இலவச மருத்துவமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமிழ்நாடும்- உண்மையை மறைக்க முயலும் திராவிட அறிவுஜீவிகளின் சாமர்த்தியமான வாதங்கள் (திராவிடத்தின் பல உருட்டுகளில் இதுவும் ஒன்று பகுதி-3)

 



• பொதுவாக திராவிட அறிவுஜீவிகள் தமிழ்நாடு சுகாதார துறையில் அடைந்த முன்னேற்றத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு அடிக்கடி பேசுவதுண்டு.


அதற்கென்று சில வளர்ச்சி குறியீட்டு தரவுகளை கைவசம் வைத்திருப்பார்கள்.


Maternal Mortality Ratio (MMR), Infant Mortality Rate (IMR) என்பவை அடிக்கடி அவர்களால் உச்சரிக்கப்படுபவை.


ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சுகாதார துறையை பற்றிய முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட திராவிட அறிவுஜீவிகள் மறந்துவிடுகிறார்கள்.


அந்த முக்கியமான விடயம்தான் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் #உலக தரமான இலவச மருத்துவம்.


• உலகின் எல்லா நாடுகளின் சுகாதார துறைகளும் (Health Care) அவற்றின் உள்ளார்ந்த தன்மை,செயல்படும் விதம் என்பவற்றை கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.


அதன்படி அதன் பிரதான வகைகள் பின்வருமாறு வரும்.


1. Countries with universal government-funded health system (அரசாங்கம் தனது குடிமக்களிற்கு இலவசமாக மருத்துவம் வழங்குதல்)


இது குடிமக்களின் பொருளாதாரம்,வருமானம் போன்ற எந்த பின்புலத்தையும் ஆராயாமல், சகல குடிமகன்களுக்கும் இலவசமாக மருத்துவ வசதியை கொடுப்பதை குறிக்கிறது. 


( In this system government-funded healthcare is available to all citizens regardless of their income or employment status)


இந்த வகை சுகாதார துறையை மக்களுக்கு வழங்கும் நாடுகளில் பிரதானமானவை: 


United Kingdom,Spain,Portugal,Italy,Greece,Ireland,

Norway,Sweden,Denmark,Finland,Iceland,Australia,New Zealand,Canada .


இதே சுகாதார வகையை கொண்ட நாடுகள்தான் இந்தியாவும், இலங்கையும்.


2. Countries with universal public insurance system


3. Countries with universal public-private insurance system


4. Countries with universal private health insurance system


5. Countries with non-universal insurance system


இந்த 5வது வகையைதான் அமெரிக்கா தருகிறது.


சரி. Countries with universal government-funded health system என்பது அரசாங்கம் எந்தவித பாகுபாடுமின்றி இலவசமாக மருத்துவத்தை சகல குடிமகன்களுக்கும் தருவது என்பதாக பார்த்தோம்.


இந்த பிரிவிற்குள்தான் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வருகின்றன. 


இந்தியா,இலங்கையும் இந்த பிரிவிற்குள்தான் வருகின்றன. 


 ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் மருத்துவமும் இந்தியா,இலங்கையில் கிடைக்கும் மருத்துவமும் ஒரே மாதிரியான உள்ளார்ந்த பண்பை கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினால் ‘இல்லை’ என்பதுதான் ஒற்றை பதில்.


• நான் வாழும் பிரித்தானியாவையே உதாரணத்திற்கு எடுத்து கொள்கிறேன்.


இங்கு ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவனது முழு மருத்துவத்தையும் அரசாங்க சுகாதார துறையே கவனித்து கொள்கிறது. 


எந்த கொடிய நோயில் ஆட்பட்டாலும்,எந்த விபத்து நேர்ந்தாலும் ஒரு பைசா கூட அவன் தன் கையில் இருந்து செலவழிக்க போவதில்லை. 


அனைத்துமே இலவசம். அதுவும் உலக தரமான மருத்துவம்.


95% இற்கு மேற்பட்ட பிரித்தானிய மக்கள் அரசின் சுகாதார துறையை மட்டும்தான் அணுகுகிறார்கள்.


பிரித்தானியாவில் வாழ்பவர்களில் பெரும்பாலோனோர் தனியார்துறை மருத்துவமனைகளையே தங்கள் வாழ்நாளில் கண்டிருக்கமாட்டார்கள். அவைகள் எங்கு இருக்கின்றன என்பது கூட தெரியாது.


இனி இந்தியா.


இந்தியாவில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் மருத்துவமனைகளின் தரம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது.


According to National Family Health Survey-3, the private medical sector remains the primary source of health care for 70% of households in urban areas and 63% of households in rural areas.


நகர் புறத்தில் 70% மக்களும், கிராமங்களில் 63% மக்களும் தனியார்துறை மருத்துவமனைகளை சார்ந்தே இருப்பதாக Ministry of Health and Family Welfare Government of India  சார்பாக நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்த போக்கு அதிகரிக்கின்றது என்றும் தெரிவிக்கின்றது.


The study conducted by IMS Institute for Healthcare Informatics in 2013, across 12 states in over 14,000 households indicated a steady increase in the usage of private healthcare facilities over the last 25 years for both Out-Patient and In-Patient services, across rural and urban areas.


ஆக இந்திய மக்களில் பெரும்பாலோனோர் தனியார்துறை மருத்துவத்தை சார்ந்தே இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 


அத்துடன் தனியார்துறை மருத்துவத்தை நோக்கி செல்லும் போக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கான பிரதான காரணம் அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளின் தரம் குறைவாக இருப்பதே.


இனி அடுத்த கேள்வி எழுகிறது.


இந்த தனியார்துறை நடத்தும் மருத்துவமனைகளின் கட்டணங்கள் எவ்வளவு தூரம் சாமானிய மக்களின் இயலுமைக்கு உட்பட்டதாக இருக்கிறது?


நடுத்தர குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்கள் கொடிய நோய்களுக்கு உள்ளாகும்போது, தங்களிடம் உள்ளவற்றை விற்றோ அல்லது அடகு வைத்தோ அல்லது சேமிப்புக்களை கரைத்தோதான் தமது மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும் என்ற வகையில்தான் தனியார் மருத்துவ செலவுகள் இருக்கின்றன என்பதுதான் கள யதார்த்தம்.


World Health Organization (WHO) இன் ஆய்வறிக்கை


2000ம் ஆண்டு WHO அமைப்பானது, உலக நாடுகளின் சுகாதார துறையை ஐந்து காரணிகளை (performance indicators) அடிப்படையாக வைத்து ஒரு தரப்படுத்தலை செய்திருந்தது.


WHO's assessment system was based on five indicators: 


1. Overall level of population health; 


2. Health inequalities (or disparities) within the population; 


3. Overall level of health system responsiveness (a combination of patient satisfaction and how well the system acts); 


4. Distribution of responsiveness within the population (how well people of varying economic status find that they are served by the health system); 


5. Distribution of the health system's financial burden within the population (who pays the costs).


• Fairness Of Financial Contribution


மேலே சொன்ன ஐந்து காரணிகளில் ஒன்றுதான் Fairness of Financial Contribution.


இது ஒரு தனி மனிதன் எவ்வளவு தூரம் தனக்கான மருத்துவத்தை எந்தவித பண நெருக்கடியும் இன்றி சமாளிக்க கூடியதாக இருக்கிறான் என்பதை அளவீடு செய்கின்றது.


Fairness of financial contribution: When WHO measured the fairness of financial contribution to health systems, countries lined up differently. 


The measurement is based on the fraction of a household's capacity to spend (income minus food expenditure) that goes on health care (including tax payments, social insurance, private insurance and out of pocket payments). 


இந்த காரணி மிக முக்கியமானது.


ஏன் முக்கியமானது? 


நாட்டில் என்னதான் அதி நவீன மருத்துவமனைகளும் உலக புகழ்பெற்ற மருத்துவர்கள் இருந்தாலும் அதை ஒரு சாமானியனால் அணுகமுடியாவிடில் அதனால் ஒரு பயனும் இல்லை.


அன்றைய WHO அமைப்பின் தலைவர் 

Dr Gro Harlem Brundtland  கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.


“The poor are treated with less respect, given less choice of service providers and offered lower- quality amenities." 


"In trying to buy health from their own pockets, they pay and become poorer."


இனி தமிழ்நாடு


பல அளவுகோல்களை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டின் சுகாதார துறையை இந்தியாவுடன்  ஒப்பிடும்போது, தமிழ்நாடு மேம்பட்டே இருக்கிறது.


தமிழ்நாட்டினுடைய சுகாதார துறை உட்கட்டமைப்பு பின்வரும் அடுக்கில் இருக்கிறது.


Healthcare delivery provisions and mechanisms in the State are subdivided into three categories . 


Primary, Secondary and Tertiary health care systems.


• The Primary Healthcare System consists of Primary Health Centres (PHCs) and Health Sub-Centres (HSCs). 


• Secondary healthcare system comprises of District Head Quarters Hospitals,

Taluk Hospitals, Women and Children Hospitals, Dispensaries, Mobile Medical Units, Police Hospitals and Non-Taluk Hospitals etc.

 

• Tertiary healthcare system covers multi-specialty hospitals.


2013-14 தரவுகளின் படி பின்வரும் எண்ணிக்கையில் இருந்தன. இன்றைய நிலையில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


The network of 1751 PHCs and 8706 Health Sub-centres has been rendering universal health care

delivery to rural population on a mission mode and with a holistic approach.


There are 31 District Head Quarter Hospitals, 154 Taluk Hospitals, 76 Non-Taluk Hospitals, 19 Dispensaries, 10 Mobile Medical Units, 7 Women and Children Hospitals, 2 T.B. Hospitals, 2 T.B. Clinics, 7 Leprosy Hospitals/Centres and 47 Medical Education College Hospitals, catering to the requirements of both secondary and tertiary healthcare systems in the State. 


Totally 9184 doctors, 12,848 nurses and 6924 para medical staff are working in these institutions in 2013-14. The total bed strength in these institutions in 2013-14 was 55,084.


மேலேயுள்ள தரவுகள் அரசாங்கத்தினால் நடத்தப்படும் சுகாதார துறையின் கட்டமைப்புகள்.


மீண்டும் அதே சிக்கல்


ஆனால் இந்தியாவில் இருக்கும் அதே பொதுவான பிரச்சினை தமிழ்நாட்டிற்குள்ளும் இருக்கிறது.


அரசாங்க மருத்துவமனைகளின் தரம் குறித்து மக்களிடையே அதிருப்தி இருக்கிறது. அதனால் மக்கள்தொகையில் பெரும்பகுதி தனியார் மருத்துவதுறையை நோக்கி ஓடுகிறது.


இந்த தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் இயலுமைக்கு மீறியதாக இருக்கின்றன.


இந்த புள்ளியில்தான் மேலே சொன்ன Fairness of Financial Contribution வருகிறது.


ஒரு எதிர்பாராத பெரும் மருத்துவ செலவு வரும்போது ஒரு மனிதன் நோயோடு சேர்த்து இந்த நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ளவேண்டி வருகிறது.


மேலே தந்தவற்றை மீண்டும் சுருக்கமாக  தருகிறேன்.


•பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவும் Countries with universal government-funded health system எனும் சுகாதார அமைப்பைதான் கொண்டுள்ளன.


•ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு தனியார்துறை மருத்துவமனைகளை நோக்கி செல்ல வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை. அவர்களுக்கு அரசு நடத்தும் மருத்துவமனைகளே உலக தரம் வாய்ந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குகின்றன. 


•இந்த நாடுகளில் வாழும் எந்தவொரு குடிமகனும் மருத்துவத்திற்கென எந்த நிதியையும், சேமிப்பையும் ஒதுக்கி வைத்திருக்கவேண்டியதில்லை.


•இந்த நாடுகளில் பிறப்பு முதல் இறப்பு வரை உலக தரம் வாய்ந்த இலவச மருத்துவம் கிடைக்கின்றது.


•தமிழ்நாட்டில் பலமான சுகாதார உட்கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் அவற்றின் தரம் குறித்து மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அதனால் பெரும்பாலான மக்கள் தனியார் துறை மருத்துவமனைகளை நோக்கி செல்வது அதிகரிக்கிறது. 


•தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் நடுத்தர குடும்பங்களின் நிதி இயலுமையை மீறி இருக்கிறது.


•இந்த புள்ளியில்தான் Fairness of Financial Contribution பற்றிய கேள்வி எழுகிறது.


•உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகளையும், உலக புகழ் பெற்ற மருத்துவர்களை தமிழ்நாடு கொண்டிருந்தாலும் அவைகள் சாமானிய மக்களால் அணுகமுடியாத உயரத்தில் இருந்தால் அதன் பயன் என்ன என்பதுதான் இந்த பதிவின் மையப்புள்ளி.


• திராவிட அறிவுஜீவிகளின் சாமர்த்தியமான வாதங்கள் அல்லது உருட்டுகள்


திராவிட அறிவுஜீவிகள் சுகாதார துறையில் திராவிடம் சாதித்தவை என திரும்ப திரும்ப MMR, IMR வளர்ச்சி குறியீடுகளை காட்டி கொண்டிருப்பார்கள். அவைகள் வளர்ச்சிதான். மறுக்கவில்லை.


ஆனால் இதில் இன்னொரு பக்கம் இருக்கிறது.

இன்று அரசாங்க மருத்துவமனைகளை விட தனியார்துறை மருத்துவமனைகள் பல லட்சம் கோடி வர்த்தகத்தை தம் வசம் வைத்திருக்கின்றன.


அரசும்,தனியார் துறையும் சேர்ந்து தந்த மருத்துவத்தினாலேயே இந்த MMR, IMR வளர்ச்சி குறியீடுகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.


ஆனால் தனியார் துறை மருத்துவமனைகளில் மக்கள் பல லட்சம் கோடி பணத்தை செலவழித்துதான் இந்த MMR, IMR இல் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை  வெறுமனே இந்த வளர்ச்சி குறியீடுகளை பற்றி பேசும்போது வெளியே வருவதில்லை.


இந்த வளர்ச்சி குறியீடுகள் Fairness of Financial Contribution இல் சாமானிய மக்களிற்கு இருக்கும் பிரச்சினையை காட்டாது.


சாமானிய மனிதர்கள் உயிர் காக்கும் மருத்துவத்திற்காக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிதி நெருக்கடியை காட்ட போவதில்லை. 


வளர்ச்சி குறியீடுகளின் முன்னேற்றத்தில் தனியார் துறை மருத்துமனைகள் பெரும் பங்கு வகிப்பதையும், அதற்கான பெரும் விலையை சாமானிய மக்கள் கொடுப்பதையும் சாமர்த்தியமாக இந்த திராவிட அறிவுஜீவிகள் மறைத்து விடுகிறார்கள்.


"In trying to buy health from their own pockets, they pay and become poorer" என்ற ஒரு பக்கம் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டு விடுகிறது.


உங்களுக்கு வேண்டுமானால் இன்னும் ஒரு தரவு தருகிறேன்.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 4 மருத்துவர்கள் இருக்கிறார்கள் (The density of doctors per 1,000 people in Tamil Nadu is as high as 4, almost at the same level as countries like Norway and Sweden).


பிரிட்டனில் 2.8 மருத்துவர்கள்தான் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கு இருக்கிறார்கள்.


ஆக தமிழ்நாடு பிரிட்டனை விட அதிக மருத்துவர்களை கொண்டிருந்த போதும் (Doctors Per Capita), அது Fairness of Financial Contribution இல் சாதகமான நிலையை சாமானிய மக்களுக்கு ஏற்படுத்தவில்லை.


எது தீர்வு?


உலக தரமான இலவச மருத்துவம் என்பதே நிரந்தர தீர்வு. 


அதாவது அரசினால் #உலக தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாக வழங்கப்படவேண்டும்.


அது பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரு பைசா கூட செலவில்லாமல் ஒருவனுக்கு கிடைக்கவேண்டும்.


க.ஜெயகாந்த்




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]