“போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது”
“ஓரிரண்டு பேரை பழிதீர்ப்பது. அப்படித்தான் புறப்பட்டோம். ஆனால் பயணமும் பாதையும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத்தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது.
தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத்தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.
பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்தோம். இன்னும் ஒருபடி தெளிவாக சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்திலெல்லாம் நான்போராடவில்லை.
உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப்போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.”
தமிழினத்தலைவர் வே.பிரபாகரன்
(1987ஆம் ஆண்டு ப்ரொன்ட்லைன் ( FRONTLINE) சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில்..)











Comments
Post a Comment