உலக வரலாற்றில் ஜோசப் ஸ்டாலினும், பிரபாகரனும் - கூடவே தமிழ்நாட்டு முகநூல் புரட்சியாளர்களும்

என்னுடைய முந்தைய பதிவொன்றில் தமிழ்நாட்டு முகநூல் புரட்சியாளர்கள்தலைவர் பிரபாகரனையும் உலகின் மற்றைய புரட்சியாளர்களையும் அணுகுவதிலும் எத்தகைய Double standard  கடைப்பிடிக்கிறார்கள் என்பதை விளக்கியிருந்தேன்.


சில தினங்களுக்கு முன் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவுதினம்தமிழ்நாட்டின் முகநூல் புரட்சியாளர்கள் ஜோசப் ஸ்டாலின் அவர்களை பாராட்டு மழையில் நனைத்த விதம் புல்லரிக்க வைத்தது.


அதனால் ஜோசப் ஸ்டாலினை உதாரணமாக வைத்தே இவர்களின் Double standard  உங்களுக்கு காட்டுவதற்காக இந்த பதிவு.


ஜோசப் ஸ்டாலின்தலைவர் பிரபாகரன் இருவரையும் சில வரலாற்று நிகழ்வுகளினூடாக இந்த பதிவில் மதிப்பீடுசெய்திருக்கிறேன்.


• முதல் வரலாற்று நிகழ்வான BATTLE OF STALINGRAD


இந்த நிமிடம் வரை உலக வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய இராணுவ நகர்வான Operation Barbarossa வை ஜெர்மனி கிழக்கு முனையில் இருக்கும் சோவியத் யூனியன் மீது தொடக்கியது.


For the campaign against the Soviet Union, the Germans allotted almost 150 divisions containing a total of about 3 million men.


Among those units were 19 panzer divisions, and in total the Barbarossa force had about 3,000 tanks, 7,000 artillery pieces, and 2,500 aircraft.


It was in effect the largest and most powerful invasion force in human history. The Germans’ strength was further increased by more than 30 divisions of Finnish and Romanian troops.


June 22, 1941 ஆம் ஆண்டு ஜெர்மனியின் இந்த campaign தொடங்கியது.


ஜெர்மனியின் படைப்பிரிவுகள் மூன்று Army Group ஆக பிரிக்கப்பட்டனஒரு Army Group எனும்படைப்பிரிவானது 4 லட்சம் - 1 மில்லியன் படையினரை கொண்டது.


1. Army Group North படைப்பிரிவானது லெனின்கிராட்டை (Leningrad) நோக்கி நகர்ந்தது.


2. Army Group Center படைப்பிரிவானது மாஸ்கோவை (Moscow) நோக்கி நகர்ந்தது.


3. Army Group South படைப்பிரிவானது Caucasus Oil Fields களை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுநகர்ந்தது.


அதன் தொடர்ச்சியாக களத்தில் பல சமர்கள் (Battles) நடந்தனஅவைகளை முழுமையாக விவரிப்பது சாத்தியமும் இல்லைஇந்த பதிவின் நோக்கமும் இல்லை.


சுருக்கமாக சொல்வதானால் பல லட்சம் சோவியத் படையினர் கொல்லப்பட்டனர்பல லட்சம் சோவியத்படையினர் போர் கைதிகளாக பிடிபட்டனர்ஜெர்மனி பல ஆயிரம் மைல்கள் சோவியத்திற்குள் உள்நுழைந்திருந்ததுஅதனது இலக்குகளிலிருந்து சில மைல்கள் தொலைவிலேயே ஜெர்மனிய படைகள்இருந்தன.


• அப்போதுதான் இரண்டாம் உலக யுத்தத்தின் போக்கை மாற்றியமைத்த ஒரு போரியல் நகர்வு இடம்பெற்றது.


ஹிட்லர் தனது தனிப்பட்ட கோபத்தின் காரணமாகதனது தளபதிகளின் ஆட்சேபணைகளையும் புறந்தள்ளிஒரு புதிய இலக்கினை குறிப்பிட்டு அதனை கைப்பற்றவேண்டும் என கட்டளையிடுகிறார்.


அந்த புதிய இலக்குதான் ஸ்டாலின்கிராட் (Stalingrad).


Caucasus Oil Fields  இலக்காக நோக்கி நகர்ந்த Army Group South படைப்பிரிவு இரண்டாக பிரிக்கப்படுகிறது.


அதில் ஒன்று Stalingrad  நோக்கி நகர்த்தப்பட்டது.


பீல்ட் மார்ஷல் Friedrich Paulus தலைமையில் மூன்று லட்சம் ஜெர்மானிய படையினர் ஸ்டாலின்கிராட்டை நோக்கி நகர்ந்தனர்இது நடந்தது Aug 1942.


இதுவரை உங்களுக்கு விளக்கியது BATTLE OF STALINGRAD இன் மிக சுருக்கமான வரலாற்று பின்னணி.


• இனி இந்த பதிவின் மையப்புள்ளிக்கு வருகிறேன்.


ஜெர்மானிய படை ஸ்டாலின்கிராட்டை நோக்கி நகர்ந்தபோதுஅன்றைய நேரத்தில் அந்த நகரத்தின் சனத்தொகை குறைந்தது ஆறுலட்சம் மக்கள்அத்துடன் ஸ்டாலின்கிராட் ஒரு தொழிற்சாலை நகரம் (Industrial City).


• இப்பொழுது ஸ்டாலின் முன்னே ஒரு பெரும் கேள்வி எழுகிறது.


பலம் வாய்ந்த ஜெர்மானிய படைகள் ஸ்டாலின்கிராட்டை நோக்கி நகர்கின்றனஅங்கே வாழும் ஆறு லட்சம் மக்களை ஸ்டாலின்கிராட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதா அல்லது இல்லையா என்பதே அந்த பெரும்கேள்வி.


பொதுமக்கள் ஸ்டாலின்கிராட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதில்லை என ஸ்டாலின் முடிவு செய்கிறார்.


• அதன்பின்னே போரியல் காரணம் இருந்தது.


ஏற்கனவே பல ஆயிரம் மைல்கள் சோவியத் நிலப்பரப்பை இழந்திருந்த நிலையில்இனி ஒரு அடி கூட பின் நகரகூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.


இதுதான் பின்னாளில் புகழ் பெற்ற வாசகமான

“Not a step back”.


இந்த ‘Not a step back’ கட்டளை Order No. 227 என அழைக்கப்படுகிறது.


Order No. 227 was an order issued on 28 July 1942 by Joseph Stalin, who was acting as the people’s commissar of defense.


It is known for its line "Not a step back!" which became the primary slogan of the Soviet press in summer 1942.


• சோவியத் படையினருக்குஸ்டாலின்கிராட்டை இழந்துவிடக்கூடாது என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக அந்த ஆறு லட்சம் மக்களும் நகரத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று கட்டளை இடுகிறார்.


காரணம் மக்களில்லாத வெற்று நகரமாக இருந்தால்ஜெர்மனியின் கடுமையான தாக்குதலின்போது சோவியத்படையினர் ‘இது வெற்று நகரம்தானே’ என்ற மனநிலையில் தமது உயிரை காப்பாற்றி கொள்ளபின்வாங்குவதற்கு எத்தனிக்ககூடும்.


ஆனால் ஆறு லட்சம் மக்களும் ஸ்டாலின்கிராட் நகரத்திற்குள் இருக்கும்போதுபொதுமக்களை காப்பாற்றுவதற்காக இந்த நகரத்தை இழந்துவிடக்கூடாது என்ற உளவியல் சோவியத் படையினருக்கு இருக்கும் என்ற அடிப்படையில் ஸ்டாலின் இந்த கடுமையான முடிவை எடுத்தார்.


இதை போரியல் பார்வையில் மொழி பெயர்த்தால்சோவியத் படைகள் போரில் தோற்றுவிடக்கூடாது என்றஅடிப்படையில் ஆறு லட்சம் பொது மக்களின் உயிர்கள் பணயமாக வைக்கப்பட்டது என்று கூறமுடியும்.


அத்துடன் இந்த பொதுமக்களை கொண்டுதான் ஸ்டாலின்கிராட்டுக்கான பதுங்கு குழிகள், Anti-Tank Trenches என்பவை வெட்டப்பட்டன.


Battle of Stalingrad இல் ஜெர்மனி விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் மட்டும் 40000 பொதுமக்கள்இறந்ததாக வரலாற்று தரவுகள் கூறுகின்றனஇது ஒரு உதாரணம் மட்டுமே.


• அடுத்தது கட்டாய ஆட்சேர்ப்பு


எந்த வயதினருக்கெல்லாம் துப்பாக்கியையும்சில கிரனேடுகளையும் தூக்கிக்கொண்டு செல்லும் உடல் வலுஇருக்கிறதோ,அவர்களுக்கெல்லாம் கட்டாய பயிற்சி அளிக்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.


• தப்பியோடியவர்களுக்கு மரணதண்டனை


இவ்வாறு கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தி சேர்க்கப்பட்ட பொதுமக்களில் பலர் தம் உயிரை காப்பாற்றிகொள்ள தப்பியோட முயன்றனர்அவ்வாறு தப்பியோட முயன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.


இரண்டாம் உலக யுத்தத்தின்போதுதப்பியோட முயன்றவர்களுக்கு (deserters) மரண தண்டனை வழங்கப்பட்டதில் சோவியத் யூனியன் முதலிடம் வகிக்கிறது.


இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்ட சோவியத் படையினரின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சத்தைதாண்டும்.


The two organs of state control, SMERSH and NKVD, executed 158,000 soldiers for desertion during the war.


நான் மேலே குறிப்பிட்ட ஸ்டாலினின் Order No. 227 படிசோவியத் யூனியன் படையிலிருந்து தப்பியோடுபவர்களை தண்டிப்பதற்கெனவே தனி படைப்பிரிவு இருந்தது.


Order No.227, dated July 28, 1942, directed that each Army must create "blocking detachments" (Barrier Troops) which would shoot "cowards" and fleeing panicked troops at the rear.


• இனி ஸ்டாலினின் இந்த முடிவுகள் மீதான மதிப்பீடு


ஸ்டாலின்கிராட்டை விட்டு வெளியேற பொதுமக்களை அனுமதிக்காததுகட்டாய ஆட்சேர்ப்புதப்பியோடிய படையினருக்கு மரணதண்டனை என்பது போன்ற சோவியத் யூனியனின் அதிபர் ஸ்டாலின் எடுத்த இறுக்கமானமுடிவுகளை எவ்வாறு மதிப்பிடுவது?


இதை இரண்டாம் உலக யுத்தத்தின் கள நிலவரத்தையும்அதன் பின்னணியையும் கருத்தில் எடுத்துஅந்த context இல் மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும்.


இந்த context இல் அணுகவேண்டும் என்பதற்காகத்தான்மேலே Operation Barbarossa பற்றிய சில விவரங்களை தந்திருந்தேன்.


• இவை ஏன் முக்கியத்துவம் உடையன?


மேலே ஜெர்மனி இந்த Operation Barbarossa விற்காக ஒதுக்கிய இராணுவ வளங்களை சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.


இவை அன்றைய ஜெர்மனியின் இராணுவ வளங்களில் 75% ஆகும்அதாவது ஜெர்மனி அதனது இராணுவத்தின் முக்கால்வாசி பகுதியை இந்த சோவியத் யூனியனை நோக்கிய Eastern Front இற்காக ஒதுக்கியிருந்தது.


இரண்டாம் உலக யுத்தத்தில் போர் வலுமிக்க நவீன இராணுவம் ஜெர்மனிதான் என்பது போரியல் வல்லுனர்கள் எல்லோருமே ஒருமித்த கருத்தில் ஏற்றுக்கொண்ட உண்மை.


ஜெர்மனி அதனது Blitzkrieg எனும் போர்முறையின் மூலம் பிரான்ஸை சில வாரங்களுக்குள் கைப்பற்றியது ஒரு சின்ன உதாரணம்.


ஆக ஜெர்மனியின் முழு போர்வலுவையும்அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் முழுமையாக உள்வாங்கியது சோவியத் யூனியன் மட்டுமே.


அதனால்தான் இரண்டாம் உலக யுத்தத்தில் அதிக உயிரிழப்புகள் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டதுகுறைந்தது இரண்டரை கோடி பேரை சோவியத் ஒன்றியம் இழக்க நேரிட்டது.


இத்தகைய வரலாற்று பின்னணியில்,போரியல் பார்வையில் அணுகினால் இறுக்கமானகடினமான, ruthless முடிவுகளை ஜோசப் ஸ்டாலின் எடுத்தது தவிர்க்கமுடியாததே.


• இந்த இறுக்கமான முடிவுகளை அன்று ஸ்டாலின் எடுக்காமல் இருந்திருந்தால் , ஒருவேளை சோவியத் ஒன்றியம் ஜெர்மனியிடம் வீழ்ந்திருக்கலாம்அவ்வாறு சோவியத் யூனியன் வீழ்ந்திருந்தால் அது இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவுகளை நிச்சயம் மாற்றியமைத்திருக்கும்முடிவுகள் மாறியிருந்தால் இன்றைய உலகஒழுங்கும் முற்றுமுழுதாக வேறுவிதமாயிருந்திருக்கும்.


“Without Soviet manpower and blood, the outcome might have been very different.


In the two years preceding the Battle of Moscow, German troops had won sweeping victories in Poland, Norway, France and the Balkans, giving Adolf Hitler mastery over Europe.


It was the Soviet Union that made by far the biggest contribution to the defeat of Nazi Germany.


the Soviet Union suffered more losses than any other combatant power: 11 million military dead and another 16 million civilian. And between 1941 and 1945, it was the Soviets who fought most of the German military and inflicted most of the German casualties.”


(Matthew Lenoe is associate professor of history at the University of Rochester and author of "Closer to the Masses: Stalinist Culture, Social Revolution, and Soviet Newspapers.")


ஆக Battle Of Stalingrad இல் பொதுமக்கள் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டதையோகட்டாய ஆட்சேர்ப்பு நடத்தி களத்துக்கு அனுப்பப்பட்டதையோஅதிலிருந்து தப்ப முனைந்தவர்களுக்கு உடனடியாக மரணதண்டணை வழங்கப்பட்டதையோ வலியோடு , வேதனையோடு மௌனமாக கடந்துமட்டும்தான் செல்லமுடியுமே தவிர விமர்சனங்களை வைக்க இயலாது.


காரணம் மேலே சொன்னது போல அன்றைய போர்களத்தின் context இலேயே அணுகப்படவேண்டும்.


எந்தவொரு இறையாண்மை அரசினதும் அடிப்படை ஆதாரமே நிலப்பரப்புதான்அந்த நிலப்பரப்பை இழந்த பின்பு எதையுமே தக்கவைக்கமுடியாது என்ற பார்வையில் அன்று ஜோசப் ஸ்டாலின் இந்த இறுக்கமான முடிவுகளை எடுத்திருக்கலாம் என்றுதான் அனுமானிக்கவேண்டியிருக்கிறது.


இனி இதே போன்றொதொரு நிலையில் இருந்த இன்னொரு போர்களத்திற்கு நகர்வோம்.


• ஆண்டு 2009.


இலங்கையில் விடுதலை புலிகளின் இறுதி யுத்தத்தின் கடைசி சில மாதங்கள்.


விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த நிலப்பரப்பை முற்று முழுதாக இலங்கை இராணுவத்தின்படைகள் முற்றுகையிட்டிருந்தன.


Div 53, Div 55, Div 57, Div 58, Div 59 , Task Force 2, TF 3, TF4 என குறைந்தது 2 லட்சம் இலங்கை இராணுவம் சுற்றி வளைத்திருந்தது.


தலைவர் பிரபாகரனுக்கு தெளிவாக தெரியும் இந்த களத்தை இழந்தால் அது விடுதலைபுலிகளுக்கு இறுதி அத்தியாயத்தை எழுதிவிடும் என்பது.


ஆனால் தலைவர் பிரபாகரன், Battle of Stalingrad இல் ஜோசப் ஸ்டாலின் எடுத்த இறுக்கமான முடிவுகளை எடுக்கவில்லை.


விடுதலை புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை இழந்து பின்வாங்குகையில்மக்களும் அவர்களுடன் சேர்ந்து பின்வாங்கினார்கள்.


இறுதி யுத்தத்தின் கடைசி சில தினங்களில் மக்களை கேடயமாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள்எல்லாம் உலக ஒழுங்கு முன்பே வகுத்து வைத்திருந்த ‘Project Beacon’ நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாடகமாக நடந்தவை என்பதை பலர் ஆதாரபூர்வமாக நிருபித்துவிட்டார்கள்.


இறுதி யுத்தத்தின் கடைசி நாள் வரை இருந்து பின் தப்பி அகதிகளாக புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் விடுதலை புலிகள் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளை இன்றுவரை வைக்கவில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.


வாதத்திற்கு என எடுத்துகொண்டு விடுதலை புலிகள் இதை செய்தார்கள் என வைத்துக்கொண்டால் கூடஜோசப் ஸ்டாலின் நடந்து கொண்ட விதத்திற்கும் விடுதலை புலிகள் நடந்து கொண்ட விதத்திற்கும் கடலளவு வித்தியாசம் இருக்கின்றது.


அத்துடன் மேலே சொன்னது போல ஸ்டாலினிற்கு பயன்படுத்திய அதே context  , விடுதலை புலிகளுக்கும் பயன்படுத்தவேண்டும்.






ஆக ஜோசப் ஸ்டாலினுக்கும்தலைவர் பிரபாகரனுக்கும் வாழ்வா,சாவா என்ற போர்கள நிர்ப்பந்தம் வந்தபோதுஅவர்கள் எத்தகைய முடிவுகளை எடுத்தார்கள் என்பதை மேலேயுள்ள பந்தியில் நீங்கள் காணமுடியும்.


• இந்த இருவரினதும் Track Record


இக்கட்டான நிலையில் போர் களம் இருக்கும்போதுஇந்த இருவரினதும் செயற்பாடுகளை போரியல் யதார்த்தங்களோடு மட்டுமே அணுகவேண்டியிருக்கிறது.


அதனால் இக்கட்டான சூழ்நிலை இல்லாத காலகட்டங்களில்இந்த இரு தலைவர்களும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை ஆராய்ந்தால் அது நமக்கு துல்லியமான விடயங்களை தரும்.


அதற்காகவே இந்த இரு தலைவர்களினதும் கடந்த கால செயற்பாடுகளை (Track Record ) எடுத்து மதிப்பீடுசெய்யவிரும்புகிறேன்.


• முதலாவது தலைவர் பிரபாகரன்


தலைவர் பிரபாகரன் என்பவர் தமிழ் சமூகத்தால் அறியப்பட்ட காலத்திலிருந்து அவரின் இறுதி நாள் வரை அவரின் வாழ்க்கை என்பது போர் கள சூழ்நிலையிலேயே இருந்தது.


அதுவும் அவர் வழிநடத்திய விடுதலை புலிகளின் போராட்டம் என்பது Non State Actor Vs Sovereign State என்ற போரியல் சமன்பாட்டிலேயே இருந்தது.


போரியல்ரீதியாக ஒரு Sovereign State எத்தகயை போரியல் அனுகூலங்களை இயல்பாகவே கொண்டிருக்கும் என்பதை நான் எனது பல பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.


அதனால் தலைவர் பிரபாகரனது போராட்ட வாழ்வு என்பது முற்று முழுதாக இக்கட்டான போர் களத்திலேயே இருந்தது என்பதை அறியமுடியும்.


தலைவர் பிரபாகரனது ஆயுதப்போராட்டத்தை கொச்சைபடுத்த முயல்பவர்கள் வழமையாக சில வாதங்களை முன்வைப்பார்கள்.


அரசியல் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட அரசியல் கொலைகள்கிழக்கு மாகாணத்தில் நடந்த முஸ்லீம் மக்கள் மீதான சில தாக்குதல்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டது என்பது அந்த வாதங்களில் மிக முக்கியமானவை.


• இவர்கள் குற்றச்சாட்டாக வைக்கும் வாதங்கள் அனைத்தும் எதற்காக நடத்தப்பட்டன


இறையாண்மையுள்ள தமிழீழம் என்ற இறுதி இலக்கை அடைவதற்குதமது போராட்ட பாதையில் இருந்த தடைக்கற்களை அவ்வப்போது விடுதலை புலிகள் அகற்றினார்கள்.


அநேகமான தடவைகள் பல இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்டதுஅப்படி இருந்தும் அவ்வாறு செய்வதை விடுதலை புலிகள் தவிர்த்தார்கள்.


ஆனால் சில நேரங்களில் தவிர்க்கவேமுடியாது என்ற மிக இக்கட்டான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன.அத்தகைய சூழ்நிலையில் விடுதலை புலிகளால் நடத்தப்பட்டவைதான் மேலே தரப்பட்ட குற்றச்சாட்டுகள்.


ஆனால் இவை எதுவும் தலைவர் பிரபாகரன் எனும் தனி மனிதனின் நலனுக்காக செய்யப்பட்டவை அல்லதமிழீழம் எனும் பொது இலக்குக்காக நடத்தப்பட்டவை.


• இனி சோவியத் யூனியினின் ஜோசப் ஸ்டாலின்


ஸ்டாலினின் வாழ்க்கை பயணத்தில் போர்கள காலகட்டங்களும் இருந்தனஅமைதியான சூழ்நிலை நிலவிய காலங்களும் இருந்தன.


ஆனால் போர் சூழ்நிலை இல்லாத ஸ்டாலினின் ஆட்சிக்காலங்களில் பல மில்லியன் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பல நிகழ்வுகள் நடந்தன.


அவற்றில் மிக சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன்.


1. Great Purge


வர்க்க போராட்டம் என்ற அடிப்படையில் நிலசுவான்தார் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை.


இது 1936-1938 காலப்பகுதியில் நடந்தது.


அந்த காலகட்டத்தில் ஜோசப் ஸ்டாலினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பை பற்றி விவரிக்க , வரலாற்றாசிரியர் Norman Naimark எழுதிய ‘Stalin’s Genocides’ என்ற நூலின் விவரங்களையும் கீழேதந்திருக்கிறேன்.


“The book’s title is plural for a reason: 


He argues that the Soviet elimination of a social class, the kulaks (who were higher-income farmers), and the subsequent killer famine among all Ukrainian peasants – as well as the notorious 1937 order No. 00447 that called for the mass execution and exile of “socially harmful elements” as “enemies of the people” – were, in fact, genocide.


ஸ்டாலினின் order No. 00447 என்பது மிக பிரசித்தமானதுஇந்த கட்டளையின் கீழ் எத்தனை லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நீங்களே இணைய தளங்களில் தேடி அறிந்துகொள்ளலாம்.


Stalin had nearly a million of his own citizens executed, beginning in the 1930s. 


Millions more fell victim to forced labor, deportation, famine, massacres, and detention and interrogation by Stalin’s henchmen.


Accounts “gloss over the genocidal character of the Soviet regime in the 1930s, which killed systematically rather than episodically,” said Naimark. 


In the process of collectivization, for example, 30,000 kulaks were killed directly, mostly shot on the spot. About 2 million were forcibly deported to the Far North and Siberia.


நிலசுவான்தர்களாக இருந்த 30000 kulaks கண்ட இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டார்கள்சுமார் 20 லட்சம் மக்கள் பலவந்தமாக வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.


• அந்த காலகட்டங்களில் எவ்வாறு நிலசுவான்தார்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை பின்வரும் பந்தி விவரிக்கின்றது.


One Soviet report noted that gangs “drove the dekulakized naked in the streets, beat them, organized drinking bouts in their houses, shot over their heads, forced them to dig their own graves, undressed women and searched them, stole valuables, money, etc.”


• இந்த Kulak கள் வேட்டையாடப்பட்ட பின்பு உருவான Ukrainian famine இனால் குறைந்தது 30 லட்சம்மக்கள் பட்டினியால் இறந்தனர்.


The destruction of the kulak class triggered the Ukrainian famine, during which 3 million to 5 million peasants died of starvation.


2. Order No. 00447


NKVD என்ற அமைப்பு சோவியத்தின் உள்துறை அமைச்சின் கீழ் இயங்கிய அமைப்பாகும்இந்தபடுகொலைகளை உத்தியோகபூர்வமாக நிகழ்த்திவர்கள் இவர்களே.


By August 15, 1937, 101,000 were arrested and 14,000 convicted. By the end of 1938, the NKVD had executed 386,798 Soviet citizens to fulfil order 00447.


3. Gulag


இந்த Gulag என்பது அரசினால் நடத்தப்பட்ட வதை முகாம்களாகும்.


The Gulag is recognized as a major instrument of political repression in the Soviet Union.The camps housed a wide range of convicts, from petty criminals to political prisoners , large numbers of whom were convicted by simplified procedures, such as by NKVD troikas or by other instruments of extrajudicial punishment.


இந்த Gulag எனும் வதை முகாம்கள்தான்ஸ்டாலின் அவரது அரசியல் எதிரிகளையெல்லாம் அனுப்பி அவர்களது உயிரை பறித்த இடமாகும்.


இந்த வதை முகாம்களில் குறைந்தது 10 லட்சம் பேராவது கொல்லப்பட்டார்கள் என்று வரலாற்று தரவுகள்கூறுகின்றன.


இதில் முக்கியமாக அவதானிக்கப்படவேண்டியது ஜோசப் ஸ்டாலின் எனும் தலைவர் அவரது ஆட்சி காலத்தில்நிகழ்த்திய படுகொலைகள் ஆகும்.


இவை எந்தவொரு போர் சூழ்நிலையிலும்போரியல் நிர்ப்பந்தத்திலும் ஏற்பட்ட படுகொலைகள் அல்ல.


ஜோசப் ஸ்டாலின் தனது அதிகாரத்தை தக்கவைக்க அவரது அரசியல் எதிரிகளை கொன்றொழித்த விதம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டும்வெறுமனே வர்க்க போராட்டம் என்ற போர்வைக்குள் சகலவற்றையும் போர்த்தி மறைக்கமுடியாது.





• இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.


இத்தனை மில்லியன் பொது மக்கள் ஜோசப் ஸ்டாலினால் படுகொலை செய்யப்பட்டும் அவை எப்படி உலக நாடுகளால் கண்டுகொள்ளப்படாமல் போயின?


இரண்டு பிரதான காரணங்களை வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.


1. ஜோசப் ஸ்டாலினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை தாண்டி ஹிட்லரினால் நடத்தப்பட்ட யூத படுகொலைஅந்த நேரம் அரசியல்ரீதியில் மிக முக்கியத்துவம் உடையதாக இருந்தன.


2. இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் யூனியன் ஆற்றிய பெரும் பங்களிப்பிற்கு நன்றி கடனாக இந்த Genocide இனை கடந்து போவதற்கு மற்றைய Great Powers களான அமெரிக்கா,பிரிட்டன் போன்றவை முடிவுசெய்தன.


அத்துடன் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பெரும்பாலான Great Powers களைத்துபோயிருந்தன.


All early drafts of the U.N. genocide convention included social and political groups in its definition. But one hand that wasn’t in the room guided the pen. 


The Soviet delegation vetoed any definition of genocide that might include the actions of its leader, Joseph Stalin. 


The Allies, exhausted by war, were loyal to their Soviet allies – to the detriment of subsequent generations.


• இந்த நீண்ட பதிவு ஜோசப் ஸ்டாலின்தலைவர் பிரபாகரன் எனும் இரு தலைவர்களினது வாழ்க்கையின் சகல பக்கங்களையுமே மதிப்பீட்டுக்கு உட்படுத்துகிறது.


தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை என்பது முற்று முழுதாக போர் களத்திலேயே கழிந்திருக்கிறது


அவரின் போர் கள வாழ்க்கையில் எந்தவொரு கணத்திலும் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காகதனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக எந்தவொரு வன்முறையையும் நிகழ்த்தவில்லை.


பொது இலக்கான தமிழீழத்தை நோக்கியே ஆயுதப்போராட்டத்தை நடத்தினார்கள்அந்த ஆயுதப்போராட்டத்திலும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்அதற்கானபோரியல் நிர்ப்பந்தங்களை தெளிவாக முன்னைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.


• அதேபோல் இங்கு Battle of Stalingrad இல் ஜோசப் ஸ்டாலின் எடுத்த முடிவுகளின் மீது நான் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லைஅதை மௌனத்துடன் கடந்தே போகிறேன்.


ஆனால் அவரின் ஆட்சி காலங்களில் நடந்த Genocide களை கடந்து போகமுடியாது.


• தமிழ்நாட்டின் முகநூல் புரட்சியாளர்கள்


இங்குதான் தமிழ்நாட்டு முகநூல் புரட்சியாளர்களின் அந்த double standard  எளிதாக காணமுடியும்.


ஜோசப் ஸ்டாலினின் Genocide களை நன்றாக அறிந்திருந்தும்அதை ஏகாதிபத்திய எதிர்ப்புமுதலாளித்துவ எதிர்ப்புவர்க்க போராட்டம் என்ற சொல்லாடல்களை வைத்து மறைத்துவிட்டு அவரை சமூக ஊடகங்களில்போற்றி புகழ்ந்து தள்ளிவிடுவார்கள்.


ஆனால் தலைவர் பிரபாகரன் எனும்போது மட்டும் வாயை கோணிக்கொண்டு, ‘என்னதான் இருந்தாலும் அரசியல் தலைவர்கள்,பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்ககூடாது தோழர்’ என்பார்கள்.


.ஜெயகாந்த்



கீழேயுள்ள படங்களின் விவரம்


முதலாவது படம் இடது கீழே:

ஜெர்மனியின் Operation Barbarossa நகர்வு


முதலாவது படம் வலது கீழே:

விடுதலை புலிகளின் இறுதி யுத்தத்தின் கடைசி சில வாரங்களில் இருந்த போர் கள நிலை.


இரண்டாவது படம் இலக்கம் 1:

Battle Of Stalingrad இன்போது Anti Tank Trenches களை வெட்டும் பொது மக்கள்.


இரண்டாவது படம் இலக்கம் 2:

Battle Of Stalingrad இன் போது குழந்தைகள்


இரண்டாவது படம் இலக்கம் 3:

ஸ்டாலினின் Order No. 227 ஆன ‘Not a Step Back’ எனும் வாசகத்தை தாங்கிய சோவியத் தபால் முத்திரை


இரண்டாவது படம் இலக்கம் 4:

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட Kulak எனும் நிலச்சுவான்தார்கள்.

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]