பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி-3)

இந்த கட்டுரை தொடரின் பகுதி-2 இல், நம்மில் பெரும்பாலோனாரின் பொது புத்தியில் பதிந்திருப்பது போல , பிரிட்டிஷார் இந்திய தரப்பை விட , போரின் வெற்றிக்கு காரணமான மிக அடிப்படை காரணியான  weapons technology ,quantities and fire power  இல் அதிக உச்சத்தில் இருக்கவில்லை என்பதை நிறுவியிருந்தேன். 


அத்துடன் இதில் ஒரு தரப்பு weapons technology ,quantities and fire power இல் அதிக இடைவெளியில் முன்னணியில் இருந்தாலும், மற்றைய தரப்பு தமது படை எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் (numerical superiority ) , இந்த குறையை பெருமளவில் சரிசெய்ய முடியும் என்பதையும் வரலாற்று உதாரணங்களுடன் விளக்கியிருந்தேன்.


அதேபோல் போரின் வெற்றியை தீர்மானிக்கும் மேலதிக காரணங்களில் ஒன்றான logistics என்பது பிரிட்டிஷாருக்கு  எவ்வளவு பாதகமாக இருந்தது என்பதையும் வரலாற்று உதாரணங்களுடன் பகுதி-2 இல் விளக்கியிருந்தேன்.


பகுதி-1, 2 வாசித்திராதவர்களுக்காக , அதற்கான இணைப்பை தந்திருக்கிறேன்.


பகுதி-1 இற்கான இணைப்பு

பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 1)



பகுதி-2 இற்கான இணைப்பு

பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 2)




இனி போரின் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் மிஞ்சியிருப்பது, படைகளின் எண்ணிக்கை மட்டுமே ( number of troops).


•  இந்தியாவில் இருந்த கிழக்கிந்திய கம்பனி படையினர்/ பிரிட்டிஷ் படையினர் புள்ளிவிபரங்கள்


நான் பகுதி-1 இல் குறிப்பிட்டது போல இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படையினர்/ பிரிட்டிஷ் படையினரின் எண்ணிக்கை எந்தவொரு கட்டத்திலும் 30000 ஐ தாண்டவேயில்லை.


பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது இருந்த புள்ளிவிபரத்தை , பகுதி -1 இல் தந்ததையே மீண்டும் உங்களுக்கு தருகிறேன்.


By 1824, the size of the combined armies of Bengal, Madras, and Bombay was about 200,000 and had at least 170 sepoy and 16 European regiments.In 1844 the combined average strength of the three armies was 235,446 native and 14,584 European.


1858 இற்கு பிறகு இந்திய நிர்வாகத்தை British crown பொறுப்பெடுத்த பின்னரும் , அதனது ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்த அதிகபட்ச British army இன் எண்ணிக்கை வெறும் 30000 தான்.


Military historian, Dr Huw Davies, from King's College London, points out India was garrisoned by hundreds of thousands of locally-recruited sepoys, supervised by fewer than 30,000 British troops.


16 கோடி மக்கள் தொகையை கொண்ட , பல அரசுகளை கொண்டிருந்த இந்திய நிலப்பரப்பில் இருந்த அதிகபட்ச பிரிட்டிஷ் படையினரின் எண்ணிக்கை 30000 இற்கும் கீழே.


இந்த வரலாற்றில் அறியப்படாத பக்கங்கள்


இந்த 30000 இற்கும் குறைவான பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படையினரின்/ பிரிட்டிஷ் படையினரின் போரியல்ரீதியான தாக்கத்தை அலசுவதற்கு முன்னர், இந்த 30000 சொச்ச படையினரை திரட்டுவதற்கு கூட, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியும், பிரிட்டிஷ் அரசாங்கமும் எவ்வளவு முக்கி திணறினார்கள் என்பதை Arthur N. Gilbert எனும் ஆய்வாளர் Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் தனது ஆய்வுகட்டுரையில் பல புள்ளிவிபரங்களுடன் தந்திருக்கிறார்.


இந்த ஆய்வுகட்டுரை ,அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கும், கிழக்கிந்திய கம்பனிக்கும் இடையில் இருந்த அரசியல்,அதிகாரம் என்பவற்றில் இருந்த முறுகல் நிலை, ஆள் திரட்டுதலில் இருந்த சட்ட பிரச்சினை, அன்றைய பிரித்தானியாவில் இருந்த சமூக நிலை, இராணுவத்திற்கு ஆள் திரட்டுவதில் இருந்த கடும் சிரமங்கள் போன்றவைகளை துல்லியமான தகவல்களுடன் , உறுதியான ஆதாரங்களுடன் பட்டியலிடுகிறது.


இனி Arthur N.Gilbert தனது Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் ஆய்வுகட்டுரையில் தந்த விடயங்களை பகுதி, பகுதியாக கீழே தந்திருக்கிறேன். 


எனது கருத்தையும் ,அவரின் ஆய்வு பந்திகளையும் சேர்த்து தந்திருக்கிறேன். வரிசையாக இனி..


கிழக்கிந்திய கம்பனி வியாபாரத்தில் மட்டுமே அதனது கவனத்தை வைத்திருந்தபோது , அதற்கு ஆள் எண்ணிக்கை என்பது முக்கியத்துமற்றது. 


ஆனால் வியாபாரத்தை தாண்டி, இந்திய நிலப்பரப்பில் உள்ள அரசுகளுடன் போரில் இறங்கும்போது , அங்கு போரியல் காரணிகள் முக்கியத்துவம் உடையதாகின்றன. அதில் ஆட்பலம் என்பது மிகுந்த முக்கியத்துவம் உடையது.


“While the comparatively small company army was adequate for the military demands of the relatively peaceful first half of the century, it was not adequate for the military demands made on it by European rivalries in India.”


(Arthur N.Gilbert இன் Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து)


பிரித்தானிய அரசிற்கு இருந்த உள்ளார்ந்த சிக்கல்கள்


ஒரு வியாபார நிறுவனமான கிழக்கிந்திய கம்பனி ( EIC) , தனக்கென ஒரு இராணுவத்தை பிரித்தானியா மண்ணில்  வைத்திருப்பது என்பது , பிரித்தானிய அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தகூடியது என்பது ஒரு பக்கம். 


பிரித்தானிய மண்ணில் இருக்கும்போது யாருடைய தலைமைக்கு கீழ்படிய வேண்டும் என்ற சட்ட சிக்கலும் இருக்கிறது.


“One of the major difficulties stemmed from jurisdictional uncertainty. 


If a regiment were raised for company service and stationed in Great Britain, under whose control and under what rules and regulations would it operate? 


Needless to say, allowing an independent army ,even if only a regiment, to reside in England presented serious constitutional and practical problems.”


(Arthur N.Gilbert இன் Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து)


இந்த சட்ட சிக்கல்களை களைவதற்காக , பிரிட்டிஷ் அரசு பின்னாட்களில் சட்டதிருத்தங்களை கொண்டுவந்தது. இந்த சட்ட திருத்தங்கள் , அன்றைய பிரிட்டிஷ் அரசும், கிழக்கிந்திய கம்பனியும் ஆட்திரட்டலில் முகம் கொடுத்த சவால்களை கோடிட்டு காட்டுகின்றன.


“The inapplicability of martial law to duly listed company recruits in England was major problem. 


In 1754, parliament had passed a measure giving the East India Company power to punish its soldiers in India and St. Helena, which meant they could use Courts Martial apparatus to try men for mutiny, desertion, and various other military crimes. 


unfortunately, this power did not extend to Great Britain, and its absence accounts in large part for the brutality of company recruiting methods, for without military law, a recruit could simply change his mind and walk back into civilian life.”


(Arthur N.Gilbert இன் Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து)


அன்றைய காலகட்டத்தில்  பிரிட்டிஷ் அரசுக்கு மட்டுமே தனது நாட்டு இராணுவத்திற்கான ஆட்திரட்டலை செய்யக்கூடிய உரிமையும், அதற்கான நடைமுறைகளை செய்யக்கூடிய உரிமையும் இருந்தது. கிழக்கிந்திய கம்பனிக்கு (EIC) அந்த உரிமை வழங்கப்படவில்லை. 


இந்த உரிமை இல்லாத காரணத்தினால் , EIC தனக்கென ஏஜென்ட்களை பணிக்கு அமர்த்தி, தனது கிழக்கிந்திய கம்பனிக்கான படையினரை கிட்டத்தட்ட  நாய்களை பிடிப்பது போல ஆட்களை வளைத்து வளைத்து பிடித்தார்கள். 


“Unlike regular army officers who were free to roam the country beating up for men, the company was forced to deal with agents, or “crimps”, who for certain financial rewards, promised to supply the company with recruits.


In the debate over the 1771 recruiting reform bill, a letter to the Public Advertiser expressed the following view of company policy:


.....they have no authority for beating up in cities or market towns, by which means they are reduced to employ crimps and kidnappers to pick up men, as they can, at a great expense and to take such as they are pleased to bring them.


When these men are procured, they have no power of retaining them, but by locking them up, till they can be shipped off. For which reason no young man of spirit that scorns to be used as a felon, will voluntarily enlist with them.”


(Arthur N.Gilbert இன் Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து)


கிழக்கிந்திய கம்பனி படைக்கு  சேர்த்து கொள்ளப்பட்ட நபர்கள் தப்பித்து ஓடி விடக்கூடாது என்பதற்காக , அவர்களை கப்பலில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பும்வரை, அவர்களை தனி இடங்களில் அடைத்து வைத்திருந்தார்கள். 


கிழக்கிந்திய கம்பனியில் விருப்பப்பட்டு சேர்ந்தவர்கள் கூட, ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு , அதிலிருந்து தப்பிக்க இங்கு வந்து சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.


“The lock-up houses , designed to keep the men prisoner until the ship sailed, and the practice of rounding up recruits at the last minute and hustling them on company ships resulted logically from this lack of authority.”


(Arthur N.Gilbert இன் Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து)


அன்றைய காலங்களில் இந்திய நிலப்பரப்பிற்கான தனது படைக்கான ஆட்களை திரட்டுவதில் , கிழக்கிந்திய கம்பனி எவ்வளவு கடும் சிக்கல்களை எதிர்நோக்கியது என்பதை பல ஆதாரங்களுடன் Arthur N.Gilbert , தனது ஆய்வு கட்டுரை நெடுக விவரித்து செல்கிறார். 


அவற்றுள் சில கீழே. ( இந்த ஆய்வு கட்டுரையை JSTOR இல் தேடி படிக்கலாம்)


“From mid-eighteenth century on, the company army was faced with a continuing manpower problem. 


In addition to competition with the regular army , the high death rate caused by the long and dangerous passage to India and debilitating effects of tropical disease drained the company forces.


As a result, it was never easy for the company to replenish its supply of men, for service in India was terrifying to many Englishmen.


In 1778, for example, a regiment of Seaforth Highlanders mutinied on the mere rumor of being sold to the East India Company.


In 1759, the court informed the Bengal army,”we are under the greatest difficulties in raising recruits,” and that it was impossible to provide the two thousand European soldiers needed to fill the army.”


(Arthur N.Gilbert இன் Recruitment and Reform in the East India Company Army, 1760-1800 எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து)


மேலே தரப்பட்டுள்ள ஆதாரங்கள், கிழக்கிந்திய கம்பனி தனது படைக்கான ஆட்களை திரட்டுவதற்கு ‘ முக்கி திணறியது’ என்பதை தெளிவாக காட்டுகிறது.


இந்த படையினருக்கான ஆட்திரட்டல் பிரச்சினை கிழக்கிந்திய கம்பனியோடு முடிந்து விடவில்லை. 


இந்த கடுமையான பிரச்சினை பிரிட்டிஷ் அரசுக்கு தனது இராணுவத்திற்கு ஆட்திரட்டும்போதும் இருந்தது.


இதை பல வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்று ஆதாரங்களோடு பதிவு செய்துள்ளார்கள்.


American Revolutionary War இல் பிரிட்டிஷ் தோற்றதற்கான முதன்மை காரணங்களில், அமெரிக்க சுதந்திர போராட்ட வீரர்களான continental army யினை outnumber செய்யக்கூடிய அளவிற்கு பிரிட்டிஷாரால் ஆட்களை திரட்டமுடியாததும் ஒன்று என்பதை ஏற்கனவே புள்ளிவிபரங்களுடன் பகுதி -1 இல் பதிவு செய்திருந்தேன்.


இந்த காலகட்டங்களில் பிரிட்டிஷ் அரசு எப்படி கட்டாய ஆட்திரட்டலில் ஈடுபட்டது என்பதை பின்வரும் பந்தி விவரிக்கிறது.


During the American Revolutionary War, a policy similar to the Royal Navy's ‘Press Gangs’ was introduced. 


Two acts were passed, the Recruiting Act 1778 and the  Recruiting Act 1779 ,for the Impressment of individuals. 


For some men this would have been for being drunk and disorderly. The chief advantages of these acts was in the number of volunteers brought in under the apprehension of impressment. 


To avoid impressment, some recruits incapacitated themselves by cutting off the thumb and forefinger of the right hand. 


Both acts were repealed in 1780.The British Government also released criminals and debtors from prison on the condition they joined the army.”


ஆக ‘ 18,19ம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் அரசும் ,கிழக்கிந்திய கம்பனியும் படையினருக்கான ஆட்களை திரட்டுவதில் பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கிறார்கள் என்பதை’ இதுவரை மேலே தரப்பட்டுள்ள வரலாற்று ஆதாரங்கள் தெளிவாக நிருபிக்கின்றன. 


அதாவது போரின் வெற்றியை தீர்மானிக்க கூடிய அடிப்படை காரணிகளின் ஒன்றான படைகளின் எண்ணிக்கை ( number of troops) என்பதிலும் பிரிட்டிஷ் தரப்பு தடுமாறியிருக்கிறது. 


போரியல் ஆய்வினூடாக  பெறப்பட்ட முடிவு


ஆக போரின் வெற்றியை தீர்மானிக்க கூடிய அடிப்படை காரணிகள் என நான் கூறிய மூன்றில் , இரண்டு காரணிகளில் அதாவது number of troops, logistics என்பவற்றில் பிரிட்டிஷ் தரப்பு கடும் சிக்கலில் இருந்தது என்பதும் , weapons technology  இல் மட்டும் சிறிய edge இருந்தது என்பதும், அந்த edge ஐயும் numerical superiority இன் மூலம் துவம்சம் செய்துவிடலாம் என்பதையும் இதுவரை இந்த மூன்று பகுதிகளையும் வாசித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.


இதுபற்றிய உங்களின் புரிதலை ஆழமாக்குவதற்காக , வேறு சில கோணங்களிலும் விளக்க விரும்புகிறேன்.


வேறு கோணங்களினூடாக அணுகி பார்ப்போம்


1)  ஒரு வாதத்திற்காக, உதாரணத்திற்கு பிரிட்டிஷ் தரப்புக்கு பிரித்தானியாவில் ஆட்திரட்டலில் சிரமம் ஏற்படவில்லை என கற்பனை செய்து கொள்வோம். 


அப்படி நடந்திருந்தால் போரியல் காரணி பிரிட்டிஷாருக்கு சாதகமாக மாறியிருக்குமா?


மாறியிருக்காது.இந்திய நிலப்பரப்பில் இருந்த மக்கள் தங்களது numerical superiority ஐ பிரயோகித்து இருந்தால் , பிரிட்டிஷ் தரப்பிற்கு இந்திய நிலபரப்பில் நிலைகொள்வது என்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.


18,19 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய கண்டத்தில் great power ஆக தங்களை நிலைநிறுத்துவதற்கான போர் பிரான்ஸிற்கும் , பிரித்தானியாவிற்கும் இடையில் தொடர்ச்சியாக நடந்துவந்தன.


French and Indian war (1754-1763) . 

இதனது தொடர்ச்சியாக French allies இற்கும் British allies இற்கும் நடந்த Seven Years War ( 1756-1763). 

பின்னர் American Revolutionary War ( 1775-1783) .

அதன் பின்னர் Napoleonic Wars (1803–1815) .


தனது இருப்பை ஐரோப்பாவில் நிலைநாட்ட, இத்தனை போர்களை தொடர்ச்சியாக பிரான்ஸுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நிலையிலிருந்த பிரித்தானியா, தனது படை வளங்களை ஐரோப்பாவில் குவிக்க முனைந்திருக்குமா அல்லது பல ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும், ஐரோப்பாவிற்கு தொடர்பில்லாத இந்தியாவில் குவிக்க முனைந்திருக்குமா? 


இதற்கு பதிலளிக்க உங்களுக்கு சாதாரண பொது அறிவே போதும்.


2) அடுத்தது , ஒருவேளை ஐரோப்பாவில் தன்னை நிலைநாட்டுவதற்கான நிர்ப்பந்தம் பிரித்தானியாவிற்கு நேரவில்லை என கற்பனை செய்து கொள்வோம். 


அப்படி நடந்திருந்தால் , பிரிட்டிஷாரால் தனது படை வளங்களை இந்தியாவில் குவித்திருக்க முடியும். 


அப்படி நடந்திருந்தால் போரியல் காரணிகள் பிரிட்டிஷாருக்கு சாதகமாக மாறியிருக்குமா?


மறுபடியும் இல்லை என்பதே பதில். அன்றைய பிரித்தானியாவின் சனத்தொகை 80 லட்சம். இந்திய நிலப்பரப்பில் உள்ள மக்களின் சனத்தொகை 16 கோடி. 


பதிவு - 2 இல், இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷ்யா- ஜெர்மனிக்கு இடையிலான போரில், ரஷ்யா தனது numerical superiority இன் மூலம் Force Ratio ஐ சாதகமாக மாற்றியதை விளக்கியிருந்தேன்.


அதேபோல் , 20 மடங்கு அதிக சனத்தொகையை கொண்ட நிலப்பரப்பான இந்திய மக்கள் கூட்டமும் தங்களது numerical superiority ஐ கொண்டு, பிரிட்டிஷாரை  வெகு எளிதாக துவம்சம் செய்திருக்கமுடியும்.


ஆக எப்படி ‘இடக்கு மடக்காக’ பல்வேறு கோணங்களில் போரியல் பார்வையில் அலசினாலும், பிரிட்டிஷ் தரப்பால் இந்திய நிலப்பரப்பை அதனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்திருக்கவே முடியாது.


ஆனால் பிரிட்டிஷ் தரப்பு இந்தியாவை 190 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது வரலாறு.


எந்த போரியல் காரணி பிரிட்டிஷ் தரப்பிற்கு சாதகமாக மாறி, இரு நூற்றாண்டுகள் இந்தியாவை ஆளுவதற்கு உதவி செய்தது? 


யார் அதை மாற்ற உதவியவர்கள்?


அதே இந்திய நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்கள் கூட்டம்தான்.


இந்திய மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்கள் கூட்டமே , மிக முக்கிய போரியல் காரணியான number of troops பிரிட்டிஷாருக்கு சாதகமாக மாற உதவியது. 


இத்தகைய போரியல் பண்பு எதை நமக்கு உணர்த்துகிறது? 


பகுதி-4 இல் பார்ப்போம்.


க.ஜெயகாந்த்




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]