1971 இந்திய பாகிஸ்தான் போர் - இந்திய அரசின் போரியல் நகர்வும் மக்களின் உணர்வுபூர்வமான கதையாடலும்

 இன்றுவரை 1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரால் உருவான பங்களாதேஷ் பற்றிய சாமானிய மக்களின் உணர்வுபூர்வமான கதையாடல் என்ன?


பாகிஸ்தான் இராணுவத்தினால் கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்த மக்கள் மீது ‘genocide’ கட்டவிழ்த்து விடப்பட்டது


பல மில்லியன் கணக்கான கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அகதிகளாக இந்தியாவினுள் தஞ்சம் புகுந்தனர்.


இந்த மக்களுக்காக வேறு வழியின்றி இந்தியா பாகிஸ்தானுடன் போர் புரிந்து பங்களாதேஷ் எனும் நாட்டை உருவாக்கியது.”


இந்த உணர்வுபூர்வமான கதையாடலைதான் இன்று வரை அனைவரும் சொல்லி கொண்டிருக்கிறார்கள்


இன்றும் சமூக ஊடகங்களில் பலர் இந்த உணர்வுபூர்வமான கதையாடலை உண்மையான தோற்றமாக கருதி பந்தி பந்தியாக எழுதுகிறார்கள்.


அதில் சிலர் இதே போல் தமிழீழத்தில் விடுதலை புலிகள் இந்தியாவை நம்பியிருந்தால்இந்தியா சிலகாலங்களில் தமிழீழத்தை உருவாக்கி தந்திருக்கும் என்று கூமுட்டையாக எழுதுவதை பார்த்திருக்கிறேன்.


இவ்வளவு ஏன்தமிழீழத்தில் இருந்த சிலரே 80களில் இப்படித்தான் இந்தியா வந்து பங்களாதேஷை போல தமிழீழத்தை உருவாக்கி தரும் என பினாத்தி கொண்டிருந்தார்கள்.


• இதன் பின்னே இருந்த உண்மையான புவிசார் அரசியல் , போரியல் நகர்வு என்ன?


பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் genocide நடத்தியது உண்மை.


பல மில்லியன் மக்கள் இந்தியாவினுள் அகதிகளாக தஞ்சம் அடைந்தது உண்மை.


ஆனால் இந்தியாவின் போர் என்பது அதனது நலனை அடிப்படையாக கொண்டது.


இந்தியாவின் 75 வருட வரலாற்றில் இந்தியா நடத்திய மிக சிறந்த போரியல் நகர்வு 1971 போர்தான்.


ஏன்?


சில தரவுகளை தருகிறேன்.


இந்தியாவுடன் அதிக நீளமான நில எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளை வரிசைப்படி பார்ப்போம்.


பங்களாதேஷ் (கிழக்கு பாகிஸ்தான்) - 4096 கிமீ 


சீனா - 3488 கிமீ


பாகிஸ்தான் - 3310 கிமீ


நேபாளம் -  1752 கிமீ


மியான்மார்- 1643 கிமீ


பூட்டான் - 578 கிமீ


மேலேயுள்ள வரிசையில் நேபாளம்,மியான்மார்பூட்டான் என்ற மூன்று நாடுகளிலிருந்தும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இந்தியாவிற்கு இல்லைஅதற்கான பலமோ,வளமோ அந்த நாடுகளுக்கு இல்லை.


அதனால் இந்தியாவின் இராணுவ வளத்தில் பெரும்பாலானவை சீனாவுடனும் பாகிஸ்தானுடனுமான எல்லையை பிரதானப்படுத்தியே நிறுத்தப்பட்டிருக்கின்றன.


அதாவது 2 முனையை பிரதானப்படுத்தி இருக்கின்றன.


• பங்களாதேஷ் எனும் நாடு உருவாகாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?


இன்றும் இந்தியா அதனது இராணுவ வளத்தை மேற்கு பாகிஸ்தான்கிழக்கு பாகிஸ்தான் , சீனா என 3 முனைகளில் நிறுத்த வேண்டியிருந்திருக்கும்


• பங்களாதேஷை உடைத்து எடுத்ததனால் இந்தியாவிற்கு கிடைத்த போரியல் அனுகூலம் என்ன?


பாகிஸ்தான் எனும் எதிரியின் பலத்தை இரண்டாக உடைத்தாகிவிட்டது.


இன்று பங்களாதேஷுடன் பகிரப்படும் 4096 கிமீ  எல்லையை பற்றி இந்தியா அலட்டிக்கொள்ள தேவையில்லாமல் போய்விட்டது.


• இன்னும் சில உபரி தகவல்கள்


•26 மார்ச் 1971 அன்று பங்களாதேஷ் தன்னை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தியது (independence declaration)


அதை தொடர்ந்து பாகிஸ்தான் genocide  கட்டவிழ்த்து விட்டது.


ஏப்ரல் 1971 இலேயே பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும்படி இந்திரா காந்தி அன்றைய இராணுவ தளபதி மானெக்‌ஷாவிடம் கேட்டிருந்தார்.


ஆனால் இந்திய இராணுவ தளபதி இரண்டு காரணங்களை கூறி படையெடுப்பை சிறிது காலம் ஒத்திப்போடுமாறு கேட்டிருந்தார்.அந்த காரணங்கள் கீழே.


கிழக்கு பாகிஸ்தானில் பருவமழை தொடங்க இருந்தது.


• இந்திய இராணுவத்தின் armoured division  தயார்படுத்த வேண்டியிருந்தது.


மேலே உள்ள காரணங்களை தான் கூறியதாக இந்திய இராணுவ தளபதி மானெக்‌ஷாவே பின்னர் பதிவு செய்திருந்தார்


“Yet General Manekshaw himself recounted a cabinet meeting in Mrs Gandhi's office in April 1971. To forestall secession, the Pakistani government had already cracked down in what was then East Pakistan. Hundreds of thousands of refugees had crossed the border into India


Mrs Gandhi wanted the army to invade Pakistan. 


General Manekshaw resisted. 


The monsoon, he pointed out, would soon start in East Pakistan, turning rivers into oceans. 


His armoured division and two infantry divisions were deployed elsewhere. 


To shift them would need the entire railway network, so the grain harvest could not be transported and would rot, bringing famine. And of his armoured division's 189 tanks, only 11 were fit to fight.”


https://www.economist.com/obituary/2008/07/03/sam-manekshaw


(Economist -Jul 3rd 2008 edition )




• இதற்கிடையில் போர் வந்தபிறகு அமெரிக்க தரப்பிலான நாடுகள் குறுக்கே வந்தால் அவைகளை தடுத்து நிறுத்த இந்தியா சோவியத் யூனியனுடன் Indo–Soviet Treaty of Peace, Friendship and Cooperation எனும் உடன்படிக்கையை ஆகஸ்ட் 1971 இல் கைச்சாத்திட்டது.


• உத்தியோகபூர்வமான இந்திய-பாகிஸ்தான் யுத்தம் தொடங்கியது 03 டிசம்பர் 1971 இல்.


அதன்பின் நடந்த வரலாறு உங்களுக்கே தெரியும்.


ஆனால் இன்றுவரை பெரும்பாலான சாமானியர்கள் இந்தியாகிழக்கு பாகிஸ்தான் மக்களிற்காக போராடி நாட்டை உருவாக்கியதாக நம்பி கொண்டிருக்கிறார்கள்.


ஒரு இறையாண்மை அரசு இன்னொரு நிலப்பரப்பின் மக்களை காப்பாற்றுவதற்காக தனது மனிதவளத்தை,பொருளாதார வளத்தை,இராணுவ வளத்தை போரில் செலவழிக்காது.


காரணம் War is an expensive business. இதுதான் கள யதார்த்தம்.








• இது சொல்லும் பாடம் என்ன?


இறையாண்மை அரசுகளின் ஒவ்வொரு நகர்வும் ஏதோ ஒரு புவிசார் நலன்போரியல்  அனுகூலத்தை அடிப்படையாக வைத்தே இருக்கும்.


ஆனால் அந்த இலக்கை அடையசாமானிய மக்களை ஒரு புள்ளியில் குவிக்க  அது உணர்வுபூர்வமான கதையாடல்களை எப்பொழுதும் உருவாக்கும்


அந்த உணர்வுபூர்வமான கதையாடல்களையே உலக அரங்கில் தனது நகர்விற்கான காரணமாக முன்வைக்கும்.


.ஜெயகாந்த்


(முகநூல் மீள்பதிவு மார்ச் 2022)




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]