எந்த ஒரு அமைப்பையும் வழிநடத்தும் தலைவனை எப்படி மதிப்பீடு செய்வது?

முதலில் அந்த அமைப்பின் பிரதான இலக்கு என்ன? என்பதை முடிவு செய்யவேண்டும்.

தலைவனின் ஒவ்வொரு நகர்வும் அந்த பிரதான இலக்கை நோக்கி நகர்த்தியதா? என ஆராயவேண்டும்.

இன்னொரு வகையில் சொல்வதானால் இலக்கை நோக்கி நகர்த்தியிருக்க வேண்டும் அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் தனது இருப்பை தக்கவைக்கவேண்டிய நிலை வரும்போது survival இனை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

இங்கு தலைவனின் நகர்வு என்பதை அவரின் decision making ஊடாகத்தான் அணுக போகிறோம்.

ஒரு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். அவனுக்கு என ஒரு எண்ணம், நோக்கம் (motive)  இருக்கும். அதனாலேயே அவன் அந்த செயலை செய்கிறான். எந்த உணர்வுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது என கூறமுடியாது.




இனி ஈவேரா எனும் சீர்திருத்தவாதியை (reformer) மதிப்பீடு செய்ய அவரது பொது வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறேன்.

ஈவேரா எனும் மனிதரது பிரதான இலக்கு என்பது “தமிழ் இனத்தை மீட்பது” என பெரியாரியவாதிகள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதையே பிரதான இலக்காக வைத்துக்கொள்வோம்.

அவரது பொதுவாழ்வு என்பது மிக நீண்டது. குறைந்தது 50 வருடங்களை கொண்டிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் அவரது பொது வாழ்க்கையில் பல நகர்வுகளை செய்திருக்கிறார். அதாவது decision making.


இதில் இரண்டே இரண்டு decision making நிகழ்வுகளை எடுத்துக்கொள்கிறேன்.

இந்த இரண்டு decision making நிகழ்வுகள் ஈவேராவின் பிரதான இலக்கை நோக்கி நகர முனைந்ததா என பார்க்கிறேன். அதாவது “தமிழ் இனத்தை மீட்பது”

அத்துடன் இந்த இரண்டு  decision making இற்கு பின்னாலும் இருக்கும் அவரது எண்ண ஓட்டம், நோக்கம் என்ன? என்பதை பார்க்க முனைகிறேன்.


முதலாவது நிகழ்வு 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம். 

தமிழ்நாட்டின் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், போராடிய தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ஈவேரா எடுத்திருக்கிறார். அதாவது ஈவேரா ஒரு decision making ஐ எடுத்திருக்கிறார்.

“போலீஸார் துப்பாக்கியை எதற்கு வைத்திருக்கிறார்கள்? காலி பசங்களை சுட்டு தள்ளாமல்” என்று வேறு கூறியிருக்கிறார்.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான எதிரான நிலைப்பாடு என்ற decision making எந்த வகையில் ஈவேராவின் பிரதான இலக்கை நோக்கி நகர உதவி செய்தது? அதாவது “தமிழ் இனத்தை மீட்பது”. 

இது உண்மையில் reverse ஆக செல்லக்கூடியது. இந்திய அரசின் assimilation இனை விரைவுப்படுத்தியிருக்கும். 

ஆக ஈவேராவின் இந்த decision making அவரது “தமிழ் இனத்தை மீட்பது” எனும் பிரதான இலக்கிற்கு எதிர்திசையில் இருந்திருக்கிறது.

பெரியாரியவாதிகள் “இந்த நிகழ்வில் ஈவேரா தவறு இழைத்துவிட்டார்” என எளிதாக சொல்லிவிட்டு கடந்துபோக முடியாது.

இந்த நிகழ்வில் ஈவேராவினது decision making ஏன் அவரது பிரதான இலக்கிற்கு எதிர்திசையில் இருந்தது என்பதை ஆராயவேண்டும்.

அப்படி ஆராய இந்த decision making இற்கு பின்னால் இருக்கும் அவரது எண்ண ஓட்டம் என்ன? நோக்கம் என்ன? என்பதை ஆராய வேண்டியிருக்கிறது.

அவரது எண்ண ஓட்டம், நோக்கம் என்னவாக இருந்தது என்பதை பெரியாரியவாதிகள் சொல்லவேண்டும்.

“ஏதோ வயசான காலத்துல மூளை மழுங்கியிருச்சிப்பா! சிலசமயம் கிறுக்குத்தனமா செய்வாருப்பா” என சால்ஜாப்பு சொல்லமுடியாது.


அடுத்தது கீழ்வெண்மணி படுகொலை.

இந்த படுகொலையை அடுத்து ஈவேரா இறந்த தொழிலாளர்களுக்கு பின்புலமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

ஆனால் படுகொலையை நிகழ்த்திய முதலாளிகளை தண்டிக்கவேண்டும் என எந்த அழுத்தத்தையும் தரவில்லை.

கீழ்வெண்மணி படுகொலை என்பது சாதிவெறியின் ஒரு வெளிப்பாடு. இந்த சாதி வெறியில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதினர் மீது படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்விலும் ஈவேராவின் இந்த decision making அவரது “தமிழ் இனத்தை மீட்பது” எனும் பிரதான இலக்கிற்கு எதிர்திசையில் இருந்திருக்கிறது. “தமிழ் இனத்தை மீட்பது” எனும் பிரதான இலக்கிற்குள் சாதிவெறியை நீக்கவேண்டும் என்பதும் உள்ளடக்கம்.

ஏன் இந்த நிகழ்வில் ஈவேராவின் decision making எதிர்மறையாய் இருந்தது? ஏன் அவரது பிரதான இலக்கிற்கு எதிர்திசையில் இருந்தது? அப்படியெனில் இந்த decision making இற்கு பின்னால் இருந்த அவரது எண்ண ஓட்டம், நோக்கம் என்ன?

இதையும் பெரியாரியவாதிகள்தான் விளக்கவேண்டும்.

மறுபடியும் “ஏதோ வயசான காலத்துல மூளை மழுங்கியிருச்சிப்பா! சிலசமயம் கிறுக்குத்தனமா செய்வாருப்பா” என தொடங்கக்கூடாது.


• இந்த இரண்டு நிகழ்வுகளிலும் ஈவேராவினது decision making இற்கு பின்னால் இருக்கும் எண்ண ஓட்டம், நோக்கம் என்பதை துருவி பார்க்கும்போது, அவரது ஆளுமை தொடர்பாக எனக்கு மதிப்பு வரவில்லை.

அதனை நான் விவரிக்க விரும்பவில்லை.

மறுபடியும் சொல்வது ஈவேரா என்ற மனிதரை தமிழ்நாட்டில் மிகைப்படுத்தப்பட்ட பிம்பமாக கட்டியெழுப்பியிருக்கிறார்கள். 

அடுத்தது எந்தவொரு தலைவரையும் மதிப்பீடு செய்யும்போது, அந்த தலைவனின் நகர்வு அவரது பிரதான இலக்கை நோக்கி நகர்த்தியதா என பாருங்கள். 

அப்படி இல்லையெனில் அந்த decision making இற்கு பின்னால் இருக்கும் அந்த தலைவனின் எண்ண ஓட்டம், நோக்கம் என்பதை ஆராயுங்கள்.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]