போர் களத்தில் பல சாதனைகளை செய்த விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர் பிரிகேடியர் தீபன்

 போர் களத்தில் பல சாதனைகளை செய்த விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர் பிரிகேடியர் தீபன்.

அதில் மிக முக்கியமானதாக நான் கருதுவதுபல ஆண்டுகளாக யாழ் குடாநாட்டில் இருந்த படைகளைகிளாலி-நாகர்கோவில்-முகமாலை முனைகளில் தடுத்தி நிறுத்தி வைத்திருந்ததைதான்.


இதன் பின்னே இருக்கும் தரவுகளை உங்களுக்கு தருகிறேன்.அதிலேயே நீங்கள் இது எத்தகைய போரியல் சாதனை என்பதை புரிந்து கொள்ளலாம்.





இதன் வரலாற்று பின்னணி


1999-2000 காலப்பகுதியில் யாழ்குடா நாட்டில்இலங்கை இராணுவத்தின் மூன்று டிவிசன்கள் (Division) நிலை கொண்டிருந்தன.ஒரு டிவிசன் என்பது 10000-15000 படையினரை கொண்டது.


ஆனையிறவு மற்றும் அதனை சுற்றியிருந்த பெருந்தளங்கள் 54ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்நதன


தாளையடி பெருந்தளம் அதனை சுற்றியிருந்தவை 53ம் டிவிசனின் கைவசம் இருந்தது


வலிகாமம் பகுதிகள் 52ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்தது


பல்வேறு தகவல்களின் அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அன்று குறைந்தது 40000 படையினர் இருந்தனர் என்று தெரியவருகிறது.


அதேநேரம் கிளாலி-நாகர்கோவில்-முகமாலை முனைகளில் இருந்த விடுதலை புலிகளின் படையணி சுமார் 2000 போராளிகள்தான்.


தளபதி தீபன் போரியல்ரீதியில் மிக நுட்பமான முறையில் தமது முன்னரங்கு  பாதுகாப்பு அடுக்குகளை(Forward Defense Line) அமைத்திருந்தார்


• இலங்கை இராணுவம் கைப்பற்ற எடுத்த முயற்சிகள்


2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய பின்,இந்தகிளாலி-நாகர்கோவில்-முகமாலை எனும் நீண்ட முன்னரங்கு பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டது.


அன்றிலிருந்து 2009 ஜனவரி மாதம் வரை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இந்த பகுதிகள் இருந்தன


இலங்கை இராணுவம் பூநகரியையும்,பரந்தனையும்  கைப்பற்றிய பிறகுபுவியியல் ரீதியில் இவைகளை தக்கவைப்பது கடினம் என்பதால் தளபதி தீபனின் படையணிகளை தலைவர் பிரபாகரன் பின்வாங்குமாறு பணித்தார்.


ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் கிளாலி-நாகர்கோவில்-முகமாலை நீண்ட முன்னரங்கு பாதுகாப்பு அடுக்குகளை கைப்பற்ற இலங்கை இராணுவம் பல தடவைகள் முயற்சி செய்திருந்தது.


இந்த பகுதிகளை கைப்பற்றுவதற்காகவே இலங்கை இராணுவம் பல சமர்களை நடத்தியிருந்ததுஆனால் இலங்கை இராணுவத்தின் சகல முயற்சிகளுமே தோல்வியிலேயே முடிந்தன.


அவற்றில் மிக முக்கியமானவை சில.


First battle


2001 ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவத்தினால் நடத்தப்பட்ட தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைஇதைபுலிகள் எவ்வாறு தமது முறியடிப்பு சமர் மூலம் தடுத்து நிறுத்தி இராணுவ சமநிலையை அடைந்தார்கள் என்பதைமுன்பு விரிவாக பதிவு செய்திருக்கிறேன்.


அத்துடன் இந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரை  முன்னின்று நடத்திய தளபதி தீபன் இதை பற்றி விவரித்து எழுதிய பகுதியையும் படங்களாக இணைத்திருக்கிறேன்.








Second battle

2006 ஆம் ஆண்டு 55ம் டிவிசன் பெரும் முன்னேற்பாடுகளுடன் மீண்டும் கைப்பற்ற முனைந்தது.


சில மணித்தியாலங்களிலேயே 55 வது டிவிசனின் சிறப்பு படையணியினர் (Elite Commandos) 250-300 பேர்கொல்லப்பட்டனர்சுமார் 800 பேர் காயமடைந்து அப்புறப்படுத்தப்பட்டனர்இதுவும் தோல்வியில் முடிந்தது.


Third battle

இது 2007 இல் நடந்தது.தோல்வியில் முடிந்தது.


Fourth battle

இது 2008 ஏப்ரல் மாதத்தில்பல மாத தயார்படுத்தலுக்கு பிறகு இலங்கை இராணுவத்தால் பெரும் இராணுவநடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது.


Both the SLA’s 53rd and 55th divisions have been preparing for the last few months for a land and amphibian assault on the LTTE-controlled territory. and some of them are night time operations. 


In fact, they felt well prepared and well equipped with the newly formed Mechanized Infantry Division to capture both Elephant Pass and Poonagari.


This battle, unlike the other battles, was started by a well prepared, well tested and well equipped elite commando unit (the air mobile brigade) of the whole SLA. 


The brigade was considered the best of the best in the SLA.


With over ten hours of intense fight, over 200 youths (nearly 175 of the SLA and 25 of the LTTE) made the supreme sacrifice in the land called Muhamalai.


53ம், 55ம் டிவிசன் படையணிகள் தமது சிறப்பு படையணியையும், Mechanized Infantry Division கொண்டு இந்த பெரும் இராணுவ முன்னைடுப்பை நடத்தின.


பல மணித்தியால சமரிற்கு பின்னர் சுமார் 200 படையினரின் இழப்புகளோடு இலங்கை இராணுவம்பின்வாங்கியது.


தளபதி தீபன் அவர்களின் போரியல் சாதனைகளின் மிக முக்கியமான பகுதியை மிக சுருக்கமாக தந்திருக்கிறேன்.


4/4/2009 அன்று ஆனந்தபுரத்தில் தளபதி தீபன் வீர காவியமானதை முன்னிட்டு எழுதப்பட்ட மிக சுருக்கமானபதிவு.


.ஜெயகாந்த்


(மீள்பதிவு 2020)


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]