தமிழீழ போரில் மனித கேடயங்கள் (human shields)

2009 இறுதி மாதங்களில் ஒரு ‘வார்த்தை’ அதிகம் உச்சரிக்கப்பட்டது.


அந்த வார்த்தைதான் மனித கேடயங்கள் (human shields).


விடுதலை புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு பின்வாங்கிய பின்னர் இறுதி நாட்களில் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை உலக ஒழுங்கு, உலக ஒழுங்கின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடும் ஐநா நிறுவனங்கள் எல்லாம் முன்வைத்தன.


உண்மை என்ன?


இறுதி யுத்தத்தின் கடைசி சில தினங்களில் மக்களை கேடயமாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் உலக ஒழுங்கு முன்பே வகுத்து வைத்திருந்த ‘Project Beacon’ நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாடகமாக நடந்தவை என்பதை பலர் ஆதாரபூர்வமாக நிருபித்துவிட்டார்கள்.


இறுதியுத்தத்தில் கடைசி நாள் வரை இருந்து பின் தப்பி அகதிகளாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளை இன்றுவரை வைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


இதே human shields முன்பு நடந்தது                  


இது விடுதலை புலிகளின் தாக்குதலிருந்து தப்பிக்க இலங்கை இராணுவம் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய வரலாற்று நிகழ்வு.


அவற்றில் சிலவற்றை மட்டும் தருகிறேன்.


2000 ஆண்டு ஆரம்பத்தில் விடுதலை புலிகள் ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பை கைப்பற்ற ஓயாத அலைகள் 3 operation ஐ நடத்தியது உங்கள்  எல்லோருக்கும் தெரியும்.


இந்த operation 1999 டிசம்பர் தொடங்கி 2000 ஏப்ரலில் ஆனையிறவு பெருந்தளத்தை வீழ்த்தியதோடு நிறைவுபெற்றது.


இந்த நான்கு மாத தாக்குதல் நடிவடிக்கை என்பது யாழ்குடா எனும் பரந்த பிராந்தியத்தின் மீதே நடந்தது.


இந்த பரந்த பிராந்தியத்தில் பல ஊர்கள், கிராமங்கள் இருந்தன. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர்.


விடுதலை புலிகளின் இந்த operation இல், இந்த பரந்த பிராந்தியத்தில் இருந்த வெற்றிலைக்கேணி, தாளையடி, பளை , கட்டைக்காடு, இயக்கச்சி போன்ற பெருந்தளங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்கள் எல்லாவற்றையும் படிப்படியாக அழித்துத்தான் ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றினார்கள்.


சமரில் இலங்கை இராணுவம் பயன்படுத்திய human shields


விடுதலை புலிகள் அப்படி படிப்படியாக அழித்து முன்னேறுகையில், இலங்கை இராணுவம்  விடுதலை புலிகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த அங்கிருந்த தமிழ் மக்களை வெளியேற விடாமல் வைத்திருந்தது.


இத்தனைக்கும் இந்த ஓயாத அலைகள் 3 தாக்குதலின் போது, புலிகள் முன்கூட்டியே தமிழ் மக்களுக்கு தாக்குதல் நடத்த போகும் இடங்களை அறிவித்து, அதனால் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற போதுமான கால அவகாசம் என வழங்கி வழங்கித்தான் இந்த operation ஐ நடத்தினார்கள்.


ஆனால் மறுபுறம் அந்த பகுதிகளில் நடக்கப்போகும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தமிழ் மக்களை வெளியேற விடாமல் இலங்கை இராணுவம் வைத்திருந்தது.


இராணுவம் தமிழ் மக்களை human shield ஆக நிறுத்தியதால், பல தடவைகள் விடுதலை புலிகள் தாக்குதல்களை ஒத்தி போட்டிருந்தனர்.


அன்றைய உதாரணங்கள்


அத்தகைய சில நிகழ்வுகளை அன்றைய காலகட்டத்தில் தமிழ்நெற்றில் வந்த செய்திகளுடன் கீழே தந்திருக்கிறேன்.


உதாரணத்திற்கு இலங்கை இராணுவம் தமிழ் மக்களை human shield ஆக பயன்படுத்துவதை கண்டித்து விடுதலை புலிகள் உத்தியோகபூர்வ கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள்.


“Nearly five thousand Tamil civilians are trapped in the militarily occupied zones and have been prevented by the Sri Lankan army from moving to areas of safety and security. 


More than a thousand refugees who fled from areas of conflict in Pallai and Pachilaippali have been blocked at Kilali since Sunday and forced to live in a school and in a church closer to the army's defence positions. “


இந்த தாக்குதலில் தமிழ் மக்கள் பாதிப்புறாமல் இருக்க தாக்குதல்களை ஒத்திப்போட்டதையும் குறிப்பிட்டிருப்பார்கள்.


“In order to move the civilian population to safer areas, the LTTE suspended operations for several hours last Sunday and indicated a safe passage through Killali. “


இந்த  human shield விவகாரத்தை, விடுதலை புலிகள் உலக ஒழுங்கின் பார்வைக்கும் கொண்டு செல்ல முயன்றிருந்தார்கள்.அதை அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பார்கள்.


“We regret to note that the ICRC and the UNHCR delegations who operate in the Jaffna Peninsula with the mandate to protect and promote the interests of civilians and refugees from ravages of war have failed to secure the safety of the civilian refugees whose lives are danger in the forced captivity of the army. 


Furthermore these organisations are reluctant to bring this matter to the notice of the international community."


இது ஒரு உதாரணம் மட்டுமே. இவற்றில் சிலவற்றை படங்களாக, இணைப்புகளாக தந்திருக்கிறேன்.


இராணுவத்தினரை ஏற்றி செல்லும் கப்பல்களில் human shield ஆக தமிழ் மக்களை ஏற்றி சென்றது.


இது இலங்கையில் இருந்தவர்களுக்கு தெரியும்.


யாழ்குடா பிராந்தியம் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 


தென்னிலங்கையில் இருந்து யாழ்குடாவை அடைவதற்கான தரைவழிப்பாதை கிடையாது. காரணம் வன்னி பகுதியை தாண்டித்தான் யாழ்குடாவை அடையமுடியும்.


வன்னி பிராந்தியம் விடுதலை புலிகளின் நடைமுறை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்தது.


ஆக இரண்டு வழிகளில்தான் இராணுவமோ அல்லது தமிழ் மக்களோ தென்னிலங்கையில் இருந்து யாழ்குடாவை அடையமுடியும்.


• ஆகாய மார்க்கம்

• கடல் மார்க்கம்


பெருந்தொகையான இராணுவத்தினரை, ஆயுதங்களை யாழ்குடாவிற்கு நகர்த்துவதற்கு இலங்கை இராணுவத்திற்கு கடல் வழி மார்க்கமே சிறந்ததாக இருந்தது.


ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருந்தது. கிழக்கு இலங்கையின் பெரும்பான்மையான கடற்பிராந்தியம் விடுதலை புலிகளின் கடற்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்தன.


அதனால் ஒவ்வொரு முறையும் இலங்கை இராணுவம் யாழ்குடாவிற்கு இராணுவத்தினரை அனுப்புவதோ அல்லது மீள பெறுவதோ என்பது சாவின் வாசலுக்கு நுழைந்து வருவதை போன்றதுதான்.


காரணம் இவ்வாறு இராணுவத்தினரை காவி திரியும் கப்பல்கள் மீது கடற்புலிகள் பல தாக்குதல்களை தொடுத்திருக்கிறார்கள்.


ஒரு உதாரண படத்தை கீழே தந்திருக்கிறேன்.


இத்தகைய கடற்புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இலங்கை இராணுவம் கப்பல்களில் தமிழ் மக்களையும் ஏற்றியது.  


யாழ்குடாவிற்கு பயணம் செய்யும் தமிழர்களை பொது மக்களுக்கான பயண கப்பல்களில் அனுப்பாமல், இராணுவத்தினரை ஏற்றி செல்லும் கப்பல்களில் அனுப்பினார்கள்.


இது தொடர்பாக விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகள் கீழே.


 “The Liberation Tigers urged civilians in Jaffna to travel only in ships flying the ICRC's flag or the flags of other recognised international humanitarian organisation in a leaflet issued Saturday in the northern peninsula. “


“The LTTE leaflet said that the SLN is frequently using civilians travelling to Jaffna as human shields to protect Sri Lanka army troops that are also taken on board the Lanka Muditha. The leaflet also said that the SLN is contravening the Geneva Conventions.”


இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?


அன்பு, அறம், மனிதநேயம் என பிரசங்கம் செய்யும் உலக ஒழுங்கு, தமிழ் மக்களை இலங்கை இராணுவம் human shield ஆக பாவித்தபோது மௌனமாகவே இருந்தது.


ஏனெனில் புவிசார் நலன் அரசியலில் உலக ஒழுங்கு ஒருவரை நல்லவன் , தீயவன் என்பதை அறத்தின் வழியே முடிவு செய்வதில்லை.


உலக ஒழுங்கு அதனது நலனுக்கு ஏற்றவாறு இருந்தால் நல்லவன் அதனுடைய நலனுக்கு முரணாக இருந்தால் தீயவன் என்ற முறையிலேயே முடிவு செய்கிறது.


இது அரசுகள் தங்களது தேசிய நலனை முதன்மையாக வைத்து விளையாடும் ராஜதந்திர/போரியல் சார்ந்த, குருதி தோய்ந்த சதுரங்க ஆட்டம். இதன் ஆட்டவிதிகள் வேறு.


தமிழ் இனம்தான் இந்த புவிசார் நலன் அரசியல் சதுரங்கத்தின் ஆட்ட விதிகள் புரியாமல் உளறி கொண்டிருக்கிறது.


க.ஜெயகாந்த்









Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]