தமிழ்நாடும் சிங்கப்பூரும் திராவிட கிணற்று தவளைகளும்
உலக ஒழுங்கு,அதன் இயங்கு விதி, புவிசார் நலன், போரியல், ராஜதந்திரம் என்பவற்றில் திராவிடஅறிவுஜீவிகள், உபிகள் ஒரு கிணற்று தவளைகள் என்பதை பலமுறை சுட்டி காட்டியிருக்கின்றேன்.
சமூக ஊடகங்களில் திராவிட அறிவுஜீவிகள் அல்லது உபிகள் பொதுவாக விடுதலை புலிகளின் ஆயுதபோராட்டத்தை பற்றி எகத்தாளமாக பதிவிடுவது தெரிந்ததுதான்.
• அந்த எகத்தாளங்களில் ஒன்று ‘தமிழீழத்தை அமைக்க போராடிய இலங்கை தமிழர்களின் மொத்த சனத்தொகையே வெறும் 20 லட்ச சொச்ச மக்கள்தான்.
அது தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தின் சனத்தொகைதான். அதுபோல தமிழீழத்தின் பரப்பளவு வெறும் 20000 சொச்ச சதுர கிமீதான். அது தமிழ்நாட்டின் சில மாவட்டத்தின் அளவுதான் இருக்கும். இதற்கு ஒருஇறையாண்மை அரசு தேவையா ? இத்யாதி இத்யாதி’ என அது தொடரும்.
இந்த திராவிடத்தின் கூமுட்டைத்தனத்தை காட்டுவதற்காகவே இந்த பதிவு.
• தமிழ்நாட்டின் பரப்பளவு 130058 சதுர கி.மீ.
தமிழ்நாட்டு சனத்தொகை குறைந்தது 8 கோடி.
•இன்றைய உலக ஒழுங்கில் குறைந்தது 190 இறையாண்மையுள்ள நாடுகள் இருக்கின்றன.
• இதில் தமிழ்நாட்டை விட குறைவான பரப்பளவு கொண்ட நாடுகள் குறைந்தது 90 நாடுகளாவது இருக்கின்றன.
• அதேபோல் தமிழ்நாட்டைவிட குறைவான சனத்தொகை கொண்ட நாடுகள் குறைந்தது 160 நாடுகளாவது இருக்கின்றன.
ஆனால் இந்த குறைவான பரப்பளவைவோ, சனத்தொகையையோ கொண்ட இந்த நாடுகள் தமிழ்நாட்டை விட பல மடங்கு பலம் வாய்ந்தவை.
எப்படி?
• ஏனென்றால் இந்த சிறிய நாடுகள் எல்லாம் உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுள்ள நாடுகள். அவைகள் உலக ஒழுங்கில் உள்ள Great powers களோடு தொடர்ச்சியாக ராஜதந்திர/ புவிசார் அரசியல் விளையாட்டை விளையாடி கொண்டிருப்பவை.
• அப்போது பரப்பளவிலும்,சனத்தொகையிலும் பெரிதாக உள்ள தமிழ்நாடு?
அது முகம் இல்லாதது. தனக்கென குரல் இல்லாதது.
உலக ஒழுங்கின் ராஜதந்திர /புவிசார் அரசியல் / போரியல் விளையாட்டில் தமிழ்நாடு சேர்த்து கொள்ளப்படமாட்டாது.
தமிழ்நாடு தனது விருப்பம் என எதையாவது உலக ஒழுங்கிற்கு சொல்ல நினைத்தால் , அது அதனது முதலாளி இந்திய ஒன்றிய அரசினூடாகவே தெரிவிக்க முடியும்.
இதுதான் இறையாண்மை உள்ள நிலப்பரப்பிற்கும், இறையாண்மை அற்ற நிலப்பரப்பிற்கும் இடையிலான வித்தியாசம். இதுதான் உலக ஒழுங்கின் இயங்குவிதி.
திராவிடத்தின் பாணியிலேயே சிறு உதாரணம் ஒன்று தருகிறேன்.
• சிங்கப்பூர்
வெறும் 716 சதுர கி.மீ பரப்பளவையும் வெறும் 56 லட்சம் சனத்தொகையையும் கொண்ட சிங்கப்பூர் உலக ஒழுங்கின் பார்வையில் தமிழ்நாட்டைவிட ஆயிரம் மடங்கு முக்கியமானது.
எப்படி?
இன்று ஆசிய பிராந்தியத்தில் சீனாவை முடக்க அமெரிக்கா பிரயோகிக்கும் containment policy எனும் strategy இல் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது.
• சிங்கப்பூரின் புவிசார் நலன் நகர்வுகள்
1990 ஆம் ஆண்டு சிங்கப்பூரும் அமெரிக்காவும் 1990 Memorandum of Understanding எனும் உடன்படிக்கையை செய்துகொண்டன.இந்த உடன்படிக்கையின் ஆயுட்காலம் 15 வருடம்.
பிறகு இந்த உடன்படிக்கை 2005 இல் அடுத்த 15 ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்டது.
பிறகு மீண்டும் 2019 இல் அடுத்த 15 வருடங்களுக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்கா அதனது இராணுவ தேவைகளுக்காக சிங்கப்பூரின் விமான, கடற்படை தளங்களை பயன்படுத்தமுடியும்.
(facilitating US access to Singapore's air and naval bases, as well as providing logistic support for their transiting personnel, aircraft and vessels)
மலாக்கா நீரிணையில் (Strait of Malacca) சிங்கப்பூர் தனது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைக்கவேண்டுமானால், சீனாவை கட்டுப்படுத்தவேண்டிய தேவை அதற்கு இருக்கிறது.
அதற்கான புவிசார் நலன் சார்ந்த நகர்வுகளில் ஒன்றுதான் சிங்கப்பூரின் அமெரிக்காவுடனான பாதுகாப்புஉடன்படிக்கை.
சீனாவை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர்.
• சிங்கப்பூரின் இராணுவ வலிமை
சிங்கப்பூரின் இராணுவ வலிமை பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கமாட்டீர்கள்.
அதனால் சிங்கப்பூரின் military strategy ஐ பற்றி சிறிது விளக்குகிறேன்.
1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனி இறையாண்மையுள்ள நாடாக மாறியது.
தனி நாடாக பிரிந்தபோது சிங்கப்பூர் ஒரு வறிய நாடு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
எந்தவொரு இறையாண்மை அரசும் தனக்கென ஒரு military strategy ஐ வகுத்துகொள்ளும்.
அதுபோல சிங்கப்பூர் அரசும் தனக்கான military strategy ஐ தனிநாடாக பிரிந்தபின்பு உருவாக்கியது.
அந்த military strategy இன் பெயர் poisoned shrimp.
1. poisoned shrimp military strategy
தமிழில் எளிமையாக கூறினால் விஷத்தன்மை உடைய இறால் மீன்.
அது என்ன poisoned shrimp?
சிங்கப்பூர் தனி நாடாக பிரிந்தபோது அது பொருளாதார ரீதியில் பலவீனமான நாடு. பொருளாதாரம்பலவீனமாக இருந்தால் இராணுவரீதியில் பெரும் நிதியை ஒதுக்கமுடியாது.
அதனால் அண்டை நாடுகள் ஒருவேளை சிங்கப்பூரை ஆக்கிரமித்தால், அந்த எதிரி நாடுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் வகையில் சிங்கப்பூரின் இராணுவம் வடிவமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட தொண்டையில் சிக்கிய மீன் முள் மாதிரி.
இதை சிங்கப்பூரின் பிதாமகர் லீ குவான்யு பின்வருமாறு விளக்குகிறார்.
"In a world where the big fish eat small fish and the small fish eat shrimp, Singapore must become a poisonous shrimp. If you eat
them, you will get digestive upsets."
- LEE KUAN YEW
இந்த உலக ஒழுங்கு என்பதே நான் பல தடவை குறிப்பிட்டது போல anarchic system.
இதில் பெரிய மீன் சிறிய மீன்களை விழுங்கும். சிறிய மீன்கள் சின்ன இறால்களை விழுங்கும். ஆனால் சிங்கப்பூர் எனும் இறாலை விழுங்கிய மீன்களுக்கு வயிற்றில் போன பிறகும் தொல்லை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த poisoned shrimp military strategy.
அண்டை நாடுகளுடன் போர் என ஒன்று வந்தால் நிச்சயம் சிங்கப்பூர் எனும் இறால் முழுங்கப்படும் என்ற நிலையை உணர்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் இந்த military strategy.
“the Singaporean military's core strategy was initially referred to as a "poisoned shrimp" system of deterrence.
In essence, the strategy acknowledged that Singapore's larger neighbors could swallow it, but its armed forces would make the cost of that act painful and possibly fatal”
இந்த poisoned shrimp military strategy ஐ வடிவமைப்பதற்கு உதவிய நாடு இஸ்ரேல்.
சுற்றிவர மலேசியா,இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் இருப்பதால் இஸ்ரேலுடனான இந்த இராணுவ ஒத்துழைப்பை சிங்கப்பூர் படு இரகசியமாகவே செய்தது.
வெளிப்படையாக செய்தால் இஸ்ரேலிடம் இராணுவ உதவியை பெறுவதை காரணம் காட்டியே இந்த இஸ்லாமிய நாடுகள் சிங்கப்பூர் மீது படையெடுக்கலாம் என்பதால் இந்த இரகசியம் பேணப்பட்டது. இந்த தகவல் கூட 1998 இல் லீ குவான் யூ சொல்லித்தான் தெரியவந்தது.
இந்த poisoned shrimp காலகட்டத்தில் சிங்கப்பூர் தனது இராணுவத்தையும், அதனது வளங்களையும் அதிகரித்தது.
1967 இலிருந்து இன்றுவரை சிங்கப்பூரில் கட்டாய இராணுவ பயிற்சி (National Service (NS)) இரண்டு வருடங்கள் செய்யவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது என்பதை நீங்கள் கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
2. porcupine military strategy
1980 களில் சிங்கப்பூர் தனது poisoned shrimp military strategy இலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
அதன் பெயர் porcupine.
தமிழில் முள்ளம்பன்றி எனும் மிருகம்.
இது porcupine military strategy யானது defensive நிலையிலிருந்து சிறிது விலகி pro-active ஆகசெயற்படும் வகையிலானது.
இறாலை முழுங்கிய பிறகு வயிற்றில் தொல்லை கொடுக்கும் நிலையில் இல்லாமல் இது முள்ளம்பன்றி போல செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
அதாவது முள்ளம்பன்றியை தொட பலமான மிருகங்கள் முயன்றாலே, அது தனது உடலை சிலிர்த்து முட்களை வீசும் என்பது உங்களுக்கு தெரியும்.
அந்த முள்ளம்பன்றியின் பாதுகாப்பு முறையை ஒத்ததாக சிங்கப்பூரின் military strategy வடிவமைக்கப்பட்டது.
This doctrine was publicly supplanted in the early 1980s by a "porcupine" posture — the building up of a more sophisticated and active military defense geared toward keeping enemies from getting close to the island city-state in the first place.
In 1982, Brig. Gen. Lee Hsien Loong — Lee Kuan Yew's eldest son — declared the need to shed the poisonous shrimp image in favor of the more pro-active porcupine model.
இந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களை வாங்கி அதனது இராணுவத்தை நவீனபடுத்தி கொண்டே வந்தது.
3. dolphin military strategy
தற்போது சிங்கப்பூர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.
அதனது தற்போதைய military strategy இன் பெயர் dolphin.
ஏன் dolphin?
dolphin மீன்கள் அதி புத்திசாலித்தனமான மீன்வகைகள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
dolphin மீன்கள் சுறா (White Shark) மீன்களை விட பலம் குறைந்தது. ஆனால் dolphin மீன்கள் அதி வேகமாக செயற்படக்கூடியவை.
Dolphin மீன்கள் தங்களது agility பண்பை அனுகூலமாக வைத்துக்கொண்டு சுறா மீன்களை கூட தாக்கும்.
அந்த வகையில் தற்போதைய சிங்கப்பூரின் இராணுவம் agility உடையதாக மாற்றப்பட்டிருக்கிறது.
இன்று சிங்கப்பூரின் விமான படை air superiority ஐ நிறுவும் வகையில் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரின் விமானப்படை (Republic of Singapore Air Force -RSAF) பெரும்பாலும் அமெரிக்க F-15 களையும் F-16 களையும் கொண்டிருக்கிற பலமான விமானப்படை.
தொழில்நுட்பரீதியில் பழசாகிவரும் F-16 களுக்கு பதிலாக இன்றைய உலகின் அதி நவீன Stealth multirole combat Fighters களான F-35 களை வாங்க போகிறது.
இந்த F-35 Fighters களை வைத்திருக்கும் நாடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அதேபோல் சிங்கப்பூரின் கடற்படை (Republic of Singapore Navy - RSN) ஆசியாவின் மிகச் சிறந்த முதல் 5 கடற்படைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதனது கடற்படை பலம் பின்வருமாறு
5 Submarines (with two more on order)
6 Frigates
6 Corvettes
4 Amphibious landing ships
4 Mine warfare vessels
• மேலே கூறியதுபோல சிங்கப்பூரின் மொத்த பரப்பளவு வெறும் 716 சதுர கி.மீ் தான். தமிழ்நாட்டின் சென்னையை தவிர மீதியுள்ள எந்தவொரு மாவட்டத்தின் அளவை விடவும் பல மடங்கு சிறியதுதான்.
• அதனது சனத்தொகை வெறும் 56 லட்சம்தான்.சென்னையின் சனத்தொகையை விட குறைவு.
ஆனால் சிங்கப்பூர் உலகின் பெரும் Great powers களுடன் புவிசார் அரசியல்/போரியல் சதுரங்க ஆட்டம்ஆடிக்கொண்டிருக்கிறது.
மறுவலமாக 130058 சதுர கி.மீ. பரப்பளவையும்
8 கோடி சனத்தொகையையும் கொண்ட தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள்.
தனக்கு சேர வேண்டிய வரிப்பணத்தில் அதிக சதவீதத்தை தருமாறு பணிவுடன் இந்திய ஒன்றிய அரசிடம் கேட்கவேண்டியிருக்கிறது.
தான் விரும்பாத நீட் கல்வி திட்டத்தை மாற்றுங்கள் என கெஞ்ச வேண்டியிருக்கிறது.
இயற்கை பேரிடர் வந்தால் நிவாரண நிதியை கூட்டுங்கள் என இந்திய ஒன்றிய அரசிடம் நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது.
அகழ்வாராய்ச்சியில் பத்து அடி அதிகமாக தோண்டுவதற்கே அனுமதி வாங்க வேண்டிய நிலை.
பக்கத்து நாட்டு கடற்படை பல நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டு கொன்றபோதும் வாய்பொத்தி கடந்து போக வேண்டிய நிலை.
இன்னும் இத்யாதி,இத்யாதி.
• சிங்கப்பூரின் பொருளாதாரம்
வெறும் 56 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிங்கப்பூரின் GDP யானது 8 கோடி மக்களை கொண்டதமிழ்நாட்டின் GDP ஐ விட பெரியது அல்லது சம அளவுடையது.
அப்படியானால் சிங்கப்பூரின் Per capita income (PCI) எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை நீங்களேகணக்கிட்டு கொள்ளுங்கள்.
உலகின் பல மேற்கு ஜரோப்பிய நாடுகளை விட சிங்கப்பூரின் Per capita income அதிகம்.
• இது உணர்த்தும் பாடம் என்ன?
இறையாண்மை அரசாக மாறுவதுதான் முக்கியமே ஒழிய அதனது பரப்பளவோ, சனத்தொகையோ இங்கு பொருளற்றது.
இது தெரியாமல்தான் கிணற்று தவளை உபிகள் சல்லியடித்து கொண்டிருக்கிறார்கள்.
• ஒருவேளை இன்னும் 25 வருடங்களுக்குள் தமிழ்நாட்டின் GDP ஜப்பான்,பிரிட்டன்,பிரான்ஸ் GDP யை விடபெரியதாக மாறினால் என்ன நடக்கும்?
அப்பொழுதும் உலக ஒழுங்கின் ராஜதந்திர /புவிசார் அரசியல் / போரியல் விளையாட்டில் தமிழ்நாடு சேர்த்துகொள்ளப்பட மாட்டாது.
தமிழ்நாடு தனது விருப்பம் என எதையாவது உலக ஒழுங்கிற்கு சொல்ல நினைத்தால் , அது அதனது முதலாளி இந்திய ஒன்றிய அரசினூடாகவே தெரிவிக்க முடியும்.
இதுதான் இறையாண்மை உள்ள நிலப்பரப்பிற்கும், இறையாண்மை அற்ற நிலப்பரப்பிற்கும் இடையிலான வித்தியாசம். இதுதான் உலக ஒழுங்கின் இயங்குவிதி.
• தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதும் நீடிக்காமல் இருப்பதும் அதனது விருப்பம் சார்ந்தது.
ஆனால் உலக ஒழுங்கு, அதன் விதி, இறையாண்மை அரசு என்பவை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல், கால காலத்திற்கும் விடுதலை, குடியரசு கட்டுரைகளுக்குள் முங்கி கொண்டிருக்கும் திராவிட உபிகள் எல்லாம் உலகின் பிற பாகங்களில் தேசிய இனங்கள் இறையாண்மை அரசை அமைக்கும் போராட்டங்களை பற்றி பேசவே கூடாது.
க.ஜெயகாந்த்














Comments
Post a Comment