ஈவேரா எனும் மனிதர் எப்படி பல விடயங்களில் தொலைநோக்கு அற்ற, பாமரத்தனமான வாதங்களை வைத்திருக்கிறார்?
• ஈவேரா எனும் மனிதர் எப்படி பல விடயங்களில் தொலைநோக்கு அற்ற, பாமரத்தனமான வாதங்களை வைத்திருக்கிறார் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் தருகிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது “இது துக்க தினம்” என ஈவேரா அறிவித்திருந்தார். “பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறினால், அதன் பிறகு இந்தியாவை ஆளப்போகும் பனியா, பிராமணர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிவரும் என்பதை முன்னுணர்ந்து இருந்தார் பெரியார்” என பெரியாரியவாதிகள் அதற்கான காரணத்தை கூறுகிறார்கள்.
• இந்திய சுதந்திரம் தொடர்பான ஈவேராவின் பார்வை எவ்வளவு அபத்தமானது என்பதை தருகிறேன்.
“இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பனியா, பிராமணர்கள் கையில் அரசியல் அதிகாரம் சென்றுவிடும்” என்ற வாதம் சரி. ஆனால் பிரிட்டிஷார் தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆளுவதுதான் இதற்கான நிரந்தர தீர்வா என்ற கேள்வி மிக முக்கியமானது.
காரணம் பிரிட்டிஷாரின் ஆளுகை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என எந்த கோணத்திலும் ஒரு இந்திய நிலப்பரப்பை சேர்ந்த ஒருவர் வாதத்தை வைக்க முடியாது.
• British Empire எனும் சாம்ராஜ்யம், sun never sets சாம்ராஜ்யமாக உருவானதற்கான அத்திவாரமே அது இந்திய நிலப்பரப்பை கைப்பற்றியதனால்தான்.
இந்திய நிலப்பரப்பை கைப்பற்றி அதனூடாக இந்திய வளங்களை சுரண்டி பிரித்தானியாவிற்கு அனுப்பியதால்தான் பிரித்தானியா பொருளாதாரத்தில் கொழுக்க ஆரம்பித்தது. சகல மூலப்பொருட்களையும் இந்திய நிலப்பரப்பிலிருந்து சுரண்டியது.
இந்தியாவில் வசூலித்த வரி வருமானம் அன்றைய பிரித்தானியாவின் பிரதான வருவாயாக இருந்தது.
இந்திய நிலப்பரப்பின் தொழில்வளர்ச்சியினை ஒடுக்கி,பலவீனமாக்கி, இந்திய நிலப்பரப்பை பிரிட்டனின் உற்பத்திகளுக்கான சந்தையாக மாற்றியது.
இந்தியாவின் மனித வளங்களை கொண்டுதான் British Empire உலகின் பல பாகங்களில் military campaign நடத்தி அதனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கியது. இது தொடர்பாக எனது முன்னைய கட்டுரை கீழே.
• பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 2)
• பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி-3)
சுருக்கமாக சொன்னால், இந்திய நிலப்பரப்பின் வளங்களையும்,செல்வத்தையும் கொள்ளையடித்துத்தான் (looting), அது British Empire ஆகவே மாறமுடிந்தது.
இதுபற்றி தரவு, புள்ளிவிபரங்களுடன் பல ஆய்வாளர்கள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.
இந்தியாவின் வளங்களையும்,செல்வத்தையும் சுரண்டித்தான் British Empire பலமான சாம்ராஜ்யமாக உருவானது என்பதை பிரிட்டனின் அறிவுஜீவிகளே மறுப்பதில்லை.
• இது தொடர்பாக பல ஆய்வு புத்தகங்கள் வெளிவந்தபோதும், அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகத்தை மட்டும் உதாரணத்திற்கு தருகிறேன்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் எழுதிய புத்தகம்தான் “Inglorious Empire: What the British Did to India”.
இது பரவலான பாராட்டினை பெற்ற புத்தகம். இது British Empire இந்தியாவை உறிஞ்சி எப்படி கொழுத்தது என்பதை புள்ளிவிபரங்களுடன் நிறுவுகிறது.
அதிலிருந்து ஒரு பகுதி கீழே.
“At the beginning of the eighteenth century, as the British economic historian Angus Maddison has demonstrated, India’s share of the world economy was 23 per cent, as large as all of Europe put together. (It had been 27 per cent in 1700, when the Mughal Emperor Aurangzeb’s treasury raked in £100 million in tax revenues alone.)
By the time the British departed India, it had dropped to just over 3 per cent.
The reason was simple: India was governed for the benefit of Britain. Britain’s rise for 200 years was financed by its depredations in India.”
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மொத்த GDP இல், இந்திய நிலப்பரப்பின் GDP 23%.
அதிலும் 1700 இல், மொகலாய ஔரங்கசீப் ஆட்சியில் இருந்தபோது, உலகின் மொத்த GDP இல், இந்திய நிலப்பரப்பின் GDP 27%.
பிரிட்டிஷார் இந்தியாவை நீங்கும்போது உலகின் மொத்த GDP இல் இந்திய நிலப்பரப்பின் GDP வெறும் 3% சுருங்கிவிட்டது.
“பிரிட்டன் வளர்வதற்கு ஏற்றவகையிலேயே இந்தியா நிர்வகிக்கப்பட்டது” என அந்த பகுதி தொடர்ந்து செல்கிறது.
ஆக பிரிட்டிஷாரின் ஆளுகையில் ஒட்டுமொத்த இந்தியாவும் முழுமையாக சுரண்டப்பட்டு, இரத்தம் உறிஞ்சப்பட்டு கொண்டிருந்தது.
• அடுத்து பிரிட்டிஷாரின் 200 வருட ஆளுகையில், இந்திய நிலப்பரப்பில் மட்டும் 12 பஞ்சங்கள் (famines) உருவாகியிருக்கிறது. இவைகளில் பெரும்பாலானவை இயற்கையால் நிகழ்ந்தவை அல்ல. இவை British Empire ஆல் உருவாக்கப்பட்டவை அல்லது அவர்களது நிர்வாக முடிவால் உருவானவை (man-made or worsened by British policies). அவைகளில் சில கீழே.
•Bengal Famine of 1770 - Death toll: 10 million (about one-third of Bengal’s population)
•Chalisa Famine (1783-1784 - Death toll: Estimated 11 million.
•Doon Famine (1837-1838) - Death toll: Over 800,000.
•Great Famine (1876-1878) - Death toll: 5.5 to 10 million.
•Bengal Famine of 1943 - Death toll: 3-4 million.
•Agra Famine (1837-1838)
•Orissa Famine (1866)
•Bihar Famine (1873-1874)
•Bombay Presidency Famine (1905-1906)
பிரிட்டிஷாரின் ஆட்சியில் நிகழ்ந்த இந்த பஞ்சங்களை பற்றி ஆய்வாளர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“இதில் பெரும்பாலானவை man made.
இயற்கை அனர்த்தங்களின்போதும், நிவாரணத்தை வழங்காமல் அதிக வரிச்சுமையை விவசாயிகள் மீது விதித்தது, உபரி உற்பத்திகளை தொடர்ந்து பிரிட்டனுக்கு அனுப்பியது, உணவு தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களிலும் உணவுகளை பிரிட்டனுக்கு தொடர்ந்து அனுப்பியது, உணவு தானியங்களை பயிரிடுவதற்கு பதிலாக தனது சாம்ராஜ்யத்திற்கு வருவாய் தரும் வகையிலான பணப்பயிர்களை விவசாயம் செய்தது, பஞ்சம் ஏற்பட்ட காலங்களிலும் உணவினை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்தது” என காரணங்களை அடுக்கி கொண்டே போகிறார்கள்.
ஆக மேலே தந்த இரண்டு பெரும் உதாரணங்களில், British Empire தொடர்ச்சியாக இந்திய செல்வத்தையும், வளங்களையும் ( wealth and resources) சுரண்டியிருக்கிறது.
பிரிட்டிஷாரின் ஆளுகை காலத்தில் அதனது சாம்ராஜ்ய நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் பல பஞ்சங்கள் உருவாகியிருக்கின்றன. அதில் பல கோடி மக்கள் இறந்திருக்கிறார்கள்.
• இப்பொழுது ஈவேராவிற்கு வருவோம்.
பிரிட்டிஷாரின் ஆளுகையில் செல்வம், வளங்கள் சுரண்டல், பஞ்சம் என நடக்கும்போது, ஈவேரா யாருக்காக போராடுவதாக சொல்கிறாரோ அந்த மக்களும் சேர்ந்துதான் சுரண்டப்படுகிறார்கள். அவர்களும்தான் பட்டினியில் கொல்லப்படுகிறார்கள்.
பனியா, பிராமணர் அதிகாரத்தை கைப்பற்றிவிடுவார்கள் என கூறி பிரிட்டிஷாரின் சுரண்டலை அனுமதிப்பது என்பது முட்டாள்தனத்திலும் வடிகட்டிய முட்டாள்தனம்.
• அப்படியானால் எது நிரந்தர தீர்வு?
இதே இந்திய நிலப்பரப்பின் விடுதலைக்கான போராட்டத்தில் ஆதரவு தருகிறேன். பதிலுக்கு தமிழ்நாடு அல்லது சென்னை மாகாணத்திற்கு (madras presidency) தனிநாடு அந்தஸ்தோ அல்லது தமக்கு தேவையானதை தானே தீர்மானித்து கொள்ளும் வகையிலான சுயாட்சியோ கேட்டிருந்தால் அது தொலைநோக்கு பார்வை.
முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் எனும் நாட்டை உருவாக்கியதும் இதே விதம்தான்.
அல்லது வேடிக்கையாக சொல்வதென்றால், இந்திய நிலப்பரப்பின் விடுதலைக்கான உதவிக்கு பேரமாக ‘திராவிடஸ்தான்’ கோரியிருக்கலாம்.
ஏனெனில் பிரிட்டிஷார் விலகிய போது இந்தியாவின் நிலை அப்படித்தான் இருந்தது.
• பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இந்திய நிரப்பரப்பு இருந்தபோது, அந்த நிலப்பரப்பு இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டன.
India under the British Raj (the "Indian Empire") consisted of two types of territory:
1. British India
2. Native states or Princely states.
இந்தியாவில் இருந்த Princely states களின் எண்ணிக்கை 562.
Princely states கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய நிலப்பரப்பில் 40% நிலப்பரப்பையும் 23% மக்களையும் கொண்டிருந்தன.
பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகி செல்லும்போது, Indian Independence Act 1947 இன் படி பிரிட்டிஷார் இந்த Princely states களுக்கு 2 தெரிவுகளை தந்திருந்தார்கள்.
1. இந்தியாவுடன் இணையலாம்
2. பாகிஸ்தானுடன் இணையலாம்
அன்றிருந்த எந்த இந்திய தேசியவாதிகளும் ‘ இந்தியா ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றை நாடாகத்தான் இருந்தது. அதனால் பிரிட்டிஷார் விலகி செல்லும்போது அப்படியே அந்த ஒற்றை நாடாக திருப்பி தாருங்கள்’ என கோரிக்கை வைக்கவில்லை.
ஏனெனில் அவர்களுக்கும் தெரியும். இந்தியா எனும் ‘ஒரு புதிய நாடு ‘ பிரிட்டிஷாரின் தேவைக்காக உருவாக்கப்பட்ட நாடு என்பது. இது இந்திய தேசிவாதிகளுக்கு கிடைத்த பெரிய ஜாக்பாட்.
பின்னர் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகி செல்லும்போது, அன்றைய இந்திய தலைவர்கள் சாம,தான, தண்ட, பேத வழிமுறைகளை பயன்படுத்தித்தான் கிடைத்த Princely states களை எல்லாம் வெட்டி இந்தியா எனும் புது நாட்டை தைத்தார்கள்.
இந்தியா எனும் புதிய இறையாண்மை அரசு இளகியிருந்த காலகட்டம் அது.
இந்த காலகட்டத்தில் பல princely states எப்படி தனிநாடாக முனைந்தன என்பதெல்லாம் தனிக்கதை.
• உண்மையிலேயே ஈவேரா எனும் மனிதருக்கு தொலைநோக்கு பார்வை இருந்திருந்தால், பிரிட்டிஷாரின் சுரண்டலை தடுக்க விடுதலைக்கு உதவும் அதேநேரம், அதற்கு பண்டமாற்றாக madras presidency இற்கு ஒரு அதிகார அலகை கோரி பேரம் பேசியிருக்கவேண்டும்.
அதைவிடுத்து பனியா, பிராமணர்களின் ஆதிக்கம் பெறுவதை தடுக்க பிரிட்டிஷாரின் சுரண்டலை, பஞ்சத்தை ஏற்றுக்கொள்வேன் என்பது அவரது பாமரத்தனமான சிந்தனையைத்தான் காட்டுகிறது.
அந்த பாமரத்தனமான சிந்தனையை இன்றுவரை பெரியாரியவாதிகள் எந்தவித வரலாற்று அறிவும் இன்றி, ஏதோ பெரும் சாதனை போல பேசி வருகிறார்கள் என்பது அடுத்த விடயம்.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment