விடுதலை புலிகளின் ‘நம்ப நட. நம்பிநடவாதே’ அணுகுமுறை

 இது விடுதலை புலிகள் இயக்கத்தில் இணையும் போராளிகள் கற்று கொள்ள வேண்டிய முதல் விதிகளில்  ஒன்று.

கெரில்லா போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சொந்த இனத்தினரேநன்கு பழகியவர்களே காட்டிகொடுக்கும் நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நடந்தது

அதனால்தான் யாராக இருந்தாலும் ‘போராளிகள்  நீங்கள் அவர்களை நம்பியது போல நடவுங்கள்ஆனால் உண்மையில் நம்பி நடக்க வேண்டாம்’ என்ற அர்த்தத்தில் ‘ நம்ப நடநம்பி நடவாதே’ என்ற வாசகம் உருவானது.


இந்த அடிப்படை விதியை புலிகள் முள்ளிவாய்க்கால் வரை கடைபிடித்தார்கள்


உலக நாடுகளின் உளவுத்துறைகளின் கண்ணில் மண்ணை தூவிதான் புலிகள் இயக்கம் உலகின் பல மூலைகளிலும் தமது கட்டமைப்பை வைத்துக்கொண்டு  இயங்கியது


ஒரு சின்ன உதாரணம் தருகிறேன்


அது விடுதலை புலிகள் அமைப்பு எத்தகைய sophisticated ஆன அமைப்பு என்ற புரிதலை உங்களுக்கு தரும்.


புலிகள் பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள பிற நாடுகளின் கள்ள சந்தைகளிலேயே தமக்கான ஆயுதங்களை வாங்கினார்கள்.


அவைகளை சர்வதேச நாடுகளின் உளவுத்துறைகளுக்கும்கடற்படைகளுக்கும் தெரியாமல்தான் கடல் வழியாக கொண்டுவந்து முல்லைத்தீவிலே தரையிறக்கவேண்டும்.


இதை எப்படி செய்தார்கள்?


பிற நாட்டின் கள்ள சந்தைகளில் வாங்கிய ஆயுதங்களை முல்லைத்தீவில் இறக்கும் வரைஅவைகளை பத்திரமாக சர்வதேச கடற்பரப்பில் floating warehouse என்றழைக்கப்படும் ‘டேங்கர்களில்’ வைத்திருந்தார்கள்அவை மாத கணக்கில் சர்வதேச கடற்பரப்பிலேயே சுற்றி கொண்டிருக்கும்.


இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிக்கோபார் தீவுகளின் கடற்பரப்பில் அவர்களின் ஆயுத கப்பல்களை பாதுகாப்பாக நிறுத்துவார்கள்இது இந்திய கடற்படைக்கு தெரியாது.


இலங்கையின் கடற்பரப்பில் தமக்கென தோதான நேரம் வரும்போது கடற்புலிகள்கரும்புலி தாக்குதல் படகுகளின் பாதுகாப்போடு ஆயுதங்களை இறக்குவார்கள்.


இத்தகைய தகவல்கள் எல்லாம் சர்வதேச உளவுதுறைகளுக்கு தெரிய வந்ததே 2006 ஆம் ஆண்டிற்கு பிறகுதான்


வணிக ரீதியில் இயங்கிய பல கப்பல்கள் புலிகளுக்கு சொந்தமானவை என கண்டுபிடிக்கப்பட்டுஅவைகளின் நடமாட்டத்தை அமெரிக்கா அதனது spy satellite மூலமாக தொடர்ச்சியாக கண்காணித்து அவற்றின் இருப்பிடத்தை இலங்கை கடற்படைக்கு தந்த பிறகுதான் , இலங்கையின் கடற்படை சுமார் ஏழு floating warehouse டேங்கர்களை சர்வதேச கடற்பரப்பில் வைத்து அழித்தது எல்லாம் நடந்தது.


இதற்கான aerial reconnaissance இற்கு இந்திய கடற்படை உதவி செய்திருந்தது.





• இது பற்றி Sri Lankan navy chief Adm.Jayanath Colombage எழுதிய  Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற நூல் விரிவாக விளக்குகிறது.


அதேபோல் Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers எனும் ஆய்வு கட்டுரையும் இதை பற்றிய தகவல்களை தருகிறது.


“In addition to cooperation with India, the United States also provided intelligence to the SLN on the location of the LTTE arms warehouses. 


Through the collection of Signals Intelligence (SIGINT) and Imagery Intelligence (IMINT), U.S. Pacific Command passed the location of the LTTE cargo vessels to Sri Lankan Naval commanders.


The intelligence proved critical in locating the more remote LTTE vessels that were loitering more than a thousand nautical miles from Sri Lankan waters.”


விடுதலை புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்ததற்கான பிரதான போரியல் காரணம் அவர்களின் கடல் வழி ஆயுத விநியோக பாதையை சர்வதேச நாடுகள் குறிப்பாக அமெரிக்கா,இந்தியா நாடுகள் அடைத்ததே என விரிவாக இதைப்பற்றி விளக்கி சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவினை இட்டிருந்தேன்.


நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது


மேலே நான் தந்திருக்கும் உதாரணத்தின் ஊடாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது இதுதான்


சர்வதேச நாடுகளின் உளவுத்துறைகள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் தகவல்களை பரிமாறி கொண்டதன் ஊடாகவே விடுதலை புலிகளின் இந்த நுட்பமான வலையமைப்பை 2006 ஆண்டு காலப்பகுதியில் கண்டறியமுடிந்தது.


அத்துடன் புலிகளின் உட் கட்டமைப்பும் மிக நுட்பமானது.


விடுதலை புலிகளின் சகல விடயங்களையும் தெரிந்த ஒரே நபர் தலைவர் பிரபாகரன் மட்டுமே.


புலிகளின் ஒவ்வொரு கட்டமைப்பிலும்படைப்பிரிவிலும்  இருக்கும் ஒவ்வொரு தளபதிகளுக்கும் அவரவர் துறை சார்ந்த தகவல்கள் மட்டுமே தெரிந்திருக்கும்.


மற்றைய படைப்பிரிவின் தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளமுடியாது


ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தத்திற்கு உரியது


தமிழ் நாட்டின் தேர்தல் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடையில் எப்படி வார்த்தைகளால் கோட்டை கட்டுகிறார்களோஅதுபோல சர்வசாதாரணமாக புலிகளை பற்றிய புதிய கதையாடல்களை உருவாக்குகிறார்கள்.


சமூக ஊடகங்களில் உள்ளவர்களோ சர்வசாதாரணமாக புலிகள் இவரை நம்பித்தான் ஏமாந்தார்கள்அவரை நம்பித்தான் ஏமாந்தார்கள் என்பது போன்ற பதிவுகளை இடுகிறார்கள்.


வைகோகொளத்தூர் மணி  போன்றவர்கள் இந்திய உளவு துறையின் கையாட்களாகத்தான் சென்றார்கள் என்பது போன்ற கதைகளும் வலம் வருகின்றன


புலிகள் எப்படி sophisticated ஆன கட்டமைப்பை உருவாக்கி வைத்திருந்தார்கள் என்ற புரிதல் கொஞ்சம் கூட இல்லாதவர்களே இத்தகைய பதிவுகளை எழுதுகிறார்கள்.


புலிகள் தங்களது ஆயுத போராட்ட காலத்தில் சந்தித்தவர்களையெல்லாம் ‘நம்பினார்கள்’ என்பது புலிகளின் ஆற்றலை குறைமதிப்பீடு செய்வதாகத்தான் அர்த்தம்


அவர்களின் அதி நுட்பமான புலனாய்வு துறையையும் குறை மதிப்பீடு செய்வதாகத்தான் பொருள்.


நம்ப நட . நம்பி நடவாதே ‘ என்ற விதிக்கேற்பவே அனைவரையும் அணுகினார்கள்.இதில் எவருமே விதிவிலக்கல்ல


இது முள்ளிவாய்க்காலின் இறுதி மணி துளி வரை கடைப்பிடிக்கப்பட்டது.


.ஜெயகாந்த்


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]