பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 1)
இந்தியா என்பது ஒற்றை நாடாக வரலாற்றுரீதியாகவே இருந்ததா என்ற வாத பிரதிவாதங்கள் இன்றுவரையில் ஒரு ஓரமாக இருந்துவருகிறது.
இந்த கேள்வியை துல்லியமாக பின்வருமாறு கேட்பது பொருத்தமாயிருக்கும்.
‘இன்று இந்தியா ‘ என கூறப்படும் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் , ‘இந்த நிலப்பரப்பில் உள்ள சகலரும் ஏதோ ஒன்றின் மூலமாக உணர்வுபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளோம்’ என்ற உணர்வை சுதந்திரத்திற்கு முன்னர் கொண்டிருந்தார்களா? என்பதே அந்த கேள்வி.
ஆய்வாளர்கள் சிலர் பண்பாடு , வாழ்வியல் கோட்பாடு , ஆன்மீக கோட்பாடு என வெவ்வேறு தளங்களினுடாக அணுகி ‘இணைக்கப்பட்டு இருந்தது‘ , ‘ நாமெல்லாம் ஒன்று என்ற உணர்வை கொண்டிருந்தார்கள்’ என்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால் ‘இந்தியா ஏதோ ஒன்றினால் இணைக்கப்பட்டும் இருந்ததில்லை.அந்த உணர்வையும் கொண்டிருந்ததில்லை. பிரிட்டிஷாரால் வெட்டி, தைத்து உருவாக்கப்பட்ட நாடு ‘ என்பதே உண்மை.
இந்த உண்மையை நிரூபிக்க பெரிய மெனக்கெடல் கூட தேவையில்லை. அதனது போரியல் பண்புகளே காட்டி கொடுத்துவிடுகின்றன.
போரியல் தளத்தினூடாக அணுக முயன்றதன் நோக்கத்தையும் சொல்லிவிடுகிறேன்.
ஒரு நாடு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி அதனை எதிர்கொள்ளும்போது போரியல்ரீதியான பண்புகளை வெளிப்படுத்தும்.
அந்த பண்புகளை போரியல் பார்வையில் அலசினால் பல உள்ளார்ந்த உண்மைகள் வெளிப்படும். அந்த உள்ளார்ந்த உண்மைகளை வெளிகொண்டு வரவே போரியல் தளத்தின் ஊடான இந்த அணுகுமுறை.
இதை நிருபிப்பதற்கு எடுத்துகொண்ட அந்த காலப்பகுதி, பிரிட்டிஷார் இந்தியாவை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த காலகட்டமாகும்.
நான் நிறுவ முனைந்ததை எளிதாக நீங்கள் புரிந்துகொள்ள ,ஒப்பீட்டு தேவைக்காக இன்னொரு நாட்டின் வரலாற்றையும் இதில் இணைத்திருக்கிறேன். அந்த நாடுதான், அன்று புது நாடாக உருவாக போராடி கொண்டிருந்த அமெரிக்கா.
பிரிட்டிஷாரோடு அமெரிக்கா சுதந்திரத்திற்கு போராடிய காலகட்டமும், அதே பிரிட்டிஷார் இந்தியாவை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்த காலகட்டமும் ஒன்றே. இரு நாடுகளின் இந்த காலகட்டம்தான் இந்த சிறிய ஆய்வுக்கு எடுத்துகொண்ட காலகட்டமாகும்.
போரியல்ரீதியாக ஆராய்வதற்கு , பிரிட்டிஷாரோடு போராடிய காலகட்டத்தில் இருந்த அமெரிக்கா , இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் தரவுகளை , புள்ளிவிபரங்களை அடிப்படையாக எடுத்திருக்கிறேன்.
நூற்றாண்டு வரலாற்று தகவல்களை சுருக்கி சிறு பதிவாக தருவது மிக கடினமானது. என்னால் இயன்றளவு சுருக்கி தந்திருக்கிறேன்.
அமெரிக்கா
• முதலாவது அமெரிக்காவின் சுதந்திர காலகட்ட தரவுகளை வைத்து சிறு ஆய்வு.
அமெரிக்காவின் சுதந்திர போராட்டம் American Revolutionary War என அழைக்கப்படுகிறது. இந்த போர் நடந்த காலகட்டம் 1775-1783.
• அமெரிக்காவின் சுதந்திர போரில் சம்பந்தப்பட்டவர்கள்
இது Great Britain இற்கும் அதுவே வடஅமெரிக்க கண்டத்தில் உருவாக்கிய 13 காலனி பகுதிகளுக்கும் ( thirteen colonies) இடையே நடந்த போர். இந்த காலனியில் இருந்தவர்களும் பிரிட்டிஷாரால் குடியேற்றப்பட்ட பிரிட்டிஷ் பிரஜைகளே.
• சுதந்திர போரிற்கு முன்பான நிலவரம்
வட அமெரிக்க கண்டத்தை தங்களின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்காக French empire இற்கும் British empire இற்கும் இடையில் நடந்த போர்தான் French and Indian war (1754-1763) .
இதனது தொடர்ச்சியாக உலகின் மற்றைய கண்டங்களிலும் French allies இற்கும் British allies இற்கும் Seven Years War ( 1756-1763) நடந்தது.
போரின் முடிவில் British allies வெற்றி பெற்றது. அதன்பின் Treaty of Paris (1763) என்ற உடன்படிக்கையினூடாக அமெரிக்க கண்டத்தில் இருந்த French colonies கள் British empire இற்கு கைமாறியது. அப்படி கிடைத்த காலனிகளில் ஒன்றுதான் இன்றைய Canada வும்.
இந்த போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளை சமாளிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய வரிகளை அதனது 13 காலனிகளுக்கும் விதித்தது.
The Sugar Act (1764), the Stamp Act (1765), and the Townshend Acts (1767) were merely some of the unpopular pieces of legislation placed upon the American colonies for the purpose of raising funds to pay the French and Indian War debt.
இதற்கு 13 காலனிகளில் இருந்த மக்களும் ‘பிரிட்டிஷ் அரசாங்கம் அதனது பாராளுமன்றத்தினூடாக தங்களது காலனிகளுக்கான சட்டங்களை மட்டுமே உருவாக்கமுடியும். ஆனால் தங்களுக்கான பிரதிநிதிகள் இல்லாத பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் காலனி தொடர்பான புதிய வரிகளை விதிக்க முடியாது’ என வாதிட்டனர்.
The Americans maintained that Parliament could make laws, but insisted only their elected representatives could tax them. The English felt that Parliament had supreme authority over the colonies.
இத்தகைய நிகழ்வுகள் , 13 காலனிகளில் இருந்த பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் ‘தங்களுக்கென்று தனி நாட்டை உருவாக்குவதே தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை உருவாக்கும்’ என்ற முடிவுக்கு சிறிது சிறிதாக தள்ளியது . அவ்வாறு தொடங்கியதுதான் American Revolutionary War.
• இனி இந்த இரு தரப்பினர் சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்கள்.
• முதலில் இரு தரப்பினரதும் மக்கள் தொகை.
18 ஆம் நூற்றாண்டில் அன்றைய Great Britain இனுடைய சனத்தொகை 80 லட்சம் .
13 காலனிகளிலும் இருந்த மக்கள் தொகையினர் கிட்டத்தட்ட 25 லட்சம்.
1775 இல் புரட்சியாளர்கள் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை அறிவித்த போது சகலருமே அந்த சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை.
• அதில் இருந்த மூன்று தரப்புகள்
வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்புபடி 13 காலனிகளிலும் இருந்த மொத்த மக்கள் தொகையில் 15-20 % மக்கள் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழேயே வாழ்வதற்கு விரும்பினார்கள்.
இவர்கள் Loyalist, Tories, Royalist என பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். நான் பதிவின் வசதிக்கு loyalist என்று அழைக்கிறேன். ஆக கிட்டத்தட்ட 500000 லட்சம் மக்கள் British empire இற்கு ஆதரவாக இருந்தார்கள்.
35-40% மக்கள் அமெரிக்க சுதந்திரம் , British empire என இரு பக்கத்திலும் சேராமல் நடுநிலையாக இருந்தார்கள்.
மீதியாக இருந்த 40-45% மக்கள் மட்டுமே ‘அமெரிக்கா என்ற சுதந்திர நாட்டை நிறுவுவது’ என்பதை ஆதரித்தவர்கள்.
இவர்கள் Patriots , Revolutionaries, Continentals, Rebels என பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். ‘Patriots’ என்பது பெரும்பாலோனாரால் அழைக்கப்பட்ட பெயர்.
The patriots received active support from perhaps 40 to 45 percent of the white populace, and at most no more than a bare majority.
ஆக வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பின் படி 13 காலனிகளிலும் இருந்த மக்களில் 40-45% மக்களே அமெரிக்க சுதந்திரத்தை ஆதரித்தவர்கள்.
• இனி இருதரப்பிலும் இருந்த இராணுவங்களின் எண்ணிக்கை.
போர் நடந்த காலங்களில் சராசரி அமெரிக்க இராணுவத்தின் ( continental army ) எண்ணிக்கை சுமார் 48000 மட்டுமே.
never more than 48,000 at any one time, and never more than 13,000 at any one place.
சராசரி British army இன் எண்ணிக்கை 22000.
அத்துடன் அவர்களுக்கு ஆதரவான loyalist படைகளின் எண்ணிக்கை சுமார் 25000. அத்துடன் ஜெர்மானிய படையினரின் எண்ணிக்கை சுமார் 30000 .
At its peak, the British Army had upwards of 22,000 men at its disposal in North America to combat the rebellion. An additional 25,000 Loyalists, faithful to Great Britain, participated in the conflict as well.
Nearly 30,000 German auxiliaries, or Hessians, were hired out by German princes and served alongside the British for the duration of the war)
• போர் களத்தில் நடந்தவை
போரின் களநிலவரம் patriots இற்கு சாதகமாக மாறியபிறகு ( குறிப்பாக battle of Saratoga) , 1978 இல் France அமெரிக்காவை சுதந்திர நாடாக ஏற்றுகொள்வதாக அறிவித்தது.
பின்னர் Franco - American treaty என்ற உடன்படிக்கையை செய்துகொண்டு போரில் அமெரிக்காவிற்கு ஆதரவாக ‘வெளிப்படையாக’ குதித்தது. பின்னர் Spanish empire உம் அமெரிக்காவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கியது.
• France இன் இந்த காய்நகர்த்தலுக்கான காரணம்
Seven Years War இல் அதனது அமெரிக்க காலனிகளை இழந்ததற்கான பழிவாங்கலாகவும், ஐரோப்பாவில் British Empire யினை பலவீனபடுத்தவும். இதே பலவீனபடுத்தலை காரணமாக கொண்டே Spanish empire உம் போரில் இறங்கியது.
France also dispatched a substantial force to North America beginning in 1779, with more than 12,000 soldiers and a substantial fleet joining the Colonial Americans by wars end.
• போரில் British empire தோற்றதற்கான காரணங்களை பின்வருமாறு சுருக்கலாம்.
1. போரின் வெற்றியை தீர்மானிக்கும் அடிப்படை காரணிகளில் ஒன்று படைகளின் எண்ணிக்கை ( number of troops).
Continental army இற்கு சமமான எண்ணிக்கையை கொண்டிருந்த போதிலும் , outnumber செய்யக்கூடிய எண்ணிக்கையை British empire யினால் அடையமுடியவில்லை.
அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு Great Britain னிலும் படைகளை திரட்ட முடியவில்லை. அதே போல் loyalist ஆக சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் போதியதாக இல்லை.
2. Logistics நெருக்கடி
அட்லாண்டிக் சமுத்திரத்தில் 3000 மைல்களை கடந்து தனது reinforcement படைகளையும், படைகளுக்கான ஆயுதங்களையும் , அவர்களுக்கான உணவு பொருள்களையும், etc சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது இலகுவான விடயமல்ல.
Loyalist களாலும் போதுமான உணவுகளை உற்பத்தி செய்யமுடியாத இராணுவ நெருக்கடியை patriots ஏற்படுத்தியிருந்தார்கள்.
3. France, Spain போன்ற நாடுகள் களத்தில் குதிப்பதற்கு முன்னரேயே patriots களத்தை தங்களுக்கு சாதகமாக இராணுவ வெற்றிகள் மூலம் மாற்றியிருந்த போதும் , decisive military victory ஐ உறுதிசெய்ய இந்த நாடுகளின் பங்களிப்புகளே உதவின.
இந்தியா
• இனி இதே காலகட்டத்தில் இந்தியாவின் இருந்த களநிலவரம்
இந்திய நாட்டின் வரலாறு பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்பதால், அவை பற்றிய தரவுகள் சுருக்கமாக கீழே.
• இரு தரப்பினரதும் மக்கள் தொகை.
18 ம் நூற்றாண்டில் இந்திய நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை குறைந்தது 16 கோடி.
நான் முன்னரே குறிப்பிட்டது போல Great Britain னுடைய மொத்த சனத்தொகை 80 லட்சம் மட்டுமே.
• இனி இருதரப்பிலும் இருந்த இராணுவங்களின் எண்ணிக்கை.
இந்திய நிலப்பரப்பை கைப்பற்றியது Great Britain னினது British army அல்ல. East India company எனும் வியாபார நிறுவனம்.
In 1600, a group of English businessmen asked Elizabeth I for a ROYAL CHARTER that would let them voyage to the East Indies on behalf of the crown in exchange for a monopoly on trade.
1600 களில் East India Company ( EIC) இன் சார்பாக இந்தியாவில் வேலை செய்தவர்கள் வெறும் நூறுக்கு கீழேயே.
இந்தியாவின் தலைவிதியை மாற்றிய முதல் போரான 1757 இல் நடந்த Battle of Plassey யில் EIC இன் படையில் இருந்த பிரிட்டிஷ் படைவீரர்கள் வெறும் 750 பேர் மட்டுமே. மீதி 2100 பேரும் அவர்களால் பணியமர்த்தப்பட்ட இந்திய சிப்பாய்களே.
வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வின்படி, இந்தியாவில் இருந்த EIC எனும் வியாபார நிறுவனத்தில் இருந்த பிரிட்டிஷ் படைவீரர்களின் எண்ணிக்கை எந்தவொரு கட்டத்திலும் 20000 ஐ தாண்டியதில்லை.
• இவ்வளவு சின்னஞ் சிறிய தொகை பிரிட்டிஷ் படைவீரர்களை வைத்து கொண்டு எப்படி முழு இந்திய நிலப்பரப்பையும் தங்களது கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்? அதில்தான் சூட்சுமம் இருக்கிறது.
17 ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் EIC தங்களது வியாபார நிறுவனத்தின் trading station களை பாதுகாப்பதற்காக இந்தியர்களை watchman ஆக பணியமர்த்தினார்கள்.
1757 battle of Plassey இற்கு பிறகு, அதிகாரம் சிறிது தங்கள் கைக்கு சேர அதை வைத்து கொண்டு தங்களுக்கான இராணுவத்தை ‘இந்தியர்களை’ கொண்டே வடிவமைத்தார்கள்.
தங்களது trading stations இருந்த இடங்களை அடிப்படையாக வைத்து நிர்வாக அலகுகளை Presidencies என்ற பெயரில் மூன்றாக பிரித்தார்கள். அவை Bengal Presidency, Madras Presidency, Bombay Presidency.
இந்த மூன்று Presidencies இற்கும் தனித்தனியே Presidency armies உருவாக்கப்பட்டது . அவையாவன Bengal Army, Madras Army, and Bombay Army.
இந்த மூன்று இராணுவத்திலும் European regiments கள் உருவாக்கப்பட்டன. இதனது officers களும் படைவீரர்களும் முழுக்க பிரிட்டிஷாரே.
அதே நேரம் இந்தியர்களை மட்டுமே வைத்து native regiments களும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதனுடைய officers களும் பிரிட்டிஷாரே. இந்தியர்கள் வெறும் சிப்பாய் தரத்தில் மட்டுமே இருக்கமுடியும்.
இந்த மூன்று Presidency armies யிலுமே Artillery, Cavalry, Infantry regiments கள் உருவாக்கப்பட்டன. ஒரு regiment இன் பெயர் அழைப்பு முறை பின்வருமாறு வரும்.
Bengal/Madras/Bombay -Artillery/Cavalry/Infantry - regiment
(the latter often termed ‘Native Infantry’ or ‘N.I.’).
Great Britain இனால் பிற்காலங்களில் அனுப்பப்பட்ட British army படைப்பிரிவு ‘H.M.’s Regiments’ or ‘Royal regiments’ என்றே அழைக்கப்படும்.
இவ்வாறு EIC யினால் உருவாக்கப்பட்ட Presidency armies இல் இருந்தவர்களில் 95% பேர் இந்தியரே. வெறும் 5% மட்டுமே பிரிட்டிஷார்.
இன்னும் உங்களுக்கு புரியும்படி சொன்னால் உங்களை வைத்து கொண்டே உங்களை ஆளுவது.
At its height, it had an army of 260,000 (twice the size of Britain’s standing army) and was responsible for almost half of Britain’s trade
• இதை இன்னும் புள்ளிவிபரங்களோடு தருகிறேன்.
By 1824, the size of the combined armies of Bengal, Madras, and Bombay was about 200,000 and had at least 170 sepoy and 16 European regiments.In 1844 the combined average strength of the three armies was 235,446 native and 14,584 European.
• இன்னொரு புள்ளிவிபரம்.
The company’s management was remarkably efficient and economical.
During its first 20 years the East India Company was run from the home of its governor, Sir Thomas Smythe and had a permanent staff of only six.
In 1700 it operated with 35 permanent employees in its small London office.
In 1785 it controlled a vast empire of millions of people with a permanent London staff of 159.
மேலுள்ள பத்தியை மிக சுருக்கமாக சொல்வதானால், 1785 இல், லண்டனில் இயங்கிய East India Company அலுவலகம் தனது 159 அலுவலக உத்தியோகத்தர்களை வைத்துக்கொண்டு 16 கோடி இந்திய நிலப்பரப்பு மக்களை ஆண்டு கொண்டிருந்தது.
நீங்கள் இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டியது அது East India Company எனும் வியாபார நிறுவனம். பிரித்தானிய அரசு அல்ல.
• William Dalrymple எனும் வரலாற்று எழுத்தாளர் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்.
“We still talk about the British conquering India, but that phrase disguises a more sinister reality.
It was not the British government that seized India at the end of the 18th century, but a dangerously unregulated private company headquartered in one small office, five windows wide, in London, and managed in India by an unstable sociopath – Clive.”
• 1857 இல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு பின் நடந்தவை
1857 இல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு (Indian Rebellion ) பின்னர் இந்திய நாட்டை ஆள்வதற்கான அதிகாரத்தை EIC இடமிருந்து British crown எடுத்துகொண்டது. EIC தேசியமயமாக்கப்பட்டு 1874 இல் கலைக்கப்பட்டது.
Presidency armies இருந்த European regiments கள் எல்லாம் British army உடன் இணைக்கப்பட்டன.
Native regiments கள் எல்லாம் தொடர்ந்து Presidency armies ஆகவே தொடர்ந்தன. பின்னர் 1895 இல் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு Indian army ஆக உருமாற்றபட்டது.
சரி. தரவுகள், புள்ளிவிபரங்களை வாசித்தாயிற்று.
• இந்த தரவுகள் எழுப்பும் பல கேள்விகள்.
1) வெறும் 25 லட்சம் சனத்தொகையே கொண்ட அமெரிக்காவின் 13 காலனிகள் British empire இன் British army யை வீழ்த்தியது .
ஆனால் 16 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்திய நிலப்பரப்பு அதிகபட்சம் போனால் 20000 பிரிட்டிஷாரே இருந்த EIC எனும் வியாபார நிறுவனத்தை ஏன் வீழ்த்த முடியவில்லை?
• பின்னர் 1858 இல் British crown இற்கு மாறியபின்னரும் , அதனது ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்த அதிகபட்ச British army இன் எண்ணிக்கையே வெறும் 30000 தான். ஏன் வீழ்த்தமுடியவில்லை?
Military historian, Dr Huw Davies, from King's College London, points out India was garrisoned by hundreds of thousands of locally-recruited sepoys, supervised by fewer than 30,000 British troops.
2) Logistics நெருக்கடி.
Great Britain இற்கு American Revolutionary War இல் இருந்ததை விட அதிகமான logistic பிரச்சினை இந்திய நிலப்பரப்பை அடக்கிவைப்பதில்தான் இருந்திருக்க வேண்டும்.
18 ம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாரின் Royal Navy அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து அமெரிக்காவை அடைய குறைந்தது 6 -8 வாரங்கள் எடுக்கும்.
அதைவிட பலமடங்கு காலம் இந்தியாவை அடைய எடுக்கும். அது போர்களத்திற்கு தேவைப்படும் reinforcement, supply எல்லாவற்றையும் பாதிக்கும். அப்படியிருந்தும் ஏன் வீழ்த்தமுடியவில்லை?
Logistics...in the broadest sense, the three big M's of warfare--material, movement, and maintenance. (James A. Huston, The Sinews of War: Army Logistics 1775-1953)
3) அரசுகளும், போர் வீரர்களும்
அமெரிக்காவின் 13 காலனிகளிலும் வாழ்ந்தவர்கள் அடிப்படையில் பிரித்தானியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். தமக்கென எந்தவொரு அரசையும் அமெரிக்க மண்ணில் கொண்டிராதவர்கள்.
இந்திய நிலப்பரப்பு பல பேரரசுகளையும், பல அரசுகளையும் தனக்குள்ளே உருவாக்கிய நிலப்பரப்பு .பிரிட்டிஷார் கிழக்கிந்திய கம்பனியாக உள்நுழைந்த போது கூட இந்திய நிரப்பரப்பில் பல அரசுகள் இருந்தன. முகலாய பேரரசும் இருந்தது. பின்னர் காலங்களில் மராத்திய பேரரசும் இருந்தது.
4) போர் படையினரை எடுத்து கொண்டால் பிரிட்டிஷாரின் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட , அனுபவம் வாய்ந்த படைகளோடு ஒப்பிடும்போது அமெரிக்க continental army அனுபவமற்றவர்களாக இருந்தனர். அவர்கள் தொழில்முறை படையினராக இருக்கவில்லை.
(British soldiers were considered some of the most skilled, experienced and professional soldiers around and were a very intimidating enemy whereas continental army were young and inexperienced )
ஆனால் இந்திய நிலப்பரப்பில் அந்த நிலை இல்லை. மேலே குறிப்பிட்டது போல நீண்ட வரலாற்றை கொண்ட அரசுகளும், அவைகளின் பல போர்களங்களை கண்ட அனுபவம் வாய்ந்த , தொழில்முறை போர்வீரர்களையும் கொண்ட நிலப்பரப்பு அது.
• தரவுகளின் அடிப்படையில் பல அனுகூலங்களை கொண்டிருந்த இந்திய நிலப்பரப்பு மக்களால் ஏன் பிரிட்டிஷாரின் வியாபார நிறுவனமான கிழக்கிந்திய கம்பனியை வீழ்த்த முடியவில்லை?
இந்த கேள்விகளுக்கான பதில்களை ஆராய முற்படும்போது, இந்திய நிலப்பரப்பின் மக்கள் வெளிக்காட்டிய போரியல் பண்புகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது, பல உள்ளார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரமுடியும்.
அதன் தொடக்க புள்ளியாக, நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிக அடிப்படையான விடயத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.
• என்னுடைய பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, போரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக அடிப்படையான காரணிகள் இரண்டு.
1) படைகளின் எண்ணிக்கை ( number of troops)
2) ஆயுதங்களின் நவீனதன்மை அதன் எண்ணிக்கை , அதன் சூட்டுவலு( weapons technology ,quantities and fire power)
அதே நேரம் இந்த இரண்டு மிக முக்கியமான அடிப்படை காரணிகளை அடுத்து, மேலும் சில காரணிகள் போரின் போக்கை முடிவு செய்பவை.
அத்தகைய மேலதிக காரணிகள் முழுவதையும் பட்டியலிடுவதை தவிர்த்து, இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் போர்களோடு தொடர்புடைய காரணியை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.
அந்தவகையில் இந்த பதிவுக்கு தொடர்புடைய போர்களை பொறுத்தவரையில், Logistics மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் பிரிட்டிஷார் பல ஆயிரம் மைல்கள் தாண்டியுள்ள அமெரிக்க , இந்திய நிலப்பரப்பிலேயே போரை நடத்தினார்கள்.
3) Logistics
Logistics is the science of planning and carrying out the movement and maintenance of forces.Logistics provides the resources of combat power, positions those resources on the battlefield, and sustains them throughout the execution of operations
Logistics is the "practical art of moving armies." - General Antoine Henri Jomini
மேலே குறிப்பிட்ட , போரின் வெற்றியை தீர்மானிக்க கூடிய இந்த மூன்று காரணிகளும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படைகளில் எந்தவகையான தாக்கத்தை கொண்டிருந்தன என்பதை ஒவ்வொன்றாக பகுதி 2 இல் விளக்குகிறேன்.
க.ஜெயகாந்த்
American Revolutionary War தொடர்பான ஓவியங்கள் - (இடது பக்கம்)
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி தொடர்பான ஓவியங்கள் - (வலது பக்கம்)
இது தொடர்பான தரவுகளை படங்களாக கீழே பின்னூட்ட பகுதியில் இணைத்திருக்கிறேன்.
பகுதி-2 இற்கான இணைப்பு கீழே
பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 2)














Comments
Post a Comment