தலிபானும், தமிழ்நாட்டின் திராவிட உடன்பிறப்பு இஸ்லாமியர்களின் double standard உம்
இரு வாரங்களுக்கு முன்பு தலிபான் ஆப்கானிஸ்தானை அதனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபோது, தமிழ்நாட்டின் சமூக ஊடகங்கள் முழுவதிலும் பரவலான இஸ்லாமிய மக்கள் தலிபானை விடுதலை போராட்ட வீரர்களாக விவரித்து வாழ்த்தி இருந்ததை காணமுடிந்தது.
இதே சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகளை பற்றி எந்த பதிவுகள் வந்தாலும், மறக்காமல் பின்னூட்டத்தில்‘காத்தான்குடி படுகொலையை’ குறிப்பிட்டு புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவது பெரும்பாலான தமிழ்நாட்டு திராவிட உடன்பிறப்பு இஸ்லாமியர்களின் வழக்கம்.
இது திராவிட உடன்பிறப்பு இஸ்லாமியர்கள் மட்டும்தானா அல்லது பொதுவாகவே தமிழ்நாட்டின் இஸ்லாமியர்களா என்பதை அறுதியிட்டு கூறமுடியவில்லை.
இந்த திராவிட உடன்பிறப்பு இஸ்லாமியர்களின் double standard இற்கான சமீபத்திய உதாரணம்தான் தலிபான் மீதான ஆதரவு.
ஒரு ஒப்பீட்டை சுருக்கமாக தருகிறேன்.
மூன்று விடயங்களை எடுத்து கொள்கிறேன்.
- பொது மக்கள் மீதான படுகொலை
- தற்கொலை குண்டுத்தாக்குதல்
- போதை பொருள் வர்த்தகம்
இந்த மூன்று விடயங்களிலும் விடுதலைப்புலிகளும்,தலிபானும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை பார்ப்போம்.
ஆனால் எப்படி திராவிட உபி இஸ்லாமியர்களின் கண்களுக்கு விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாகவும், தலிபான்மட்டும் விடுதலை போராளிகளாகவும் காட்சியளிக்கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
- பொது மக்கள் மீதான படுகொலை
- விடுதலைப்புலிகளின் 33 வருட ஆயுத போராட்டத்தில், கிழக்கில் வாழும் முஸ்லீம் மக்கள் மீது இரண்டு படுகொலைகள் இடம்பெற்றது.
அவை காத்தான்குடி படுகொலை,ஏறாவூர் படுகொலை.
இரண்டு படுகொலைகளும் ஆகஸ்ட் 1990 இல் நடந்தன. இரண்டு படுகொலை நிகழ்வுகளிலும் தலா குறைந்தது நூறு பேராவது கொல்லப்பட்டார்கள்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றியதும் நடந்தது. இது ஒக்டோபர் 1990 இல்நடந்தது.
இந்த ‘கறுப்பான துயரமான பக்கங்களை’ சுற்றி நடந்த வரலாற்று நிகழ்வுகளை தனியாக எழுதுகிறேன்.
ஏனெனில் 1988 லேயே, கிழக்கு மாகாணத்தில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தை முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் விடுதலை புலிகள் செய்திருந்தார்கள்.
அதன்பின்பு ஈழப்போர் இரண்டில் (1990-1994) கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களில் கணிசமானோர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து கிழக்கு மாகாண தமிழ்மக்கள் மீது நடத்திய படுகொலைகள்,பாலியல் வல்லுறவுகள் என பல மோசமான பக்கங்கள் இதை சுற்றி இருக்கின்றன.
• அத்துடன் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் மீது புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என கூறப்படுபவை, உண்மையில் புலிகளால் மட்டுமே நடத்தப்பட்டது என்பது கேள்விக்குரியது.
இரண்டாம் ஈழப்போர் (1990-1994) தொடங்கிய போதே இலங்கை அரசு , கிழக்கில் வாழ்ந்த தமிழ்மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான பிளவை கூர்மைப்படுத்துவதை அதனது பிரதான போரியல் யுக்தியாகபாவிக்க தொடங்கியது. இந்த பிளவை உருவாக்குதல் முதலாம் ஈழப்போரிலும் இருந்தது. ஆனால் கூர்மையடைந்தது இரண்டாம் ஈழப்போரிலேயே.
• கிழக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களின் ஊர்களையும் முஸ்லிம் மக்களின் ஊர்களையும் கொண்ட பகுதி. இலங்கை அரசின் பிரித்தாளும் யுக்தி( divide and rule) என்பது போரியல் ரீதியிலும், தமிழீழம் என்றகருத்தியலை இடியாப்ப சிக்கலாக மாற்றுவதற்கும் பெருமளவு உதவகூடியது.
• அதன்படி இலங்கை இராணுவம் முஸ்லீம் மக்களை கொண்ட ஊர்காவல் படை எனும் ஆயுதபடையை உருவாக்கி , தமிழ் மக்கள் மீதான படுகொலையை தொடுத்தது.
• தராகி சிவராம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்ட சம்பவத்தை இங்கு உதாரணமாக காட்டவிரும்புகிறேன்.
“ The Tamils were made to believe that the most feared military officer in the east at the time, held responsible for many gory massacres of civilians, was a Muslim named Captain Munaz. The army was never known to have operated with nom de guerre like the militants. Hence the people of Batticaloa assumed that Munaz was Muslim.
It transpired the man was a Sinhalese named Richard Dias when in 1993 Justice Souza investigated the massacre of refugees in the eastern university in September 1990.”
அந்த சம்பவத்தின் உள்ளடக்கம் இதுதான்.
அன்றைய காலங்களில் ‘கேப்டன் முனாஸ்’ எனும் முஸ்லீம் இராணுவ அதிகாரியின் பெயரை கேட்டால் கிழக்குவாழ் தமிழ் மக்கள் குலை நடுங்கியிருக்கிறார்கள். ஏனெனில் அவரின் தலைமையில் பல படுகொலைகள் கிழக்கில் இடம்பெற்றிருந்தன.பின்னாளில்தான் தெரிந்தது அவர் Richard Dias எனும் சிங்களவர் என்பது.
இரு இனங்களுக்கு இடையிலான பகைமையை கூர்தீட்ட இலங்கை அரசு செய்த மேற்படி உதாரணம் ஒரு போரில் எத்தகைய பக்கங்கள் உண்டு என்பதை உங்களுக்கு தெளிவாக காட்டும்.அத்தோடு இது ஒரு உதாரணம் மட்டுமே. இவை போல இன்னும் பல வரலாற்று சம்பவங்கள் உண்டு.
இன்னொரு வரலாற்று சம்பவத்தை தருகிறேன்.
18/09/2006 ம் திகதி, கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பகுதியில் 10 முஸ்லீம் மக்கள் படுமோசமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருந்தார்கள்.
உடனே வழமை போல இலங்கை அரசு இந்த படுகொலையை நடத்தியவர்கள் விடுதலை புலிகள்தான் என குற்றம் சுமத்தியது.
ஆனால் இந்த கொலையை நடத்தியது இலங்கையின் இராணுவமே என முஸ்லீம் மக்களே குற்றம் சாட்டியிருந்தார்கள்.
M.S. Mohideen, one of 2,000 people gathered near the Jumma mosque, where the bodies were being kept before burial, told Reuters: “Special Task Force troops killed these people. We don’t blame anyone else. The LTTE can’t come into this area. It is completely controlled by the STF. Without the STF’s knowledge, no one can come into this area.
இதற்கான சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என முஸ்லீம் மக்கள் போராட்டம் நடத்தியிருந்தார்கள்.
There has been a general shutdown of shops and businesses in the area since Monday. Protesters are demanding the removal of the nearby police camp at Sasthiriveli or the transfer of the commando unit, as well as a full investigation of the crime. The Sasthiriveli camp is just 350 metres from where the bodies were found.
இது தொடர்பாக அன்றைய தினத்தில் ஊடகங்களில் வந்த செய்திகளை கீழே இணைப்பாக தந்திருக்கிறேன்.
• Muslims protest against police massacre in eastern Sri Lanka
• The funerals of 11 murdered Muslims have taken place in eastern Sri Lanka.
ஆக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை எல்லாம் புலிகள்தான் செய்தார்கள் என்று மொட்டையாக அணுகமுடியாது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கும் முஸ்லீம் மக்களிற்கும் இடையே பகைமை உணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக ஆயுதப்போராட்டத்தை பலவீனமாக்க இலங்கை இராணுவம் எத்தகைய நகர்வுகளை செய்திருக்கிறது என்பதை மேற்கண்ட இரு வரலாற்று சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றன.
அதனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையெல்லாம் இந்த சந்தேகத்தினூடாகவே அணுகவேண்டும்.
• இனி தலிபான் நிகழ்த்திய படுகொலைகள்.
ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் Hazaras இன மக்கள் 9%.
இவர்கள் இஸ்லாமின் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி Hazaragi ( Persian dialect).
They are thought to be descendants of the Mongol warlord Ghengis Khan, whose conquering army swept through the country in the 13th century, and speak Hazaragi, a Farsi dialect.
Hazaras இன மக்கள் மீதான Genocide என்பது 19ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது.
அன்றைய ஆப்கானிஸ்தானின் மன்னர் Abdur Rahman Khan இனால் இந்த Genocide நிகழ்த்தப்பட்டது. இந்தநிகழ்வு 1888–1893 Uprisings of Hazaras என்று அழைக்கப்படுகிறது. இதில் கொல்லப்பட்ட Hazaras இனமக்கள் குறைந்தது ஐந்து லட்சம்.
அதன் தொடர்ச்சி இன்று வரை நடந்து வருகிறது.
தலிபான் 2002 இற்கு முன்னர் ஆப்கானிஸ்தானை ஆண்டபோது, அவர்கள் Hazaras இன மக்கள் மீது நடத்திய படுகொலைகளில் மிக முக்கியமானது Mazar-i-Sharif படுகொலை (THE MASSACRE IN MAZAR-I SHARIF).
Mazar-i-Sharif நகரை தலிபான் கைப்பற்றிய பின்பு இந்த படுகொலை நடந்தது. நடைபெற்ற காலம் ஆகஸ்ட்1998.
இந்த படுகொலையில் குறைந்தது 2000 பேராவது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 20 வருட காலமாக தலிபான்-அமெரிக்க போரிலும், தலிபான் தொடர்ச்சியாக Hazaras இன மக்கள் மீது பல படுகொலை தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
- தற்கொலை குண்டுத்தாக்குதல்
இணையத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலின் தொகுப்பை தேடிப்பார்த்தால், Chicago Project on Security and Terrorism (CPOST) எனும் அமைப்பு
1982-2015 காலப்பகுதியில் உலகில் நடந்த அனைத்து தற்கொலை குண்டு தாக்குதல்களையும் Database ஆக தொகுத்து வைத்திருப்பதாக காட்டுகிறது.
அதில் இந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலை குண்டுதாக்குதலின் எண்ணிக்கை 82 என காட்டுகிறது.
ஆனால் உண்மையில் விடுதலை புலிகள் இயக்கத்தில் மாவீரர்களான கரும்புலிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
2008 ஆம் ஆண்டு புலிகளின் மாவீரர் தின தகவலின் படி, விடுதலை புலிகளின் 33 வருட ஆயுத போராட்டத்தில் 113 தரை கரும்புலிகளும், 259 கடற் கரும்புலிகளும் மாவீரர்களாகி இருக்கின்றனர்.
ஆக CPOST இன் Database என்பது, பொது மக்களும் பலியாகி இருக்கும் தற்கொலை குண்டு தாக்குதல்களையே தொகுத்திருக்கிறார்கள் என்று கணிக்கிறேன். விடுதலை புலிகள் தமது சமர்களில் பயன்படுத்திய கரும்புலிகளை அது உள்ளடக்கவில்லை.
அந்த வகையில் பொது மக்களும் பலியான விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல் எண்ணிக்கை 82.
விடுதலைப்புலிகளின் இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் பலியான பொதுமக்களை, வல்லாதிக்க நாடுகளின் சொல்லாடலில் குறிப்பிட்டால் அது ‘Collateral Damage’ என்றே குறிப்பிடமுடியும்.
Collateral damage is any death, injury, or other damage inflicted that is an unintended result of military operations.
காரணம் பொதுமக்களை குறிவைத்து விடுதலை புலிகள் இதுவரை எந்தவொரு தற்கொலை குண்டு தாக்குதல்களையும் நடத்தியதில்லை.
இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், கரும்புலி தற்கொலை குண்டுத்தாக்குதல் அதிஉச்ச அரசியல்,இராணுவ இலக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
ஆனால் CPOST இன் இதே காலப்பகுதியில் தலிபான் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலின் எண்ணிக்கை 665 என காட்டுகின்றது.
2015 இலிருந்து இன்றுவரை நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதுகவனிக்கத்தக்கது.
இந்த தாக்குதலில் குறிப்பிடத்தக்க சதவீதமான தாக்குதல்கள் பொதுமக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டிருக்கின்றன.
ஆக விடுதலை புலிகளின் எந்தவொரு கரும்புலி தற்கொலை குண்டுத்தாக்குதலும் பொதுமக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டதில்லை. ஆனால் தலிபான் தமது தற்கொலை குண்டுத்தாக்குதல்களை பொதுமக்களை இலக்காக வைத்தும் நடத்தியிருக்கிறார்கள்.
- போதை பொருள் வர்த்தகம்
போதை பொருள்களை கடத்துவதற்கு தமது ஆயுத கப்பல்களை உபயோகிக்க விடுதலை புலிகள் அனுமதித்தனர் (drug couriers) என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா முன்னொரு முறை விடுதலைப்புலிகள் மீதுவைத்திருந்தது.
இனி தலிபானுக்கும் போதை பொருளுக்கும் இடையேயான உறவை பார்ப்போம்.
Opium உற்பத்தியில் 80% ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தியாகிறது.
United Nations Office on Drugs and Crime (UNODC) ஆய்வு அறிக்கை அதைத்தான் சொல்கிறது. இதற்கான புள்ளிவிபர படம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்கள் தலிபானின் முந்தைய ஆட்சி காலத்தையும் உள்ளடக்கியிருக்கின்றன.
அதேநேரம் 2001 இல் Opium உற்பத்தியை தலிபான் தடை செய்ததாக புள்ளிவிபரம் காட்டுகிறது. பிறகு இந்த 20 வருட போரில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் மீண்டும் Opium உற்பத்தி நடப்பதை தரவுகள்உறுதிசெய்கின்றன.
இன்றும் இந்த Opium மூலம் கிடைக்கும் வருவாய் தலிபானின் ஆண்டு வருமானத்தில் முக்கிய பங்கைவகிக்கின்றது.
நான் ஒரு ஆயுத போராட்டத்தை சில காரணிகளை வைத்து தட்டையாக அணுகுபவனல்ல. அதற்கு என்றே பிரத்தியேகமான சிக்கலான பக்கங்கள் உண்டு என்பதை அறிவேன்.
ஆனால் தட்டையாக அணுகும் வேலையை ‘வேண்டுமென்றே’ திராவிட உடன்பிறப்பு இஸ்லாமியர்கள் செய்தார்கள்.
திராவிட உடன்பிறப்பு இஸ்லாமியர்கள் எதையெல்லாம் ‘காரணமாக காட்டி’ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என கூறினார்களோ, அதே ‘காரணங்களில்’ தலிபான் பல மடங்கு மோசமாக செயற்பட்டிருக்கிறது.
பிறகு எப்படி விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாகவும் தலிபான் விடுதலை போராளிகளாகவும் தமிழ்நாட்டின்திராவிட உடன்பிறப்பு இஸ்லாமியர்களுக்கு காட்சியளிக்கிறார்கள் என்பதை தயவுசெய்து விளக்கவேண்டும்.
க.ஜெயகாந்த்
(இந்த கட்டுரை 2021 ஆகஸ்ட் காலப்பகுதியில் முகநூலில் பதிவேற்றப்பட்ட கட்டுரை)












Comments
Post a Comment