பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 2)
இந்தியர்களை விட பிரிட்டிஷார் weapons technology ,quantities and fire power இல் மேம்பட்டு இருந்தார்களா?
‘இன்று இந்தியா‘ என கூறப்படும் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் , ‘இந்த நிலப்பரப்பில் உள்ள சகலரும் ஏதோ ஒன்றின் மூலமாக உணர்வுபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளோம்’ என்ற உணர்வை சுதந்திரத்திற்கு முன்னர் கொண்டிருந்தார்களா? என்ற கேள்வியை இந்த கட்டுரை தொடர் பிரதானமாக எழுப்புகிறது.
ஆய்வாளர்கள் சிலர் பண்பாடு , வாழ்வியல் கோட்பாடு , ஆன்மீக கோட்பாடு என வெவ்வேறு தளங்களினுடாக அணுகி ‘இணைக்கப்பட்டு இருந்தது‘ , ‘நாமெல்லாம் ஒன்று என்ற உணர்வை கொண்டிருந்தார்கள்’ என்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால் ‘இந்தியா ஏதோ ஒன்றினால் இணைக்கப்பட்டும் இருந்ததில்லை.அந்த உணர்வையும் கொண்டிருந்ததில்லை. பிரிட்டிஷாரால் வெட்டி, தைத்து உருவாக்கப்பட்ட நாடு ‘ என்பதை போரியல் ஆய்வினூடாக நிறுவ முயலுவதே இந்த கட்டுரை தொடராகும்.
இந்த நீண்ட கட்டுரை தொடரின் பகுதி 1 இணைப்பு கீழே:
பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல் பார்வையில் ( பகுதி 1)
• கட்டுரை தொடரின் பகுதி 1 இல் குறிப்பிடப்பட்டிருந்த, போரின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய மூன்று காரணிகளும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படைகளில் எந்தவகையான தாக்கத்தை கொண்டிருந்தன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இந்த மூன்று காரணிகளில் ஒன்றான weapons technology ,quantities and fire power ஐ முதலில் ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
இதை முதலாவதாக நான் எடுத்ததற்கு காரணம் இருக்கிறது.
• நீண்டகாலமாக பொதுப்புத்தியில் இருக்கும் Myth
காரணம் இந்தியர்களில் பெரும்பாலும் அனைவருமே,வெற்றியை தீர்மானிக்கும் போரியல் காரணிகளில் ஒன்றான weapons technology ,quantities and fire power பிரிட்டிஷாருக்கு சாதகமாக இருந்ததால்தான் இந்திய நிலப்பரப்பை வீழ்த்தியதாக தங்களின் பொதுபுத்தியில் பதியவைத்துள்ளார்கள்.
ஏனெனில் உங்களில் பலருக்கு,பிரிட்டிஷார் துப்பாக்கி, பீரங்கிகளுடன் வந்ததாகவும் , உங்களின் முன்னோர்கள் வெறும் வாள்களையும் , வேல்களையும் மட்டுமே கொண்டு போரிட்டதாலேயே தோற்றதாகவும் பல தசாப்தங்களாக கதை சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் வரலாற்று தகவல்கள் வேறு உண்மையை சொல்கின்றன.
இதை சிறு சிறு கேள்விகளாக உடைத்தே அணுகுகிறேன்.
• முதல் கேள்வி
இந்திய நிலப்பரப்பில் இருந்த அரசுகள் ஆயுத தொழில்நுட்பத்தில் பிரிட்டிஷ் படைகளை விட ‘மிகவும் பின்தங்கியிருந்ததா’?
இல்லை என வரலாற்று தகவல்கள் சொல்கின்றன.
வரலாற்றாசிரியர்கள் 16ம் நூற்றாண்டின் gunpowder empires களாக துருக்கியின் Ottoman Empire,ஈரானின் Safavid empire , இந்தியாவின் Mughal empire களை குறிப்பிடுகிறார்கள்.
The Period of the Gunpowder Empires also known as the Era of the Islamic Gunpowders refers to the epoch of the Ottoman, Safavid and Mughal empires from the 16th century to the 18th century.
அதாவது அன்றைய காலத்தின் நவீன ஆயுத தொழில்நுட்பமான gunpowder technology இந்தியாவில் இருந்ததை காட்டுகிறது.
• இனி இரண்டாவது கேள்வி
Gunpowder technology இந்தியாவில் இருந்தது. ஆனால் அவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படைகளின் weapons technology உடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருந்ததா என்பது அடுத்த முக்கியமான கேள்வி.
இதற்கான பதிலாக The Diplomat பத்திரிகையில் அதன் senior editor ஆன Franz-Stefan Gady எழுதிய “This Is How Europe Conquered Asia” எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தரவுகளையே தருகிறேன். அவரது கட்டுரையின் சிறு பகுதி கீழே
“During many decisive engagements in the 18th and first half of the 19th century, Indian armies were able to deploy superior firepower.
For example, during the Battle of Plassey in 1757, the British East India Company fielded eight cannons, whereas the Mughal Empire went into the fight with 53 artillery pieces, the majority of superior caliber to the British guns.
When the city of Seringapatam fell in 1799, during the Fourth Anglo-Mysore War, more than 900 canons were captured by the British East India Company while the British forces and their allies had less than a hundred.
The most formidable enemy that the British encountered during the 19th century was the Sikh Empire. It was their artillery in particular that made the Sikhs such a dangerous enemy.
By the time the first Anglo-Sikh War broke out in 1845, the Sikhs were able to field 250 modern artillery pieces. “Sikh artillery was formidable, its accurate and unremitting fire a grim feature of both Sikh Wars,” according to [the historian] Richard Holmes.
Indeed, the Battle of Chillianwala during the Second Anglo-Sikh War was the bloodiest battle fought in the history of the British East India Company.
Most British casualties occurred during a head-on assault of British infantry against Sikh guns. The well-trained Sikh gunners fired grapeshot at the attackers and held their position. The British infantry had to halt its attack and retreat. “
(Franz-Stefan Gady எழுதிய “This Is How Europe Conquered Asia” கட்டுரையிலிருந்து)
• இந்த கட்டுரையில் Franz-Stefan Gady ஒரு விடயத்தை நிறுவ முயன்றிருப்பார்.
அது என்னவென்றால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி (EIC) அன்றைய Mughal empire உடனும், kingdom of Mysore உடனும், Sikh empire உடனும் போரிடும் போது, அந்த அரசுகளின் படைகள் பிரிட்டிஷாரைவிட சூட்டுவலுவிலும் ( Fire power) , எண்ணிக்கையிலும் ( Quantity) ஒரு படி மேலாகவே இருந்தார்கள்.
ஆனால் பிரிட்டிஷாரின் volley fire எனும் military tactic தான் போர்களை வெல்லுவதற்கு வழிவகுத்தது என்று நிறுவியிருப்பார்.
• Volley fire எனும் Military Tactics
Volley fire என்பது அன்றைய fire arms களான musket, rifle களை கொண்டு எத்தகைய வடிவில் அணிவகுத்து எதிரிகளை சுடுவது என்பது தொடர்பான ஒரு இராணுவ உத்தி.
Volley fire, as a military tactic, is the practice of having a line of soldiers all fire their weapons simultaneously at the enemy forces on command, usually to make up for inaccuracy, slow rate of fire, and limited range, and to create a maximum effect.
மீண்டும் அவரின் கட்டுரையிலிருந்து,
“During the 17th, 18th, and for the first six decades of the 19th century it was the determined charge of well-disciplined European-trained soldiers with bayonets fixed on their muskets in massed formation, often preceded by volley fire at close range, that was perhaps the single most important tactical factor in deciding the outcome of battles in Asia. “
• ஆயுதங்களின் எண்ணிக்கை , அதன் சூட்டுவலு( quantities and fire power)
ஆக அன்றைய Mughal empire, Maratha empire, Sikh empire, திப்பு சுல்தானின் kingdom of Mysore போன்ற பெரிய அரசுகள் , போரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியான ஆயுதங்களின் எண்ணிக்கை , அதன் சூட்டுவலு( quantities and fire power) போன்றவற்றில் பிரிட்டிஷாரை விட ஒரு படி மேலேயே இருந்திருக்கிறார்கள்.
• ஐரோப்பிய நாடுகளின் weapons technology
ஒரு விடயத்தை கவனமாக தவிர்த்திருக்கிறேன். அதுதான் weapons technology மற்றும் Franz-Stefan Gady குறிப்பிடும் disciplined delivery of volley fire.
பல வரலாற்று ஆய்வு நூல்களை புரட்டியதில், ஐரோப்பிய நாடுகளின் படைகளினது gunpowder technology, மற்றைய நாடுகளை விட ஒரு ‘சிறு படி’ முன்னே இருந்ததாகவே உறுதிசெய்கின்றன.
உதாரணமாக இந்தியாவின் சில அரசுகள் matchlock வகை rifle களை வைத்திருக்கும்போது, பிரிட்டிஷார் flintlock வகை rifle களை வைத்திருந்தது போல.
இதை இன்றைய உலகின் weapons technology இல் மொழிபெயர்த்து உங்களுக்கு புரியும்படி சொன்னால், அமெரிக்காவின் 5th generation fighter ஆன F-22 raptor இற்கும் 4.5 generation fighter ஆன இந்தியாவின் Rafale இற்கும் இடையேயான சிறு வித்தியாசம்.
அதுபோல பிரிட்டிஷார் மிக திறமையுடன் volley fire ஐ கையாண்டதாகவே வைத்து கொள்வோம்.
• பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி weapons technology யையும், திறமையான volley fire போன்ற military tactics யும் வைத்திருந்ததால் அவர்களுக்கு ஒரு edge கிடைத்தது.
• அடுத்த கேள்வி.
அந்த edgeஐ கொண்டே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படைகளினால் இந்தியாவை தங்களது ஆளுகைக்கு கொண்டுவரமுடிந்தது என கருதமுடியுமா?
இதையும் போரியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் , கருதமுடியாது என்றே பதில் கிடைக்கும்.
அதாவது இந்த edge ஐ கொண்டே , பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி இந்திய நிலப்பரப்பை தங்களது ஆளுகைக்கு கொண்டு வந்தன என்ற முடிவு பிழையானதாகும்.
இது ஏன் என்பதை விளக்குகிறேன்.
• போர் களத்தில் numerical superiority இன் பங்கு
முதலாவது காரணம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி வைத்திருந்த அந்த edge ஐ, இந்திய நிலப்பரப்பின் படைகள் தங்களது numerical superiority இன் மூலம் உடைத்திருக்க முடியும்.
இது வரலாற்றில் பல தடவை நடந்திருக்கிறது.
இதற்கான உதாரணத்தை இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்தே தருகிறேன்.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மானிய படைகள் weapons technology இலும் Fire power இலும் பல மடங்கு சோவியத் யூனியனை விட பலமாக இருந்தது.
ஆனால் சோவியத் யூனியன் அதனது படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் Force Ratio வை 4:1 வரை அதிகரித்தது ( 1 ஜெர்மானிய படை வீரனுக்கு 4 சோவியத் படை வீரர்கள் என்ற ratio).
அன்றைய சோவியத் யூனியனின் மக்கள் தொகை 19 கோடியாகவும் , ஜெர்மனியின் மக்கள் தொகை 8 கோடியாகவும் இருந்தது .
அதிகளவான மக்கள் தொகையை சோவியத் யூனியன் கொண்டிருந்ததே , அவர்களால் force ratio ஐ அதிகரிக்க முடிந்ததற்கான மிக முக்கிய காரணம்.
• Quantity over Quality
winning mainly by overwhelming its opponents என்பதுதான் இந்த military strategy இன் அடிப்படையே.
அதன்படி weapons technology இல் சிறு edge ஐ கொண்டிருக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படைகளை, 16 கோடி மக்களை கொண்ட தேசத்தின் படைகள் மிக எளிதாக தங்களது numerical superiority இன் மூலம் கிழக்கிந்திய கம்பனியை overwhelm செய்திருக்கமுடியும்.
இது ஏன் நடக்கவில்லை என்பதை பிறகு விளக்குகிறேன்.
• இதில் இன்னொரு பக்கமும் உண்டு
ஒரு தரப்பு weapons technology ,quantities and fire power என்ற போரியல் காரணியில் மிக பலமாக இருந்து, அதனை வைத்து கொண்டு அதனது எதிரியை போரில் வெல்லலாம்.
ஆனால் முழு நாட்டையும் ஆளுகைக்கு கொண்டு வருவது என்பது முற்றிலும் வேறு.
அதாவது battle ஐ வெல்லுவது, war ஐ வெல்லுவது என்பது வேறு . ஆனால் ஒரு நாட்டை இராணுவரீதியாக வெற்றி கொண்டு அதனை முழு ஆளுகைக்குள் கொண்டுவருவது என்பது முற்றிலும் வேறு. ( conquest and occupation).
• Conquest and Occupation
இதற்கும் வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன்.
19 ம் நூற்றாண்டுகளில் weapons technology இல் அன்றைய European powers களோடு ஒப்பிடும்போது, சீனாவின் இராணுவம் மிக பெரிய அளவில் பின்தங்கியிருந்தது. இதனாலேயே இரண்டு opium war களிலும் சீனா, பிரிட்டிஷிடம் தோல்வி அடைந்தது.
இதையேதான் வரலாற்று ஆய்வாளர் Miles Maochun Yu பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“Military historians have long determined that the outcome of the war was already decided before it had started, as it was a war fought between the industrializing and technologically advanced Great Britain, which had the world’s most powerful navy, and the backward land empire that was China under the Manchun rule.”
ஆனால் இந்த வரலாற்று நிகழ்விலும் நான் மேலே குறிப்பிட்ட விடயத்தை நீங்கள் அவதானிக்கலாம்.
Weapons technology இல் பின்தங்கியிருந்த சீனா இரண்டு opium war களிலும் தோற்றது. ஆனால் எந்தவொரு கட்டத்திலும் பிரிட்டிஷாரால் conquest and occupation நிலையை சீனாவில் செய்யமுடியவில்லை.
இதே போன்ற உதாரணத்தை இன்றைய நூற்றாண்டிலிருந்து கூட தரமுடியும்.
இன்றைய superpower ஆன அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் சர்வசாதாரணமாக war இல் வென்றது. ஆனால் அங்கு conquest and occupation செய்ய முயன்றபோது பெரும் இழப்புகளுக்கு உள்ளானது.
இத்தனைக்கும் இன்றைய modern warfare என்பது precision-guided munition, spy drones , reconnaissance satellite இத்யாதி என அதி தொழில்நுட்பங்களை கொண்டது.
இன்றும் கூட war இல் வெற்றி கொள்வது எளிது. conquest and occupation என்பது மிக கடினமானது என்ற நிலைதான் இருக்கிறது.
• ஆனால் எப்படி இந்தியாவில் மட்டும் சுமார் 190 ஆண்டுகளுக்கு பிரிட்டிஷாரால் conquest and occupation செய்யமுடிந்தது?
இதன் மூலம் நிறுவக்கூடிய உண்மை
இந்த நீண்ட பதிவை இதுவரை அவதானமாக வாசித்து வந்திருந்தீர்களேயானால், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியின் படைகள் இந்தியாவை முழுவதுமாக தமது ஆளுகைக்குள் கொண்டுவந்ததற்கு , போரியல் வெற்றிக்கு முக்கியமான காரணியான weapons technology ,quantities and fire power என்பது காரணமாக இருந்திருக்கமுடியாது என்பது உறுதியாகிறது.
• எஞ்சி நிற்கும் ஒரு கேள்வி
அடுத்து போரின் வெற்றிக்கு முக்கியமான மேலதிக காரணிகளில் ஒன்றான Logistics வது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி படைகளுக்கு பாதகமாக இல்லாமல் இருந்ததா?
இதை விளக்க பெரிய பதிவு தேவையில்லை. கொஞ்சம் புவியியல் அறிவு இருந்தாலே போதும்.
இதை உங்களுக்கு எளிமையாக புரியவைக்க இன்னொரு வரலாற்று உதாரணம் தருகிறேன்.
1982 இல் Falkland island ஐ , ஆர்ஜென்டினா அதனது இறையாண்மைக்குட்பட்ட பகுதி என உரிமை கோரி கைப்பற்றியது. இதையடுத்து பிரித்தானியாவிற்கும் , ஆர்ஜென்டினாவிற்கும் Falkland war தொடங்கியது.
பிரித்தானியாவில் இருந்து 8000 மைல் தொலைவில் இருக்கும் Falkland island ஐ பிரித்தானியா மீள கைப்பற்றியது ஒரு பெரும் military achievement என இன்றுவரை போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
காரணம் 8000 மைல் தொலைவில் நடந்த போருக்கு logistics ஐ தயார்படுத்துவது பெரும் சவாலான காரியம்.
The British military campaign to re-take the Falkland Islands during 1982 depended on complex logistical arrangements.
According to Admiral Sandy Woodward ,who commanded the British Royal Navy aircraft carrier group during the Falklands war,the British army, Royal Air Force,the Ministry of Defense and the Secretary of State for Defenses, as well as the United States Navy , all “initially suspected the operation was doomed.” The logistical difficulties of operating 8,000 miles (13,000 km) from home were part of the reason.
இந்த logistical difficulties , விமான தாங்கி கப்பல்கள், அதி விரைவு கப்பல்கள், நவீன விமானங்கள் இருந்த 1982 இலேயே பிரித்தானியாவிற்கு இருந்ததென்றால், 18,19ம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாருக்கு இந்தியாவில் போரை நடத்துவதற்கு தேவையான logistics அமைப்பதற்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கவேண்டும் என்பதை நீங்களே கணித்துகொள்ளுங்கள்.
ஆக நான் பட்டியலிட்ட போரின் வெற்றிக்கு காரணமாக காரணிகளான,
2) weapons technology ,quantities and fire power
3) logistics
என இந்த இரண்டுமே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எந்த வகையிலும் பெரிய அனுகூலங்களை தரவில்லை என்பதை நிறுவியாகிவிட்டது.
இனி மீதி இருப்பது ஒரே காரணி.
அந்த காரணிதான் இந்தியா என்பது பல தேசங்களை கொண்ட நிலப்பரப்பு என்ற உண்மையை சொல்லும் காரணி.
அதை பகுதி 3 இல் தருகிறேன்.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment