இலங்கை இராணுவம் 1987 இல் நடத்திய Operation Liberation இராணுவ நடவடிக்கை வெற்றிபெற்று, யாழ்குடாவை புலிகள் இழந்திருந்தால் விடுதலை புலிகள் இயக்கம் முற்றாக அழிந்திருக்குமா? - போரியல் பார்வையில் சுருக்கமாக

நிச்சயம் விடுதலை புலிகள் அழிந்திருக்க போவதில்லை. 


சில தரவுகளை தருகிறேன். நீங்கேளே உங்கள் மூளையை பாவியுங்கள்.


இலங்கை இராணுவத்தின் இந்த Operation Liberation நடந்தது 26-5-1987 இல்.


ஐந்து மாதங்கள் கழித்து இதே விடுதலை புலிகளுக்கும் இந்திய படைக்கும் போர் மூண்டது.


1987 அக்டோபர் மாதம் இந்திய படை ‘Operation Pawan’ மூலம் அதே யாழ்குடாவை கைப்பற்றியது. விடுதலை புலிகள் வன்னி காடுகளுக்கு பின்வாங்கினர்.


அதன் பின்னர் இந்தியா பின்வரும் இராணுவ நகர்வுகளை விடுதலை புலிகளுக்கு எதிராக நடத்தியது.


• Operation VAJRA (February-March 1988) 

• Operation VIRAT TRISHUL (March 1988) 

• Operation CHECKMAT (May-August 1988) 

• Operation TOOFAN (June 1989) 

• Operation TULIP BLOOM

• Operation SWORD EDGE 


விடுதலை புலிகள் அழிந்து போனார்களா? 


இல்லை. 2000 இற்கும் குறைவான போராளிகளை மட்டுமே வைத்து கொண்டு கிட்டத்தட்ட 80000-100000 இந்திய படைகளுடன் கெரில்லா பாணி போரை நடத்தி கொண்டு ராஜதந்திரத்துடன் சில காய் நகர்த்தல்களை செய்து வெற்றிகரமாக இந்திய படைகளை வாபஸ் பெறவைத்தார்கள்.


அதுபோல 1995 இல் இலங்கை இராணுவம் ‘Operation Riviresa’ மூலம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது. விடுதலை புலிகள் வன்னி பெருநிலப்பரப்புக்கு தமது இராணுவ வளங்களை நகர்த்தினார்கள். பின்னாளில் வன்னி பெரு நிலப்பரப்பு அவர்களின் de facto state ஆக மாறியது. 


யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர் விடுதலை புலிகள் நடத்திய அழித்தொழிப்பு சமர்கள்தான் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2, ஓயாத அலைகள்-3, ஜெயசிக்குறு எதிர்சமர், தீச்சுவாலை எதிர்சமர் , சத்ஜெய எதிர்சமர் இத்யாதி, இத்யாதி என்பவையெல்லாம்.


உண்மையில் இந்திய இராணுவத்தின் Operation Pawan வெற்றியடைந்ததை விட இலங்கை இராணுவத்தின் Operation Liberation வெற்றியடைந்து இருந்தால் விடுதலை புலிகளுக்கு போரியல் அனுகூலங்கள் கூட இருந்திருக்கும்.


எப்படி?


இந்திய இராணுவத்தின் ஆளணி , படை வளங்களின் பலம் என்பது இலங்கை இராணுவத்தை விட பல மடங்கு அதிகமானது.


ஆளணி 


இந்திய இராணுவம் இலங்கையில் குறைந்தது 100,000 படையினரை நிறுத்தியிருந்தார்கள்.


1987 களில் இலங்கை படையின் மொத்த எண்ணிக்கையே 40000 தான்.


“By 1986 the army had 30,000 men in it and by 1987 it had climbed to 40,000 men and it stayed at this number throughout the rest of the decade.”


(Brian Blodgett எழுதிய Sri Lanka’s Military: The Search For A Mission எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து)


. படை வளங்கள்


மரபு போரிற்கான படை வளங்கள் என எடுத்து கொண்டால் இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது.


மற்றைய தமிழ் போராளி இயக்கங்களின் ஆதரவு


இந்திய படையின் புலிகளுக்கு எதிரான போரில், புளொட், டெலோ, ஈபிஆர்எல்எப், இத்யாதி இயக்கங்கள் எல்லாம் இந்திய படையினருடன் இணைந்தே சண்டையிட்டன.


விடுதலை புலிகள் இந்திய படை, மற்றைய போராளி இயக்கங்கள் (ஒட்டு குழுக்கள்) என இருவரையும் எதிர்த்து போர் புரிய வேண்டியிருந்தது.


ஆனால் இலங்கை இராணுவம் Operation Liberation இல் வெற்றி பெற்றிருந்தால், இந்த மற்றைய போராளி இயக்கங்களின் ஆதரவு இலங்கை இராணுவத்திற்கு இப்படி வெளிப்படையாக கிடைத்திருக்காது. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில்.


காரணம் இந்த மாற்று போராளி இயக்கங்கள் இந்திய படையினருடன் இணைந்து சண்டையிடும்போது ‘பெயரளவுக்கு’ ஒரு காரணம் இருந்தது. ‘இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம். புலிகள் மட்டுமே மறுக்கிறார்கள்’ என்ற காரணம்.


ஆனால் 1987 இல் இந்த மற்ற போராளி இயக்கங்களிற்கு இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ‘பெயரளவிலான’ காரணம் கிடைத்திருக்காது. 


பின்னர் 1990-2009 வரை இலங்கை இராணுவத்துடன் இணைந்து இந்த மற்ற போராளி குழுக்கள் (ஒட்டு குழுக்கள்) இயங்கியதுதான். 


ஆனால் 1987-1990 இற்கும் இடையில் புலிகளுக்கும் இந்த ஒட்டு குழுக்களுக்கும் இடையே பல சம்பவங்கள் நடந்திருந்தன.


பிழையான பொது புத்தி


இந்தியா அனுப்பி வைத்த இந்திய ‘அமைதி’ படை என்பது போர் செய்வதற்கான படையினர் அல்ல என கூமுட்டை போல சிலர் உளறுவதை இன்றுவரை காண்கிறேன்.


ஒரு சிறிய உதாரணம் மட்டும் தருகிறேன்.


இந்தியா Marine Commandos எனும் அதிரடி கமாண்டோக்களின் படையை 1987 பெப்ரவரியில் உருவாக்கியிருந்தது.


(abbreviated to MARCOS and officially called the Marine Commando Force (MCF))


அந்த Marine Commandos உம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் பங்குபற்றியிருந்தார்கள். 


அதற்கான ஆதாரமாக ஒரு தகவலை கீழே படமாக தந்திருக்கிறேன்.இணைப்பையும் தந்திருக்கிறேன்.


இது ஒரு உதாரணம் மட்டுமே. இது தொடர்பான விரிவான போரியல் கட்டுரையை இன்னொரு சமயத்தில் எழுதுகிறேன்.


 • இதன் சாராம்சம்


இலங்கை இராணுவத்தை விட ஆளணி, படை வளங்கள், ஒட்டு குழுக்களின் ஆதரவு என பல மடங்கு பலமாக இருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து விடுதலை புலிகள் இரண்டு வருடங்கள் போர் புரிந்தார்கள். இந்திய இராணுவம் ஆயிரக்கணக்கான படையினரை இழந்தது.


அதனால் 1987 இல் இலங்கை இராணுவம் Operation Liberation இராணுவ நடவடிக்கையில் யாழ்குடாவை முழுமையாக கைப்பற்றியிருந்தாலும், விடுதலை புலிகள்  அழிந்திருக்க போவதில்லை. இந்திய இராணுவத்திற்கு ஏற்படுத்திய இழப்பை விட அதிகமான இழப்பை இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தியிருக்க முடியும். 


காரணம் மேலே கூறியதுபோல ஆளணி, படை வளங்கள்.


இத்தகைய போரியல்ரீதியான உண்மையை தெரியாமல், இன்னும் சிலர் இந்தியா மட்டும் இல்லாவிடில் இலங்கை Operation Liberation இல் 1987 லேயே விடுதலை புலிகளை அழித்திருக்கும் என கூமுட்டையாக உளறி கொண்டிருக்கிறார்கள்.


க.ஜெயகாந்த்







Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]