தமிழ்நாட்டில் பிறமொழியினர் உருவாக்கி வைத்திருக்கும் நுட்பமான வலைப்பின்னல்
• தமிழ்நாட்டில் பிறமொழியினர் எத்தகைய நுட்பமான வலைப்பின்னலை பின்னி வைத்திருக்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டு தமிழர்கள் இன்னும் உணரவில்லை. அப்படி ஒரு வலைப்பின்னல் இருப்பதுகூட அனேகமானோருக்கு தெரியாது.
முதலில் இந்த வலைப்பின்னல் இப்படி இருப்பது தெரியவந்ததே நாம் தமிழர் கட்சி 2010 இல் உருவான பின்னர்தான்.
ஏன்?
நாம் தமிழர் சீமான் தமிழ்தேசியம் Vs திராவிடம் + ஆரியம் என்ற சமன்பாட்டை அடிப்படையாக வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததனால்.
இதே நாம் தமிழர் கட்சி திமுகவையோ, அதிமுகவையோ, தேசிய கட்சிகளையோ வெறுமனே ஊழல், கறைபடிந்த நிர்வாகம், இத்யாதி, இத்யாதி என்ற அடிப்படையில் எதிர்த்து இருந்தால், இந்த பிறமொழியினரின் வலைப்பின்னல் சீமானிற்கு எதிராக திரும்பியிருக்காது.
தமிழ்நாட்டில் இது இன்னொரு கட்சி என்ற அடிப்படையில் ஏற்றிருப்பார்கள். கணிசமானோர் ஆதரித்தும் இருப்பார்கள்.
• ஆனால் நாம் தமிழர் சீமான் திராவிடம் என்ற கருத்தியலை எதிர்த்தார்.
தமிழ்நாட்டில் திராவிடம் என்ற கருத்தியல் பிறமொழியினர் தமிழராக உள்மனதில் உணராமல், தமது பிறமொழி அடையாளங்களோடு தமிழ்நாட்டை ஆளுவதற்கு ஏற்ற வசதியை செய்துதரும் கருத்தியல்.
மற்றைய மாநிலங்களில் பிறமொழியினர் அல்லது பிறஇனம் அந்த மாநிலத்தை ஆளவேண்டும் எனில், அந்த மாநிலத்தின் இனமாக assimilation ஊடாக மாறவேண்டும்.
உதாரணத்திற்கு இலங்கையில் பிற மொழியினர் assimilation ஊடாக சிங்களவராக உள்மனதில் உணரும் பட்சத்தில் அவர் இலங்கையை ஆளமுடியும். அதாவது அவர் சிங்களவராக மாறிவிடுவார். இது தொடர்பாக முன்னரும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இணைப்பு கீழே:
ஆனால் தமிழ்நாட்டில் பிறமொழியினர் assimilation ஊடாக தமிழராக மாறவேண்டியது இல்லை. அவர் திராவிடர் என்ற அடையாளத்துடன் இருந்துகொண்டே தமிழ்நாட்டை ஆளமுடியும். அதற்கான சித்தாந்த நியாயத்தை திராவிட கருத்தியல் உருவாக்கி தருகிறது.அதற்காகத்தான் திராவிட கருத்தியலே உருவாக்கப்பட்டது.
• இப்போது நாம் தமிழர் சீமான் நேரிடையாகவே திராவிடம் என்ற கருத்தியலை எதிர்ப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பிறமொழியினருக்கு பெரும் சிக்கல் வருகிறது.
ஒன்று assimilation ஊடாக தமிழராக மாறவேண்டும் அல்லது பிறமொழியினர் என தனியாக பிரித்து பார்க்கக்கூடிய சூழல் உருவாகும்.
தனித்து பிரித்து பார்க்கப்பட்டால் பிறமொழியினர் அரசியல் அதிகாரத்தை அடைவதில் சிக்கல் நேரும்.
தமிழ்தேசியம் பலமடைய பலமடைய, பிறமொழியினர் தனியாக பிரித்து பார்க்கப்படுவது அதிகமாகும். அது பிறமொழியினர் அரசியல் அதிகாரத்தை அடையும் பாதையை கடினமாக்கும்.
உதாரணத்திற்கு ஆந்திரா, கர்நாடக, கேரள மாநிலங்களில் பிறமொழியினர் ஆளுவது எப்படி சாத்தியம் இல்லையோ அது போல.
• இந்த நிலை உருவாகிவிடக்கூடாது என்பதை ஆரம்பத்திலேயே தமிழ்நாட்டின் பிறமொழியினர் வலைப்பின்னல் உணர்ந்துவிட்டது.
அந்த வலைப்பின்னல் என்பது கிட்டத்தட்ட அமெரிக்காவில் இயங்கும் இஸ்ரேல் லாபியை போல. மிக நுட்பமானது. மிக உறுதியானது.
தமிழ்நாட்டின் அறிவுஜீவிகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், சாதனையாளர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல்வாதிகள், சமூகத்தில் நன்மதிப்பு பெற்றவர்கள், இத்யாதி என சகல தளங்களிலும் இந்த பிறமொழியினர் வலைப்பின்னல் விரிந்து இருக்கிறது.
இந்த வலைப்பின்னல் ஒரு நேர்கோட்டில் இணைந்து தொடர்ந்து சீமான் மீது தாக்குதல் நடத்தும்.
அதை எதிர்கொள்வதற்கான வலிமை சீமானுக்கு இருக்காது. ஏனெனில் அந்த பிறமொழியினர் வலைப்பின்னல் அரசியல் அதிகார வலிமை, பொருளாதார வலிமை, ஊடக வலிமை என அனைத்தையும் கொண்டது.
இதை எதிர்கொள்ளவேண்டும் எனில் சீமானுக்கு இருக்கும் ஒரே வழி தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விழிப்புணர்வு அடைய வைப்பதுதான். அப்படி செய்யும்போது மட்டுமே எண்ணிக்கை பலம் கிடைக்கும்.
ஆனால் அதுவும் எளிதானதல்ல.
ஏனெனில் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு இப்படி பிறமொழியினர் வலைப்பின்னல் இருப்பதே தெரியாது.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment