearances), கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோர் (Arrest/Torture), பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோர் (Rape), காயத்திற்கு உள்ளானோர் (Injuries), இடம்பெயர்ந்தோர் (Displacements) என சகல கூறுகளையுமே ஆவணப்படுத்தியிருக்கிறது.



2 . NorthEast Secretariat on Human Rights (NESoHR) அமைப்பின் அறிக்கைஇது தமிழின படுகொலைகள் பாகம்-1 (1956-2001) எனவும் தமிழின படுகொலைகள் பாகம்-2 (2002-2008) எனவும் ஆவணப்படுத்தியிருக்கிறது.


இந்த ஆவணத்தில் உள்ள சிக்கல் என்னவெனில், NESoHR அமைப்புஇலங்கை இராணுவத்தால் தமிழ்மக்கள் கும்பலாக கும்பலாக படுகொலை செய்யப்பட்ட நிழ்வுகளை மட்டுமே ஆவணப்படுத்தியிருக்கிறது


அதனால் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தனி நபர்கள் பற்றிய விபரங்கள் முற்றாக விடுபட்டுபோயுள்ளன.


3 • ‘தமிழினப் படுகொலை ஆவண தளத்தால்’ ஆவணப்படுத்தப்பட்ட ‘GENOCIDE CHRONICLES 1956-2009’ எனும் ஆவணம்.


இந்த GENOCIDE CHRONICLES 1956-2009 ஆவணம் பகுதி-1 , பகுதி-2 என இரண்டு பாகங்களாக தமிழர் படுகொலைகளை ஆவணப்படுத்தியிருக்கிறது.


இது இந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் தகவல்களை அந்ததந்த நாட்களில் வெளிவந்த தினசரி பத்திரிகைகளில்ஊடகங்களில் வந்த தகவல்களை தொகுத்து தந்திருக்கிறதுமற்றும் பல அமைப்புகளின் தகவல்களையும் பெற்று ஆவணப்படுத்தியிருக்கிறதுகுறிப்பாக NESoHR இனது தமிழின படுகொலைகள் பாகம்-1, பாகம்-2 இனை முழுமையாக உள்ளடக்கி ஆவணப்படுத்தியிருக்கிறது.


கொல்லப்பட்டவர்களின் பெயர்,வயது போன்ற தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.


ஆனால் இந்த ஆவணத்தின் தகவல்கள் TCHR அமைப்புNESoHR அமைப்பு போல நேரடியாக களத்திற்குசென்று திரட்டிய தகவல்கள் அல்லபல்வேறு அமைப்புஊடகங்கள் என்பவற்றில் வந்த தகவல்களை தொகுத்து ஆவணப்படுத்தப்பட்ட ஆவணமாகும்.


ஆக மேலே குறிப்பிட்ட இந்த மூன்று அமைப்புகளின் ஆவணங்கள்தான்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை ‘முடிந்தவரை’ பல தகவல்களோடு ஆவணப்படுத்தியிருக்கும் ஆவணங்களாகும்


இதை நீங்கள் புரிந்துகொள்ள மீண்டும் அவற்றை பட்டியலிடுகிறேன்.


1 • TCHR (Tamil Centre for Human Rights - TCHR ) அமைப்பின் அறிக்கை


2 • NorthEast Secretariat on Human Rights (NESoHR) அமைப்பின் அறிக்கை. (வடகிழக்கு மனிதஉரிமைகள் செயலகம்)


3 • தமிழினப் படுகொலை ஆவண தளத்தால்’ ஆவணப்படுத்தப்பட்ட ‘GENOCIDE CHRONICLES 1956-2009’ எனும் ஆவணம்


இந்த மூன்று ஆவணங்களை பயன்படுத்தித்தான் 1983-2009 காலகட்டத்தில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை கண்டறியவேண்டும்.



• எண்ணிக்கையை கண்டறிவதற்கு கையாண்ட முறை


இந்த மூன்று ஆவணங்களும் தரும் எண்ணிக்கையை அப்படியே கூட்டி தரமுடியாது.


உதாரணத்திற்கு A என்பவரின் படுகொலை மேலே கூறிய மூன்று ஆவணங்களிலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.


மூன்று ஆவணங்களில் இருந்தும் இந்த படுகொலையை சேர்த்தால் மூன்று படுகொலைகளாக மாறிவிடும் சிக்கல் இருக்கிறதுஅதாவது Data Duplication.


அப்படி நடந்தால் தவறான எண்ணிக்கையாக மாறிவிடும்இந்த கட்டுரையின் நோக்கமே சிதைந்து விடும்இந்த கட்டுரையின் நம்பத்தன்மையும் அடிபட்டுவிடும்.


அதனால் இந்த Data Duplication  தவிர்க்கஒரு காலகட்டத்திற்கு ஏதாவது ஒரு ஆவணத்தை மட்டுமே பயன்படுத்திருக்கிறேன்.


அதிலும் முடிந்தவரை ஒரே ஒரு ஆவணத்தை மட்டும் அதிக காலகட்டத்திற்கு பயன்படுத்த முயற்சித்திருக்கிறேன்.


சாத்தியம் இல்லாத பட்சத்தில் மட்டும் மற்றைய ஆவணத்தை பயன்படுத்தியிருக்கிறேன்.


அதன்படி NESoHR இனது தமிழின படுகொலைகள் பாகம்-1 (1956-2001),  தமிழின படுகொலைகள் பாகம்-2 (2002-2008) இரண்டினையும் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


இந்த அறிக்கைகள் இலங்கை இராணுவம் தமிழ் மக்களை கும்பலாக படுகொலை (massacre) செய்தவைகளை மட்டுமே ஆவணப்படுத்தியிருக்கிறது.



NESoHR இனது தமிழின படுகொலைகள் பாகம்-1 (1956-2001) இற்கான இணைப்பு கீழே.




தமிழின படுகொலைகள் பாகம்-2 (2002-2008) இற்கான இணைப்பு கீழே.




NESoHR அமைப்பை பற்றிய மேலதிக தகவலுக்கு இணைப்பு கீழே.



ஆனால் இதை தவிர்த்து இலங்கை இராணுவத்தால் பல வகைகளில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்அவையெல்லாம் NESoHR அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.


இந்த எண்ணிக்கையை கணக்கிடுகையில் சில இடங்களில் சில சிக்கல்கள் தோன்றினஅதை கட்டுரையில்அந்தந்த இடங்களில் விளக்குகிறேன்


இந்த கட்டுரையின் பிரதான ஆவணமாக TCHR (Tamil Centre for Human Rights - TCHR ) அமைப்பின் அறிக்கையைத்தான் (1956-2004 தமிழ் மக்கள் படுகொலைகள்எடுத்திருக்கிறேன்.


சரிஇனி ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனியாக விளக்குகிறேன்.



TCHR (Tamil Centre for Human Rights - TCHR ) 


முதலாவதாக TCHR அமைப்பின், 1956-2004 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டகாணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களது அறிக்கையை எடுத்துக்கொள்கிறேன்.


இந்த அறிக்கை மேலே குறிப்பிட்டது போல கொல்லப்பட்டோர் (Killings), காணாமல் ஆக்கப்பட்டோர்(Disappearances), கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோர் (Arrest/Torture), பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோர் (Rape), காயத்திற்கு உள்ளானோர் (Injuries), இடம்பெயர்ந்தோர்(Displacements) என வகைப்படுத்தி ஆவணப்படுத்தியிருக்கிறது.


இவற்றை தனி தனி படங்களாக கீழே இணைத்துள்ளேன்.


அத்துடன் இந்த அறிக்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை ஆண்டுகள் வாரியாகமாவட்டங்கள் வாரியாக ஆவணப்படுத்தியிருக்கிறது.  


போர் களமாயிருந்த தமிழீழ நிலப்பரப்பில் எங்கெங்கெல்லாம் படுகொலைகள்பாலியல் வல்லுறவுமனித உரிமை மீறல்களை இலங்கை இராணுவம் நிகழ்த்தியதோ அங்கெல்லாம் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இந்த தகவல்களை தொகுத்திருக்கிறது என்பது நீங்கள் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விடயம்.


“The Tamil Centre for Human Rights is the first and the only human rights organisation which has visited the conflict villages in the NorthEast where there had been severe human rights violations - massacres, disappearances, rape, looting, arson arrest, torture during the twenty years of bloody conflict in the NorthEast and upcountry in the island of Sri Lanka.”


(Tamil Centre for Human Rights - TCHR 
Study Mission - Visit to Batticaloa, Trincomalee, Vanni, Jaffna, Colombo and Upcountry: July - August 2004: )


ஏனெனில் உலக ஒழுங்கின் மனித உரிமை அமைப்புகள் பெரும்பாலும் தமிழீழத்தில் களத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தரவுகளை சேகரித்ததில்லைஇவைகள் கொழும்பிலும்கண்டிபேருவள போன்ற உல்லாச பயணிகள் தங்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டுதான் அறிக்கைகளை தயாரித்தன” என TCHR மிக முக்கியமான குற்றச்சாட்டை வைக்கிறது.


“In the past, there had been reports of fact finding missions by a few foreign human rights organisations. Those reports were written after visiting Colombo the capital of Sri Lanka, Kandy, Beruwela and other tourist locations where there is no ethnic conflict. 


TCHR representatives have travelled from Maha Oya in the East to Kankesanthurai in the North through every village and town. We have visited Puttalam, Chilaw, Negombo, Colombo and Upcountry.”


இது தொடர்பான தகவல்களை மேலும் அறிய கீழுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வாசிக்கவும்.


https://tamilnation.org/indictment/shadow_war/041102tchr.htm#Fact-finding_/_Study_Mission



ஆனால் அதேநேரம் TCHR அமைப்பினால்இராணுவத்தால் கொல்லப்பட்ட சகல தமிழ் மக்களின் எண்ணிக்கையையும் தொகுக்க முடியவில்லை என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்ஆனால் பெரும்பான்மையான  படுகொலைகளை ஆவணப்படுத்தி இருக்கிறதுஆனால் இது முழுமையானது அல்ல


• கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை முழுமையாக திரட்டுவதில் இருந்த கள சிக்கல் என்ன?


போர் நடந்துகொண்டிருந்தபோதுபடுகொலை செய்யப்பட்ட  தமிழ் மக்களது இடத்திற்கு சென்று தகவல்களை திரட்டுவது  பாதுகாப்பானதாக இருக்கவில்லைதிரட்டுபவர்களின் உயிர் இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.


இலங்கை இராணுவத்தின் பழிவாங்கலுக்கு அஞ்சி பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை விபரங்களை வெளிப்படையாக தர பயந்தார்கள்தங்களது பெயர் விபரங்களை கூற பயந்தார்கள்


அதுபோல தமிழீழத்தை விட்டு முற்றாக இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விபரங்களும் இந்த ஆவணங்களில் உள்ளடக்க முடியவில்லைஏனெனில் அவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து இருந்தார்கள்.


அதுபோல குடும்பமாக கொல்லப்பட்டவர்களின் விபரங்களும்அவர்களை பற்றி தகவல்களை தருவதற்கு ஒருவரும் இல்லாத நிலையில்அந்த தகவல்களை ஆவணப்படுத்த முடியாமல் போனது.


இனி மறுபடியும் TCHR அமைப்பின் ஆவணத்திற்கே வருகிறேன்.


படம் 1 இல் கொல்லப்பட்டோர் (Killings), காணாமல் ஆக்கப்பட்டோர் (Disappearances), கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோர் (Arrest/Torture), பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோர் (Rape), காயத்திற்கு உள்ளானோர் (Injuries), இடம்பெயர்ந்தோர் (Displacements) என சகலவற்றையும் ஒரு அட்டவணையில் தந்திருப்பதை காணலாம்.





இதனது காலகட்டம் 1956-2004 ஆகும்.


இந்த கட்டுரையின் உள்ளடக்கம் 1983-2009 காலகட்டத்தில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையைத்தான் பெற முயல்கிறது.


இந்த எண்ணிக்கையை படம் 3 இல் உள்ள அட்டவணையில் பெற்று கொள்ளலாம். (பார்க்க படம் 3)




இந்த படம் 3 இல் உள்ள அட்டவணை, 1983-2004 காலப்பகுதியில் தமிழீழ பகுதிகளான அம்பாறைமட்டக்களப்புதிருகோணமலைவவுனியாமுல்லைத்தீவுகிளிநொச்சிமன்னார்யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களை பட்டியலிடுகிறது.


அட்டவணை 1983-2004 காலப்பகுதியில் கொல்லப்பட்ட மொத்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 47556 எனகூறுகிறது.


ஆனால் இந்த இடத்தில் ஒரு சிக்கல் முளைக்கிறது.


இந்த பட்டியலில் இருந்து இந்திய படைகளால் (IPKF) படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை பிரித்து வெளியே எடுக்கவேண்டும்.


இந்திய படைகள் இலங்கையில் இருந்த காலகட்டம் ஜூலை 1987 - மார்ச் 1990 வரையாகும்.


படம் 3 அட்டவணைஇந்திய படை இருந்த காலகட்டத்தை (**) என்ற அடையாளத்துடன் தனித்து காட்டியிருக்கிறது.


அதன்படி இந்திய படையால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 

1988 இல் - 2929

1989 இல் - 1475


1987 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 3705.


ஆனால் இதில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டோரும் அடக்கம்இந்திய படையால் கொல்லப்பட்டோரும் அடக்கம்.


ஏனெனில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடந்தது 29 ஜூலை 1987.


ஜூலை 1987 வரை இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் சண்டை நடந்ததுஅக்டோபர் 1987 இல் இந்தியப்படைகளுக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங்கியது


அதாவது சரியாக 1987 ஆம் ஆண்டு அக்டோபர்நவம்பர்டிசம்பர் என்ற 3 மாதங்களில் இந்திய படைகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களை பிரித்து எடுக்கவேண்டும்.


அதனால் 1987 இல் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை பெற பின்வரும் வழிமுறையை கையாண்டிருக்கிறேன்.


1987 இல் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை GENOCIDE CHRONICLES 1956-2009 ஆவணத்திலிருந்து தனியாக எடுத்திருக்கிறேன்.


GENOCIDE CHRONICLES 1956-2009 ஆவணத்தின் பகுதி-1 & பகுதி 2 இன் படிஅக்டோபர்நவம்பர்டிசம்பர் மாதங்களில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 875.


அத்துடன் 1988, 1989  ஆண்டுகளில் இந்திய படையால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையையும் கழிக்கவேண்டும்.


அதன்படி இந்த கணக்கு பின்வருமாறு வரும்.


1983-2004 படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை - 47556


இதிலிருந்து கழிக்கவேண்டிய 1988,1989 இல் இந்திய படையால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின்எண்ணிக்கை - (2929 + 1475)


அத்துடன் 1987 இல் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 875.


47556 - (875+ 2929 + 1475) = 42277


ஆக 1983 - 2004 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 42277 ஆகும்.


• இனி 2005-2008 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை


உங்களுக்கு இங்கே ஒரு கேள்வி எழலாம்.


ஏன் 2009  சேர்க்கவில்லை என.


அதற்கு காரணம் உண்டு.


2009 இன் முதல் 5 மாதங்கள் என்பது இறுதிப்போரின் இறுதி மாதங்கள்.


இந்த இறுதி மாதங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையில்தான் உலக ஒழுங்கின் புவிசார் நலன் அரசியல் உள்ளே வருகிறது.


இனப்படுகொலை (Genocide), போர் குற்றங்கள் (War Crimes) போன்ற சொல்லாடல்களை இலங்கைக்கு எதிராக பயன்படுத்துவதா அல்லது புவிசார் நலன் தமக்கு சாதகமாக மாறும் பட்சத்தில் இலங்கையை பாதுகாப்பதா என்ற உலக ஒழுங்கின் சதுரங்க ஆட்டம் இதற்குள்தான் வருகிறது.


அதனால் இந்த 2009 இல் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை தனியாக விவரிக்கிறேன்.


• சரிஇனி 2005-2008 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின்எண்ணிக்கை எவ்வளவு?


இதற்கான தகவலினை தேடுகையில்அதே TCHR அமைப்பு ஏப்ரல் 2009 இல் தயாரித்த DURBAN REVIEW CONFERENCE என்ற அறிக்கை கிடைத்தது.


அதிலே 2005, 2006 , 2007 ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை பெறமுடிந்தது. 2008 ஆண்டுக்கான எண்ணிக்கை முழுமையானதாக இல்லைஜூன் மாதம்வரையிலான எண்ணிக்கை மட்டுமே உள்ளடக்கப்பட்டிருக்கிறது






அதனால் அந்த அறிக்கையில் இருந்து 2005,2006,2007 ஆண்டுகளில் கொல்லப்பட்ட (killing) எண்ணிக்கையை எடுக்கிறேன்.


2005 - 243

2006 - 1292

2007 - 834


ஆக 2005-2007 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 

243 + 1292 + 834 = 2369


• இன்னும் 2008 ஆண்டுக்கான எண்ணிக்கையை பெறவேண்டும்.


இந்த எண்ணிக்கையை மட்டும் GENOCIDE CHRONICLES 1956-2009 ஆவணத்திலிருந்து தனியாக எடுத்திருக்கிறேன்.


அந்த ஆவணத்தின்படிதிகதி வாரியாக அதனது பாகம்-1, பாகம்-2 இல் உள்ள படுகொலைகளை தொகுத்ததில், 2008 இல் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 1050 என வருகிறது.


இதுவரை நான் கண்டடைந்த இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை மீண்டும் தருகிறேன்.


1983 - 2004 காலகட்டத்தில் - 42277 

2005- 2007 காலகட்டத்தில் - 2369

2008 ஆண்டு  - 1050


அடுத்து 2009 இன் முதல் 5 மாதங்களில் கொல்லப்பட்டவர்களை கண்டறியவேண்டும்.


• இனி 2009 இல் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை


இதுதான் இறுதிப்போரின் இறுதி மாதங்கள்


இந்த 2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை முதலில் உங்களுக்கு சொல்வதற்கு முன்புசில விடயங்களை சுருக்கமாக சொல்ல வேண்டியிருக்கிறது.பிறகு அவற்றை விலாவரியாக இந்த கட்டுரையின் பிற்பகுதியில் விவரிக்கிறேன்.


இதனை விவரித்தால்தான்இந்த 5 மாதங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பெறுவதற்கு நான்பயன்படுத்திய ஆவணங்களின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்


இந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ‘உண்மையான’ எண்ணிக்கையை வெளியிடுவதில்தான் உலக ஒழுங்கும் தகிடுதத்தம் செய்ததுஉலக ஒழுங்கின் ஆணைப்படி ஐக்கிய நாட்டு சபையும் (United Nations) தகிடுதத்தம் செய்தது


ஏனெனில் உலக ஒழுங்கை தலைமை ஏற்று நடத்தும் அமெரிக்காவிற்கு இலங்கையில் புவிசார் நலன் இருக்கிறதுஇலங்கையை தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முனையும் சீனாவிற்குஇலங்கையில் புவிசார் நலன் இருக்கிறதுதமிழீழம் அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இந்தியாவிற்கும்இலங்கையில் புவிசார் நலன் இருக்கிறதுஜப்பான்பிரித்தானியாபாகிஸ்தான்இத்யாதி என ஒவ்வொரு நாடுகளுக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப இலங்கையில் புவிசார் நலன் இருக்கிறது.


அதனால் 2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது உலக ஒழுங்கும் ‘ஒன்றும்  நடக்காதது போல பாவ்லா காட்டியது’. யோக்கிய சிகாமணி ஐக்கிய நாடுகள் சபையும் அமைதியாக ‘எல்லாம் முடியும் வரை மௌனம் காத்தது’. 


உலகில் இருந்த UN Agencies கள்மனித உரிமைகள் என்பவற்றோடு தொடர்புடைய intergovernmental organizations (IGOS) , international non governmental organizations (INGOS) என அனைத்துமே இறுதிபோரின் இறுதி மாதங்களில் வாயை மூடித்தான் இருந்தன.


இன்றுவரை அந்த இறுதி மாதங்களில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான’ எண்ணிக்கையை சொல்லாமல் இருப்பதிலும் உலக ஒழுங்கின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.


• இனி 2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.


இந்த எண்ணிக்கையை நான் பெறுவதற்கு பயன்படுத்தும் ஆவணம் INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT ( ITJP ) இனால் வெளியிடப்பட்ட DEATH TOLL IN SRILANKA 2009 WAR அறிக்கையாகும்.


The ITJP is an independent, international, non-profit organisation working since 2013 to protect and promote justice and accountability in Sri Lanka.


இந்த ITJP இன் Executive Director இருப்பவர் Yasmin Sooka. 


யார் இந்த Yasmin Sooka?


இலங்கையின் இறுதிப்போரின் இறுதி மாதங்களில்  நடந்த மனித உரிமைகள்மனித உரிமை சட்டங்களை மீறிய செயல்களை ஆராயும் பொருட்டுசெப்டெம்பர் 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் பான்கி மூனால் ( Ban Ki-Moon) நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது


அந்த நிபுணர்கள் குழுவால், 31-03-2011 இல் வெளியிடப்பட்டதுதான் Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka அறிக்கை




Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka அறிக்கையை வாசிக்க…


இந்த நிபுணர் குழுவிற்கு தலைவராக இருந்தவர் Marzuki Darusman (இந்தோனேசியா). இந்த நிபுணர்குழுவில் இருந்த மற்றைய இருவர் Yasmin Sooka (தென் ஆபிரிக்கா) , Steven Ratner (அமெரிக்கா).


இந்த நிபுணர் குழுவில் இருந்த அதே Yasmin Sooka தான் இப்பொழுது INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT ( ITJP ) அமைப்பில் Executive Director இருக்கிறார்.


இந்த அமைப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் படங்களாகவும் இணைப்பாகவும் கீழே தரப்பட்டுள்ளது.


INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT ( ITJP ) இணைய தளத்திற்கான இணைப்பு








• சரிஇந்த ITJP இன் DEATH TOLL IN SRILANKA 2009 WAR எனும் அறிக்கையின்படி, 2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


169796.


ஆம். 2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை169796.


குறைந்த பட்சம் 147000.


இந்த ITJP இன் DEATH TOLL IN SRILANKA 2009 WAR எனும் அறிக்கையை படமாகவும்அதனது இணைப்பாகவும் கீழே தந்திருக்கிறேன்.










DEATH TOLL IN SRILANKA 2009 WAR அறிக்கையின் இணைப்பு


எதை அடிப்படையாக வைத்து இந்த எண்ணிக்கையை கண்டடைந்தார்கள்?


இந்த எண்ணிக்கையை பல வழிகளிலும் கண்டடையக்கூடியதாக இருக்கிறது.


பல வழிகளிலும் இப்படி கண்டறிக்கூடியதாக இருப்பதை பற்றி International Crisis Group அமைப்பு, 27 Feb 2012 இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கிறது.


இந்த கட்டுரையின் இணைப்பு கீழே.


Sri Lanka’s dead and missing: the need for an accounting’ கட்டுரையை வாசிப்பதற்கான இணைப்பு




இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தினை ITJP இனது DEATH TOLL IN SRILANKA 2009 WAR அறிக்கையில் Crisis Group என குறிப்பிட்டு மேற்கோளாகவும் காட்டியிருக்கிறது.


இனி இந்த எண்ணிக்கையை கண்டறிந்த வழிகளை விளக்குகிறேன்.


அக்டோபர் 2008 இல்வன்னியில் குறிப்பாக கிளிநொச்சிமுல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்த மக்கள்தொகை 429000.


இந்த மக்கட்தொகை சரியானது என மாவட்ட அரச  அலுவலகங்களின் ஆவணங்களும் உறுதிபடுத்துகின்றனஅதைப்போல இலங்கை மத்திய அரசினது மக்கட்தொகை கணக்கெடுப்பும் உறுதிபடுத்துகின்றன.


“For example, if one takes the total population figures for residents of Kilinochchi and Mullaitivu districts from the 30 September and 1 October 2008 local government documents, they match almost exactly the central government’s estimated 2008 population figures for those districts, which can still be found on the department of census and statistics website in its estimated mid-year population by sex and district, 2000-2010.”


(International Crisis Group அமைப்பு, 27 Feb 2012 இல் வெளியிட்ட ‘Sri Lanka’s dead and missing: the need for an accounting’ கட்டுரையிலிருந்து)



•இறுதியாக முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த பின்னர் இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் (internment camps) தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 282000.


ஆக அக்டோபர் 2008 இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 429000.


2009 மே மாத போர் முடிவிற்கு பிறகு தடுப்பு முகாம்களில் இருந்தவர்களின் எண்ணிக்கை 282000.


அப்படியெனில் 147000 தமிழ் மக்கள் இறுதி போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றுபொருள்.


அதைபோல World Bank Data வின் படிஇலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கணக்கெடுப்பின்படி, 2007 இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 54336. போர் முடிவடைந்ததற்கு பிறகு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட குடும்பங்கள் 28889. ஆக 25447 குடும்பங்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்ஒரு குடும்பத்திற்கு 4 உறுப்பினர் என தோராயமாக வைத்துக்கொண்டால் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 101788 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


அதுபோல இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கணக்கெடுப்பின்படி, 2007 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 53049. போர் முடிவடைந்ததற்கு பிறகு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட குடும்பங்கள் 36047. அப்படியாயின் 17002 குடும்பங்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்ஒருகுடும்பத்திற்கு 4 உறுப்பினர் என தோராயமாக வைத்துக்கொண்டால் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 68008 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


இந்த 101788 ஐயும் 68008 ஐயும் கூட்டினால்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 169796.


ITJP இனது DEATH TOLL IN SRILANKA 2009 WAR அறிக்கைக்கான படத்தை காணவும்.


போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்ஐக்கிய நாடுகள் சபையினால் இறுதி மாதங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை என வெளியிடப்பட்ட எண்ணிக்கை மிகவும் குறைவானது என்பதைஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழுவே ஒப்புக்கொள்கிறது.


“The Secretary-General’s panel of experts noted strong grounds to believe these numbers understate actual casualties during that period. 


These include the conservative methodology used to collect the figures, suspected underreporting by UN agencies (in response to pressure from the Sri Lankan government), the location of many casualties in areas inaccessible to observers, and the fact that following 13 May, the number of civilian casualties likely increased significantly as many civilians died from their injuries with no functioning hospital or humanitarian facilities in the warzone to register casualties or treat the wounded.”


(International Crisis Group அமைப்பு, 27 Feb 2012 இல் வெளியிட்ட ‘Sri Lanka’s dead and missing: the need for an accounting’ கட்டுரையிலிருந்து)


அதாவது இறுதி மாதங்களில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்கு பயன்படுத்திய வழிமுறையும் (methodology), இலங்கை அரசின் அழுத்தத்திற்கு பணிந்துவேண்டுமென்றே UN agencies கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லியதாலும்மே 13 இற்கு பிறகு காயமடைந்த மக்களை கவனிக்க மருத்துவமனைகளும்மருந்துகளும் இல்லாத நிலையில் காயமடைந்த பெரும்பாலான மக்கள் உயிரிழந்திருக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதாலும்இறுதி மாதங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை Secretary-General’s panel of experts ஒப்புக்கொள்கிறது.


ஆக மேலேயுள்ள ITJP  இனது, International Crisis Group இனது தரவுகள்புள்ளிவிபரங்கள்ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி 2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை 140000 - 169796 என்பதை காட்டுகின்றன.


அதன்படி 169796 என்ற எண்ணிக்கையை இறுதி எண்ணிக்கையாக எடுக்கிறேன்.


ஏனெனில் வரலாறு நெடுக இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது அவிழ்த்து விட்ட படுகொலைகளின் , பாலியல் வல்லுறவுகளின் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள்புள்ளிவிபரங்களை பார்க்கும்போது அதிகமான எண்ணிக்கையான 169796 தான் இறுதியான எண்ணிக்கையாக இருப்பதற்கு சரியானது


இதைவிட இன்னும் அதிகமாக கூட இருக்கலாம்GENOCIDE CHRONICLES 1956-2009  ஆவணம் இறுதி மாதங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 176000 என கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதுஆனால் இந்த எண்ணிக்கைக்கான ஆதாரங்களைஆவணங்களை மேற்கோள் காட்டாததால் இந்த எண்ணிக்கையை நான் எடுக்கவில்லை.


ஆக இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் சாராம்சம் பின்வருமாறு.



1983 - 2004 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 42277.


2005-2007 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 2369.


2008 இல் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 1050.


2009 இன் முதல் 5 மாதங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 169796.


அதன்படி 1983 - மே 18, 2009 வரையான காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை 


42277 + 2369 + 1050 + 169796 = 215492


இதோடு முடிந்துவிடவில்லை.


வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் (Enforced disappearance)


காணாமலாக்கப்பட்டவர்கள் (Disappearances) என்று இன்னொரு வகை இருக்கிறதுஇந்த காணாமலாக்கப்பட்டவர்கள் கடைசி வரை காணாமலே போனவர்கள்தான்உயிரோடு திரும்பி வந்ததுகிடையாதுசுருக்கமாக கூறினால் இந்த காணாமலாக்கப்பட்டவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும்.


மேலே கொல்லப்பட்டவர்களை (killings) எந்த வழிமுறை ஊடாக மதிப்பிட்டேனோ அதன் வழியிலேயே காணாமலாக்கப்பட்டவர்களையும் (Disappearances) மதிப்பிடுகிறேன்.





அதன்படி 1983-2004 வரை காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் 24774. (TCHR இன் அறிக்கையின் படி)


மேலே கூறியது போலவேஇந்த எண்ணிக்கையிலிருந்து 1988, 1989 என இரண்டு ஆண்டுகளில் இந்தியபடைகளால் காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை கழிக்கிறேன்


அதன்படி இந்திய படையால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை


1988 - காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் 1253

1989 - காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் 1528


24774 - (1253+1528) = 21993


அதன்படி 1983-2004 காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் 21993


2005-2007 வரையான காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை TCHR இன் DURBAN REVIEW CONFERENCE அறிக்கையில் இருந்து.


2005 - 194

2006 - 1064

2007 - 408


ஆக 2005-2007 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின்எண்ணிக்கை 


194 + 1064 + 408 = 1666


2008 இல் இலங்கை இராணுவத்தால் காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை GENOCIDE CHRONICLES 1956-2009 ஆவணத்திலிருந்து தனியாக எடுத்திருக்கிறேன்.


அதன்படி 2008 ஆம் ஆண்டில் 234 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள்.


2009 இல் போர் களத்திற்கு வெளியே காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக என்னால் எடுக்க முடியாமல் இருந்தது. Data Duplication ஏற்படுவதை தவிர்க்க 2009 இல் நடந்ததை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுஆனால் 2009 இல் பெருமளவு தமிழ் மக்கள் காணாமலாக்கப்பட்டார்கள் என்பதை முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன்.




ஆக இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டிருப்பவர்களின் சாராம்சம் பின்வருமாறு.


1983-2004 காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் 21993


2005-2007 காலகட்டம் - 1666


2008 ஆண்டு - 234


அதன்படி 1983-2008 காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் காணாமலாக்கப்பட்ட (Enforced disappearance) தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை 


21993 + 1666 + 234 = 23893


காணாமலாக்கப்பட்டவர்களும் (Enforced disappearance) இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களே


அதன்படி படுகொலை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையான 215492 ஐயும் காணாமலாக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையையான 23893 ஐயும் கூட்டுகிறேன்.


215492 + 23893 = 239385


ஆக 1983-2009 வரையான 26 வருட போரில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட குறைந்தபட்சமொத்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 239385.


இதனை எளிமையாக விளக்கும் அட்டவணை படமாக இணைக்கப்பட்டுள்ளது.





• இன்னொரு மிக முக்கியமான விடயத்தை இந்த இடத்தில் அழுத்தி சொல்ல விரும்புகிறேன்.


போர் முடிவடைந்த பின்னர் தடை முகாம்களில் 

2 1/2 லட்சம் தமிழ் மக்களை அடைத்து வைத்திருந்தபோதுஇலங்கை இராணுவம் படுகொலை செய்தகாணாமலாக்கிய எண்ணிக்கை இங்கு உள்ளடக்கப்படவில்லை


காரணம் கட்டுரையின் மையப்புள்ளியில் இருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காகவேயாகும்.


கட்டுரையின் மையப்புள்ளி என்பது 1983-2009 வரையான 26 வருட போர் என்ற கால அளவை வரையறுத்து வைத்துள்ளது.


ஆனால் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலை என்பது 1948 இல் இருந்து இன்று வரை உள்ள காலகட்டம் ஆகும்நாளை வரப்போகும் காலகட்டத்தையும் இது உள்ளடக்கும்


இனப்படுகொலை என்பது கொல்லப்பட்டவர்கள் (Killings), காணாமலாக்கப்பட்டவர்கள் (Enforced disappearance) என்பதை மட்டும் கொண்டதல்ல.


பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுதமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட சித்தரவதை (torture), தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உள்நோக்கத்துடன் அழித்ததுதமிழ் மக்களின் வாழ்வாதரத்தை திட்டமிட்டு அழித்ததுகல்வியை குறிவைத்து தாக்கியது என பல அடுக்குகளாக விரிவடையக்கூடியதுஇது சகலவற்றையும் உள்ளடக்கியதுதான் இனப்படுகொலை (Genocide) ஆகும்.


அதனால் இந்த பதிவில் நான் குறிப்பிட்டிருக்கும் எண்ணிக்கைதான் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை என தவறுதலாக கருதக்கூடாது.


இனப்படுகொலை எனும்போது நான் குறிப்பிட்டது போல கால அளவு 1948 இல் இருந்து தொடங்கும்.


அதுபோல இனப்படுகொலையின் சகல அடுக்குகளையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.


அத்துடன் இந்த ஆவணப்படுத்தலில் முழுமையாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை பெறுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்அதனால் இங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையும் முழுமையான எண்ணிக்கை அல்ல.  



யோக்கிய சிகாமணி ‘ஐக்கிய நாடுகள் சபை (United Nations)’ செய்த அயோக்கியத்தனம்


ஐக்கிய நாடுகள் சபை செய்த அயோக்கியத்தனம் என கடுமையான சொற்களை நான் பாவிப்பதற்கு இங்கு காரணம் உண்டு.


இது எனது கட்டுரையின் மையப்புள்ளியோடு நேரடி தொடர்புடையது அல்ல என்றாலும்உலக ஒழுங்கின் ஆணைப்படி ஐக்கிய நாடுகள் செய்த அயோக்கியத்தனங்களை விவரித்தால்தான் இதன் பின்னணியில் இருக்கும் உலக ஒழுங்கின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் உங்களுக்கு புரியும்.


இறுதி மாதங்களில் 169796 தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோதும்ஏன் ஐக்கிய நாடுகள் சபை இதனை உத்தியோகபூர்வமாக இன்று வரை அறிவிக்க தயங்குகிறது என்பது புரியவரும்.


மார்ச் 2022 இல்உக்ரைனில் ரஷ்ய படைகள் Bucha massacre  நடத்தியபோதுஉலக ஒழுங்கு அது ஒருwar crime , genocide என பதறி கூக்குரல் இட்டதை பார்த்தோம்இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்ட உக்ரைன் மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 400  பேர்தான்.


அத்துடன் சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை International Criminal Court (ICC) போர்குற்றவாளியாக அறிவித்தது கூட உங்களுக்கு நினைவு இருக்கலாம்.


ஆனால் 2009 இன் முதல் 5 மாதங்களில் மட்டும் 169796 தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோதும் இன்றுவரை உலக ஒழுங்கு கள்ள மௌனம் காத்துவருகிறது.


• சரிபோர் நடந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை செய்த அயோக்கியத்தனம் என்ன?


இலங்கையின் இறுதி போரின் இறுதி மாதங்களில் தமிழ் மக்களிற்கு பெரும் அழிவு நேர்ந்தபோதும்ஐக்கியநாடுகள் சபை கைகட்டி வாய் பொத்தி இருந்ததனால் கடுமையான விமர்சனங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மீது வைக்கப்பட்டது.


இதைப்போன்று எதிர்காலத்தில் தவறுகள் நேராமல் இருப்பதற்கும்தவறுகளிலிருந்து பாடத்தை படித்துகொள்ளவும் ஐக்கிய நாடுகள் சபை ஒரு உள்ளக விசாரணை குழு அமைத்து ஒரு அறிக்கை தரும்படி கேட்டதுஅதாவது தன்னைத்தானே சுய பரிசோதனை செய்யும் ஆய்வு.


முன்னாள் உயரதிகாரி Charles Petrie தலைமையில் இந்த உள்ளக விசாரணை குழு இயங்கி நவம்பர் 2012 இல்அதனது அறிக்கையினை சமர்ப்பித்தது.


இது Petrie Panel என அழைக்கப்பட்டது.


The Petrie panel reviewed about 7,000 documents, including internal UN exchanges with the government of Sri Lanka.


ஐக்கிய நாடுகள் சபை தன்னை தானே சுய விசாரணைக்கு உட்படுத்தி சமர்ப்பித்த இந்த அறிக்கையின் பெயர் REPORT OF THE SECRETARY-GENERAL’S INTERNAL REVIEW PANEL ON UNITED NATIONS ACTION IN SRILANKA”.


இந்த அறிக்கையின் இணைப்பு கீழே.


“REPORT OF THE SECRETARY-GENERAL’S INTERNAL REVIEW PANEL ON UNITED NATIONS ACTION IN SRILANKA”.





இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் சகல கூறுகளும்,பாதுகாப்பு சபை (Security Council), மனித உரிமைகள் சபை (Human Rights Council) என அனைத்தும் , இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஒவ்வொரு படி நிலையிலும் தங்களது கடமையினை செய்ய தவறிவிட்டதாக ஒப்புக்கொள்கிறது.


The internal review concluded that various UN agencies, including the Security Council and Human Rights Council, had failed at every level to meet their responsibilities in the last months of the civil war in Sri Lanka.


இந்த அறிக்கையின் பக்கம் 14 இல்இறுதி மாதத்தின் இறுதி மாதங்களில் Security Council எப்படிசெயற்பட்டது என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறது. (கீழுள்ள படத்தில் சிவப்பு பெட்டிக்குள் அடையாளம்காட்டப்பட்டுள்ளது)


“Throughout the final stages of the conflict, Member States did not hold a single formal meeting on Sri Lanka, whether at the Security Council, the Human Rights Council or the General Assembly. 


Unable to agree on placing Sri Lanka on its agenda, the Security Council held several ‘informal interactive dialogue’ meetings, for which there were no written records and no formal outcomes. 


At the meetings, senior Secretariat officials presented prepared statements that focused largely on the humanitarian situation. 


They did not emphasize the responsibilities of the Government or clearly explain the link between Government and LTTE action and the obstacles to humanitarian assistance. Nor did they give full information on the deaths of civilians.”





அதாவது மேலுள்ள பந்திஇறுதிப்போரின் இறுதி மாதங்களில் இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் பெருந்தொகையில் படுகொலை செய்யப்பட்டு கொண்டிருந்தபோதும்இலங்கை தொடர்பாக இதைப்பற்றி பேசி கதைக்க ஒரு உத்தியோகபூர்வமான கூட்டத்தினை கூட பாதுகாப்பு சபையோமனித உரிமைகள் சபையோஐக்கிய நாடுகள் சபையோ கூட்டவில்லை என தெரிவிக்கிறது.


இந்த அறிக்கையின் பக்கம் 10 இல், 20 ஜனவரி - 5 பெப்ரவரிக்கு இடையில்நம்பத்தகுந்த தகவல்களின்படி குறைந்தது 5000 பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும்அதில் பெரும்பாலானவர்கள் சிறுவயது பிள்ளைகள் எனவும் குறிப்பிடுகிறதுஆனால் இந்த தகவல்கள் எதுவும் அன்றைய காலகட்டத்தில் ஐநாவினால் வெளியுலகிற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. (கீழுள்ள படத்தில் சிவப்பு பெட்டிக்குள்அடையாளம் காட்டப்பட்டுள்ளது)


“The staff member’s 9 February mission report to the USG-Political Affairs said “Estimates by UN agencies based on reliable [emphasis added] first-hand information, but not yet made public, suggest that at least 5,000 civilians, many of them young children, have been killed and injured ... [including] at least 1,000 civilians ... killed and almost 3,000 injured during the period 20 January–5 February alone”




அதே பக்கம் 10 இலும் பக்கம் 11 இலும், RC (Resident coordinator) இலங்கை அரசிற்கு பொதுமக்களிற்கு ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களுடன் கடிதம் ஒன்றை எழுதுகிறது.





ஐநாவின் கையில் இருந்த பொதுமக்களின் உயிரிழப்பு data களின் படிஇலங்கை இராணுவமே இதற்கு காரணம் என்பதை தெளிவாக காட்டுகிறது.


ஆனால் அந்த RC இலங்கை அரசிற்கு எழுதிய கடிதத்தில்இலங்கை இராணுவம் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறி இந்த போரை நடத்துகிறது என குறிப்பிடவில்லை.


மாறாக இந்த பொது மக்களின் பேரழிவிற்கு புலிகள்தான் பொறுப்பு கூறவேண்டும் என கூறியிருக்கிறது.


ஐநாவின் ஊழியர்கள் சிலரே இதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்பொது மக்களை படுகொலைசெய்வது இலங்கை இராணுவமாக இருக்கபுலிகளை இதற்கு பொறுப்புதாரியாக மாற்றுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது.


“According to the UN’s data most casualties were caused by Government fire and included attacks on UN premises and hospitals; 


however the letter did not say this and did not mention international human rights or humanitarian law which appeared to have been violated in many attacks that killed civilians. 


The letter noted that the UN had “raised our concerns” with the Government, and it emphasised “the grave responsibility the LTTE has for this terrible situation.” 


Within hours of receiving the letter the Minister of Foreign Affairs met with the RC and several UNCT members to discuss it. 


The meeting was reportedly very tense. The Government rejected suggestions that civilian casualties were occurring and the UN was told to re-examine its data-gathering methodology. 


Some UN staff in Colombo expressed to the UNCT leadership their dismay that the UN was placing primary emphasis on LTTE responsibility when the facts suggested otherwise, and urged a more public stance.”


இதுவரை குறிப்பிட்டது எல்லாம் சில உதாரணங்களே. 128 பக்க அறிக்கையில் உள்ள சகலவற்றையும் இந்த கட்டுரையில் எடுத்து கூறுவது சாத்தியம் இல்லை


அதனால் இந்த “REPORT OF THE SECRETARY-GENERAL’S INTERNAL REVIEW PANEL ON UNITED NATIONS ACTION IN SRILANKA” அறிக்கையின் இணைப்பை  தந்துள்ளேன்.


இந்த அறிக்கை வெளியானவுடன் உலகின் சகல பெரிய ஊடக நிறுவனங்களும் இதை செய்தியாகவெளியிட்டனஅப்படி வெளியிட்டதை ஒரு படமாக கீழே இணைத்துள்ளேன்.


இந்த அறிக்கை பற்றி பிபிசி செய்தியில் பின்வரும் ஒரு பந்தி வருகிறது.


“Despite a ‘catastrophic’ situation on the ground, the new UN report points out that in the capital Colombo "some senior UN staff did not perceive the prevention of killing of civilians as their responsibility - and agency and department heads at UNHQ were not instructing them otherwise".


(Sri Lanka: UN admits it failed to protect civilians - 14/11/2012)


Sri Lanka: UN admits it failed to protect civilians - BBC 14/11/2012








இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் இத்தனை மனித பேரழிவு நடந்து கொண்டிருந்தபோதும்கொழும்பில்இருந்த மூத்த ஐநா அதிகாரிகள் இந்த ‘பேரழிவை’ தடுப்பது தங்களது பொறுப்பு என்று உணராத வகையில்இருந்தார்கள்அதை ஐநா தலைமையில் உள்ளவர்களும் சுட்டிக்காட்டவில்லை” என அந்த பந்தி கூறுகிறது.







ஐநாவின் இந்த செயல்பாடுகளுக்கு யார் காரணம்?


உலக ஒழுங்கே காரணம்.


ஏனெனில் ஐநா தனக்கான பலத்தை இன்றைய உலக ஒழுங்கில் உள்ள பலம் வாய்ந்த நாடுகளிடம் (Great Powers) இருந்தே பெற்று கொள்கிறது.


நாம் வாழும் இன்றைய உலக ஒழுங்குஇரண்டாம் உலகப்போரிற்கு பின்னர் மேற்குலகால் தனது நலனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது என்று பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.


இந்த உலக ஒழுங்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) , IMF , World Bank , WTO , ICC, இத்யாதி , இத்யாதி போன்ற International Institutions களை கொண்டு இந்த உலகின் சகல மனித செயற்பாடுகளையும் இயக்குகின்றன.


இந்த International Institutions யாவும் உலக ஒழுங்கு இந்த இயக்கத்தினை வழிநடத்த பாவிக்கும் கருவிகள்.


இன்னொரு வார்த்தையில் கூறினால்இந்த International Institutions யாவும் Great Powers இந்த இயக்கத்தினை வழிநடத்த பாவிக்கும் Tools களே ஒழியஅவைகள் Great Powers விட மீறிய பலம் கொண்டவை அல்ல.


இந்த புள்ளியில் Great Powers அதனது புவிசார் நலனுக்கு ஏற்ப இந்த International Institutions களை கருவியாக பயன்படுத்தும் நிலை வருகிறது.


இலங்கையை எடுத்துக்கொண்டால்அன்றைய இறுதி யுத்தத்தை தீர்மானித்த Great Powers அமெரிக்க தலைமையிலான மேற்குலகம்சீனாஇந்தியா.


மேலே கூறிய இந்த Great Powers, இறுதிப்போரின் இறுதிகாலங்களில் நடக்கும் பேரழிவுகளை தடுக்கஇலங்கையினை பேசுபொருளாக வைத்து பாதுகாப்பு சபையில்மனித உரிமைகள் சபையில்ஐக்கிய நாடுகள்சபையில் ஒரு ‘உத்தியோகபூர்வமான’ மீட்டிங்கை கூட நடத்தவில்லை என்பதை Petrie report ஒப்புக்கொள்கிறது.


Throughout the final stages of the conflict, Member States did not hold a single formal meeting on Sri Lanka, whether at the Security Council, the Human Rights Council or the General Assembly.”


(பக்கம் 14)


இந்த மூவருக்குமே இலங்கையில் தனித்த புவிசார் நலன்கள் உண்டு.


ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சீனா பெரும் வல்லரசாக உருவாவதை தடுக்க அமெரிக்கா பல நகர்வுகளை செய்துவருவது நாம் அனைவரும் அறிந்ததேஅந்த பல நகர்வுகளில் ஒரு நகர்வு இலங்கையை தனது செல்வாக்கிற்குள் அமெரிக்கா கொண்டு வருவதுஅதனால் அமெரிக்கா இலங்கையை அதனது பக்கம் கொண்டுவர இலங்கையின் இறுதி யுத்தத்திற்கு தேவைப்பட்ட அனைத்து இராணுவஅரசியல் ராஜதந்திர உதவிகளையும் வழங்கியது.


சீனா தனது ‘malacca dilemma’ சிக்கலை தடுக்க இலங்கையை அதனது செல்வாக்கிற்குள் கொண்டு வரமுனைகிறதுஅதன்படி சீனாவும் இலங்கைக்கு அனைத்து இராணுவஅரசியல் ராஜதந்திர உதவிகளையும்வழங்கியது.


இந்தியா தமிழீழம் உருவாவதை தடுக்கபுலிகளுக்கு எதிரான இலங்கையின் யுத்தத்தில் சகல இராணுவராஜதந்திர உதவிகளையும் வழங்கியது.


இந்த பட்டியலை இன்னும் நீடிக்கலாம்


ஆனால் “21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும் அமெரிக்கசீன போட்டி ( US-China Great Power Competition)” எனும் குறுந்தொடரில் இதைப்பற்றி விரிவாக விளக்கியிருக்கிறேன்.


ஏன் ஐநா (UN) , உலக ஒழுங்கு என்பவற்றை பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கிறேன்?


இல்லாவிடில் 2009 இன் முதல் 5 மாதங்களில்இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ‘உண்மையான எண்ணிக்கையை’ கண்டறிவதில் இருக்கும் அரசியல் உங்களுக்கு புரியாது.


புவிசார் நலன் அரசியல்/போரியல் விடயங்களில் கூமுட்டையான தமிழ் இனம் ‘தர்மத்தின் காவலன் ஐக்கியநாடுகள் சபையே இறந்தவர்கள் 40000 பேர்தான் என கூறியது’ என பிதற்றும்.


2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை மறைக்க ஐநா (UN) முயன்றிருக்கிறதுஇந்த பேரழிவு நடக்கும்போது இதை தடுக்காமல் கள்ள மௌனம் காத்ததுஅவ்வாறு ஐநா (UN) நடந்து கொண்டதன் பின்னணியில் உலக ஒழுங்கே இருந்ததுஅந்த உலக ஒழுங்கின் புவிசார் நலன் அரசியல் அதற்கு காரணமாக இருந்தது என்பதை இதுவரை இந்த கட்டுரையை வாசித்தவர்களுக்கு தகுந்த ஆவணங்கள்ஆதாரங்கள்புள்ளி விபரங்களுடன் எடுத்துகாட்டியிருக்கிறேன்.


சரி. 2009 இன் முதல் 5 மாதங்களில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான எண்ணிக்கை’ எப்போது வெளிவரும்?


2009 இல் இருந்த உலக சமன்பாடுகள் வேறு.


இன்றைய உலக சமன்பாடு என்பது வேறு. 


இன்று அமெரிக்க - சீன முறுகல் நிலை தீவிரம் அடைந்திருக்கிறது.


இலங்கை இந்த இரண்டில் ஒருவர் பக்கம் முற்றாக சாயவேண்டும்இந்த இரு தரப்பிற்கும் நண்பனாக வாலை காட்டமுடியாது.


ஒருவேளை’ எதிர்காலத்தில் இலங்கை முற்றாக சீனா பக்கம் சாயுமாயின்இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்த ‘உண்மையான எண்ணிக்கையை’ கையில் எடுக்கும் சாத்தியம் இருக்கிறது. ‘மனித உரிமை விடயத்தில் நான் ரொம்ப கறார் ஆக்கும்’ என தனது நலனுக்காக அமெரிக்கா இந்த உண்மையான எண்ணிக்கையைஎடுக்கலாம்.


• சரிஇந்த கட்டுரையின் ஆரம்பத்தில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை பெறுவதற்கான முறைதான் இருப்பதிலேயே மிக கடினமான ஒன்றுஇப்படி கடினமாக இது இருப்பதற்கு பின்னாலும் ஒரு ‘அரசியல்’ உண்டு என குறிப்பிட்டிருந்தேன்.


இதன் பொருள் என்ன?


இந்த கட்டுரையின் முடிவு பகுதியில் இலங்கை இராணுவம் போரை மட்டும் நடத்தவில்லைதமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையையும் நடத்தியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியவரும்.


இது தொடர்பான எந்த தகவல்களும் ஆவணப்படுத்தப்படுவதை இலங்கை அரசு அனுமதிக்காது.


ஏனெனில் 26 வருட போரில் இலங்கை அரசு படுகொலை செய்த தமிழ் மக்களின் உண்மையான எண்ணிக்கை உலக ஒழுங்கிற்கு தெரியவருமாயின்புவிசார் நலன் சதுரங்க ஆட்டத்தில் இது இலங்கைக்கு எதிரான அஸ்திரமாக என்றோ ஒருநாள் பாவிக்கப்படலாம்.


அதனால் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக தான் நடத்திய இனப்படுகொலை ஆவணப்படுத்தப்படுவதை அனுமதிக்காது.


அதனால் அதனை ஆவணப்படுத்தும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களையோதமிழ் ஊடகவியலாளர்களையோ உயிருடன் விட்டு வைக்காது.


இந்த கட்டுரையில் இருந்து கூட ஒரு உதாரணம் தரலாம்.


இனப்படுகொலையை ஆவணப்படுத்திய ஒரு அமைப்பு என NorthEast Secretariat on Human Rights (NESoHR) பற்றி மேலே கூறியிருந்தேன்இந்த அமைப்பு புலிகளின் சிந்தனையிலிருந்துமுயற்சியில் உருவான ஒரு அமைப்புஇந்த அமைப்பு 09 ஜூலை 2004 அன்று தொடங்கப்பட்டது.


இனப்படுகொலை ஆவணப்படுத்தலின் வரலாற்று முக்கியத்துவம்புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் அதனது தேவை என்பவற்றை  உணர்ந்த புலிகள்இந்த NESoHR அமைப்பினை 

மனித உரிமை செயற்பாட்டாளர்கள்சட்ட வல்லுனர்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள்,கல்விமான்கள் என 11 பேரை கொண்ட செயற்குழுவை அமைத்து உருவாக்கினார்கள்


அந்த 11 பேரினது பெயர் விபரங்கள் (Founding members of the NESoHR)


1.அருட்தந்தை M.X கருணாரட்ணம்


2.ஜோசப் பரராஜசிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர்)


3.A.சந்திரநேரு (பாராளுமன்ற உறுப்பினர்)


4.கஜேந்திர பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர்)


5.K.சிவபாலன் (attorney-at-law from Trincomalee)


6.Dr. K சிவபாலன் - (Dean of Jaffna Medical Faculty)


7.T. மகாசிவம் (general secretary of the Ceylon Tamil Teachers Union (CTTU))


8.Miss.அருளாநந்தம் (Jaffna University Librarian)


9.அச்சுதன் (Head of Law School in Vanni)


10.Ms.N.மாலதி (Human Rights Activists (New Zealand))


11.Dr. S Sriskandaraja. 


இணைப்பு : https://www.tamilnet.com/art.html?catid=13&artid=12576


சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த NESoHR அமைப்பு ஐரோப்பிய நாடுகளில் இயங்கிய மனித உரிமை அமைப்புகளுடன் நெருங்கி செயற்பட ஆரம்பித்திருந்தது.


“NESoHR was launched, in July 2004, as part of the Norwegian-facilitated 2002 Peace Process to strengthen the human rights protection mechanisms in the NorthEast of Sri Lanka.


Karunaratnam led a NESoHR delegation to Geneva in October 2004 and met with several European organizations involved in rights issues. Officials and diplomats visiting Ki'linochchi had also made it a practice to meet Fr. Karunaratnam to discuss the humanitarian situation during their missions to Vanni.”


(TamilNet, Sunday, 20 April 2008)


• இந்த இனப்படுகொலை ஆவணப்படுத்தலை தடுக்க இலங்கை அரசு என்ன செய்தது?


இந்த அமைப்பை உருவாக்கிய Founding members களை ஒவ்வொருவராக படுகொலை செய்ய ஆரம்பித்தது.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான A.சந்திர நேருஇலங்கை இராணுவத்தின் கீழ் இயங்கிய para military இனால் பெப்ரவரி 2005 இல் சுட்டுக்கொல்லப்பட்டார்.


மூத்த அரசியல்வாதியும்பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம், 25 பெப்ரவரி 2005 இல் இலங்கை இராணுவத்தின் கீழ் இயங்கிய para military இனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


இந்த NESoHR அமைப்பின் தலைமையாக இயங்கிய அருட்தந்தை M.X கருணாரட்ணம், 20 ஏப்ரல் 2008 இல் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில்  கொல்லப்பட்டார்.


இணைப்பு: NESoHR Chairman Fr. Karunaratnam killed in DPU attack


இந்த குழுவில் இருந்த  K. Sivapalan இற்கு இலங்கை இராணுவத்தினரால் உயிராபத்து இருந்ததால்நோர்வேயில் தஞ்சம் புகுந்தார்.


இந்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரன் பொன்னம்பலமும் தலைமுறைவாக இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதுஇவரது தந்தையான குமார் பொன்னம்பலமும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்அவர் 5 ஜனவரி 2000 இல் இலங்கை அரசால் சுட்டுக்கொல்லப்பட்டார்அன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையில் பகிரங்கமாக புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர்இவர் படுகொலை செய்யப்பட்ட பிறகுதலைவர் பிரபாகரனால் புலிகளின் உயரிய விருதான ‘மாமனிதர்’ பட்டம் வழங்கப்பட்டது.


இன்னும் ஆழமாக இறங்கினால்தமிழ் இனத்தின் ஒரே போரியல் ஆய்வாளரான தராகி சிவராமின் படுகொலையும்இனப்படுகொலை ஆவணப்படுத்தலை தடுப்பதற்கான இலங்கை அரசின் செயற்திட்டங்களில் ஒன்று என தொடர்புபடுத்த முடியும்.


ஆக மேலேயுள்ள வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தால்இலங்கை ஒரு பக்கம் புலிகளுக்கு எதிராகபோரை நடத்தி கொண்டிருந்ததையும்மறுபக்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நுண்ணியமுறையில் நிகழ்த்தி கொண்டிருந்ததையும்இந்த இனப்படுகொலை ஆவணப்படுத்தல் எதுவும் நடக்காதவாறு பார்த்து கொண்டதையும் காணலாம்.


அதனால்தான் 26 வருட போரில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை எடுப்பது மிக கடினமான ஒன்றாக இருக்கிறது


[ கீழேயுள்ள இந்த பகுதி இந்த கட்டுரையின் பிற்பகுதியில் சேர்க்கப்பட்ட பகுதியாகும்.


மேலே இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை ஆவணப்படுத்தப்படுவதை அனுமதிக்காதுஅதனால் அப்படி ஆவணப்படுத்துபவர்களை படுகொலை செய்யும் என கூறி அதற்கான உதாரணங்களை கூறியிருந்தேன் அல்லவா.


பின்னர் தற்செயலாக People’s Tribunal On Sri Lanka எனும் அமைப்பினது “Genocide against the Tamil People - MASSACRES, POGROMS, DESTRUCTION OF PROPERTY, SEXUAL VIOLENCE AND ASSASINATIONS OF CIVIL SOCIETY LEADERS” எனும் அறிக்கையை காண நேர்ந்தது.


எனது கணிப்பினை உறுதி செய்யும் வகையில் அது மேலும் பல தகவல்களை தந்திருக்கிறது.


நான் மேலே பட்டியலிட்டவர்களை விட இன்னும் அதிகமானவர்களை இலங்கை அரசு ஆவணப்படுத்தலை தடுக்கும் விதமாக படுகொலை செய்திருக்கிறதுஅந்த பட்டியலை படமாகவும்இணைப்பாகவும் தந்திருக்கிறேன்.


“Genocide against the Tamil People - MASSACRES, POGROMS, DESTRUCTION OF PROPERTY, SEXUAL VIOLENCE AND ASSASINATIONS OF CIVIL SOCIETY LEADERS”











அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் பட்டியல்


சந்திரநேரு அரியநாயகம் - 07-02-2005

ஜோசப் பரராஜசிங்கம்   25-12-2005

வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் - 07-04-2006

சின்னத்தம்பி சிவமகராஜா - 20-08-2006

நடராஜா ரவிராஜ் - 10-11-2006

சிவநேசன் - 06-03-2008

அருட்தந்தை M.X.கருணாரட்ணம் - 20-04-2008


அதே போல Tamil Centre for Human Rights (TCHR) அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் Ms. Deirdre McConnell, Director, International Programme மார்ச் 7, 2006 இல் ஐரோப்பிய யூனியன் (EU) கருத்தரங்கில் ஆற்றிய உரையில் இதைப்பற்றி குறிப்பிடுகிறார்அந்த குறிப்பிட்ட பகுதி கீழே.


“A government perpetrating genocide on a people, does its maximum to divert attention from the reality of the situation and does everything in its power to prevent other countries from intervening to stop the genocidal onslaught. This is the dynamic we are dealing with.


It is tragic, to have to highlight the fact that Human Rights Defenders who attended international forums to explain the human rights situation in Sri Lanka are not spared by the government of Sri Lanka. Prominent Lawyer Mr. Kumar Ponnambalam, veteran journalists Mylvaganam Nirmalarajan, Aiyathurai Nadesan, Dharmaretnam Sivaram "Taraki", Joseph Pararajasingham MP and many others have been brutally assassinated. Until today none of these killings have been properly investigated nor have the culprits been brought to justice. They continue in service unpunished.


Mr. Kumar Ponnambalam participated in the UN Commission on Human Rights in Geneva and EU forums in Brussels and Strasbourg. Mr. Dharmaretnam Sivaram "Taraki" was briefing the US state department and many other international forums. Mr. Joseph Pararajasingham who had been to Australia, New Zealand, US, Canada, Switzerland, Britain, France and many other countries and met with several dignitaries is the latest victim. He was shot dead during Christmas Eve midnight mass in his home town two months ago. “


இந்த உரை படமாகவும்இணைப்பாகவும் கீழே தரப்பட்டுள்ளது.


Ms. Deirdre McConnell, Director ஐரோப்பிய யூனியன் கருத்தரங்கில் ஆற்றிய உரை


 ]



• நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விடயங்கள்


மேலே நான் ஆதாரமாக காட்டிய ஆவணங்களில் உள்ள ‘இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை’ என்பது குறைந்த எண்ணிக்கை என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.


காரணம் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக எடுக்கமுடியவில்லைஅவ்வாறு துல்லியமாக எடுக்க முடியாமல் போனதற்கான காரணங்களை மேலேபட்டியலிட்டிருந்தேன்.


அந்த காரணங்களை மீண்டும் பட்டியலிடுகிறேன்.


போர் நடந்துகொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட  தமிழ் மக்களது இடத்திற்கு சென்றுதகவல்களை திரட்டுவது  பாதுகாப்பானதாக இருக்கவில்லைதிரட்டுபவர்களின் உயிர் இலங்கைஇராணுவத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.


இலங்கை இராணுவத்தின் பழிவாங்கலுக்கு அஞ்சி பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை விபரங்களைவெளிப்படையாக தர பயந்தார்கள்தங்களது பெயர் விபரங்களை கூற பயந்தார்கள்


அதுபோல தமிழீழத்தை விட்டு முற்றாக இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விபரங்களும் இந்தஆவணங்களில் உள்ளடக்க முடியவில்லைஏனெனில் அவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துஇருந்தார்கள்.


அதுபோல குடும்பமாக கொல்லப்பட்டவர்களின் விபரங்களும்அவர்களை பற்றி தகவல்களை தருவதற்குஒருவரும் இல்லாத நிலையில்அந்த தகவல்களை ஆவணப்படுத்த முடியாமல் போனது.


• சரி. 1983-2009 வரையான 26 வருட போரில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட குறைந்தபட்ச தமிழ் மக்களின் எண்ணிக்கையை தகுந்த ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்களை கொண்டு கணக்கிட்டாயிற்று.


அதன்படி 1983-2009 வரையான 26 வருட போரில்இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டகுறைந்தபட்ச மொத்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 239385. 


(இதனை எளிமையாக விளக்கும் அட்டவணை படமாக இணைக்கப்பட்டுள்ளது


இனி அடுத்த பகுதியான இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை பகுதி-2 இல்.


க.ஜெயகாந்த்


இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை - (பகுதி-2)


விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை - (பகுதி-3)


விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள, முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை - (பகுதி-4)



எண்கள் சொல்லும் செய்தி - (பகுதி-5)

































 


























 

































Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]