இந்தியா எனும் நாட்டின் வயது என்ன?
எப்பொழுது பிரிட்டிஷார் இந்திய நிலப்பரப்பில் இருக்கும் பல ராஜ்ஜியங்களையும் வெட்டி தைத்து ‘ஒரு துணியாக’ உருவாக்கினார்களோ அத்தனை வயதுதான் இந்தியாவின் வயது.
• இந்தியா எனும் நாடு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தது என சொல்லுகிறார்களே?
அது இந்திய தேசியவாதிகள் உருவாக்க முனையும் கதையாடல் (narrative). அதன் மூலம் இந்தியா எனும் நாட்டிற்கான ஒரு பொது உளவியலை உருவாக்க முனைகிறார்கள்.
இந்தியா எனும் நாடு பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு இருந்ததேயில்லை என்பதை வேறு வேறு கோணங்களில் நிறுவலாம்.
இந்த பதிவில் நான் குறிப்பிடும் ஒவ்வொரு கோணமும் நீண்ட தனி பதிவுகளாக எழுதப்பட வேண்டிய உள்ளடக்கத்தினை கொண்டவை.
ஆனால் இந்த பதிவில் அந்த கோணங்களை மட்டும் தருகிறேன். அதனது விரிவாக்கத்தை பின்னர் தனி பதிவாகதருகிறேன்.
• முதலாவது போரியல்ரீதியான கோணம்
18 ம் நூற்றாண்டில் இந்திய நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை குறைந்தது 16 கோடி.
பிரிட்டனின் மொத்த சனத்தொகை 80 லட்சம் மட்டுமே.
வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வின்படி, இந்தியாவில் இருந்த East India company (EIC) எனும் வியாபார நிறுவனத்தில் இருந்த பிரிட்டிஷ் படைவீரர்களின் எண்ணிக்கை எந்தவொரு கட்டத்திலும் 20000 ஐ தாண்டியதில்லை.
பின்னர் 1858 இல் British crown இற்கு மாறியபின்னரும் , அதனது ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்த அதிகபட்ச British army இன் எண்ணிக்கையே வெறும் 30000 தான்.
இந்திய நிலப்பரப்பிற்கும் பிரிட்டனிற்கும் இடையிலான தூரம் பல ஆயிரம் மைல்கள்.
• போரியல்ரீதியில் வெறும் 30000 இற்கும் குறைவான பிரிட்டிஷ் படைகள், பல ஆயிரம் மைல்கள் தொலைவிலிருக்கும் 16 கோடி மக்களை கொண்ட நிலப்பரப்பை எப்படி கட்டுக்குள் வைத்திருக்கமுடியும்?
போரியல்ரீதியில் இது சாத்தியமே இல்லாதது.
உடனே நீங்கள் பாய்ந்தடித்து கொண்டு பிரிட்டிஷார் நவீன ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஒரு கதையை உருட்டுவீர்கள் என்று தெரியும். அதுவும் உண்மையில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதை பற்றி விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். இணைப்பு கீழே.
பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 2)
• பின்னர் எப்படி பிரிட்டிஷார் தமது ஆளுகைக்குள் இந்திய நிலப்பரப்பை கொண்டு வந்தார்கள்?
இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த அன்றைய மக்களுக்கு இந்திய தேசம் என்ற உளவியல் இருக்கவில்லை.
இன்று உங்களின் மனதில் இந்திய தேசம் என்பது எத்தகைய படிமத்தை உருவாக்குகிறதோ அது அன்றைய காலத்தில் நிலவவில்லை.
அதனால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை கொண்டே இந்திய நிலப்பரப்பின் மக்களை ஆண்டார்கள்.
இதைப்பற்றி முன்னரேயே “பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல்பார்வையில்” எனும் விரிவான பதிவை எழுதியிருக்கிறேன்.
• இந்த போரியல்ரீதியான தர்க்கங்களை எதிர்கொள்ளமுடியாமல் இன்னொரு சாமர்த்தியமான கருத்தியலைஇந்திய தேசியவாதிகள் முன்வைப்பார்கள்.
இந்து மதம், இந்திய பண்பாடு, இதிகாசங்கள், மொழி என்பவற்றை உள்ளடக்கியதான ஒரு தளத்தில் இந்தியதேசம் என்ற பொது அகம் இருந்ததாக இந்திய தேசியவாதிகள் ஒரு கருத்தியலை முன்வைப்பார்கள்.
இது பெரிய உட்டாலக்கடி வாதம்.
இவர்கள் கூறும் இதே மதம், பண்பாடு, இதிகாசங்கள், மொழி என்பவற்றை பொதுவாக கொண்டிருந்தஇன்னொரு பெரும் நிலப்பரப்பை உதாரணமாக தருகிறேன்.
அதுதான் ஐரோப்பிய கண்டம்.
ஐரோப்பிய கண்டம் இதே மதம், பண்பாடு,மொழி , இதிகாசங்கள் என பொதுவான அடையாளத்தைகொண்டிருந்தது.
இதை மிக சுருக்கமாக தருகிறேன். பிறகு தனி பதிவாக விரிவாக தருகிறேன்.
• மொழி
Roman Empire இருந்தபோது அதன் நிலப்பரப்பில் இரண்டே இரண்டு மொழிகள்தான் பெருவாரியான மக்களால் பேசப்பட்டு வந்தது. (படம் கீழே)
ரோம சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் லத்தின் மொழியும் கிழக்கு பகுதியில் கிரேக்க மொழியும் பேசப்பட்டது.
“There were two universal languages in the Roman Empire: Latin in the west and Greek in the east.”
பிற்காலங்களில் Roman Empire இரண்டாக உடைந்து , அதில் 476 ம் ஆண்டோடு Western Roman Empire முற்றாக இல்லாமல் போகிறது.
பின்னர் லத்தீன் மொழி வேறு வேறு மொழிகளாக பரிணாமம் அடைகின்றன.
இன்றைய பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளின் தாய் லத்தீன்.
அவைகளைதான் Romance languages என அழைக்கிறோம்.
அவைகளில் முக்கியமானவை Italian, Spanish, Portuguese, French, Romanian மொழிகள்.
“Once the empire broke up, Latin evolved into a number of separate languages, which are known as Romance languages.”
• கிறிஸ்தவ மதம் (Christianity)
ரோம சாம்ராஜ்யத்தின் மன்னன் Constantine கிறித்துவத்தை ஏற்று கொண்டதிலிருந்து , ஐரோப்பாவில்கிறித்துவம் வேர் கொள்ள ஆரம்பித்தது.
“An emperor, Constantine, in 313 AD became a Christian or at least gave official support to the Christian churches.”
அன்றிலிருந்து சுமார் 1700 ஆண்டுகளாக ஐரோப்பாவின் மத அடையாளமாக நீடிப்பது, பல அரசியல்நகர்வுகளை தீர்மானித்தது எல்லாமே கிறித்துவ மதம்தான்.
அத்துடன் கிறித்துவ மதத்தின் அதிகார மையமாக உருவான pope இற்கும் ஐரோப்பிய மன்னர்களுக்கும் எத்தகைய அதிகார தள்ளு முள்ளு நடந்தது என்பதை ஐரோப்பிய வரலாறு கூறுகிறது.
“Pope and emperor fought each other to a standstill. They never had a complete victory, one or the other.”
“The effect of the long-term struggle between emperor and pope was that they weakened each other.”
“In central Europe two great powers—emperor and pope—had been struggling, trading away their local authority in order to fight each other. The result was that the smaller units gained power rather than lost it.”
அத்துடன் கிறித்துவ மதத்தை அடிப்படையாக வைத்தே சிலுவை போர் (Crusades) சுமார் 200 வருடங்கள்நடந்தன. (படம் கீழே)
ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து Holy Land ஐ கைப்பற்ற இந்த Crusades ஐ நடத்தியது.
• பண்பாடு, இதிகாசங்கள்
இன்றும் நீங்கள் காணும் ஐரோப்பா தனது வேர்களாக கொண்டிருப்பது கிரேக்க நாகரீகத்தையும் ரோமசாம்ராஜ்யத்தின் பண்பாட்டு கூறுகளையும்தான் (the culture of Ancient Greece and Rome).
• கட்டிடக்கலை
இன்றும் ஐரோப்பாவில் பரவலாக பொதுவான கட்டிட கலையாக ரோம கட்டிட கலைகள் இருப்பதைகாணலாம்.
“Romanesque architecture is descended from Roman forms of architecture.”
• இன்று ஐரோப்பா எப்படி இருக்கிறது?
இன்று ஐரோப்பாவில் குறைந்தது 40 நாடுகள் இருக்கின்றன.
வரலாற்றில் ஒரு காலத்தில் லத்தீன் மொழி பேசினோம், இன்றும் நமக்கான மதம் Christianity, நமது வேர்கள்கிரேக்க,ரோம பண்பாட்டு கூறிலிருந்து வந்தது. அதனால் ஐரோப்பாவை ஒரு நாடாக இருக்கவேண்டும் எனகூறினால் எப்படியிருக்கும்?
இந்திய தேசியவாதிகள் வைக்கும் வாதம் இத்தகைய கேணைத்தனமானதுதான்.
• அடுத்த கோணம் பிரிட்டிஷார் விலகிய போது இருந்த நிலை
பிரிட்டிஷ் ஆளுகைக்குள் இந்திய நிரப்பரப்பு இருந்தபோது, அந்த நிலப்பரப்பு இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுஆளப்பட்டன.
India under the British Raj (the "Indian Empire") consisted of two types of territory:
1. British India
2. Native states or Princely states.
இந்தியாவில் இருந்த Princely states களின் எண்ணிக்கை 562.
Princely states கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய நிலப்பரப்பில் 40% நிலப்பரப்பையும் 23% மக்களையும்கொண்டிருந்தன.
பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகி செல்லும்போது, Indian Independence Act 1947 இன் படி பிரிட்டிஷார் இந்த Princely states களுக்கு 2 தெரிவுகளை தந்திருந்தார்கள்.
1. இந்தியாவுடன் இணையலாம்
2. பாகிஸ்தானுடன் இணையலாம்
அன்றிருந்த எந்த இந்திய தேசியவாதிகளும் ‘ இந்தியா ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றை நாடாகத்தான் இருந்தது. அதனால் பிரிட்டிஷார் விலகி செல்லும்போது அப்படியே அந்த ஒற்றை நாடாக திருப்பி தாருங்கள்’ எனகோரிக்கை வைக்கவில்லை.
ஏனெனில் அவர்களுக்கும் தெரியும். இந்தியா எனும் ‘ஒரு புதிய நாடு ‘ பிரிட்டிஷாரின் தேவைக்காகஉருவாக்கப்பட்ட நாடு என்பது. இது இந்திய தேசிவாதிகளுக்கு கிடைத்த பெரிய ஜாக்பாட்.
பின்னர் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகி செல்லும்போது, அன்றைய இந்திய தலைவர்கள் சாம,தான, தண்ட, பேத வழிமுறைகளை பயன்படுத்தித்தான் கிடைத்த Princely states களை எல்லாம் வெட்டி இந்தியாஎனும் புது நாட்டை தைத்தார்கள்.
பல உதாரணங்களில் ஒரு உதாரணத்தை தருகிறேன்.
அன்றிருந்த Travancore சமஸ்தானம் தனி நாடாக உருவாக இருந்ததை வரலாற்று தகவல்கள் காட்டுகின்றன.
• By 1946, the Dewan of Travancore, Sir C.P. Ramamswamy Aiyar declared his intention of forming an independent state of Travancore that would be open to the idea of signing a treaty with the Indian union.
• Sir C.P. Aiyar is also said to have had secret ties with the UK government who were in support of an independent Travancore in the hope that they would get exclusive access to a mineral called monazite that the area was rich in, and would give an edge to Britain in the nuclear arms race.
• He stuck to his position till as late as July 1947. He changed his mind soon after he survived an assassination attempt by a member of the Kerala Socialist Party.
• On July 30 1947, Travancore joined India
இன்னும் மற்றும் பல Princely states எப்படி தனி நாடாக மாற முயற்சித்தன என்ற வரலாற்று தகவல்களை தனிபதிவில் தருகிறேன்.
• இதன் சாராம்சம்
1. போரியல்ரீதியான ஆய்வும் இந்தியா என்ற ஒரு நாடு பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு இருந்ததில்லை என்பதை காட்டுகின்றன.
அப்படி இருந்தது என்றால் ஏன் 16 கோடி மக்களை கொண்ட இந்திய மக்களால் வெறும் 20000 படையினரை கொண்ட கிழக்கிந்திய கம்பனியை தோற்கடிக்க முடியவில்லை என்பதை விளக்கவும்.
இந்த ‘மெடிக்கல் மிராக்கிள்’ எப்படி நிகழ்ந்து என்பதை விளக்கவும்.
2. இந்து மதம், இந்திய பண்பாடு, இதிகாசங்கள், மொழி என்பவற்றை உள்ளடக்கியதான ஒரு தளத்தில் இந்தியதேசம் என்ற பொது அகம் இருந்ததாக இந்திய தேசியவாதிகள் வைக்கும் கருத்தியலும் ஆழமான வரலாற்றுபுரிதல் இல்லாத வாதம் அல்லது கூமுட்டை வாதம்.
இதே மதம்,மொழி, பண்பாடு என எல்லாவற்றையும் பொது அடையாளமாக கொண்டிருந்த ஐரோப்பிய வரலாற்றையும் மேலே தந்திருக்கிறேன்.
3. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகிய போது இருந்த நிலையும், அதை ‘ஒரு புது நாடாக உருவாக்க நடந்த வரலாற்று நிகழ்வுகளும்’ பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட நாடே இந்தியா என்பதை தெளிவாக காட்டுகின்றன.
• இப்பொழுது இந்திய தேசியவாதிகள் முன்வைக்கும் ‘இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தது’ என்ற narrative அவர்கள் இந்தியா என்ற நாட்டிற்கான ஒரு பொது உளவியலை கட்ட முயற்சிப்பதன் ஒருஅங்கம்.
க.ஜெயகாந்த்














Comments
Post a Comment